For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனைவி ஏமாற்றியதை அறிந்தும் 35 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வருகிறேன் - My Story #314

மனைவி ஏமாற்றியதை அறிந்தும் 35 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வருகிறேன் - My Story #314

By Staff
|

இது நடந்து 35 வருஷத்துக்கு மேல ஆச்சு. அப்ப எனக்கு வயசு 33. ஒரு முக்கியமான துறையில பெரிய பதவியில வேலை பண்ணிட்டு இருந்தேன். அப்ப எனக்கு கல்யாணமாகி 8 வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன். அழகான, ஸ்மார்டான ரெண்டு குழந்தைங்க, பெரிய பங்களா, தோட்டம், கார், சமைக்கிறதுக்கு, வீடு பார்த்துக்கன்னு தனித்தனியா வேலையாட்கள்.

இதெல்லாம் போக, அந்த காலனியில லேடீஸ் கமிட்டி வேற. அதுல என் மனைவி மெம்பர். தினமும் சாயங்காலம் ஆச்சுன்னா காலனி பார்க்ல டைம் பாஸ் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. வாழ்க்கை இவ்வளவு நல்லா போயிட்டுயருந்த நேரத்துல தான் நானே எனக்கான வினைய தேடி எடுத்துட்டு வந்து என் பக்கதுல வெச்சிக்கிட்டேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மிஸ்டர் எக்ஸ்!

மிஸ்டர் எக்ஸ்!

அவனோட பெயர குறிப்பிட நான் விரும்பல. இதனால அவனோட வாழ்க்கையும், அவன ரொம்ப நல்லவன்னு நெனச்சுட்டு இருக்க அவனோட குடும்பத்தாரும் கூட பாதிக்கப்படலாம். மிஸ்டர் எக்ஸ் எனக்கு ஜூனியரா ஜாயின் பண்ண என் அசிஸ்டன்ட். அவனுக்கு அந்த ஊரு புதுசு, எதுவும் தெரியாதுன்னு. என் பக்கத்து வீட்டுலயே அவன குடியமர்த்தினேன்.

நான்!

நான்!

நான் ஒரு வர்க் அடிக்ட். எல்லாமும் பர்பெக்ட்டா இருக்கணும். எனக்கு கீழ இருக்கவங்க வேலைய முடிச்சுட்டு போனாலும். அவங்க கரக்டா அன்னிக்கி வேலைய முடிச்சிருக்காங்களான்னு செக் பண்ணிட்டு தான் கிளம்புவேன். அதனாலயே நான் தினமும் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு கிளம்ப ராத்திரி எட்டு மணி ஆகிடும்.

பர்பெக்ஷன்

பர்பெக்ஷன்

என்னோட இந்த பர்பெக்ஷன் தான் நான் ரொம்ப சின்ன வயசுல நிறையா அச்சீவ் பண்ண உறுதுணையா இருந்துச்சுன்னு நான் நூறு சதவிதம் நம்பினேன். அதே சமயத்துல நான் நிறையா பேர் கூட அதிகமா பேசி பழகுற ஆள் கிடையாது. ரொம்ப ரிசர்வ்டு டைப். என்னால சீக்கிரமா ஒருத்தர் கூட ஃபிரெண்ட் ஆக முடியாது. கொஞ்சம் நேரம் எடுத்துப்பேன்.

என் மனைவி!

என் மனைவி!

என் மனைவி எனக்கு நேர் எதிர். அவங்களுக்கான வேலைய கூட அவங்களா பண்ணிக்க மாட்டாங்க. எல்லாத்துக்கும் ஒரு உதவியாள் வேணும். ஆடம்பரமான வாழ்க்கையில இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லன்னு நானும் விட்டுட்டேன். அதே மாதிரி அவங்க நிறையா பேர் கூட சகஜமா பேசி பழகுற ஜாலி டைப். சீக்கிரமா எல்லார் கூடயும் ஃபிரெண்ட் ஆயிடுவாங்க.

நான் ரெண்டு வார்த்தை பேசுற இடத்துல என் மனைவி இருநூறு வார்த்தை பேசுவாங்க.

எல்லாமும்...

எல்லாமும்...

என் அசிஸ்டன்ட் அந்த மிஸ்டர் எக்ஸ் என்ன பண்றான்னு எல்லாமும் தெரிஞ்சு வெச்சிருந்தாங்க என் மனைவி. அவன் என்ன ட்ரெஸ் வாங்குனான், அவன் என்ன பண்றான்.எங்க போறான்னு எல்லாமுமே. நிறையா நேரம் அவன பத்தியே பேசிட்டு இருந்தாங்க. அப்ப எல்லாம் எனக்கு அது பெரிசா படல.

என் காதுப்பட காலனியில சில பேர் தவறா பேச ஆரம்பிச்சாங்க. அப்ப தான் அதோட சீரியஸ்னஸ் எனக்கு புரிய ஆரம்பிச்சது.

டிவி!

டிவி!

ஒரு நாள் என் அசிஸ்டன்ட் வீட்டுல ஒரு டிவி வாங்கி இருக்காங்க. அதே டிவி நாமளும் வாங்கணும்னு சொன்னாங்க. அவன் வீட்டுல என்ன டிவி வாங்குனாங்கன்னு உனக்கு எப்படி தெரியும்னு கேட்டேன். அதுக்கு நம்ம பையன் அவங்க வீட்டுல விளையாடிட்டு இருந்தான். அவன் தான் பார்த்துட்டு வந்து சொன்னான்னு என் மனைவி சொன்னாங்க.

விசாரணை!

விசாரணை!

உடனே என் பையன கூப்பிட்டு நீ அவன் வீட்டுக்கு தினமும் விளையாட போறியா, அவங்க வீட்டுல என்ன டிவி வாங்கி இருக்காங்கன்னு கேட்டேன். பையன், நான் அவங்க வீட்டுக்கே போனது இல்ல. அவங்க வீட்டுல என்ன டிவி இருக்குன்னு எனக்கு எப்படி தெரியும்னு சொன்னான்.

மனைவி இத கேட்டு அதிர்ச்சியா நின்னாங்க. அதுக்கப்பறம் அவங்க வாயில இருந்தே எல்லா உண்மையும் வெளிய வந்துச்சு.

பிடிச்சிருக்கு!

பிடிச்சிருக்கு!

எனக்கு அவன பிடிச்சிருக்கு... விரும்புறேன். நான் அப்பப்போ மதியம் யாரும் இல்லாத போது அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்திருக்கேன். எங்களுக்குள்ள ஒரு Affair இருக்கு. நேத்து அவன் டிவி வாங்கி இருந்தான். அதே டிவி நம்ம வீட்டுல இருக்கணும்னு விரும்புனேன். அதான் கேட்டேன்னு அவங்க சொல்ல, சொல்ல... நான் வாழ்க்கையில ஏதோ பெரிய தப்பு பண்ணிட்டது போல குற்றவுணர்ச்சி.

விவாகரத்து?

விவாகரத்து?

உனக்கு அவன பிடிச்சிருந்தா அவன் கூடயே போய் வாழ்ந்துக்க. நான் தடையா இருக்கல. விவாகரத்து கொடுத்துடுறேன்னு சொன்னேன்.

ஆனா, அவங்களுக்கு அதுலயும் விருப்பம் இல்ல. நான் ஒரு சின்ன டவுன்ல பிறந்து வளர்ந்து சிட்டிக்கு வந்தவன். இப்படியான ஒரு விவகாரம் பத்தி தெரிஞ்சா அது அவளுக்கு மட்டுமில்லாம எனக்கும் வெளிய தலை காட்ட முடியாத நிலைய உண்டாக்கிடும்.

எல்லாத்துக்கும் மேல என் ரெண்டு பசங்க வாழ்க்கை நாசமாயிடும். இத எல்லாம் தவிர்க்க வேற வழி இல்லாம, எல்லா உண்மையும் தெரிஞ்சும்... 35 வருஷமா ஒண்ணா வாழ்ந்துட்டு வரேன்.

ஏளனம்!

ஏளனம்!

ஆரம்பத்துல என் ஆபீஸ்ல, காலனியில சிலர் என் முதுகுக்கு பின்னாடி சிரிச்சத எல்லாம் கேட்டு மனசு புண்பட்டு போச்சு. அந்த காயத்த எல்லாம் நான் பொறுத்துக்கிட்டு இப்ப வரைக்கும் வாழ்ந்துட்டு வரதுக்கு ஒரே காரணம் என் பசங்க. இன்னிக்கி அவங்க கல்யாணம் ஆகி செட்டில் ஆயிட்டாங்க. எனக்கு மூணு பேர பசங்க இருக்காங்க.

ஒரு தடவ நியூஸ்ல கூட வயசானவர் தன் பிள்ளைங்க எதிர்காலத்த காட்டி மனைவிய 30, 40 வருஷம் கழிச்சு இதே காரணம் காட்டி விவாகரத்து பண்ணினதா படிச்சிருக்கேன். ஆனா, அப்படி ஒரு முடிவு எடுக்க விருப்பம் இல்ல. இப்ப அவங்க பண்ண தப்பு அவங்களுக்கே புரியுது. உடம்பு முடியாம தன்னோட கடைசி நாட்கள எண்ணிட்டு இருக்காங்க.

என்ன இருந்தாலும்... என் மனுசுல உண்டான காயமானது சாகுற வரைக்கும் வலிய கொடுத்துட்டே தான் இருக்கும். அதுக்கு மருந்து எதுவும் இல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: She Agreed with her Affair with my Colleague

Real Life Story: She Agreed with her Affair with my Colleague. But I was not able to divorce her because of social standard of my life.
Story first published: Tuesday, October 9, 2018, 10:29 [IST]
Desktop Bottom Promotion