நடு ராத்திரினு கூட பார்க்காம, மாமனார், மாமியார், கணவர் செய்த கொடுமை - My Story #301

By Staff
Subscribe to Boldsky

என்னது ஒரு அளவான சின்ன குடும்பம்னு சொல்லாம். புகுந்த வீட்டுல என் கணவர் மட்டும் தான் மாமனார், மாமியாருக்கு ஒரே மகன். வீட்டுல, நான், என் ஹஸ்பன்ட் ரெண்டு பேருமே வேலைக்கு போறோம். மாமனார் ஒரு ரிட்டயர்ட் கவர்மென்ட் ஆபீசர், மாமியார் ஆரம்பத்துல இருந்தே ஹவுஸ் வைப் தான். எங்களுக்கு ஒரே ஒரு மகன். அவனுக்கு 3 வயசு தான் ஆகுது.

Real Life Story: I did decide to bring about one change in my life

வாழ்க்கையில என் மகனுக்கு அப்பறம் நான் மிகவும் நேசிக்கிற ஒன்னு ஞாயிறு. ஞாயிற்றுக் கிழமை மட்டும் தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கும், கொஞ்சம் நேரம் கூடுதலா தூங்க முடியும். திங்கள் முதல் வெள்ளி வரைக்கும் ஆபீஸ் வேலை. சனிக் கிழமை ஆச்சுனா... அந்த வாரம் முழுக்க மிச்ச மீதி இருக்க வீட்டு வேலை எல்லாம் செஞ்சு முடிக்கணும்.

நான் ரொம்ப விரும்பி வாழுற அந்த ஒரு ஞாயிறு என் வாழ்க்கையில மறக்க முடியாத நாளா மாறும்னு நெனச்சு கூட பார்க்கல...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலையில்...

காலையில்...

சனி, ஞாயிறு ஆச்சுன்னா... என் கணவர் தான் வீட்டுல காபி போடுவார். எனக்கு வீட்டு வேலையில கூடமாட ஒத்தாசையாவும் இருப்பாரு. ஏன்னா.. எவ்வளவு சீக்கிரம் நான் ஞாயிறுல எல்லா வேலையும் முடிக்கிறோமோ... அவ்வளவு சீக்கிரம் வெளிய ஒரு ரவுண்ட் போயிட்டு... ஷாப்பிங், சினிமா.. அந்த வாரத்துக்கான காய்கறி பர்சஷிங்னு எல்லாத்தையும் முடிக்க முடியும்.

ஷாப்பிங்!

ஷாப்பிங்!

ஞாயிறு காலையில மட்டும் நான் எழுந்திருக்க குறைந்தபட்சம் 9 மணிக்கு மேல ஆகும். அதிகபட்சம் 10, 10.30 ஆகும். அன்னிக்கு 10.30 மணி ஆச்சு... 11.30-க்குள்ள எல்லா வேலையும் முடிச்சுட்டு வெளியில கிளம்பிட்டோம். மதியம் சினிமா பார்த்துட்டு... ஈவ்னிங் ஷாப்பிங் எல்லாம் முடிச்சுட்டு.. இராத்திரி டின்னர் வெளியவே சாப்பிட்டுட்டு வீட்டுக்கு வரும் போது மணி 9.

தண்ணி!

தண்ணி!

அன்னிக்கி என் வாழ்க்கையில ஞாயிறு ரொம்ப மோசமா ஆனதுக்கு ரெண்டு தண்ணி காரணம். ஒன்னு, ஒவ்வொரு வீக்கென்ட்லயும் என் ஹஸ்பன்ட் குடிக்கிற தண்ணி. இன்னொன்னு.. அன்னிக்கி ராத்திரி ரெஸ்ட்ரூம் போன என் குட்டி பையன், குழாய சரியா மூடமா விட்டதால வந்த பிரச்சனை. ஒருவேளை, இதுல ஏதாவது ஒன்னு நடக்காம இருந்திருந்தாலும், நான் இன்னிக்கி இவ்வளவு வலிமையான பெண்ணா இருந்திருக்க மாட்டேன்.

பெட்ரூம் முழுக்க...

பெட்ரூம் முழுக்க...

ராத்திரி எழுந்து ரெஸ்ட்ரூம் போன என் பையன்... குழாய சரியா மூடாம வந்து படுத்துட்டான். எனக்கும் வெளிய போய் அலஞ்சுட்டு வந்ததுல... தண்ணி கீழ போற சத்தமே கேட்கல. எனக்கு மட்டும் இல்ல, குடிச்சுட்டு படுத்த என் கணவருக்கு, என் மாமியாருக்குன்னு யாருக்குமே அந்த சத்தம் கேட்கல. திடீர்னு, நடுராத்திரி என் மாமனார் எழுந்து வந்த கத்தினாரு. அப்ப தான் எங்களுக்கு பெட்ரூம் முழுக்க தண்ணி நிறைஞ்சு இருந்தது தெரிஞ்சுது.

ஹால்...

ஹால்...

எல்லாரும் எழுந்து பார்த்தப்போ... பெட்ரூம்ல இருந்து தண்ணி ஹால்ல போயிட்டு இருந்தத பார்த்து அதிர்ச்சி ஆனோம். பெட்ரூம்குள்ள வந்த என் மாமனார்.. எடுத்த எடுப்புலயே... என்ன அசிங்கமா திட்ட ஆரம்பிச்சாரு... திட்ட அவருக்கு வாய் கூசாட்டியும், கேட்ட என் காது ரொம்பவே கூசுச்சு.

ஏற்கனவே போதையில இருந்த கணவரும், நல்ல தூக்கத்த கெடுத்த கோபத்துல வந்த மாமியாரும் கூட சேர்ந்து என்ன ப்ளேம் பண்ணி திட்ட ஆரம்பிச்சாங்க.

என்ன வளர்ப்பு...

என்ன வளர்ப்பு...

ஒழுங்கா குழந்தைய வளர்க்க தெரியாதவன்னு ஆரம்பிச்சு.. எங்க ஐஞ்சு வருஷ இல்லற வாழ்க்கையில எப்பப்போ நான் என்னென்ன சின்ன, சின்ன தப்பு பண்ணேனோ அதை எல்லாம் ஒட்டு மொத்தமா லிஸ்ட் போட்டு திட்ட ஆரம்பிச்சாங்க. அக்கம்பக்கத்து வீட்டுல இருக்கவங்க பெரும்பாலும் எங்க சொந்த காரங்க தான். சப்தம் கேட்டு எல்லாரும் வர ஆரம்பிச்சாங்க.

நடுக்கம்!

நடுக்கம்!

நான் ரொம்பவே தைரியமான பொண்ணுன்னு நான் நெனச்சுட்டு இருந்தேன். ஆனால், அன்னிக்கி தான் எனக்குள்ள எவ்வளவு பயம் இருக்குன்னு கண்டுபிடிச்சேன். சொந்தக் காரங்க எல்லாம் வந்துட்டாங்க. திடீர்னு என் ஹஸ்பன்ட். உடனே வீட்ட விட்டு வெளிய போ, விவாகரத்து பண்ணிக்கலாம்னு... ஏதேதோ பேச ஆரம்பிச்சாட்டாறு. உடம்பு நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. எனக்கு அப்ப இருந்த ஒரே பயம், என் மூணு வயசு பையன்... இதெல்லாம் கேட்டு எப்படி ரியாக்ட் ஆவான்கிறது தான்.

போலி முகம்!

போலி முகம்!

உள்ளுக்குள்ள அவ்வளவு நடுக்கம் இருந்த போதும், என் பையன் பயந்திட கூடாதுன்னு... போலியா ஒரு முகபாவனை காமிச்சிட்டு இருந்தேன். சொந்தக் காரங்க எல்லாம், அவங்க மூணு பேர சமாதானப்படுத்த முயற்சி பண்ணாங்க. ஒருவழியா அவங்க எனக்கு உதவி பண்ண, வீடு முழுக்க சுத்தம் பண்ணி.. எல்லாம் சரியாக 3 மணி ஆயிடுச்சு. அன்னிக்கு எனக்கு தூக்கமே வரல.

தைரியம்!

தைரியம்!

அப்படி என்ன நடந்திடுச்சுன்னு எல்லாரும் என்ன இப்படி திட்டுனாங்க? இதுவா எனக்கான பாதுகாப்பான வீடு? இந்த சின்ன பிரச்சனைக்கு அப்பா, அம்மா கூட சேர்ந்து நின்னு விவாகரத்து பண்ணிக்கலாம்னு சொல்ற கண்வர நம்பியா என் எதிர்காலம் இருக்கு? இப்படி பல கேள்விகள் என் மனசுக்குள்ள எழுந்துச்சு.

அதுகெல்லாம் என்கிட்டே இருந்த ஒரே பதில் என் மகன். மொத்த சண்டை நடந்த போது என் பக்கத்துல நின்னு இறுக்கமா கட்டிப்பிடிச்சு தைரியம் கொடுத்தது என் மகன் தான். என் வாழ்க்கை அவனுக்காக மட்டும் தான் இனி. யாருக்காகவும் நான் பயப்படவே கூடாதுன்னு முடிவு பண்ணேன்.

மறுநாளே... நான் ஆபீஸ் போயிட்டு வர நேரம் வரைக்கும் Day Careல சேர்த்து விட்டேன். என் மகன் இவங்க கூட இருந்தா.. நிச்சயமா நல்லப்படியா வளரமாட்டான்னு மட்டும் தெரிஞ்சுக்கிட்டேன். மனைவி, மருமகள்ங்கிறத தாண்டி... நான் ஒரு நல்ல அம்மாவா இருக்கனும்... அதான் முக்கியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Real Life Story: I did decide to bring about one change in my life

    Real Life Story: I did decide to bring about one change in my life after that incident!
    Story first published: Thursday, August 30, 2018, 12:46 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more