பணத்துக்காக என்ன வேணாலும் செய்வியா? my story #173

Posted By:
Subscribe to Boldsky

ஏன் பாத்தேன்னு இன்னும் வரைக்கும் யோசிக்க வைக்கிற ஒரு முகம்னா அது பிரவுடைய முகமாத்தான் இருக்கும். எங்கம்மா வேலப் பார்க்குற வீட்டுல தான் முத தடவையா அந்த முகத்தப் பாத்தேன்.

அம்மா சமையல்கட்டுக்குள்ள இருந்துட்டு பாத்திரம் தேச்சுட்டு இருந்தாங்க நான் கீழ உக்காந்து கீரைய ஆய்ஞ்சுட்டு இருந்தேன். முதலாளி அம்மா வந்து பதினோறு மணிக்கு மஸ்ரூம் பெப்பர் ஃப்ரை வித் சூப் ரெடி பண்ணிடு மதியத்துக்கு சப்பாத்தி போட்றல்ல ஏம்மா.... பின்னாடி கார்டன்ல கொஞ்சம் க்ளீன் பண்ணிடு ஃபுல்லா காஞ்ச இலையா கிடக்குது பாரு...ம்ம்ம்... அப்பறம் மேல பால்கனி லைட் தொடச்சுரு அப்டியே டிவி சோக்கேஸ் தொடச்சுரு என்று வேலைகளை பட்டியலிட்டுக் கொடுத்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லூரிக் கட்டணம் :

கல்லூரிக் கட்டணம் :

அம்மா... காலேஜ் ஃபீஸுக்கு என்று நிறுத்தினார் அம்மா..

வேலைய முடிச்சுட்டு போகும் போது வாங்கிக்க... இல்ல வேண்டாம் நாளைக்கு தரேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார். பீஸ் கட்டாமல் வகுப்பிற்குள் அனுமதிக்க மாட்டோம் என்ற கடைசி கட்டம் வந்த பிறகு கல்லூரிக்குச் செல்ல முடியாமல் அம்மாவுடன் நானும் இங்கே வர ஆரம்பித்திருந்தேன்.

இன்றும் முடியாதா? நாளைக்கு கொடுக்கிறார்கள் என்றால் நாளை மறு நாள் தான் கல்லூரிக்குச் செல்ல முடியும் என்று நினைத்துக் கொண்டேன்.

எவ்ளோ வேணும் :

எவ்ளோ வேணும் :

அம்மா என்னம்மா இன்னைக்கும் இப்டி சொல்லிட்டாங்க நம்ம வேற எங்கையாவது கேட்டுப் பாக்கலாமா? ஏற்கனவே ஒரு வாரமா காலேஜ் போகல பிரண்ட்ஸ் எல்லாம் சேந்து கொஞ்சம் பணம் ரெடி பண்ணியிருக்காங்க எனக்கு பஸ்ஸுக்கு மட்டுமாவது கொடும்மா நான் காலேஜ்க்கு போய் கொஞ்சம் விசாரிச்சுட்டு இன்னும் எவ்ளோ பணம் வேணும்னு கேட்டுட்டு வருவேன்ல என்று புலம்பினேன்.

ஏய் வாய முடு சும்மா... காசு காசுனுட்டு வீட்டு கஷ்டம் தெரியாம பெரிய பெரிய காலேஜ்ல போய் சேர்ந்துட்டு ஏன் தலையெழுத்த வாங்குற இங்க என்ன வச்சிட்டா உக்காந்திருக்காங்க என்று எரிச்சலாய் பதிலைக் கொட்டினாள் அம்மா

திடீரென்று எவ்ளோ வேணும்? என்று ஒரு குரல்

யாருக்கு பதில் சொல்ல :

யாருக்கு பதில் சொல்ல :

திரும்பி பார்த்தேன் முதலாளி அம்மாவின் மகன். பணக்காரகளை அவனது முகத்தோற்றத்தில் அப்பட்டமாய் வழிந்தது. எழுந்து நின்று கொண்டேன். அம்மாவும் செய்யும் வேலையை விட்டுவிட்டு என்ன தம்பி காபி வேணுமா என்று இடுப்பை வளைத்து பவ்யமாய் நின்றார்.

இல்ல ஏதோ பணம் வேணும்னு பேசிட்டு இருந்தீங்கல்ல அதான் எவ்ளோ வேணும்னு கேட்டேன்....

அம்மா நாளைக்கு தரேன்னு சொல்லியிருக்காங்க

இது நன்றி சொல்ல வேண்டிய தருணமா? :

இது நன்றி சொல்ல வேண்டிய தருணமா? :

அம்மாவின் பதிலைக் கேட்டு போய்விட்டார். வீட்டுக்குள்ள உக்காந்துட்டு புலம்பாதன்னு சொன்னா கேக்குறியா அதான் அம்மா நாளைக்கு தரேன்னு சொல்லிருக்காங்கள்ல சும்மா அழுதுட்டேயிருக்காம போய் வேலைய பாரு என்று கிளப்பிவிட்டார்.

இனி அழுது பிரயோஜனமில்லை என்று அறிந்து எழுந்து வெளியே தோட்டத்திற்கு வந்து வேலையை முடித்தேன். பின்னர் மேலே உள்ள அறைகளை சுத்தம் செய்யச் சென்றேன். வழியில் மீண்டும் அந்த முகம்!

நேராக என் முன்னால் வந்தார் என் கையில் ரூபாயை திணித்து இதுல பத்தாயிரம் இருக்கு ஃபீஸ் கட்டு நல்லா படி... இனிமே உனக்கு எந்த ஹெல்ப்னாலும் என்கிட்ட கேளு என்று சொல்லிவிட்டு என் பதிலயும் எதிர்ப்பார்க்காமல் நகர்ந்து கொண்டார்.

உதவிகள் கிடைக்குமிடம் :

உதவிகள் கிடைக்குமிடம் :

நிறைய உதவிகள் செய்ய ஆரம்பித்தார். இப்போது முதலாளியின் மகன் என்ற கட்டத்தைத் தாண்டி அடுத்தக் கட்டத்திற்கு எங்கள் உறவு சென்றிருந்தது. எங்களுக்கு இடையில் இருந்த மிகப்பெரிய ஒரு தடுப்புச் சுவர் இடிக்கப்பட்டிருந்தது.

இருவரும் நட்புடன் அணுக ஆரம்பித்தோம். படிக்கிறேன் காசு கொடுன்னு வந்து நிக்காத வரைக்கும் சந்தோஷம் என்று சொல்லி வீட்டிலும் என்னை எதுவும் கண்டு கொள்ளவில்லை. எம்.ஃபில் வரைக்கும் படித்து முடித்தேன் பிரபிவின் உதவியுடன். பிறகு நான் படித்த அதே கல்லூரியில் பகுதி நேரமாக பணியாற்றிக் கொண்டே வங்கித் தேர்வுக்கு தயாராக ஆரம்பித்தேன்.

அப்போதும் புக்ஸ் வேணுமா? கோச்சிங் போறியா.... என்று உதவி செய்ய முன் வந்தான்.

ஏன் இப்டி பண்ற? :

ஏன் இப்டி பண்ற? :

ஏனோ அவனது வார்த்தைகளும், உதவியும் தான் என்னை ஊக்கப்படுத்தி இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கும் என்று அடிக்கடி தோன்றுவதுண்டு. நீ நல்லா படிக்கணும் உன் ஃபேமிலிய நீ தான முன்னேத்தனும் இன்னும் எவ்ளோ நாளைக்கு இன்னொருதர்கிட்ட குனிஞ்சு குனிஞ்சு பணிஞ்சு போய்ட்டேயிருப்பீங்க

உன்கிட்ட திறமையிருக்கு அத இந்த வறுமைய காரணம் காட்டி பொதச்சிடாத. இந்த வயசுல கஷ்டப்படுறோமே நம்மல மாதிரி பசங்க வாழ்க்கைய எப்டி ரசிக்கிறாங்கன்னு ஏக்கப்படாதன்னு ஒரு ஸ்ட்ரஸ் பூஸ்டர் என்றால் அவன் தான்.

கொஞ்சம் பேசணும் :

கொஞ்சம் பேசணும் :

வங்கித் தேர்வினை எழுத சென்னைக்கு அழைக்கப்பட்டிருந்தேன். காலையில் வந்து இறங்கியது முதல், தேர்வு எழுதும் கல்லூரிக்கு அழைத்துச் சென்று தேர்வு முடியும் வரை காத்திருந்து மாலையில் அழைத்து வந்து கொண்டிருந்தான்.

எப்டி பண்ண எக்ஸாம்?

ம்ம்ம்... நல்லா பண்ணிருக்கேன் க்ளியர் பண்ணிடுவேன் அடுத்து தொடர்ந்து ப்ரிப்பர் பண்ணனும் சப்போஸ் கிடைக்கலன்னா....

குட் சரி கொஞ்சம் உன்கிட்ட பேசணும் வா என்று சொல்லி காபி ஷாப்பிற்கு அழைத்துச் சென்றான். குளிரூட்டப்பட்ட அறை அசௌகரியத்தை கொடுத்தது அதுவும் அவனுடன் தனியாக என்ன பேசப்போகிறான் என்ற பதட்டமும் சேர்ந்து கொண்டது.

திருமணம் செய்து கொள்வோமா? :

திருமணம் செய்து கொள்வோமா? :

அவனிடமும் சில தடுமாற்றங்களை உணர முடிந்தது. நீண்ட நேரம் அமைதியாகவே இருந்தோம். அவனே ஆரம்பித்தான் உன்னைய எப்போ மொதோ தடவையா பாத்தேனோ அப்பவே உன்னைய எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு பட் அது என் காதல சொல்றதுக்கான சரியான நேரமா நினைக்கல இப்போ படிச்சு உன் சொந்தக்கால்ல நிக்கிற உனக்கு ஒரு செல்ஃப் கான்ஃபிடன்ஸ் இருக்கு உன் ஃபேமிலிக்கு பெரிய சப்போர்ட்டா இருக்க சோ....

ஐ திங்க் இட்ஸ் பெர்ஃபெக்ட் டைம் டு சே.... வில் யூ மேரி மீ என்று என்னைப் பார்த்தான்

ஒத்துவராது :

ஒத்துவராது :

ஒரு கணம் திக்கென்றது என்ன தான் நாங்கள் நட்பாக பழக ஆரம்பித்திருந்தாலும் இன்று வரையிலும் அவர் எங்கள் முதலாளியின் மகன்.

இல்ல என்னால முடியாது.... என்று சொன்னேன். சாதி வேறுபாடுகளைத் தாண்டி இங்கே முதலில் வந்து நிற்பது ஸ்டேட்டஸ் வெளியில் இருந்த பெண் என்றாலும் ஒன்றும் தெரியாது ஆனால் அம்மாவும் அப்பாவும் அவர்களுக்கு கீழே வேலையாட்களாக பணிந்து இருபது வருடங்களுக்கும் மேல் வேலை செய்தவர்கள் அவர்கள் கொடுத்த பணத்தில் தான் இன்றைய எங்கள் வாழ்க்கை முழுவதும் அடங்கியிருக்கிறது. அவர்களின் மகனையே திருமணம் செய்ய எப்படி ஒப்புக் கொள்வார்கள்?

 வார்த்தை இல்லை :

வார்த்தை இல்லை :

என்னதான் படித்து பட்டம் பெற்று வேலைக்குச் சென்றாலும் அவர்களுக்கும் இன்னும் நாங்கள் வேலைக்காரர்கள் தான் ஒரு நாளும் என்னை அவர்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் என்பதை நான் தெளிவாக உணர்ந்திருந்தேன். ஆனால் இவையெல்லாம் அவனுக்கு சொல்லி புரியவைக்க என்னிடம் அப்போது வார்த்தைகள் இருக்கவில்லை.

நன்னாளில் :

நன்னாளில் :

தொடர்ந்து, எனக்கு நீ வேணும் யாரு ஒகே சொன்னாலும் சரி சொல்லலனாலும் சரி நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்கும் உன்ன எவ்ளோ லவ் பண்றேன்னு தெரியுமா? பாத்த அன்னைக்கே உன்னைய எனக்கு பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிட்டு நான் உன்னைய காப்பாத்துறேன்னு அப்பவே என்னால சொல்லி தாலிய கட்டி கூட்டிட்டு போயிருக்க முடியாதா?

ஏன் நான் இவ்ளோ நாள் வெயிட் பண்ணேன்.... உன்க்கு உன் மேல ஒரு நம்பிக்கை வரணும் நம்மளோட வீக்னஸ் வறுமைய பயன்படுத்திட்டான்னு நீ ஒரு நாளும் நினச்சிருக்கூடாது மொதோ நீ உன் ஃபேமிலிய பாக்கணும், உன்ன நீ நல்லா ஸ்டடி பண்ணிக்கனும் உனக்கு கான்ஃபிடன்ஸ் வேணும்னு எல்லாமே உனக்காகத் தான்...

வாழ்க்கை லட்சியம் :

வாழ்க்கை லட்சியம் :

இந்த வாழ்க்கப்பூரா உன் கூட இருந்தா இன்னும் நான் சந்தோஷமா இருப்பேன்னு தோணுது இன்னும் நீ படிக்கணுமா படி... பட் நீ எனக்கு வேணும் என்றான். இதற்கு மேல் நானென்ன சொல்ல வாழ்க்கை துணை என்று புதிதாக பெற்றோர் அறிமுகப்படுத்தி வைக்கும் ஒருவருடன் வாழ்க்கையை ஆரம்பிப்பதை விட இவன் சரியென்று பட்டது என் மீது இவ்வளவு அக்கறையும் புரிதலும் இருக்குமா என்று தெரியவில்லை.

பயங்கர எதிர்ப்பு :

பயங்கர எதிர்ப்பு :

முதலில் அவன் வீட்டில் காதலைச் சொன்னான்... காதல் என்றதுமே உடன் பணியாற்றும் பெண் என்று நினைத்து பெரிதாக எதிர்ப்பு காட்டவில்லை ஃபேமிலி பேக்கிரண்டு என்ன? அவங்க அப்பா என்ன பண்றாங்க சொந்த வீடு இருக்கா என்று கேட்ட பிறகு தான் அவங்க நம்ம கேஸ்ட் தான என்று கேட்டிருக்கிறார்கள். இவன் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவை போனில் காட்டியிருக்கிறான்.

முதல் அடி :

முதல் அடி :

இத ஏண்டா இப்ப காட்ற.... எங்க எடுத்தீங்க என்ன இது நான்சன்ஸ் இவ்ளோ க்ளோசா நின்னுட்டு இப்போ பசங்களுக்கு சோசியலா பழகுறேன்னு யார்கூட எப்டி பழகணும்னு ஒரு தராதரமே இல்லாமப் போச்சு... பொண்ணு வேலைக்கு போக ஆரம்பிச்சதும் அம்மா வேலைய விட்டு நின்னுட்டா ஏதோ நல்லாயிருந்தா சேரி என்றார்.

இந்தப் பொண்ணு தாம்மா கல்யாணம் பண்ணப்போறேன் சொல்லி முடிக்க அப்பா அவனை பளார்.... என்று அறைந்தார்.

மிரட்டல் :

மிரட்டல் :

சத்தியமாய் அவன் இதை எதிர்ப்பார்த்திருக்க மாட்டான். என்ன பேச்சு பேசுற இந்த சொசைட்டில என் கௌரவம் என்ன ஆகுறது போயும் போயும் உன் வேலைக்கார பொண்ணையா எடுத்திருக்கன்னு கேவலமா பேசமாட்டான் நாளைக்கு உன் தங்கச்சிய யாரு வந்து பொண்ணு கேப்பா?

நான் செத்தாலும் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்.... என்ன பெரிய இடமா பாத்து மயக்கிட்டா வாழ்நாளுக்கும் நோகாம திங்கலாம்னு குடும்பத்தோட ப்ளான் பண்ணிட்டாங்களா? இன்னும் காதில் கேட்க முடியாத வார்த்தைகள்.

அம்மாவின் வலி :

அம்மாவின் வலி :

நேராக அவளது வீட்டிற்கும் சென்று மிரட்டினார்கள் பொண்ண ஒழுங்கா இருக்கச் சொல்லு இல்ல வீட்ல திருடினன்னு உங்க குடும்பத்தோட உள்ள தூக்கி போட்ருவேன் என்றும் அடிக்கடி ரவுடிகளால் ஆள் வைத்து மிரட்டப்படுவதும் தொடர்ந்தது.

இதெல்லாம் நமக்கு தேவையா தகுதிக்கு மீறி ஆசப்பட்டா இப்டித்தான் உன்னையெல்லாம் படிக்க வச்சிருக்கவே கூடாது. இவ்ளோ நாள் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நல்ல பேரெல்லாம் ஒரேநாள்ல அழிச்சிட்டியே பாவி....

திருமணம் :

திருமணம் :

இவர்களின் எதிர்ப்பைப் பார்த்து தான் எனக்கு இந்த காதலில் இன்னும் உறுதியுடன் நிற்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இருவரும் வீட்டை விட்டு வெளியேறினோம். சென்னைக்கு வந்து பதிவுத் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை சேர்ந்து நடத்த ஆரம்பித்தோம்.

திருமணம் முடிந்து கிட்டதட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது இன்று வரையிலும் எங்களுக்கு மிரட்டல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

 காதலிருந்தாலும்.. :

காதலிருந்தாலும்.. :

அவர்களுக்கு பயந்தே அம்மாவும் அப்பாவும் பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு வேறு ஊருக்குச் சென்றுவிட்டார்கள்.

அவனின் பெற்றோருக்கும் உறவுகளுக்கும் எங்கள் மீதுள்ள கோபம் இன்னும் தீரவில்லை ஆத்திரம் அடங்கவில்லை. படிப்பால் நீ எவ்வளவு பெரிய இடத்தினை அடைந்தாலும் இந்த ஸ்டேட்டஸ் என்றும் நம்மை நிம்மதியாக வாழ விடுவதில்லை. இங்கே காதலைப் பற்றியும் அவர்களின் உழைப்பைப் பற்றிய,நேர்மையைப் பற்றியெல்லாம் யாரும் வாய் திறப்பதில்லை பணம்.... பணம்... பணம் மட்டுமே அளவுக்கு மீறி எக்குத்தப்பாய் பணமிருந்தால் உங்களைக் கொண்டாடுவார்கள் இல்லையென்றால் உங்களை தூர மிதிப்பார்கள் அவ்வளவு தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Status Plays Major Role in Marriage

Status Plays Major Role in Marriage
Story first published: Wednesday, February 14, 2018, 12:25 [IST]
Subscribe Newsletter