குழந்தை பிறந்தா எல்லா சரியாயிடும்னு சொல்றாங்க, அதுக்கு அவர் என்ன தொடணுமே - My Story #180

Posted By: Staff
Subscribe to Boldsky

எங்களுடையது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். எங்கள் திருமணம் பெரியோர்களால் பேசி வெறும் 29 நாட்களுக்குள் நடந்த திருமணம். இந்த சிறிய இடைவேளையில் எங்களால் ஒருவரை, ஒருவர் சரியாக புரிந்துக் கொள்ள இயலவில்லை. திருமண அழைப்பு, ஏற்பாடுகள், உறவினர்கள் வருகை என திருமணம் பிஸியில் அந்த 29 நாட்கள் மிக வேகமாக உருண்டோடியது.

என் கணவர் திருமண விழாவின் போதோ, அதன் பிறகோ யாரிடமும் சரியாக பேசமாட்டார். ஏன் என்று கேட்டதற்கு அவரது பெற்றோர் மிகவும் வெட்கப்பட கூடிய சுபாவம் என்று கூறினார்கள். அதை நானும் நம்பினேன். ஆனால், உண்மை அதுவல்ல என்பது திருமணமான ஒரே மாதத்தில் தெரியவந்தது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேனிலவு

தேனிலவு

திருமணம் முடிந்த கையோடு நாங்கள் தேனிலவுக்கு கிளம்பினோம். முதல் நாள் மிக சாதாரணமாக தான் இருந்தது. ஆனால், அந்த நாள் இரவு எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை பரிசளித்தது. அவராக துவங்காத காரணத்தால், நாங்க தொட்டு பேசினேன். அதை அவர் வெறுத்தார். அவர் என்னுடன் அதிகம் பேசவும் இல்லை.

சரி! கூச்ச சுபாவம் காரணமாக அல்லது, அதில் பெரிய ஈர்ப்பு இல்லாத நபராக இருக்கலாம். போக, போக சரியாகிவிடும் என்று கருதினேன்.

ஒரு மணி நேரம்...

ஒரு மணி நேரம்...

ஒரு வார காலத்தில் வீடு திரும்பினோம். அப்போது தான் ஒரு நாள் வேலை முடிந்து வந்து யாருடனோ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர் யாருடனோ பேசிக் கொண்டிருப்பதை கவனித்தேன். இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. பேசவே வெட்கப்படும் நபரா இப்படி ஒரு மணி நேரம் விடாமல் பேசிக் கொண்டிருக்கிறார் என்று கருதினேன்.

ஆவல்...

ஆவல்...

அப்படி யாருடன் தான் இவர் பேசுகிறார் என்று எனக்கு ஆவல் உண்டானது. எனவே, அவரது மொபைலை எடுத்து பார்த்தேன். யாரோ ஒரு பெண்ணுடன் அவர் பேசி வந்தது தெரிந்து கவலை அடைந்தேன். என்னுடன் ஒரு நிமிடம் கூட பேசாமல் தவிர்க்கும் இவர், வேறு பெண்ணுடன் மணி கணக்கில் எப்படி பேசுகிறார் என்று மனம் வருந்தினேன்.

உண்மை புலப்பட்டது!

உண்மை புலப்பட்டது!

எங்களுக்கு திருமணமான 30வது நாளே... அவருக்கு என் மீது ஈர்ப்பு இல்லை என்பதை அறிந்தேன். அவர் எனக்கு நேர்மையாக இல்லை என்பதையும் புரிந்துக் கொண்டேன். மெல்ல, மெல்ல தான் எங்கள் நிச்சயம், திருமணம் காலம் என அணைத்து நேரத்திலும் அவர் என்னை ஏமாற்றி வந்ததை அறிந்தேன்.

ஒருசில நாட்களில் என்னுள் தைரியத்தை வரவழைத்து கொண்டு, ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டேன்.

21ம் நூற்றாண்டு!

21ம் நூற்றாண்டு!

இந்த 21ம் நூற்றாண்டில் ஒரு ஆண், இன்னொரு பெண்ணுடன் பேசுவது எல்லாம் பெரிய குற்றமா என்று வியாக்கியானம் பேசினார். எங்களுள் வந்த சண்டையானது... எங்கே தான் ஏமாற்றுவதை அவள் (நான்) கண்டுபிடித்துவிடுவேனோ என்ற அச்சத்தை அவருக்கு அளித்தது.

பெற்றோரிடம் முறையிட்டேன்...

பெற்றோரிடம் முறையிட்டேன்...

அவருக்கு என் மீது விருப்பமில்லை, எப்போதும் வெறுக்கிறார் என்று எனது பெற்றோரிடம் கூறினேன். அதற்கு அவர்கள்... ஒரு குழந்த பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும். நேரமும் காலமும் எல்லாமும் கைகூடி வரும் என்று கூறினார்கள்.

அந்த அறிவுரைக்கு நான் எப்படி தல அசைத்தேன் என்று எனக்கு விளங்கவில்லை. எப்படியோ திருமணமான ஆறு மாதங்களில் கருவுற்றேன்.

அப்போதும் கூட...

அப்போதும் கூட...

நான் கருவுற்ற போதிலும் கூட, அவருக்கு என் மீதோ, என் வயிற்றில் வளரும் அவரது குழந்தை மீதோ துளி அளவும் அன்போ, அக்கறையோ வெளிப்படவில்லை.

ஆனால், அந்த பத்து மாதங்களுக்குள் அவருக்கு என் மீது ஆவலும், காதலும் பிறக்கும் என்றே நான் நம்பினேன். ஆனால், அதுவும் தவறு என நிரூபித்தார் என் கணவர்.

ஆணுறை!

ஆணுறை!

ஒருமுறை யதேச்சையாக அவரது பர்ஸ் எடுத்து பார்த்த போது, அதில் ஒரு ஆணுறையை கண்டேன். மீண்டும் என் வாழ்வில் ஒரு பேரதிர்ச்சியாக அமைந்தது அந்த சம்பவம். பிறகு, அடிக்கடி அவரது பர்ஸ் எடுத்து பார்க்கும் போதெல்லாம், அதில் ஓரிரு காண்டம் இருப்பதை கண்டேன்.

அப்போது தான் அவருக்கு உடலுறவில் எல்லாம் ஆர்வம் இருக்கிறது. ஆனால், என் மீது தான் ஆர்வம் இல்லைல் என்பதை புரிந்துக் கொள்ள முடிந்தது.

அச்சம்!

அச்சம்!

அவரது பர்ஸில் காண்டம் இருப்பதை குறித்து பேசிய போது, உன் வேலையை மட்டும் பாரு, என்னோட விஷயத்துல உன் மூக்கை நுழைக்காதே என்று திட்டினார். விவாகரத்து பெற்றுவிடலாம் என்று யோசித்தால், மகள் வேறு பிறந்துவிட்டாள். எங்கள் விவாகரத்து அவளது வாழ்வை பாதித்துவிடக் கூடாது என்ற அச்சம் வேறு மறுபுறம்.

நள்ளிரவு!

நள்ளிரவு!

அவர் தொடர்ந்து நள்ளிரவு 2, 3 மணிக்கு வீட்டுக்கு வருவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். வாரம் ஒரு நாள் மட்டுமே எனக்கும், எனது மகளுக்கும் ஒதுக்குகிறார்.

அவர் எனக்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறவில்லை. எனக்கு என்ன வேண்டுமோ, எனது என்ன மகளுக்கு என்ன வேண்டுமோ அனைத்தும் கேட்காமல் வந்து சேர்ந்துவிடும். ஆனால், அன்பையும், காதலையும் தவிர.

ஒன்னொரு குழந்தை...

ஒன்னொரு குழந்தை...

என் மாமனார், மாமியார் ஒரு பேரன் வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்போது தான் ஒரு குடும்பம் நிறைவு பெறும் என்று கூறுகிறார்கள். அவர்களிடம் எப்படி போய் கூறுவது, உங்கள் மகனுக்கு என்னோ தொடவே விருப்பமில்லை. பிறகு எப்படி குழந்தை என்று.

சில சமயம் விவாகரத்து செய்துக் கொள்ள மனதில் துணிவு வந்தாலும், நான் கல்லூரி கூட முடிக்காத சூழலில், எனக்கு நிலையான வேலை கிடைக்காது என்பதாலும், பல்லைக் கடித்துக் கொண்டு என் மகளுக்காகவும், அவளது எதிர்காலத்திற்காகவும் அவருடன் வாழ்ந்து வருகிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

They Said If a Baby Borns, Everything Will be Alright, But He is Not Ready to Touch!

They Said If a Baby Borns, Everything Will be Alright, But He is Not Ready to Touch!