உங்க காலத்துல லவ் மேரேஜ் அக்ஸப்ட் பண்ண தயங்குன மாதிரி தான் இதுவும்! my story #156

Posted By:
Subscribe to Boldsky

ஹாய்,

இந்த மின்னஞ்சல் உங்களையெல்லாம் மிரட்டவோ அல்லது பயமுறுத்தவோ அல்ல, காதலர்களை பயமுறுத்தவோ அல்லது காதல் திருமணம் செய்து கொண்டாலே வாழ்க்கை இப்படித் தான் முடியும் என்று பழிச் சொல்லவோ அல்ல.

காதல் திருமணம் செய்து கொண்டோம். ஊரை எதிர்த்து, வீட்டை எதிர்த்து செய்து கொண்ட திருமணத்தின் ஈரம் காய்வதற்குள் என் வாழ்க்கை தலைகீழாக திருப்பி போட்டது போல மாறிவிட்டிருக்கிறது. அம்மா அப்பா காதல் திருமணம் செய்து கொண்டதால் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த இதுவரை இப்படியானதொரு கண்ணோட்டத்தில் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இது உன்னால தான், நீ தான் எல்லாத்துக்கும் காரணம் என்று யாரையும் பழி சொல்ல இதனை ஒரு வழியாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை. பாருங்கள் இது தான் என் வாழ்க்கையில் நிகழ்ந்தது. காதல் திருமணம் செய்து கொண்டதால் என் வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என்று மிரட்டப்போவதில்லை.தற்போது தனிமையில் அதிக நேரத்தை செலவழிக்கிறேன் கிடைத்த நேரத்தில் என் வாழ்க்கையையே திரும்பி பார்க்கிறேன் அவ்வளவு தான். எழுத்துப் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் என்ற முன்னுரையுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் கலந்து வந்திருந்த மின்னஞ்சலின் சுருக்கப் பதிவு தான் இந்தக் கதை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளத்தங்கரை :

குளத்தங்கரை :

தினமும் காலையில் துணியை துவைத்துக் கொண்டு குளத்தங்கரையிலிருந்து வீடு திரும்பும் வழியில் தான் நான் முரளியைப் பார்ப்பேன். இருவரும் கல்லூரி ஒன்றாகவே படித்தோம். எங்கள் கிராமத்திலிருந்து கல்லூரி வரை சென்ற வெகு சிலரில் நாங்களும் அடக்கம்.

ஒரே ஊர் என்பதால் கல்லூரியில் சேர்ந்தே அதிக நேரம் செலவிட்டோம். இது காதலா நட்பா என்றெல்லாம் தெரியாது.

புரளி :

புரளி :

நானும் அவனும் ஒரு நாள் கோவிலில் பேசிக் கொண்டிருப்பதை மோர் கிழவி பார்த்துவிட ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்வது போல பரப்பி விட்டாள். அன்று வீட்டிற்கு திரும்பினாள் என் அப்பா அரிவாளை எடுத்துக் கொண்டு கருப்பு சாமி போல நின்று கொண்டிருக்கிறார். அம்மா தலைவிரி கோலத்துடன் ஒப்பாரி வைக்கிறாள்.

என்னாச்சு என்று தெரிந்து சுதாரித்து பதிலைச் சொல்வதற்குள் எனக்கு நான்கு அடி விழுந்திருந்தது.

ஊரு பேசுமே :

ஊரு பேசுமே :

அவன் கூடப்படிக்கிற பையன்ம்மா.... காதலெல்லாம் இல்ல அவங்க வீடு இங்கன தான் இருக்கு அப்பா வேலைக்கு போற வழி தான் என்று சொல்ல..... ஐயோ வீட்டுக்கு எல்லாம் அதுக்குள்ள போய்ட்டு வந்துட்டாலே இதுக்காடி உன்ன பெத்து வளத்தேன் என்று பாட ஆரம்பித்துவிட்டாள்.

ஐயோ அம்மா.... என்று கத்த சொல்லு எப்ப ஓடிப்போற.... அவன் என்ன சொல்லி அனுப்பிச்சான் நகை,பணம் எல்லாத்தையும் சுருட்டிட்டு வர சொன்னான என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டேயிருந்தால் நான் சொல்வது எதுவும் அவள் காதில் ஏறவில்லை என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.

இப்படியே ஒரு மாதம் கடந்தது. அதன் பின்னும் நீ காதலிக்கலன்னு நமக்கு தெரியும் இந்த ஊருக்குத் தெரியணுமே, வேறொரு பையனோட ஊர் சுத்தியிருக்குன்னு தெரிஞ்சா யாரு பொண்ணு கொடுப்பா என்று அடுத்த கட்டம் சென்றாள் அம்மா.

ஆறே மாதத்தில் :

ஆறே மாதத்தில் :

அன்றிலிருந்து வெறும் ஆறே மாதத்தில் நாங்கள் ஊரை விட்டு ஓடினோம். அது காதலா என்றெல்லாம் தெரியாது. என்னால தான உனக்கு இவ்ளோ கஷ்டம் என்று அவனும், இல்லல என்னால உனக்கு இந்த கெட்டப்பேரு என்று பேச ஆரம்பித்து இனி நாம தான நமக்கு வாழ்க்க கொடுக்கணும் என்று ‘தெளிந்து' ஊரை விட்டு ஓடினோம்.

அம்மா சொன்னது போல வீட்டிலிருந்து நகையோ பணமோ எடுத்துவரவில்லை. என்னுடைய சான்றிதழ்கள் மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

அட இது தான் வாழ்க்கையா :

அட இது தான் வாழ்க்கையா :

இருவருக்கும் வேலையில்லை, வெளியூரில் நண்பன் ஒருவனை நம்பி கிளம்பிவிட்டோம். அடுத்த வேலை உணவுக்கு என்ன செய்யப்போகிறோம் என்ற எந்த திட்டமும் இல்லை. ராட்டினத்தில் உயரமான இடத்திற்கு விருட்டென்று சென்று விட்ட ஒரு மனப்பிரம்மை.

வேலை தேடி, வாழ்க்கையில் செட்டில் ஆகிட வேண்டி என்று அலைந்தோம்.

 ஆள விடு :

ஆள விடு :

இருவருக்கும் வேலை கிடைத்து இரண்டு வருடங்கள் அமைதியாகச் சென்றது, அடுத்து முதல் குழந்தை கர்ப்பமானேன். அப்போதிருந்து சிக்கல், வருமானம் வர ஆரம்பித்திருந்தது என்றாலும் அது போதுமானதாக இருக்கவில்லை. இந்நிலையில் குழந்தை வேறு என்றால் என்று சண்டை கிளம்பியது.

குழந்தை பிறந்த ஒன்பது மாதங்களில் ஆள விடு..... கூடவே இருந்து டார்ச்சர் பண்ணாத என்று சென்று விட்டான் முரளி.

சமாளிப்போம் :

சமாளிப்போம் :

அதன் பின் மூன்று மாதங்கள் கழித்து சமாதனம், சண்டை, சமாதானம் என்றே எங்கள் வாழ்க்கை நகர்ந்தது. அடுத்து மகன் பிறந்தான். அவ்வளவு தான் வாழ்க்கை ஓட்டம் சூடு பிடித்தது. இருவரும் பள்ளி செல்ல ஆரம்பித்தார்கள். எங்களைப் பற்றி மாறி மாறி குறை சொல்லி சண்டை போட எல்லாம் நேரமில்லை காலையில் இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி, நாங்களுக்கும் ஆபிஸ் கிளம்ப வேண்டும்.

ஒரு இயந்திர வாழ்க்கைக்கு பழக்கப்பட்டோம்.

 குழந்தைகளே எதிர்காலம் :

குழந்தைகளே எதிர்காலம் :

எல்லா தாய்மார்களையும் போல நானும் இனி என் எதிர்காலம் எல்லாமே என் குழந்தைகள் தான் என்று நினைத்துக் கொண்டேன். என்னால் முடிந்தளவு அவர்களுக்கு வேண்டியதை, அவர்கள் விரும்பியதை நிறைவேற்றிக் கொண்டேயிருந்தேன்.

மகனுக்கு கால்பந்தாட்டத்தில் சாதனை படைக்க வேண்டும். அதனால் படிப்பு கெடுகிறது என்று கணவர் திட்டி சம்மதிக்காவிட்டாலும் நான் பேசி, திட்டு வாங்கி சம்மதிக்க வைத்து பணத்தை கொடுப்பது, ப்ராக்டிஸுக்கு அழைத்துச் செல்வது என்று அவனின் கனவுகளுக்கு உயிரூட்டினேன்.

உருப்படாம போய்டாதடா :

உருப்படாம போய்டாதடா :

எங்கள மாதிரி உருப்படாம போய்டாதடா என்று குழந்தைகளிடம் அடிக்கடி கணவர் சொல்லும் வசனம். எனக்கு சில சமயங்களில் கேட்கவே எரிச்சலாக இருக்கும். இப்போது என்ன குறை, இருவரும் படித்திருக்கிறோம், வேலைக்குச் செல்கிறோம். அழகழகாக இரண்டு செல்வங்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்.

கணவன் மனைவி என்றால் சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும்,குடும்பம் என்றால் பணத்தேவை இருந்து கொண்டே தான் இருக்கும். அதற்காக இப்படியா? மகன் செலவுக்கு என்று பணம் கேட்கும் போது, ஃபுட் பால் கோச்சிங் என்று பணம் கேட்கும் போதெல்லாம் இந்த வசனம் அச்சர சுத்தமாக இடம்பெறும்.

தாயாக பெருமை கொண்ட தருணம் :

தாயாக பெருமை கொண்ட தருணம் :

தொடர்ந்து கால்பந்தாட்டத்தில் நிறைய பதக்கங்களையும் கோப்பைகளை அள்ள ஆரம்பித்தான். கணவரின் கோபம் சற்று தளர ஆரம்பித்தது. அந்த வருடம் தேசிய அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் பதினாறு வயதுக்குட்பட்டோர் பிரிவில் விளையாடி ஜெயித்ததற்காக பள்ளியில் பாராட்டு விழா நடத்தினார்கள்.

அந்த நிகழ்ச்சியில் மேடையில், முதலில் யாரும் என்னை கால்பந்தாட்டம் விளையாட அனுமதிக்கவில்லை, அம்மா தான் என் திறமையை அறிந்து என்னை ஊக்கப்படுத்தினார். அவர் இல்லையென்றால் இந்த வெற்றி சாத்தியமில்லை என்று சொல்ல, கண்கலங்கி நின்றேன்.

விளையாட்டில் கவனம் அதிகரிக்க அவனுக்கு படிப்பு மீதான ஆர்வம் குறைந்தது.

உன்ன மாதிரி லவ் பண்ணுவேன் :

உன்ன மாதிரி லவ் பண்ணுவேன் :

பள்ளி இறுதித்தேர்வில் மிகவும் சொற்ப மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றான். எந்த காலேஜ் சேக்குறது. இந்த மார்க்க வச்சிட்டு இன்ஜினியரிங் கல்லூரிக்குச் சென்றால் சொத்தையெல்லாம் பிடுங்கிட்டு தான் அட்மிஷன் கொடுப்பான் என்று கணவர் டென்ஷனாகி கத்த, இவனோ கூலாக,

நீ எப்டி படிச்ச பொண்ணா பாத்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட அது மாதிரி நானும் படிச்ச பொண்ணா பாத்து லவ் பண்ணிக்கிறேன் என்று சொல்ல எங்கள் இருவருக்கும் அதிர்ச்சி.

காதல் குறித்தும்,வாழ்க்கை குறித்தும் என்ன புரிதல் இது? இந்த தவறு யாருடையது. அம்மா அப்பா காதல் திருமணம் செய்து கொண்டார்கள் என்றால் அவர்களின் குழந்தைகளின் மனதில் இப்படியொரு எண்ணம் இருக்குமா என்று அப்போது தான் எனக்கு முதலில் உரைத்தது.

மகளே :

மகளே :

மகனின் அருமை பெருமைகளைப் பற்றி பேசியதில் மகளை மறந்து விட்டேனே.... சாந்தமாக இருப்பாள்,வீட்டில் ஒரு இன்ஜினியர் கனவு என்ற கொண்டிருந்த கணவரின் ஆசை மகன் மூலமாகத்தான் நிறைவேறவில்லை, சரி மகளையாவது படிக்க வைக்கலாம் என்றால் அவளோ ஃபேஷன் டெக்னாலஜி என்று அடம் பிடித்தாள்.

வெறென்ன செய்ய முடியும் படிக்க வைத்தோம்.

மகளின் நடவடிக்கைகள் :

மகளின் நடவடிக்கைகள் :

ஒரு அம்மாவாக கண்காணித்ததில் அவளது நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரிந்தது. அது வெறும் செல்போன் நோண்டுவது மட்டுமல்ல. எப்போதும் தனிமையில் உட்கார்ந்திருப்பது, எரிந்து விழுவது, கோபப்படுவது, காரணமின்றி கத்துவது இவை எல்லாவற்றையும் விட இப்போது தான் பேஸ்புக் வாட்சப் வந்துவிட்டிருக்கிறது.

குழந்தைகளை கண்காணிக்க அவர்கள் பின்னால் ஓட வேண்டும் என்பதெல்லாம் இல்லை. தொடர்ந்து அவர்களுடைய வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களை கண்காணித்தாலே போதும்.

ஏற்கனவே செய்யாததை செய்கிறாய் என்று சொன்னால் அதன் வீரியம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று உணர்ந்திருந்ததால் பொறுமையாக அவளை டீல் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

ஐ ம் ஃபைன் :

ஐ ம் ஃபைன் :

கல்லூரி முடித்தால் அடுத்த மூன்றே மாதத்தில் ஹைதிராபாத்தில் இருக்கும் பிரபல நிறுவனமொன்றில் டிசைனர் வேலை கிடைத்தது. மொழி தெரியாத ஊரில் சென்று ஏன் கஷ்டப்பட வேண்டும். இங்கே வேறு வேலை தேடலாம் என்று எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் கிளம்பிச் சென்றால்.

அரை மனதோடு அனுப்பி வைத்தோம். அதன் பின்னர் அடிக்கடி போன் பேசுவது, விடுமுறைக்கு வருவது என்று இயல்பாகவே இருந்தாள். திடீரென்று ஒரு நாள் அழைத்து மணிக்கணக்கில் பேசினாள். எல்லாம் முடிந்து வைக்கும் போது, அம்மா நான் கல்யாணத்துக்கு ரெடியாகிட்டேன் நினைக்கிறேன் என்று சொல்லி சிரித்தாள்.

என்னடா இது இந்த காலத்து குழந்தைகள் கல்யாணம் என்றாலே அலறி ஓடுவார்கள் என்று எதிர்ப்பார்த்தால் இப்படிச் சொல்கிறாளே என்று ஆச்சரியப்பட்டேன்.

மம்மி ஐ ம் ப்ரெக்னெண்ட் :

மம்மி ஐ ம் ப்ரெக்னெண்ட் :

அதன் பின்னர் திடீரென்று ஒரு நாள் மம்மி ஐ ம் ப்ரெக்னெண்ட் என்று ஒரு குறுந்தகவல். முதலில் அதிர்ந்தாலும் இந்த காலத்து பசங்க இருக்காங்களே என்று தலையில் அடித்துக் கொண்டு, என்னடி ஃபார்வேர்ட் மெசேஜா? எதுல விளையாடுறதுன்னு விவஸ்த்த இல்லையா என்று திட்டி ரிப்ளை அனுப்பின்னேன்.

அதன் பின் அவள் செய்த காரியத்தால் ஒரு நிமிடம் நான் இறந்தே விட்டேன் என்று தான் நினைத்தேன்.

ம்மா.... சீரியஸ் சி திஸ் என்று சொல்லி வீங்கிய வயிறுடன் ஒரு போட்டோவை அனுப்பி வைத்தாள்.

 வீடியோ கால் :

வீடியோ கால் :

பதறிக் கொண்டு அவளுக்கு போன் செய்தேன். எந்த வித தயக்கமோ கூச்சமோ இல்லை. பேபி ஹெல்தியா இருக்காம் என்றால் கூலாக..... அடி செருப்பால நாயே.... சரி, சும்மா விளையாடுறன்னு நினச்சா என்ன இது?

நிஜமாத்தான் சொல்றியா இல்ல ப்ராங்க்கா..... இதுல எல்லாம் விளையாடாத அப்பாக்கு தெரிஞ்சா அவ்ளோ தான் என்றேன்.

ம்ம்மா.... இதுல ஏன் நான் விளையாட போறேன் வேணும்னா வீடியோ கால் பண்ணவா?

அக்ஸிடெண்ட்லி :

அக்ஸிடெண்ட்லி :

வீடியோ கால் செய்தாள். டீ ஷர்ட்டை தூக்கி காண்பிக்கச் சொன்னேன். அவளுடைய வயிறு தான். அதற்கடுத்து எனக்கு பேச்சே வரவில்லை.

நாங்க லிவ்விங் ரிலேஷன்ஷிப் ல இருந்தோம். ஆக்ஸிடண்ட்லி..... என்று இழுத்தாள் என்ன சொல்கிறாள்? இறுதியில் இதை பொய்யென்று சொல்லிட மாட்டாளா சும்மா விளையாட்டு என்றுவிடமாட்டாளா என்றே எதிர்ப்பார்த்திருந்தேன், ஆனால் அவளுடைய வயிறை நேரடியாக வீடியோவில் பார்த்த பிறகும் இப்படி நினைப்பது அபத்தம் என்று அப்போது எனக்கு தோன்றவில்லை.

ஏய் நெஜமாவாடி? என்று இரண்டு மூன்று முறை கேட்டேன். அடுத்தடுத்து அவள் சொன்னவை....

இந்த காலத்துல இது தான் :

இந்த காலத்துல இது தான் :

அன்னக்கி தான் உன்கிட்ட சொன்னேன்ல கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்னு.

ஆமா, அதுக்காக நீ ப்ரெக்னெண்ட்னு யாராவது நினைப்பாங்களா? சரி யாரோ ஒரு பையன பாத்து பிடிச்சிருக்கும் வந்து சொல்லுவா பேசலாம்னு தான நினைப்பாங்க.

ப்ரெக்னென்சி கன்ஃபார்ம் ஆனதுக்கு அப்பறம் தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்றதே உங்கிட்ட சொன்னேன்.

என்னடி சொல்ற... இதுக்கு தான் உன்னைய இவ்ளோ கஷ்டப்பட்டு படிக்க வச்சோமா?

சும்மா கத்தாதம்மா நீயும் அப்பாவும் லவ் மேரேஜ் தான பண்ணீங்க அப்போ தாத்தா உன்னைய இதுக்கு தான் படிக்க வச்சாரா.... உங்க காலத்துல லவ் மேரேஜ் தப்புன்னு சொல்ற மாதிரி, அக்ஸ்சப்ட் பண்ண தயங்குற மாதிரி இப்போ லிவ்வின்.

போனை கட் செய்து விட்டேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mother shocked when she attend daughter's video call

Mother shocked when she attend daughter's video call
Story first published: Monday, January 29, 2018, 10:00 [IST]
Subscribe Newsletter