இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் வெற்றிகரமான தம்பதிகள்!

By Staff
Subscribe to Boldsky

தொழில், வியாபரம், நடிப்பு, விளையாட்டு, அரசியல், கல்வி, சமூக சேவை என பல துறைகளில் கணவன் மனைவிகள் சேர்ந்து வெற்றிகரமான ஜோடிகளாக திகழ்ந்து வருகிறார்கள்.

The Most Strong and Successful Couples of India!

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி முதல், அசிம் பிரேம்ஜி, முகேஷ் அம்பானி, லக்ஷ்மி மிட்டலில் இருந்து விராட் கோலி வரை இந்தியாவின் சக்திவாய்ந்த பிரபல வெற்றிகரமான தம்பதிகள் பலர் இருக்கிறார்கள்.

இங்கே, இந்த பிரிவில் இந்தியாவின் டாப் 10 சக்திவாய்ந்த வெற்றிகரமான தம்பதிகள் யார், யார் என்று காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நாராயணா - சுதா மூர்த்தி!

நாராயணா - சுதா மூர்த்தி!

இன்போசிஸ் நிறுவத்தின் துணை நிறுவனர் நாராயணா மற்றும் சுதா மூர்த்தி இருவரும் 2.1 பில்லியன் டாலர்களுக்கும் மேல் சொத்துமதிப்பு கொண்டுள்ளனர். வெறும் பத்தாயிரம் ரூபாயில் துவங்கிய இவர்களது பயணம் இன்று மிகவும் வெற்றிக்கரமாக அமைந்துள்ளது. நாராயணா மூர்த்திக்கு அந்த பத்தாயிரம் ரூபாய் வழங்கியவர் அவரது மனைவி சுதா அவர்கள் தான்.

ஒருபுறம் நாராயணா மூர்த்தி தொழில் மற்றும் உத்திகளை மேம்படுத்திக் கொண்டிருக்கையில் மறுபுறம் சுதா மூர்த்தி அவர்கள் சமூக சேவைகள், நன்கொடை மற்றும் கல்விக்கு உதவி போன்றவற்றை செய்து வருகிறார். மனிதநேய ஆர்வலரான சுதா அவர்கள் ஒரு எழுத்தாளராகவும் திகழ்கிறார்.

முகேஷ் - நீதா அம்பானி!

முகேஷ் - நீதா அம்பானி!

இந்தியாவின் பணக்கார தம்பதிகள் இவர். ஏறத்தாழ 40 பில்லியன் டாலர்களை தாண்டுகிறது இவர்களது சொத்து மதிப்பு. இந்தியாவின் மதிப்புமிக்க நிறுவனங்களில் முகேஷ் அம்பானியின் ரிலைன்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

ஒருபுறம் முகேஷ் ரிலைன்ஸ் நிறுவனத்தை பார்த்துக் கொண்டிருக்க. மறுபுறம் இவரது மனைவி நீதா திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியை நடத்தி வருகிறார். மேலும், இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் இணை-உரிமையாளராகவும் இருந்து வருகிறார்.

இவர்கள் இருவரும் இந்தியாவில் பல தன்னார்வ தொண்டு சேவைகளையும் செய்து வருகிறார்கள்.

லக்ஷ்மி - உஷா மிட்டல்!

லக்ஷ்மி - உஷா மிட்டல்!

கடந்த 12 வருடங்களாக உலகின் பெரிய இரும்பு கம்பெனியின் முதன்மை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார் லக்ஷ்மி மிட்டல். இவர்களது சொத்து மதிப்பு 17.9 பில்லியன் டாலர்களை தாண்டுகிறது.

லக்ஷ்மி மிட்டலின் மனைவி உஷா மிட்டலும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் இந்தோனேசியாவில் தனியாக இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். மேலும், இவர் இந்தியாவில் உஷா மிட்டல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற பல்கலைகழகம் நடத்தி வருகிறார். இதன் மூலம் பெண்களுக்கான கல்வியை இவர் மேம்படுத்தி வருகிறார்.

அக்ஷை குமார் - ட்விங்கிள் கண்ணா

அக்ஷை குமார் - ட்விங்கிள் கண்ணா

பாலிவுட்டின் சுப்பர்ஸ்டார் தம்பதி இவர்கள். காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இவர்கள் ஸ்டார் தம்பதிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகு ட்விங்கிள் கண்ணா திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

அதற்கு பதிலாக இவர் ஒரு வெற்றிகரமான இன்டீரியர் டிசைனராகவும், நாளிதழ்களில் கட்டுரைகள் எழுது வரும் எழுத்தாளராகவும் ஜொலித்து வருகிறார். இதுமட்டுமின்றி ட்விங்கிள் கண்ணா இப்போது ஒரு தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். அக்ஷை குமார் பாலிவுட்டில் தனக்கான இடத்தை பெரிதுபடுத்தி சூப்பர்ஸ்டார் நடிகராக வளர்ந்து வருகிறார்.

அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்

அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்

அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 1994ல் உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யாராய். 2009ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவருக்குள்ளும் சண்டை என்று ஊடகங்கள் கிசுகிசுத்தாலும், கடந்த 11 வருடங்களாக இந்தியாவின் ஒரு வெற்றிகரமான தம்பதியாக திகழ்ந்து வருகிறார்கள். ஐஸ்வர்யா மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

அபிஷேக் பச்சன் சென்னை எப்.சி கால்ப்பந்து அணியை வாங்கி அதை ஒரு வெற்றிகரமான அணியாக உருவாக்கியுள்ளார்.

கரீனா கபூர் - சயப் அலிகான்!

கரீனா கபூர் - சயப் அலிகான்!

சயப் அரச குடும்பத்தை சேர்ந்தவர். இவர் பட்டோடி நவாம் குடும்பத்தில் பிறந்தவர். கரீனா கபூர் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் மற்றும் பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.

கரீனா ஆறு முறை பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றுள்ளார். சயப் அலிகானும் பத்ம ஸ்ரீ உட்பட பல விருதுகள் வென்றுள்ள நடிகராவார். இவர்கள் இருவரும் இந்தியாவின் சக்திவாய்ந்த தம்பதிகளாக திகழ்கிறார்கள்.

அசிம் - யாஸ்மீன் பிரேம்ஜி!

அசிம் - யாஸ்மீன் பிரேம்ஜி!

அசிம் பிரேம்ஜி விப்ரோ நிறுவனத்தின் உரிமையாளர் 19.5 பில்லியன் டாலர்களுக்கும் மேலான சொத்து மதிப்பு கொண்டிருக்கிறார். இவரது மனைவி யாஸ்மீன் மனித நேர ஆர்வலராக இருந்து வருகிறார்.

கடந்த இருபது வருடங்களாக இவர் பல தன்னார்வ சமூக சேவைகளை செய்து வருகிறார். மேலும், இவர் அசிம் பிரேம்ஜி சாரிட்டி பவுண்டேஷனின் இயக்குனராகவும் இருந்து வருகிறார்.

அணில் - டினா அம்பானி!

அணில் - டினா அம்பானி!

முன்னாள் மாடல் மற்றும் இந்தி நடிகையான டினாவை அணில் அம்பானி திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது சொத்து மதிப்பு 3.4 பில்லியன் டாலர்கள். ரிலைன்ஸ் குழுமத்தின் தலைவரான அணில் அம்பானி இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

டினா அம்பானி கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்து வருகிறார். இதுப்போக பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றியும் வருகிறார்.

அமிதாப் - ஜெயா பச்சன்!

அமிதாப் - ஜெயா பச்சன்!

இந்தியாவின் முன்னணி ஸ்டார் தம்பதி. ஜெயா பச்சன் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் இந்தியாவின் எவர்க்ரீன் தம்பதிகளாகவும் திகழ்ந்து வருகிறார்கள்.

பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற விருதுகளை வென்றுள்ளார் அமிதாப். நடிகையாக இருந்து அமிதாபை திருமணம் செய்து கொண்ட பிறகு, சில காலம் கழித்து அரசியலில் ஈடுபட துவங்கினார் ஜெயா பச்சன். இவர் எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.

அமீர் கான் - கிரண் ராவ்!

அமீர் கான் - கிரண் ராவ்!

இந்தி சினிமா மற்றுமொரு சிறந்த ஜோடியாக திகழ்பவர்கள் அமீர் கான் மற்றும் கிரண் ராவ். அமிர்கான் இந்தியாவின் சிறந்த நடிகர். பல புதிய முயற்சிகளை கையாள்பவர். இவர் பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளை வென்றுள்ளார்.

கிரண் ராவ் சினிமா இயக்கம் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக விளங்கி வருகிறார். இந்தியாவின் சில சிறந்த படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா!

விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா!

இந்திய சினிமாவில் கிரிக்கெட் - சினிமா மத்தியிலான காதல் பிரிக்க முடியாத ஒன்றாகவே பல காலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஜோடி சேர்ந்த காதலர்கள் விராட் மற்றும் அனுஷ்கா.

விராத் கோலி இந்திய அணியை அனைத்து பார்மெட்களிலும் கேப்டனாக இருந்து வழிநடத்தி வருகிறார். அனுஷ்கா ஷர்மா தனக்கான தனி இடத்தை உருவாக்கி கொண்டு முன்னணி நடிகையாக வலம்வருகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    The Most Strong and Successful Couples of India!

    In this country and in fact most of the world, the people we define as power couples are usually movie stars, businessmen, athletes, singers and philanthropists. When these people come together, their popularity practically doubles and they assume a special place in tabloids and mainstream media. Here are some of the most powerful Indian couples.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more