For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  4 வயசுல ஒரு மகன வெச்சுட்டு ரெண்டாவது கல்யாணம் பண்றது சரியா? - My Story #303

  By Staff
  |

  அடிமேல அடிவிழும்... பட்ட காலில் படும், கெட்ட குடியே கெடும்னு நாம பழமொழி படிச்சிருப்போம். ஆனா, என் வாழ்க்கையே அப்படி தான் இருக்கு.

  ஆறில் இருந்து அறுபது வரை படத்துல வர ரஜினிக்கும், எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். அவரு பிறந்ததுல இருந்து கடைசி வர கஷ்டப்பட்டுட்டே இருப்பாரு. கடைசி காலத்துல ஒரு நிலைமைக்கு வருவாரு.

  நான் பிறந்ததுல இருந்து என்னோட பதின் வயது வரைக்கும் நல்லா சந்தோஷமா தான் இருந்தேன்... என் அப்பா இறந்ததுல இருந்து, இப்ப வரைக்கும் படாத கஷ்டமெல்லாம் பட்டுட்டு இருக்கேன்.

  நம்ம சோகத்த பகிர்ந்துக்க கூட ஆள் இல்லங்கிறத விட, நாம சந்தோஷமா இருக்கும் போது கூட அத பகிர்ந்துக்க ஒரு நல்ல உள்ளம் இல்லங்கறது தான் வாழ்க்கையோட பெரிய சோகம்.

  ஆனா, என் வாழ்க்கையில சோகம், சந்தோஷம் இந்த ரெண்டையுமே பகிர்ந்துக்க ஆள் இல்ல...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  மகிழ்ச்சியான நாட்கள்!

  மகிழ்ச்சியான நாட்கள்!

  அப்பா ஒரு பிஸ்னஸ் மேன். என் கூட பிறந்தவங்கன்னு யாரும் இல்ல. ஒரே ஒரு பொண்ணு. அப்பாவுக்கு பெண் குழந்தைன்னா ரொம்பவே பிரியம். அவரு கூட பிறந்தவங்க எல்லாம் அண்ணன், தம்பிங்கிறதுனால... பெண் குழந்தை மேல ரொம்பவே பாசம். கேட்டது, கேட்காததுன்னு எல்லாமே எனக்கு கிடைச்சது. துக்கம்னா என்னன்னே தெரியாம நான் வாழ்ந்த நாட்கள் அதெல்லாம்.

  அழுகையா?

  அழுகையா?

  எனக்கு தெரிஞ்சு நான் அழுததே இல்லை. எங்கப்பா என்ன ஒருதடவ கூட கீழ விழவிட்டது இல்ல. சைக்கிள் ஓட்ட கத்துக் கொடுக்கும் போது கூட, கூடவே ஓடி வருவார்... நான் விழ மாதிரி தெரிஞ்சா உடனே தாங்கி பிடிச்சுக்குவார். இதனாலேயே நான் சைக்கிள் ஓட்ட கத்துக்க ரொம்ப நாள் ஆச்சு. ஒருவேளை ரெண்டு , மூணு தடவ கீழ விழுந்திருந்தா..., எங்க அப்ப என்ன விழ விட்டுருந்தா... நான் இன்னும் கொஞ்சம் நல்ல அனுபவத்தோட வாழ்க்கைய வாழ பழகி இருப்பேன்.

  அம்மா!

  அம்மா!

  அம்மாவுக்கு 30, 35 வயசுல இருந்தே கேன்சர். எனக்கு அப்போ கேன்சர்னா என்னன்னே தெரியாது. காய்ச்சல், தலைவலி மாதிரி ஏதோ ஒண்ணுன்னு நினைச்சுக்கிட்டேன். அப்பா, அம்மாவ விட்டு நகரவே மாட்டாரு. முடிஞ்ச வரைக்கும் வீட்டுலேயே இருந்து பிஸ்னஸ்க்கான வேலைகள் எல்லாம் பார்த்துக்கிட்டார்.

  முன்ன எல்லாம் நான் ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வரும் போது, அம்மா வாசல்ல காத்துட்டு இருப்பாங்க. ஆனா, அந்த காலக்கட்டத்துல... நிறையா நாள் அம்மா ஹாஸ்பிட்டல்ல தான் இருந்தாங்க. மாசம் ஒருவாரம் அப்பா அம்மாவ கூட்டிட்டு வெளியூர் கிளம்பிடுவார். எனக்கு அப்போ அவங்க செக்கப் பண்ண போறது எல்லம் தெரியாது. சில நேரம் நானும் வருவேன்னு அடம் பிடிச்சது எல்லாம் உண்டு.

  எதிர் பாராத மரணம்...

  எதிர் பாராத மரணம்...

  அப்போ நான் ஸ்கூல் கடைசி வருஷம்... ஒரு நாள்... என் அத்தையும், மாமாவும் ஸ்கூலுக்கு வந்து கிளாஸ் நடந்துட்டு, இருக்கும் போதே, டீச்சர் கிட்ட ஏதோ சொல்லிட்டு என்ன கூட்டிட்டு போயிட்டாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல... வீட்டு வாசல் முழுக்க கூட்டம். பந்தல் எல்லாம் போட்டிருந்தாங்க... உள்ள அழுகுற சத்தம் கேட்டதும் உடம்பு எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு.

  அப்பாவ ஒரு பெஞ்சுல படுக்க வெச்சு மாலை எல்லாம் போட்டிருந்தாங்க.. அம்மா ஒரு பக்கமா மயங்கின நிலையில இருந்தாங்க. சொந்த காரங்க எல்லாம் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக், இறந்துட்டார்னு பேசிக்கிட்டு இருந்தாங்க.

  MOST READ: உங்களது இந்த அன்றாட பழக்கங்கள் தான் முதுகு எலும்பு வலிமையை சீர்குலைக்கிறது.

  எல்லாமே அப்பா தான்...

  எல்லாமே அப்பா தான்...

  அம்மாவுக்கோ, எனக்கோ வாழ்க்கை பத்தி பெரிசா எதுவும் தெரியாது. வரவு, செலவுல இருந்து, வேண்டியது, வேண்டாதது எல்லாமே அப்பா தான் பார்த்துக்கிட்டார். அம்மாவுக்கு எப்போ ட்ரீட்மென்ட் எடுக்க போகணும், மருந்து என்னென்ன சாப்பிடனும் எதுவுமே தெரியாது. அப்பா, இறந்த பின்ன, அம்மாவும் தன்னோட சிகிச்சை பத்தி பெரிசா அக்கறை எடுத்துக்கல.

  பண விஷயத்துல எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல... அப்பா எங்க தேவைக்கு அதிகமான பணத்த சம்பாதித்து வெச்சிருந்தார். ஆனா, வாழ்க்கைனா என்ன, அத எப்படி வாழனும்னு அவரு எங்களுக்கு கத்துக் கொடுக்காம போயிட்டார்.

  காலேஜ்!

  காலேஜ்!

  காலேஜ் போனேன்... எனக்கு பிடிச்சத படிச்சேன்.. எபோவ் எவரேஜ் மார்க் ஸ்கோர் பண்ணேன். மும்பையில வேலை. எனக்கு அந்த வேலைக்கு போக இஷ்டமே இல்ல. ஆனா, அம்மா தான்... உலகத்த தெரிஞ்சுக்கணும், வாழ்க்கைய புரிஞ்சுக்கணும்.. என்ன மாதிரியே இருந்திடாதன்னு திட்டி அனுப்பி வெச்சாங்க.

  இங்க நான் வாழ்ந்த வாழ்க்கைக்கும் மும்பை வாழ்க்கைக்கும் ரொம்பவே வித்தியாசம் இருந்துச்சு. உடுத்துற உடை, சாப்பிடுற உணவு, வாழுற கலாச்சாரம்னு ரொம்பவே வித்தியாசம்.

  பிரபோஸ்

  பிரபோஸ்

  நிறையா காதல், நிறையா கவர்ச்சி.. ஃபேஷன் எல்லாமே புதுசு. எனக்கு அங்க என்ஜாய் பண்ணனும்ங்கிறத விட, பயம் தான் அதிகமா இருந்துச்சு. ஏதோ எனக்கு ஒட்டாத உலகத்துல என்ன கொண்டு வந்த போட்ட மாதிரி இருந்துச்சு. அப்ப தான் அவனோட அறிமுகம் எனக்கு கிடைச்சது. அவனா தான் என்ன லவ் பண்றேன்னு பிரபோஸ் பண்ணான். நான் முடியாதுன்னு மறுத்த போது, அவன் மத்த பசங்க மாதிரி இல்லாம, ரொம்ப ஃபிரெண்ட்லியா டீசண்டா பிஹேவ் பண்ணான்.

  விடுமுறை நாட்கள்...

  விடுமுறை நாட்கள்...

  தீபாவளி பண்டிகை, லாங் லீவ்... எங்க டீம்ல, எல்லாரும் அவங்கவங்க ஊருக்கு போறதுக்கு பதிலா, இந்த தடவ, எல்லாரும் யாராச்சும் ஒருத்தர் ஊருக்கு ஒண்ணா போகலாம்னு சொன்னாங்க. சீட்டு குலுக்கி போட்டதுல என் பேரு வந்துச்சு. மொத்தம் 14 பேரு. ஆண், பெண் வித்தியாசம் பார்க்க தெரியாத ஜோவியல் மெண்டாலிட்டி கொண்டவங்க.

  அம்மாக்கிட்ட பர்மிஷன் கேட்டேன், மறுக்காம ஒகே சொன்னாங்க. எல்லாரும் ஃப்ளைட்ல கிளம்பினோம்.

  MOST READ: ஆண்களை அதிகம் தாகும் உயிர்கொல்லி நோய்கள், உஷாரா இருந்துக்குங்க!

  சம்மதம்!

  சம்மதம்!

  ஆரம்பத்துல நான், அம்மா, அப்பா. அப்பா மறைவுக்கு பின்ன நான், அம்மா ஒரு வேலைக்கார அம்மான்னு அவ்வளோ பெரிய வீட்டுல மூணு பேர் வாழ்க்கை மட்டுமே பார்த்த எனக்கு. முதல் முறையா எங்க வீடு முழுக்க ஆளுங்க நிறைஞ்சு, சந்தோஷமா பேசி மகிழ்ந்த தருணம் லைப் டைம் மெமரியா இருந்துச்சு.

  அங்க தான், நடுவுல ஒரு நாள் அவன் அம்மாக்கிட்ட என்ன காதலிக்கிறத சொல்லி சம்மதம் வாங்கி இருக்கான். இத அம்மா கூட என் கிட்ட சொல்லல. நான் திரும்ப மும்பை போனதுக்கு அப்பறமா ஒருநாள் அம்மா கால் பண்ணி ஒரு வரன் பார்த்திருக்கேன்னு சொல்லி, அவன் பேர சொன்னாங்க.

  முதல்ல ஷாக்கா இருந்துச்சு. அப்பறம், அம்மாவுக்கே ஒகேங்கிறதுனால... நானும் ஒகே சொல்லிட்டேன்.

  தாங்குனான்...

  தாங்குனான்...

  அன்னையில இருந்து கல்யாணம் ஆகி, குழந்தை பிறக்குற வரைக்கும் என்ன கையில வெச்சு தாங்குனான். எனக்கு என் அப்பாவ பார்த்த மாதிரியே இருந்துச்சு. அவ்வளவு அக்கறை.

  குழந்தை பிறந்தா பொண்ணுகளுக்கு உடம்புல சில மாற்றங்கள் தென்படும்... சில ஆண்களுக்கு மனசுல மாற்றங்கள் தென்படும். குழந்தை பிறந்த பிறகு என்ன பண்ணாலும் பெண் உடம்புல ஏற்பட்ட மாற்றத்த நூறு சதவிதம் பழையபடி மாத்த முடியாது. அதுலயும் சிசேரியன் பண்ண பொண்ணுகளுக்கு சொல்லவே வேண்டாம்.

  அவன் அக்கறை எல்லாம் என்மேல இருந்துச்சா, என் உடம்பு மேல இருந்துச்சான்னு அதுக்கு அப்பறமா தான் என்னால தெரிஞ்சுக்க முடிஞ்சுது.

  தவிர்த்தல்...

  தவிர்த்தல்...

  சிசேரியன்ங்கிறதுனால... ஆறேழு மாசம் தாம்பத்திய உறவு எதுவும் இல்ல. எனக்கு கொஞ்சம் கூடுதல் வலி இருந்துக்கிட்டே இருந்துச்சு. சரியா, குழந்தை பிறந்த எட்டு மாசம் இருக்கும். ஒரு நாள் சூழல் அதுக்கு தகுந்த மாதிரி ஏதுவா வந்துச்சு. தாம்பத்திய உறவுல இணைய முற்பட்ட போது.. முன்ன இருந்த மாதிரியான ஒரு உணர்வு அவனுக்கு ஏற்படல...

  அது அவனோட ஃபேஸ் ரியாக்ஷன் வெச்சே நான் கண்டுபிடிச்சுட்டேன். அதுக்கப்பறம் ரெண்டு, மூணு தடவ முயற்சி பண்ணியும் அதே ரிசல்ட் தான். என்ன கொஞ்சம், கொஞ்சமா வெறுக்க ஆரம்பிச்சான். நான் என்ன பண்ண முடியும். இதுல கொஞ்சம் உடம்பு வேற ஏறிடுச்சு.

  சண்டை!

  சண்டை!

  தேவை இல்லாத காரணத்தால வேண்டாத சண்டை, சச்சரவுன்னு வாழ்க்கை மோசமான திசையில நகர ஆரம்பிச்சது. கேன்சருக்கு தொடர்ந்து சரியான மருந்து எடுத்துக்காதனால அம்மாவும் மரணா படுக்கைக்கு தள்ளப்பட்டாங்க. நான் வேலைய ரிசைன் பண்ணிட்டு அம்மாவ பார்க்க குழந்தைய எடுத்துக்கிட்டு ஊருக்கு வந்துட்டேன்.

  ஏற்கனவே எங்களுக்குள்ள ஒரு விரிசல் இருந்துச்சு.. இதுல இந்த பிரிவு விரிசல் பெரிசாக காரணம் ஆச்சு.

  MOST READ: உங்க இரத்தப் பிரிவை வெச்சு, உங்கள பத்தி தெரிஞ்சுக்கனுமா? இதப்படிங்க

  மரணம்!

  மரணம்!

  ஒரு நாள் ராத்திரி என் கண்ணேதிர அம்மா துடித்துடிச்சு இறந்தாங்க... என் அம்மா மரணத்துல இருந்து நான் வெளியில வரதுக்குள்ள இன்னொரு இடி என் தலையில விழுந்துச்சு. நான் ஊருல இருந்த அந்த நாலஞ்சு மாசத்துல என் கணவர் வேற ஒரு உறவுல இருந்தாரு.

  கையும் களவுமா பிடிச்ச பிறகும் கூட அவங்க உறவு நீடிச்சது. அதாவது, இது தெரியாம செஞ்ச தவறு இல்ல.. தெரிஞ்சே பண்ணுன குற்றம். வேற என்ன சொல்ல, டிவோர்ஸ் பண்ணிட்டு வெளிய வந்திடலாம்னு யோசிச்சேன்... ஆனால், பையன் அப்பா கூட க்ளோசா இருக்கான்.

  எனக்கும்...

  எனக்கும்...

  ஏறத்தாழ அம்மா இறந்து மூணு வருஷம் ஆச்சு. என் மகனுக்கு நாலு வயசு. நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி தான் எனக்கும் கேன்சர்னு கண்டுபிடிச்சாங்க. அதுக்கான ட்ரீட்மென்ட் எல்லாம் போயிட்டு தான் இருக்கு. கேன்சர் செல் சின்னதா இருக்குறதுனாலயும், ஃபர்ஸ்ட் ஸ்டேஜ்லயே கண்டிப்பிடிச்சதாலயும் சரி பண்ணிடலாம்னு டாக்டர் சொன்னாரு. அதே மாதிரி ட்ரீட்மென்ட்ல செல் சைஸ் குறைஞ்சுட்டு வருது.

  ஆனாலும் ரெண்டு வருஷம் தொடர்ந்து செக்கப் போயிட்டே தான் இருக்கணும்.

  என் தேவை..

  என் தேவை..

  எனக்கு இப்ப தேவை, பணமா, செக்ஸ் உறவோ இல்ல. அக்கறையா என் கூட இருக்க ஒரு உறவு. என் அம்மாவ கூடவே இருந்து பார்த்துக்கிட்ட என் அப்பாவ போல... முடியாத போது தோள் சாஞ்சு அழுகவும், கொஞ்சம், கொஞ்சம் சிரிக்கவும்.

  கேன்சரோட வலி கொடுமையானது. ஆனா, அதவிட கொடுமையான விஷயம்.. என்னோட கரண்ட் சிட்டுவேசன். என்ன வேண்டாம்னு சொல்லி, அவரு வேற ஒரு பொண்ணோட ரெண்டு வருஷமா உறவுல இருந்துட்டு வராரு. என் மகனும் அப்பா மேல தான் ரொம்ப பாசமா இருக்கான்.

  என்ன பண்றது...?

  என்ன பண்றது...?

  மாசம் முழுக்க என் கூடவே இருக்க என் பையன், ரெண்டு மூணு நாள் மட்டும் வந்து பார்த்துட்டு போற அப்பா கூட தான் அட்டாச்சுடா இருக்கான். நான் தேடி போற உறவு இல்ல, என்ன முழுசா அக்ஸப்ட் பண்ணிட்டு வர உறவு... என் மகன பாதிச்சிடுமோனு பயமா இருக்கு. இப்படியே தனியா, அந்த ஒரு உறுதுணையும், அக்கறையும் இல்லாம போனா, நானே மெண்டலா பாதிக்கப்பட்டுடுவேனோனும் பயமா இருக்கு. நான் என்ன தான் பண்றது?

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Real Life Story: I Do Not Know, Whether I Could Married Again or Not

  Real Life Story: I Do Not Know, Whether I Could Married Again or Not
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more