For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நான் இல்லாத போது, ஆண்களுடன் படுக்கையை பகிரும் கணவன் - My Story #302

நான் இல்லாத போது, ஆண்களுடன் படுக்கையை பகிரும் கணவன் - My Story #302

By Staff
|

பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்த திருமணம் என்னுடையது. என் பெற்றோர்ரை வெள்ளந்தி என்று தான் குறிப்பிட வேண்டும். எதையும் ஆராய மாட்டார்கள். அவர்கள் கேட்பதையும், காண்பதையும் உண்மை என்று நம்பும் மனப்பாங்கு கொண்டவர்கள்.

இந்த உலகில்... மனிதர்களுக்கு இரட்டை முகம் இருப்பது அறியாமல், எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருபவர்கள் என் பெற்றோர். எனவே, என் வாழ்க்கையில் நடந்த அந்த விபத்துக்கு அவர்களை காரணம் காட்ட நான் தயாராக இல்லை.

எல்லாம் நன்றாக தான் போய் கொண்டிருந்தது. என் இரண்டு மகள்கள் பிறந்த, வளர்ந்து பதின் வயது எட்டிய பிறகு என் வாழ்வில் ஒரு பூகம்பம் வெடிக்கும் என நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூட்டுக் குடும்பம்...

கூட்டுக் குடும்பம்...

என் கணவர் வீட்டில் கூட்டுக் குடும்பம். தாம்பத்ய உறவில் இணையவே தயங்கி, தயங்கி தான் ஈடுபட வேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். நீண்ட காலம் தனிமையோ, தனி படுக்கை அறையோ இங்கே சாத்தியமற்றது என்று கூறினார் கணவர்.

முதல் மகள்!

முதல் மகள்!

எங்களுக்கு திருமணமான அதே ஆண்டில் பிறந்தாள் எங்கள் முதல் மகள். வளைகாப்புக்கு போன நான், குழந்தை பிறந்து ஆறு மாதம் கழித்து தான் கணவர் வீட்டுக்கு திரும்பினேன். அதுவரை நடுவே ஒருமுறை கூட அவர் என்னிடம் தாம்பத்தியம் பற்றியே பேச்சே எடுத்தது இல்லை. அப்போது, அவர் மீது எனக்கு பெருமையாக இருந்தது. என் தன்மை மற்றும் நிலைமையை புரிந்து நடந்துக் கொள்கிறார் என கருதினேன்.

வேலை!

வேலை!

நானும் வேலைக்கு சென்று வந்தேன். நான் ஒரு அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். ஆகையால், குழந்தை பிறந்த பிறகு, என் மாமியார் ஒரு பணிப்பெண்ணை வைத்துக் கொள்ள கூறினார். ஆனால், அதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆகவே, மாமனார், மாமியார், கணவர், குழந்தை, எனக்கு என ஐவருக்கும் சேர்த்து நானே அதிகாலை எழுந்து இரண்டு வேளைக்கு சமைத்து டிபனில் போட்டுக்கொடுத்து விட்டு ஆபீஸ் செல்ல வேண்டும்.

உதவியற்று.

உதவியற்று.

பேச்சுக்கு கூட உதவ முன்வரமாட்டார் என் மாமியார். அலுவலகம் சென்று வீடு திரும்பியதும் மாலை மீண்டும் எல்லாருக்கும் சமைத்து, பாத்திரங்கள் கழுவி வைத்துவிட்டு, இருக்கும் மச்சம் மீதியை நான் உண்டு உறங்க செல்ல வேண்டும். இதவே, எங்கள் இல்லற வாழ்க்கையாக இருந்தது. தனிமை, ப்ரைவசி என எதுவும் இல்லை. ரொமான்ஸ் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை.

நல்ல காலம்..

நல்ல காலம்..

எப்படியோ ஒரு நல்ல காலம் பிறந்தது, எங்களுக்கான தனி வீட்டை வாங்கி, தனியாக குடித்தனம் சென்றோம். என் வீட்டுக்கான வேலையை பார்த்து, பார்த்து, ரசித்து, ரசித்து செய்து வந்தேன். தனியாக வந்த போதிலும் கூட என் கணவர் தாம்பத்திய வாழ்வில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. எங்கள் தாம்பத்திய வாழ்க்கை மிக, மிக அரிதாக நடக்கும் ஒன்றாக தான் இருந்தது.

பிரச்சனை!

பிரச்சனை!

ஒருவேளை கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்த காரணத்தால், ப்ரைவசி, அது, இது என்பதால் அவர் இதற்கு தயங்கி வந்தார் என்று ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால், எங்கள் வீட்டுக்கு தனியாக வந்த பிறகும் கூட அவர் அப்படியே தான் இருந்தார். இதற்கு நடுவே தான் நான் எங்களது இரண்டாவதை மகளை பெற்றேன்.

வரவே மாட்டார்!

வரவே மாட்டார்!

சில காலம் கழிந்தன... ஒவ்வொரு விடுமுறை காலத்திலும் நான் என் அம்மா வீட்டுக்கு சென்றுவிடுவேன். நானாக திரும்பி வரும் வரை அவராக வந்த பார்த்ததும் இல்லை, அழைத்ததும் இல்லை. பிள்ளைகளின் மன நிம்மதி, அவர்களது மகிழ்ச்சி போன்றவற்றுக்காக நானும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆயினும், எப்படி தான் இந்த மனுஷன் அந்த வீட்டில் தனியாக இருக்கிறாரோ என்ற எண்ணம் எனக்குள் இருந்துக் கொண்டே இருந்தது.

25 ஆண்டுகள்!

25 ஆண்டுகள்!

ஏறத்தாழ எங்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் முடிந்துவிட்டது. நானும், என் இரண்டாவது மகளும் ஒருமுறை வெளியே சென்று வருகிறோம்... என கிளம்பிவிட்டோம். வீடு திரும்ப இராத்திரி ஆகும் என சொல்லி தான் கிளம்பினேன். ஆனால், நாங்கள் சென்ற இடத்தில் வேலை சீக்கிரம் முடியவே... மாலையே வீடு திரும்பினோம்.

அதிர்ச்சி!

அதிர்ச்சி!

வீட்டுக்கான சாவி இரண்டு செட் இருக்கிறது. ஒன்று அவரிடமும், மற்றொன்று என்னிடமும் இருக்கும். நான் வீட்டுக்குள் புகும் போதே, வேறு ஏதோ ஒரு ஆணின் காலனி இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்தேன். மகளை கீழே ஹாலில் இருக்க கூறிவிட்டு நான் மட்டும் தனியாக மேலே சென்றேன்.

எங்கள் படுக்கை அறையில், ஆடைகள் களைந்து கிடந்தன. படுக்கை அறைக்கு அருகே குழந்தைகள் தங்கும் அறையின் கதை திறந்து உள்ளே போனேன்... என் கணவரும் வேறு ஒரு ஆணும் நிர்வாண கோலத்தில், காண கூடாத காட்சியல் இருந்தனர்.

அந்த அதிர்ச்சியில் திகைத்துப் போய் உடனே வேகமாக கீழே இறங்கி வந்தேன். மகளை இன்னும் கொஞ்ச நேரம் டிவி பார்த்துக் கொண்டு இரு.. என்று கூறிவிட்டு எதுவும் நடக்காதது போல படிக்கட்டு அருகே சென்று நின்றேன்.

அழுகை!

அழுகை!

ஒண்ணுமே நடக்காதது போல இருவரும் கீழே இறங்கி வந்தனர். அவரது நண்பர் கிளம்பிவிட்டார்.

இரவு அவரை அழைத்து ஏன் இன்னிடம் போய் கூறினீர்கள். இத்தனை ஆண்டுகளாக என்னை ஏமாற்றி வந்தது ஏன் என்று கேட்டதற்கு, தான் ஒரு பை-செக்ஸுவல் என்பதை கூறினார். இதுக்குறித்து தன் பெற்றோருக்கு தெரியாது. ஆகவே தான் அவர்கள் திருமண பேச்சை எடுத்த போது தவிர்க்க முடியாமல் கல்யாணம் செய்துக் கொண்டேன் என்றார்.

மேலும், இதுகுறித்து யாரிடமும் கூற வேண்டும், வெளியே தெரிந்தால், தற்கொலை செய்துக் கொள்வேன் என்றும் மிரட்டினார்.

என்ன செய்வது?

என்ன செய்வது?

இப்போது, என் இரண்டு மகள்களும் திருமண வாழ்வில் இணைந்து சந்தோசமாக இருக்கிறார்கள். ஆனால், இன்னும் அன்று நான் கண்ட காட்சி அவ்வப்போது கெட்ட கனவு போல வந்து என் தூக்கத்தையும், மன நிம்மதியையும் கெடுக்கிறது.

கவுன்சிலிங் அல்லது நல்ல மருத்துவரிடம் சென்று சிகிச்சை மேற்கொள்ளலாமா என்று நினைக்கிறேன்.

ரீ-ப்ளே!

ரீ-ப்ளே!

ஒருமுறை தனியாக அமர்ந்து என் வாழ்க்கையை ரீ-வைண்ட் செய்து பார்த்த போது தான், எப்போதெல்லாம் அவர் என்னை விரட்டி தனியாக இருந்தார், எதற்காக அவர் இதை எல்லாம் செய்தார்? விடுமுறை நாட்களில் அவர் எங்களை வந்து காணாமல் இருந்ததற்கு இது தான் காரணமா? என பல சந்தேகங்கள் எழுகின்றன.

நானும், அவரும் பகிர்ந்த அதே படுக்கையில் வேறு ஆணும் இருந்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது அருவருப்பாக இருக்கிறது.

பரிசோதனை!

பரிசோதனை!

ஒருவேளை ஆணுடனும், என்னுடனும் ஒரே காலக்கட்டத்தில் இவர் உறவு வைத்துக் கொண்டு வந்ததால், எனக்கு ஏதேனும் நோய் தொற்று ஏற்பட்டிருக்குமா என அஞ்சினேன். பரிசோதனைகளும் மேற்கொண்டேன். நல்லவேளையாக எதுவும் நடக்கவில்லை.

உடல் ரீதியான பிரச்சனை இல்லை என்றாலும், இன்றும் அவர் என்னை தொடும் போதும், நாங்கள் ஒரே படுக்கையில் உறங்கும் போதும், அந்த காட்சி கண் முன்னே வந்து சென்று என் நிம்மதியை கொல்கிறது.

சமீபத்தில் என் குழந்தைகளிடம் இதுக்குறித்து கூறிவிடலாமா என்று கருதினேன். ஆனால், இதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனை வந்துவிடுமோ என்ற அச்சத்தால்... யாரிடமும் கூறாமல் என்னுள்ளேயே பூட்டி வைத்துள்ளேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: My Husband Was Partially Gay

Real Life Story: My Husband Was Partially Gay
Story first published: Friday, September 14, 2018, 14:34 [IST]
Desktop Bottom Promotion