For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'உன்னால முடியாட்டி, உன் ஆத்தாள குழந்தை பெத்துக் கொடுக்க சொல்லு...' - My Story #288

'உன்னால முடியாட்டி, உன் ஆத்தாள குழந்தை பெத்துக் கொடுக்க சொல்லு...' - My Story #288

By Staff
|

நான் கல்யாணம் பண்ணிக்கிட்டப்ப வயசு 19 இருக்கும். கொஞ்சம் குண்டாவும்... முகத்துல பருக்களும் இருந்துச்சு... குண்டுன்னா ரொம்ப குண்டெல்லாம் இல்ல. கொஞ்சம் கொழுகொழுன்னு இருப்பேன். இதனால ஸ்கூல் படிக்கும் போதோ, காலேஜ் படிக்கும் போதோ என்ன பசங்க சைட் அடிச்சது எல்லாம் இல்ல. ஆனால், எதாச்சும் பொண்ணோட டீடெயில்ஸ் வேணும்னா அவங்க கூப்பிடுற முதல் ஆளு நானா தான் இருப்பேன்.

காலேஜ்ல எனக்கு படிப்பும் பெரிசா வரல. ரெண்டு மூணு சப்ஜக்ட்ல அரியர் வேற வெச்சிருந்தேன். அதனால, ரெண்டாவது வருஷம் முடிஞ்சப்பவே செமஸ்டர் லீவ்ல இருக்கும் போது, அம்மா ஒருநாள் கூப்பிட்டு பேசினாங்க. உனக்கு இப்பவே மூஞ்சி முழுக்க பரு, குண்டா வேற இருக்க. 25 வயசுல பாக்குறதுக்கு 40 வயசு பொம்பள மாதிரி ஆயிடுவ. பேசாம இப்பவே கல்யாணம் பண்ணி வெச்சிடலாம்னு பிளான் பண்ணி இருக்கோம்னு சொன்னாங்க.

அவங்க சொன்னதுல எந்த தப்பும் இல்ல. எனக்கு படிப்பும் பெரிசா வரல. காதல் பண்ற ஐடியாவும் இல்ல. பேசாம வீட்டுல பார்த்து சொல்ற மாப்பிளைய கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணேன். எங்க பாட்டி தான் ஒரு வரன் பார்த்தாங்க. நல்ல பையன் தான். 2010ல எங்களுக்கு நிச்சயம் ஆச்சு. அந்த வருஷ கடைசியிலேயே கல்யாணமும் ஃபிக்ஸ் பண்ணினாங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓட்ட வாயி!

ஓட்ட வாயி!

நான் கொஞ்சம்.. இல்ல, இல்ல ரொம்பவே ஓட்டை வாய். நிச்சயமாகி கல்யாணத்துக்கு நாள் இருக்கும் போதே, என் பிரச்சனை எல்லாம் என்ன? என்னோட பாஸ்ட் லைப்ல நான் எப்படி இருந்தேன்... பசங்க என்ன பார்க்கவே மாட்டாங்க.. எனக்கு லவ்வே வந்தது இல்ல.. நான் மொக்க.. என் அப்பா, அம்மாவுக்கே என்ன பெரிசாப் பிடிக்காது. படிப்பு சரியா வரலன்னு தான் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டாங்கன்னு எல்லாத்தையும் சொல்லிட்டேன். உண்மைய சொல்லணும்னா உளறிட்டேன்.

ஆனால், இதெல்லாம் அப்ப எனக்கு பேக் ஃபயரும் ஆகல. கல்யாணம் நல்லப்படியா தான் முடிஞ்சது. கல்யாணத்துக்கு அப்பறம் தான் நிறையா மாற்றங்கள்.

பூகம்பம்!

பூகம்பம்!

என் கல்யாணம் முடிஞ்சு முதல் பிறந்தநாள் அன்னிக்கி தான் ஒரு பூகம்பமே வெடிச்சது. என் கணவர் எனக்காக ஒரு பர்த்டே பார்ட்டி ஏற்பாடு பண்ணியிருந்தார். என் வாழ்க்கையில ஹோட்டல்ல ஹால் புக் பண்ணி பிறந்தநாள் கொண்டாடுறது எல்லாம் அதுதான் முதல் தடவை.

வெறும் குடும்பத்தார் மட்டும் அட்டன்ட் பண்ற மாதிரி ஏற்பாடு எல்லாம் இருந்துச்சு. ஆனா, அன்னிக்கி என் அப்பானால வர முடியில. அவர் ஒரு கவர்மென்ட் ஆபீஸ்ல உயர் பதவியில இருக்காரு. டக்குன்னு ஐநூறு கிலோமீட்டர் எல்லாம் ட்ராவல் பண்ணி வர முடியாது. இதுல தான் என் கணவர் முதல் முறையா கோபப்பட்டார். என் வாழ்க்கையும் திசை மாறிப் போச்சு.

கருத்தரிக்க முடியாது!

கருத்தரிக்க முடியாது!

முதல் தடவையா உனக்கு இவ்வளோ காசு செலவு பண்ணி பார்ட்டி அரேஞ் பண்ணா. உங்க அப்பானால அதுக்கு கூட வர முடியாதுன்னு கோவம். சரியா... அதுக்கு அடுத்து எனக்கு கருக்கலைஞ்சது.

உன்னால இந்த விஷயத்துல கூட கவனமா இருக்க முடியாதுன்னு ஒட்டுமொத்த குடும்பமும் ஒரு புழு பூச்சிய பாக்குற மாதிரி பார்த்தாங்க. ஆண்டவன் கொடுக்கும் போது கொட்டோ கொட்டுன்னு கொட்டிக் கொடுப்பான்னு சொல்வாங்க. எனக்கும் அப்படி தான் கொடுத்தான்.

கருக்கலைப்பு ஆனதுனால உடம்பு ரொம்ப வீக்கா இருந்துச்சு. டாக்டர்கிட்ட ட்ரீட்மெண்ட்க்காக போனா, அவங்க எனக்கு PCOD இருக்கு.. உன்னால இயற்கைய கருத்தரிக்கிறது கஷ்டம்னு ஒரு குண்ட தூக்கிப் போட்டாங்க.

மெஷினா?!

மெஷினா?!

இதுக்கு ஒரு கவலை பொண்ணுக்கு வர முடியாது. யாரோ ஒருத்தங்க குழந்தை பெற்று தாய் ஆனா தான் அந்த பொண்ணு நிஜமாலே நூறு சதவிதம் பெண்'னு எழுதிவெச்சுட்டு போயிட்டாங்க. இதுக்காகவே அந்த பொண்ணோட உடல்நிலை பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாம ஒரு மெஷின் மாதிரி ட்ரீட் பண்ணி குழந்தைய பெத்து போடுன்னு எதிர்ப்பார்க்குது இந்த சமூகம்.

"ஆத்தாள பொத்துக் கொடுக்க சொல்லு..."

உன்னால முடியாட்டி உங்க ஆத்தாள பெத்துக்கொடுக்க சொல்லுன்னு ஒரு வார்த்தை சொன்னாரு. சுக்குநூறா உடைஞ்சு போயிட்டேன். அதுக்கப்பறம் என் கணவர்னால நானும், எங்க அம்மாவும் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்ல. வெளிய சொல்லவும் முடியாம, எதிர்க்கவும் முடியாம திண்டாடுனோம். ஊருல பெரிய குடும்பம் விவாகரத்து பண்ணா மரியாதை போயிடும்.

இங்க கணவர் வீட்டுல கூட்டுக் குடும்பம். அக்கம் பக்கத்துல எல்லாரும் வாழ்ந்தா இந்த குடும்பம் மாதிரி வாழனும்னு பெருமையா பேசிக்கிறாங்க. இந்த குடுமப்த்துக்குள்ள வந்து வாழ்ந்து பார்த்தா தான தெரியும். ஒவ்வொரு சுவரும் கதை, கதையா சொல்லி கதறும்.

குழந்தை பாக்கியம்!

குழந்தை பாக்கியம்!

ஒருவழியா கல்யாணம் ஆகி நாலு வருஷம் கழித்து நான் இயற்கையா திரும்ப கன்சீவ் ஆனேன். அப்பாட... இனிமேல் வீட்டுல எந்த பிரச்சனையும் இருக்காது. கணவரோட கோபம் எல்லாம் தீர்ந்திடும்னு நெனச்சேன். ஆனால், அப்பதான் கடவுள் திரும்பவும் என் வீட்டு காலிங் பெல் அடிச்சு. பொறுமையா இருமா தாயி... உன்னோட 7 1/2 முடியலன்னு சொன்னாரு.

மார்பக புற்றுநோய்!

மார்பக புற்றுநோய்!

என் மாமியாருக்கு மார்பக புற்றுநோய். ரொம்ப பாவம்.. படாதப்பாடுப்பட்டாங்க. ஆனா, ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்த என்னையும் படாதப்பாடுப்படுத்துச்சு. நான் படிக்கலங்கிற ஒரே காரணத்துக்காக. 13 பேர் இருக்க கூட்டுக் குடும்பத்துக்கு தனி மனிஷியா இருந்து மூணுவேளையும் சோறு சமைச்சு கொட்டனும்.

முன்னாடி உதவியா மாமியார் இருந்தாங்க. இப்ப அவங்களுக்கும் முடியல. எனக்கு குழந்தை பிறந்து நாலஞ்சு மாசம் தான் ஆச்சு. ஆனா, அதுப்பத்தி யாருக்கும் எந்த கவலையும் இல்ல.

அம்மா.. வேணாம்!

அம்மா.. வேணாம்!

அழுதேன்... அம்மா., பேசாம விவாகரத்து வாங்கிட்டு வந்திடுறேன். என்னால முடியல. நானே குழந்தைய தனி ஆளே இருந்து வளர்த்து ஆளாக்குறேன்ன்னு கெஞ்சுனேன். வேணாம்டி குடும்ப மானம் போயிடும். வெளிய தலைக் காட்ட முடியாது. உங்க அப்பாக்கு ஊருல ஒரு மரியாதை இருக்கு கெடுத்துடாதடீன்னு அம்மா ஒரு பக்கம் அழுகுறாங்க. வேற என்ன பண்ண, கணவர் கால்ல தான் போய் அடுத்து விழுகனும்.

இளக்காரமா?

இளக்காரமா?

விழுந்தும் எந்த பயனும் இல்ல. படிக்கல... அழகா இல்ல.. குண்டா இருந்தா... அவங்க பொண்ணே இல்லையா. ஏன், படிக்காட்டி அறிவே இருக்காதா? என்ன எம்.பி.ஏ படிச்சாலும் வீட்டு மேலாண்மை கத்துக்குறது, வீட்ட தனியாளா இருந்து மேனேஜ் பண்றது எல்லாம் எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அதென்ன ஹவுஸ் வைப்னா ஒரு இளக்காரம்.

புரிஞ்சுக்குங்க...

புரிஞ்சுக்குங்க...

என் குழந்தை முன்னாடி அழக் கூடாதுன்னு எவ்வளவோ கட்டுப்படுத்த முயற்சி பண்ணேன். ஆனா, கடந்த மூணு வருஷமா... அவன் முன்னாடி அழுத்துட்டே தான் இருக்கேன். முன்னாடி எல்லாம் அவனுக்கு ஏதும் தெரியாது. இப்ப.. ஏம்மா அழுவுறன்னு கேள்வி கேட்கிறான். என்னன்னு பதில் சொல்றது. முகத்துல பருக்கள் வரது, உடம்பு குண்டா இருக்கிறது... ஹார்மோன் பிரச்சனைனால கூட ஏற்படும் அத ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க.

பெத்தவங்க என்ன பெருசா கண்டுக்கலன்னு நான் சொன்னது, கட்டிக்கிட்ட புருஷன் அத தெரிஞ்சா.. நம்மள கண்கலங்காம பார்த்துப்பான்ங்கிற நம்பிக்கையில. இங்க என்னடான்னா அத ஒரு அட்வான்ட்டேன்ஜா எடுத்துக்கிட்டு.. உனக்கு பிறந்த வீட்டுல நாதியில்ல. என்ன பண்ணாலும் இங்கயே தான் கிடக்கணும்னு நினைக்கிறது எல்லாம் என்ன மாதிரியான எண்ணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: I Told Everything about My Past. He took it as Advantage and Made Revenge

Real Life Story: I Told Everything about My Past. He took it as Advantage and Made Revenge
Story first published: Thursday, August 2, 2018, 19:53 [IST]
Desktop Bottom Promotion