உறவுகளை காக்க 'கலவி' வகுப்பெடுக்கும் தாந்திரீக பெண் - குவியும் கூட்டம்!

By Staff
Subscribe to Boldsky

tantric.witch என்ற முகவரியில் இன்ஸ்டாகிராமில் செயற்பட்டு வருகிறார். தாம்பத்திய உறவு குறித்த புரிதல் மற்றும் கோச்சிங் கொடுத்து, இவர்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் உடலுறவு வாழ்வில் மேம்பட உதவுகிறார்.

விக்டோரியா லூயிஸ் ஸ்மித், என்பவர் தான் தந்ரிக் விட்ச் என்ற பெயரில் இயங்கி வரும் செக்ஸ் குரு. இவர் தனது தனித்துவமான கோச்சிங் மூலமாக உறவுகளில் ஒரு பெரும் மாற்றம் காண உதவுகிறார். இதுக்குறித்து இவர் பல பிரபல சர்வதேச ஊடகங்களில் பேட்டிகளும் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sex Tantric: This is What she is Coaching in her Sessions!

கவுன்சிலிங் மற்றும் கோச்சிங் தருவதற்கு டிகிரி வாங்கி வைத்திருக்கிறார் 27 வயதிலான விக்டோரியா. தனது வாடிக்கையாளர்களின் இல்லறம், உறவுகள் மேம்பட, உடல் ரீதியாக, மன ரீதியாக அவர்களை மாற்றம் காண வைத்தலே எனது குறிக்கோள் என்கிறார் விக்டோரியா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

காதலருடன்...

விக்டோரியாவுடன் இந்த கோச்சிங்கில் இவரது 26 வயது காதலர் டானியும் செயற்பட்டு வருகிறார். டானி - விக்டோரியா இருவரும் இணைந்து தான் இல்லறத்தில் மாற்றம் காண பிராக்டிகல் கோச்சிங் வகுப்புகளை எடுக்கிறார்கள்.

மக்கள் தங்கள் உடல் சார்ந்த ஆசைகள், சென்ஸ் மற்றும் செக்ஸுவல் விஷயங்களை முழுமையாக அறிந்து வைத்திருப்பதில்லை. அதை தெளிவாக கற்கவே நாங்கள் உதவுகிறோம் என்று இந்த ஜோடி கூறுகிறது.

அவமானம்!

இந்த சமூகம் செக்ஸ் குறித்து வெளியே கேட்டு அறிந்துக் கொள்வதை அவமானமாக கருதுகிறது. மேலும், இது குறித்து வெளியே பேசவும் தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால், அவரவர் உணர்ச்சி வெளிப்பாடுகள் குறித்து அறிந்துக் கொள்வது என்பது குற்றமற்ற செயல் என்கிறார் விக்டோரியா.

இவர்கள் மிக்ஸ்டு மற்றும் சிங்கிள் என இரு வகையிலான வகுப்புகள் எடுக்கிறார்கள். இதற்கு 65 டாலர்கள் வரையிலும் கட்டணம் வசூலிக்கிறார்கள். இவர்கள் சுய இன்பம் காணுதல் முதல் தங்கள் உடல் சார்ந்த விஷயங்கள் வரை என பலவன கற்று தருகிறார்கள். ஆண் பெண் இருவரும் சேர்ந்து வகுப்புகளில் கலந்து கொள்ளும் போது தான் இது பெருமளவில் பலனளிக்கும் என டானி கூறுகிறார்.

தம்பதி!

இவர்களது வகுப்புகள் மூலம் ஒரு பெண் சுயமாக மற்றும் தனது துணை மூலம் எப்படி செக்சுவலாக தூண்டிவிடப்பட வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறார்கள். விக்டோரியா - டானியிடம் பயிற்சி வகுப்புக்கு வருவோர்கள், வரும் போது டவல், ஆயில் மற்றும் ஆண், பெண் உடுத்தும் வேஷ்டி போன்ற ஒரு நீளமான உடையை எடுத்து வர வேண்டும் என்று அறிவுரைக்கப்படுகிறார்கள்.

விக்டோரியா எடுக்கும் இந்த வகுப்பில் பங்கெடுத்துக் கொள்ள 21 வயது முதல், 80 வயதிலானவர்கள் ஆர்வம் காட்டுவதாக டானி கூறுகிறார். இங்கே வரும் பலரும் தங்கள் இல்லற உறவில் ஒரு மாற்றம் காண வருவதாகவே கூறுகிறார்கள். மற்றவர்கள் தங்கள் செக்ஸுவல் உறவில் சுதந்திரமாக கற்று பயில நான் உதவுகிறேன் என்று விக்டோரியா கூறுகிறார்.

பாலியல் துன்புறுத்தல்...

தாம்பத்திய ரீதியான மாற்றத்திற்கு மட்டுமின்றி, முற்காலத்தில் தாம்பத்தியம் ரீதியாக நடந்த மோசமான அனுபவங்கள், பாலியல் துன்புறுத்தல் போன்ற நிகழ்வுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து வெளிவரவும் இந்த ஜோடி உதவுகிறது.

செக்ஸுவல் என்று மட்டுமின்றி தங்கள் உடல் சார்ந்த பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகரித்துக் கொள்ளவும் விக்டோரியா - டானி ஜோடி உதவுகிறார்கள். உணர்வு ரீதியாக ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் இவர்களது பயிற்சி பலனளிக்கிறது.

பாராட்டுக்கள்!

பயிற்சி வகுப்புகள் முடிந்து சென்ற பிறகு பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அவர்களது துணையுடன் சேர்ந்து கால் செய்து பாராட்டுவதாகவும் டானி கூறுகிறார். தாங்கள் அளிக்கும் இந்த பயிற்சிக்கான வெற்றியாக நாங்கள் அந்த அழைப்புகளை தான் கருதுகிறோம் என விக்டோரியா ஜோடி கூறுகிறது.

தாங்கள் எடுக்கும் வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் குறித்து தங்கள் இன்ஸ்டாகிராம் முகவரியில் பதிவுகள் இடுகிறார்கள் இந்த ஜோடி.

விக்டோரியா வாழ்வில்...

விக்டோரியா லூயிஸ் ஸ்மித் முன்னர் ஒருமுறை ஒரு உறவின் மூலமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இதே விஷயத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். தன்னை தானே தொடுவதற்கே அச்சம் கொள்ளும் அளவிற்கு ஒரு தீய தாக்கம் விக்டோரியாவிடம் காணப்பட்டிருந்தது.

அதில் இருந்து வெளிவர, தனது காயங்களை தானே ஆற்றிக் கொள்ள பயிற்சி மேற்கொண்ட விக்டோரியா இப்போது அதையே மற்றவர்களுக்கும் கற்று தருகிறார்.

பெண்களுக்கு தனி...

பெண்களுக்கு தங்கள் பிறப்புறுப்பு சார்ந்த மசாஜ் செய்துக் கொள்வது குறித்தும் பயிற்சி அளிக்கிறார் இந்த செக்ஸ் குரு. இதன் பயனை எப்படி உணர முடியும் என்று இவரிடம் கேள்வி கேட்பவர்களிடம்... இது ஒரே நாளில் மாற்றத்தை ஏற்படுத்தும் பயிற்சி அல்ல. Somatic மற்றும் Tantric என இரண்டு வகையிலான கோச்சிங் அளிக்கிறார் விக்டோரியா.

இதை முறையாக கற்று பயிற்சி மேற்கொண்டால் மட்டுமே மாற்றத்தையும், பலனையும் உணர முடியும். ஒரே நாளில் இதன் மூலம் எந்த மாற்றமும் காண இயலாது என்கிறார் விக்டோரியா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Sex Tantric: This is What she is Coaching in her Sessions!

    What Really Happens In A Tantric Sex-Coaching Session? Group masturbation and genital massages come standard.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more