24 வயது, 10 வருட காதல், கர்ப்பமான நிலையில் எனை ஏமாற்றி விட்டான் - இரகசிய டைரி #003

Posted By: Staff
Subscribe to Boldsky

இப்போது இந்த நிலையில் நான் என்ன செய்வதென்றே தெரியவில்லை. வாழ்க்கையின் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறேன்.

நான் கர்ப்பமாக இருக்கிறேன். என் 24 வயதில் பத்து வருடமாக அவனை தான் காதலித்து வருகிறேன். என் முதலும் கடைசியுமான காதல் அவன் தான். எங்கள் காதல் பள்ளி பயிலும் போது மலர்ந்தது. கல்லூரி படித்து முடித்த மூன்றாண்டுகளில் நாங்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டோம்.

சமீபத்தில் தான் அவன் என்னை ஏமாற்றி வருகிறான் என்பதை அறிந்துக் கொண்டேன். அதே சமயத்தில் தான் மருத்துவர் நான் கருத்தரித்து இருப்பதை ஊர்ஜிதம் செய்தார். ஆனால், இதை கொண்டாடும் மனநிலையில் நான் இப்போது இல்லை.

காதலித்து திருமணம் செய்துக் கொண்ட பாவத்திற்கு, என் தோழமை, உறவுகள் என யாரும் இப்போது என்னுடன் தொடர்பில் இல்லை. இவனை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்தேன். என்னை காதல், நம்பிக்கை அனைத்தையும் கொன்றுவிட்டான்.

என்னை ஏமாற்றும் இவனுடன் வாழ்வதற்கு பதிலாக என் கருவுடன் சேர்ந்து நானும் மடிந்து போகலாம் என்றே தோன்றுகிறது. நான் என்ன தான் செய்வது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமைதி!

அமைதி!

உங்கள் நிலைமையை புரிந்துக் கொள்ள இயல்கிறது. பதின் வயதில் இருந்து காதலித்து கரம் பிடித்த கணவன் ஏமாற்றினால் எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் இப்படியான யோசனைகள் பிறப்பது இயல்பு தான். ஆனால், இப்போது நீங்கள் ஒரு உயிர் அல்ல, ஈருயிர். எனவே, உங்கள் சூழல் சார்ந்தும் சரி, ஆரோக்கியம் சார்ந்தும் சரி முதலில் அமைதிகாக்க வேண்டியது அவசியம்.

படித்துள்ளீர்கள் தானே?

படித்துள்ளீர்கள் தானே?

நீங்கள் கல்லூரி வரை படித்தவர் என்பது உங்கள் குறிப்பிலேயே இருக்கிறது. இந்த உலகில் சல்லாப எண்ணம் இல்லாத நபர்களே கிடையாது. இதில் ஆண், பெண் என்ற பாகுபாடும் இல்லை. எல்லாருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் சல்லாபம் ஏற்படும். சிலருக்கு உடை, சிலருக்கு பணம், சிலருக்கு நகை, சிலருக்கு போதை, சிலருக்கு மங்கை.

ஒரு வேளை நீங்கள் இருவரும் காதலித்து மட்டும் வருகிறீர்கள் எனில், பிரிவு ஒரு பெரிய விஷயம் அல்ல. ஆனால், இப்போது உங்கள் உறவுக்கு சான்றாக ஒரு உயிர் துளிர்விட்டுள்ளது.

முயற்சி!

முயற்சி!

முதலில் அவர் எந்த பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார்? எந்த கட்டத்தில் இருக்கிறார்? என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். எத்தனையோ ஆண்கள் தவறு செய்து, மனைவியால் திருத்தப்பட்டு மீண்டும் நல்ல கணவனாக, தகப்பனாக வாழ்ந்து காட்டியுள்ளனர்.

நான் உங்கள் கணவருக்கு ஆதரவாக பேசவில்லை. எந்த தவறையும் திருத்த முடியும், யார் ஒருவரையும் மாற்ற முடியும். அதற்கான முயற்சியை நாம் செய்தோமா, இல்லையா? என்பது தான் முக்கியம்.

மாறவில்லை எனில்?

மாறவில்லை எனில்?

முயற்சித்து பாருங்கள். நீங்கள் அவர் ஏமாற்றுவதை கண்டறிந்து விட்டீர்கள் என்பதை முதலில் உங்கள் கணவர் அறிவாரா?

முதலில் அவரை மாற்ற முடியுமா? மாற்ற கூடிய சூழலில் அவர் இருக்கிறாரா? என்பதை முயற்சிக்கவும். உங்களுக்காக இல்லை எனிலும், உங்கள் வயிற்றில் வளர்ந்துக் கொண்டிருக்கும் கருவுக்காக. முக்கியாமாக, நீங்கள் கருவுற்று இருப்பதை முதலில் உங்கள் கணவருக்கு தெரிவித்தீர்களா?

இதை அறிந்தாலே கூட அந்த உறவில் இருந்து முழுவதுமாக அவர் வெளிவர வாய்ப்புள்ளது.

அப்பா!

அப்பா!

என்ன தான் வயதானாலும், சில ஆண்களுக்கு அப்பா ஸ்தானம் அடையும் வரை முழு முதிர்ச்சி பிறக்காது. அதுவரை இளமை ஊஞ்சலாடுகிறது என்று தவறு செய்துக் கொண்டே தான் இருப்பார்கள். அவரது உயிர் உங்கள் கருவில் வளர்ந்து வருவதை கூறி பாருங்கள். உடனடியாக அவர் திருந்த, உங்களுடன் மகிழ்ந்து வாழ நிறைய வாய்ப்புகள் உள்ளது.

இயல்பு!

இயல்பு!

என்னதான் உலக அழகியையே திருமணம் செய்தாலுமே கூட, ஆணின் மனது வீட்டைவிட்டு வெளியேறினால், வேறு பெண்கள் மீது அலைபாய தான் செய்கிறது. இது ஆண்களின் இயல்பா அல்ல இறைவன் படைத்த இயற்கைகளில் ஒன்றா என்பது அவனுக்கே வெளிச்சம்.

நீங்கள் இருவரும் பள்ளி பருவத்தில் இருந்து பத்து வருடங்கள் காதலித்து வந்துள்ளீர்கள். நிச்சயம் உங்கள் கணவர் ஏதாவது வேண்டாதவர் பேச்சைக் கேட்டோ, திடீர் மன சஞ்சலத்தின் காரணமாக கூட இந்த தவறை செய்திருக்கலாம்.

எனவே, உங்களால் நிச்சயம் அவரை அந்த தவறில் இருந்து வெளிக் கொண்டுவர முடியும்.

ஒருவேளை...

ஒருவேளை...

நீங்கள் கருத்தரித்த விஷயம் அறிந்த பிறகும், அவர் மனம் மாறவில்லை தொடர்ந்து ஏமாற்றுகிறார் எனில், நீங்கள் அஞ்சுவதற்கோ, உயிரை மாய்த்துக் கொள்ள தான் வேண்டும் என்பதற்கோ அவசியமே இல்லை. நீங்களும் படித்தவர் என்பதை மறந்துவிட வேண்டாம்.

நீங்கள் வேலைக்கு சென்று வருகிறீர்களா? இல்லையா? என்பது குறித்த குறிப்பு எதுவும் இல்லை. எதுவாக இருந்தாலும், படித்ததற்கு ஒரு வேலை கிடைக்காமலா போய்விடும். சொந்த காலில் நின்று உங்கள் குழந்தையை பெற்றெடுத்து சாதித்துக் காட்டுங்கள்.

ஆண் துணை?!

ஆண் துணை?!

ஒரு பெண் ஆண் துணையுடன் தான் வாழ வேண்டும். ஆண் துணை இல்லாமல் ஒரு பெண் இந்த சமூகத்தில் வாழ இயலாது என்பது மலையேறிவிட்டது. ஒவ்வொரு பெண்ணும் இன்று ஆணுக்கு சமமாக மட்டுமல்ல, ஆணை விடவும் உயர்ந்த நிலையில் வேலை செய்து சம்பாதித்து வருகிறார்கள்.

முடியும் என்ற மனமே!

முடியும் என்ற மனமே!

சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி என பல இந்திய மாநகரங்களில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக தங்களாலும் சம்பாதித்து வாழ்ந்து சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து வருகிறார்கள். இது உங்களாலும் முடியும்.

முடியும் என்று நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை.

நல்லதே நடக்கும்!

நல்லதே நடக்கும்!

பள்ளி பருவத்தில் இருந்து கல்லூரி படித்து முடித்து மூன்று வருடங்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள் என்று கூறி உள்ளீர்கள்.

நிச்சயம் சல்லாபதின் பெயரால் தவறு செய்த உங்கள் கணவர், உங்கள் மீது வைத்திருந்த அந்த பத்து வருட காதல் உண்மை என்றால். நிச்சயம் மனம் திருந்துவார்.

நீங்களும், உங்கள் கணவரும், குழந்தையும் நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை நிச்சயம் வாழ்வீர்கள்.

முயற்சியை மட்டும் கைவிட வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Secret Confession: The Only Man I Ever Loved for 10 Years Out of My 24 of Life!

Secret Confession: The Only Man I Ever Loved for 10 Years Out of My 24 of Life!