For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமண தினத்தன்று நடந்த விபரீதம்! my story #274

கடைசி நிமிடத்தில் திருமணம் நின்று விட்டு கதை. மகள் காதலிக்கிறாள் என்று தெரிந்து அவசர அவசரமாக திருமண ஏற்பாடு நடந்திருக்கிறது அதையும் தாண்டி தன் காதலனை கரம்பிடித்திருக்கிற

|

திருமண பந்தத்தில் இணையும் போது எத்தனை கனவுகளுடன், வாழ்க்கை குறித்த மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் இணைகிறோம். அவை அத்தனையும் நிறைவேறுகிறதா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியாகத்தான் நிற்கும்.

எதோ ஒரு நம்பிக்கையில், சில நேரங்களில் அந்தஸ்த்து, படிப்பு, வேலை , சம்பளம், குடும்ப பின்னணி, காதல், உறவினரின் நம்பிக்கை தரும் அதாவது கியாரண்டி வார்த்தைகள், நம் குடும்பத்திற்கு ஏற்ற ஸ்டேட்டஸ் இப்படி பல அடுக்குகளாக தேந்தெடுத்து போதாகுறைக்கு நகை பணம் என அள்ளிக் கொடுத்து நடத்தி வைக்கிற திருமணத்திற்கு முன்னால் ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை களேபரங்கள் நடக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லூரியில் :

கல்லூரியில் :

கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போது சந்தித்துக் கொண்டோம். என்னைப் பார்த்ததும் எதோ நியாபகமாய் அவன் எழுந்து நிற்க அவ்வளவு தான் நண்பர்கள் அவனை கிண்டலடித்தார்கள். அந்த ஒரு சம்பவம் போதாதா... எங்கள் இருவரையும் சேர்த்து வைத்து ஓட்ட ஆரம்பித்தார்கள்.

புடிக்கும் தான்... ஆனா லவ் எல்லாம் வேண்டாம் என்று ஒதுங்கியே இருந்தான். பின்னர் அவ்வப்போது அவனுக்கு என் போன் நம்பர் வாங்கி வர வேண்டும், என்னிடமிருந்து அவனுடைய புகைப்படத்திற்கு ஒரு லைக் வாங்க வேண்டும் என்று பலப்பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டன. தயங்கித் தயங்கி பேச ஆரம்பித்தான். தப்பா நினச்சுக்காதீங்க ஃபிரண்ட்ஸ் ரொம்ப ஓட்றாங்க என்று சொல்லி விலகியே இருந்தேன்.

டைரியில் :

டைரியில் :

இரண்டாம் ஆண்டு முடிவு வரை நாங்கள் சரியாக பேசிக் கொள்ளக்கூட இல்லை. அந்த மாதம் நாங்கள் எல்லாரும் கேரளாவிற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தோம். ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான மாணவர்கள் அந்த சுற்றுலாவில் பங்கேற்றிருந்தார்கள்.

எங்கள் டிப்பார்ட்மெண்ட் மட்டும் கேரளாவிற்கு சென்று இறங்கினால் அங்கே எங்களுக்கு முன்னதாக என்னிடம் தயங்கி பேசும் ஆனந்தும் அவன் நண்பர்களும் நின்றிருந்தார்கள். நீங்க எப்டி இங்க என்று கேட்க.... சும்மா ஜாலி ட்ரிப் என்று சிரித்துக் கொண்டான்.நேத்து உன்னைய காலேஜ்ல பாக்கல என்னமோ மாதிரி இருந்துச்சு அதான்.... என்று இழுத்தான். அவனின் நண்பன் இத படிச்சு பாரு ரூம்ல அவன் தொல்லை தாங்கல பொழுதன்னைக்கும் உன்னப்பத்தி தான் பேச்சு என்று சொல்லி ஆனந்தின் டைரியை கொடுத்தான்.

இது காதலா? :

இது காதலா? :

கிட்டத்தட்ட பாதி பக்கங்களை முடித்திருந்தான். சில இடங்களில் கவிதைகள், பாடல் வரிகள், அதோடு அவன் என்னை பார்த்த விதம் என பக்கம் பக்கமாய் எழுதியிருந்தான். நான் அணிந்து வந்த சுடிதாரின் நிறம், செருப்பு, மோதிரம், நெயில் பாலிஷ் கலர் என ஒவ்வொன்றையும் நோட் செய்து எழுதியிருந்தான்.

அதோடு அவனுக்கு என்னிடம் பேச தயக்கமாய் இருப்பதாகவும், கோபித்துக் கொண்டு திட்டிவிடுவேனோ என்று பயப்படுவதாகவும் எழுதியிருந்தான். மேலும், கல்லூரிக்கு தாமதமாக வந்த நாட்கள், சீக்கிரம் கிளம்பிய நாட்கள், பார்க்க முடியாமல் போன நாட்கள் என ஒவ்வொரு தருணங்களையும் நினைவு கூர்ந்திருந்தான். மொத்தத்தில் அவன் நினைவு முழுக்க நானே நிரம்பியிருந்தேன்.

ஒரு வேல அவன் நம்மல லவ் பண்றானோ... இத அக்ஸ்சப்ட் பண்ணவா வேண்டாமா? இது எல்லாம் தப்பு இல்லையா என்று யோசிக்க ஆரம்பித்தேன். பின்னர், அவன் ப்ரோப்போஸ் செய்த பிறகு இதைப்பற்றியெல்லாம் யோசிக்கலாம் இப்பவே எதற்கு வீண் கற்பனை என்று மூடி வைத்து விட்டேன்.

 கோவிலில் :

கோவிலில் :

எங்கள் கல்லூரிக்கு அருகிலேயே கோவில் இருக்கிறது, சில நேரங்களில் சீக்கிரம் வந்து விட்டால் கோவிலுக்கு சென்று விட்டு தான் கல்லூரிக்கு வருவேன். பலரது மீட்டிங் பாயிண்ட் அதுவாகத்தான் இருக்கும். அன்றைக்கு எதார்த்தமாய் சீக்கிரம் கிளம்பி விட்டேன். சரி கோவிலுக்கு செல்லலாம் என்று நுழைந்தால் வாசலில் ஆனந்த் உட்கார்ந்திருக்கிறான்.

நீ கோவிலுக்கு எல்லாம் வருவியா? இங்க என்ன பண்ற என்று அவனருகில் சென்றேன் எழுந்து கொண்டவன் நெளிந்து கொண்டே இல்ல சும்மா... இன்னக்கி என்று திக்கித் தடுமாறினான். எல்லா சன்னதிகளும் சென்று சேர்ந்தே கும்பிட்டோம். பின்னர் அமைதியாய் என் மீதான காதலை வெளிப்படுத்தினான். காதலிப்பதாக எல்லாம் சொல்லவில்லை நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று தான் ஆரம்பித்தான்.

நான் கூட இது ஜஸ்ட் ஈர்ப்பு கொஞ்ச நாள்ல காணாம போய்டும்னு நினச்சேன் ஆனா இது அப்டியில்ல உன்னோட இருந்தா தான் நான் சந்தோசமா இருப்பேன்னு தோணுது, அதே மாதிரி உன்னையும் சந்தோஷமா வச்சுப்பேன் என்று சொன்னான்.

வீட்டில் சொல்லலாமா :

வீட்டில் சொல்லலாமா :

இரண்டு வாரங்களில் நானும் சம்மதம் தெரிவித்தேன். அரசல் புரசலாக நண்பர்கள் எல்லாருக்கும் பரவியது அதை எதையும் நாங்கள் தடுக்கவில்லை ஆம், காதலிக்கிறோம் தானே அதை எதற்கு வீணாக மறுத்துக் கொண்டு என்று விட்டுவிட்டோம்.

கல்லூரி முடிந்த அடுத்த ஆண்டே திருமணம் செய்ய வேண்டும் என்று வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். இப்போதே லேசாக வீட்டில் போட்டு வைக்க வேண்டியது தான் என்று முடிவெடுத்து வீட்டில் எல்லாரும் உட்கார்ந்து சாப்பிடும் போது மெல்ல திருமண பேச்சை எடுத்தேன்.... தோழியின் கதையை சொல்வது போல.... அவ லவ் பண்றா ஆனா வீட்ல சொல்லத்தான் பயப்படுறா... நல்ல பையன் என்று எங்கள் கதையை அப்படியே விவரித்தேன்.

படிக்க போன இடத்துல என்ன லவ் வேண்டி கிடக்கு... ஏன் பெத்தவங்க பாத்து கட்டி வைக்க மாட்டாங்களா அதுக்குள்ள என்ன அவசரம் என்று திட்டித் தீர்த்தார் அம்மா.

சண்டை :

சண்டை :

ஆனந்திரம் விஷயத்தை சொன்னேன். ஏய் படிச்சு முடிச்சு நல்ல வேல கிடச்சா ஒ.கே சொல்லிடப்போறாங்க இதுக்கு ஏன் பயந்துட்டு என்று சமாதானப்படுத்தினான். அவன் வீட்டினரிடமும் இந்த விஷயத்தை பேச..... பயங்கர கலவரம் வெடித்திருக்கிறது.

என் போட்டோவை வேறு காட்டியிருக்கிறான். வாழ்க்கையில உருப்படற வேலைய பாருடான்னா போய் காதலிக்கிறேன் அவள தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்ற என்று அடிக்காத குறை தான். அதுவரை இருவரும் என்னென்ன சாதி என்று கேட்டுக் கொள்ளவில்லை அவனின் அம்மா தான் அந்தப் பொண்ணு வீடு எங்க இருக்க? அப்பா என்ன பண்றாரு என்று பின்புலத்தை ஆராய முயன்றிருக்கிறார்.

என்னிடம் கேட்டு சொன்ன போதும் பிடிபடாமல் போகவே என்ன ஆளுங்க அவங்க என்று நேரடியாக கேட்டு விட்டார். போனிலேயே அவர் கேட்பது எனக்கு கேட்டது அதோடு அதெல்லாம் கேக்க முடியாது என்று ஆனந்த் சொன்னதும் கேட்டது.

சொத்து தகராறு :

சொத்து தகராறு :

ஆனந்த் வீட்டினருக்கு சாதிப் பிரச்சனையை விட மிக முக்கிய பிரச்சனையாக ஸ்டேட்டஸ் பிரச்சனை இருந்தது. ஆனந்தின் அப்பா தன் பிஸ்னஸ் பாட்னரின் மகளுக்கு திருமணம் செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தார். அவனின் அம்மாவோ தன்னுடைய அண்ணன் மகளை மருமகளாக்கி பூர்வீக வீட்டினையும் 500 பவுன் நகையும் வரதட்சனையாக வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். இரண்டும் இல்லாமல் இவன் காதல் கதையை சொன்னதும் இருவருக்குமே பயங்கர கோபம்.

ஏற்கனவே மருமகள் விஷயத்தில் ஆனந்தின் அம்மா அப்பா இருவரும் சண்டையில் இருக்க நடுவில் இவன் வேறு போய் காதல் விஷயத்தை உடைத்ததால் இவன் மீது பயங்கர கோபத்தில் இருந்தார்கள்.

வீட்டில் பேச்சு :

வீட்டில் பேச்சு :

தன் வீட்டில் பேசி எந்த பியோஜனமும் இல்லை உங்கள் வீட்டில் கொஞ்சம் பேசலாம் சம்மதித்து விட்டால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து அவன் நேரடியாக என் வீட்டிற்கே வந்து விட்டான். முதலில் எதுவும் பேசமால் அமைதியாக இருந்தார்கள்.

உங்க பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன் நாங்க காதலிக்கிறோம் என்று சொன்னதும் இருவரின் முகமும் மாறியது. பெரியவங்கள கூட்டிட்டு வாங்க உங்கள நம்பி எப்டி பொண்ணு கொடுக்குறது. இன்னும் படிப்பு கூட முடியல என்று அப்பா எழுந்து சென்று விட்டார். அம்மாவோ என்னை முறைத்துக் கொண்டே அங்கேயே நின்றிருந்தார். நீங்க அம்மா அப்பாவ கூட்டிட்டு வாங்க என்று சொல்லி தொடர்ந்து அம்மாவும் வர்புறுத்த மேற்கொண்டு பேசாமல் ஆனந்தும் கிளம்பிவிட்டான்.

அடி உதை :

அடி உதை :

அவன் வெளியே சென்றது தான் தாமதம், அம்மா பளார் என்று கன்னத்தில் அறைந்து அறையில் தள்ளி தாழிட்டார். எவ்ளோ தைரியம் இருந்தா அவன வீட்டுக்கே கூட்டிட்டு வருவ.... பாக்குறவங்க என்ன நினைப்பாங்க காலேஜுக்கு படிக்க போனிய எதுக்கு போன கூட பொறந்ததுக பத்தியெல்லாம் நினச்சு பாத்தியா?

சோறு தண்ணியில்லாம கஷ்டப்பட்டு வளர்த்த எங்கள நினச்சு பாத்தியா என்று சகட்டுமேனிக்கு அடித்தார். அன்று மாலையே பாட்டிக்கும் சித்திக்கும் போன் போயிருக்கிறது. சித்தி அப்போதே கிளம்பி மறுநாள் காலை வந்து சேர்ந்தார்.

ஜோசியம் :

ஜோசியம் :

அன்றைக்கு மதியம் பாட்டியும் வந்து சேர.... என் பேத்திக்கு செய்வினை வச்சிருப்பான் இல்லன்ன நம்ம வீட்டு பொண்ணு இப்டியெல்லாம் செய்யுமா? என்று உபதேசத்தை ஆரம்பித்தார். மொதோ போய் நம்ம ஜோசியக்காரன பாத்துட்டு பரிகாரம் எதாவது செய்யணுமான்னு கேட்டுட்டு வாங்க என்று அம்மாவையும் அப்பாவையும் கிளப்பி விட்டார்.

அவன் எதேதோ கட்டுக்கதைகளை சொல்லி 21 வெள்ளிக்கிழமை விநாயகருக்கு பாலபிஷேகம் செய்து அருகம்புல் மாலை அணிவித்து விளக்கேற்ற வேண்டும். பின்னர் பிள்ளையார்பட்டிக்கு சென்று என் பெயரில் அன்னதானம் செய்ய வேண்டும் பெரியவங்க சாபம் உங்க பொண்ணு மேல இருக்கு... அதான் இப்டி என்று சொல்லிவிட்டிருந்தான்.

சித்தி :

சித்தி :

சித்தி மெல்ல என்னிடம் பேச ஆரம்பித்தார். எங்கள் கதையை கேட்க ஆரம்பித்தவர் அந்த பையன்கிட்ட நான் பேசணும் என்றார். ஏற்கனவே அவன் வீட்டில் பிரச்சனையாய் இருக்கிறது என்று சொல்ல பொது இடத்தில் சந்திக்க ஏற்பாடு நடந்தது.

சித்தியிடம் அறிமுகப்படுத்தினேன் ஆரம்பத்தில் சித்தியும் இது எல்லாம் லைஃப்க்கு செட் ஆகாது சினிமால பாக்குற மாதிரி கிடையாது என்று அட்வைஸ் செய்தார். இருவரு பொறுமையாக உட்கார்ந்து கேட்டோம். பின்னர் ஏன் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தான். இரு வீட்டாரும் இப்படி பயங்கரமான எதிர்ப்பை காட்டிய போதும் நாங்கள் சேர்ந்தே தீருவோம் என்று ஏன் பிடிவாதமாய் இருக்கிறான் என்பதற்கான காரணங்களை அடுக்கினான்.

சித்தியின் உதவி :

சித்தியின் உதவி :

சித்தியால் மறு பேச்சு பேச முடியவில்லை. கடைசியாக உங்க காதலுக்கு நான் சப்போர்ட் பண்றேன் என்று சொல்லிவிட்டார். எங்கள் திருமணம் நடக்குமோ நடக்காதோ என்று சந்தேகத்துடன் இருந்த எங்களுக்கு கண்டிப்பாக நடக்கும் என்று எங்கள் காதலை உயிர்ப்பித்திருந்தார் சித்தி.

அதே நேரத்தில் ஜோசியக்காரன் சொன்ன பரிகாரம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் அப்பா எங்களிடம் சொல்லாமலேயே எனக்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடிக் கொண்டு இருந்திருக்கிறார். வர்ற 30 ஆம் தேதிலயிருந்து காலேஜ் போக வேண்டாம் ஒரு வாரம் லீவ் சொல்லிடு என்றார் திடிரென்று, ஏன்ப்பா ஊருக்கு போறோமா என்றேன்.

ஜோசியக்காரன் எதாவது செலவு இழுத்து விட்டிருப்பான்.... அதுக்கு ஏன் ஒரு வாரம் என்று யோசித்துக் கொண்டே அம்மாவை பார்க்க. எரிச்சலாக உனக்கு கல்யாணம் அப்பா எல்லாம் ஏற்பாடையும் பண்ணிட்டாரு சும்மா தாம்தூம்னு குதிக்காம காட்ற பையனுக்கு தலைய காட்டு என்று சொல்லி உள்ளே சென்றுவிட்டார்.

ஒரே ஒரு தடவ :

ஒரே ஒரு தடவ :

இந்த விஷயத்தை என்னிடம் சொல்வது 26 ஆம் தேதி. உடனடியாக வீட்டை விட்டு வெளியேற நினைத்தேன் என் திட்டத்தை அறிந்து நீ காலேஜுக்கே போக வேண்டாம் என்று வீட்டிலேயே பூட்டி வைத்து விட்டார்கள். பின் சித்தி தான் ஆனந்தை சந்தித்து விவரத்தை சொல்லியிருக்கிறார். வீட்டில் சித்தி எங்கள் காதலுக்கு உடந்தையாக இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது.

அம்மாவிடம் பேசிப்பார்த்தும் அப்பா எடுக்கும் முடிவு தான் தன்னுடைய முடிவு அவரை மீறி எந்த விஷயத்தையும் என்னால் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார். நடுவில் பல முறை என் அப்பாவிடம் பேச வந்திருக்கிறான் ஆனால் அப்பா அவனை சந்திக்காமலேயே தவிர்த்திருக்கிறார். இதையறிந்த ஆனந்தின் பெற்றோர் அவனை கோவையில் இருக்கிற உறவினர் வீட்டிற்கு கடத்திச் செல்ல முயன்றிருக்கிறார்கள். முதலில் ஈரோட்டில் இருக்கிற பாட்டிக்கு உடல்நிலை மோசமாக இருக்கிறது என்று சொல்லி காரில் ஏற்றிச் சென்றவர்கள் செல்லும் வழியில் தான் கோவை செல்கிறோம் என்றிருக்கிறார்கள்.

திருமண நாளும் நெருங்கியது.

கூட்டிட்டு போய்டுவான் :

கூட்டிட்டு போய்டுவான் :

அழுது கொண்டேயிருந்தேன். மணமேடையில உக்கார்ந்துட்டு இப்டி கண்ணீர் வடிக்காத அப்பாக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியும்ல கொன்னே போட்ருவாரு துடச்சுட்டு ரெடியாகு என்று கண்டித்தார் அம்மா. சித்தியும் உடனிருந்தார் மன்னிச்சிக்கம்மா எவ்ளவோ ட்ரை பண்ணேன் அவன் போன் ரீச் ஆகல அவன ஈரோடு கூட்டிட்டு போறதா அவன் ஃபிரண்ட்ஸ் சொன்னாங்க என்றார்.

அவ்வளவு தான் என் வாழ்க்கையே முடிந்தது. இனி யாராலும் எங்கள் காதலை சேர்த்து வைக்க முடியாது என்று தெரிந்து அப்பாவிடம் வந்தேன். நான் திருமணம் வேண்டாம் என்று சொல்லத்தான் வருகிறேன் என்று நினைத்து இழுத்துக் கொண்டு அறைக்குள் வந்தார். உள்ளே இருந்தவர்களை எல்லாம் வெளியே அனுப்பி கதவை சாத்தினார். என்னடி என்ன சொல்லப்போற? இந்த கல்யாணம் வேண்டாம், பிடிக்கலன்னு சொல்லப்போறியா.. அப்பா கடைசியா ஒரேயொருதடவ ஆனந்த போய் என்று முடிப்பதற்குள் பளார் என்று கன்னத்தில் விழுந்தது.

வாயத்தொறக்காம போய் மேடையில உக்காரு. நடுவுல எதாவது தப்புத்தண்டா பண்ணனும்னு நினச்சு சங்கறுத்துருவேன் என்று மிரட்டிவிட்டுச் சென்றார். மேடையில் உட்கார்ந்திருந்தேன். யாருமே அப்படி ஒரு காட்சி நடக்கும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. ரத்தம் சொட்ட மண்டபத்திற்குள் நுழைந்தான் ஆனந்த் நேராக என் அப்பாவின் சட்டையை பிடித்தவன் யோவ் பொண்ணு கொடுக்க முடியாதுன்னா முடியாதுன்னு சொல்லு அத விட்டு அடிக்க ஆள் அனுப்புற என்று கத்த ஒரு கணம் விக்கித்து நின்றோம். மணமகன் வீட்டாரும் சற்றே கலக்கத்துடன் பின் வாங்கினார். நாங்க ரெண்டு பேரும் காதலிக்கிறோம் இந்த கல்யாணத்துல பொண்ணுக்கு கொஞ்சம் கூட விருப்பமேயில்ல. நிச்சயம் கூட வைக்காம உடனே கல்யாணத்த முடிக்கணும்னு சொன்னப்பவே நீங்க எல்லாம் யோசிச்சிருக்க வேண்டாம்... அதோட என்னை கொல்றதுக்கும் ஆள் அனுப்பியிருக்கான் நீயெல்லாம் பெரிய மனுஷனாய்யா என்று கத்தினான்.

இனி என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று சொல்லி மேடையிலிருந்து இறங்கினேன். அம்மா கத்தி அழைத்தார் அவரை சித்தி பிடித்துக் கொள்ள, நான் இறங்கி ஆனந்தின் கையைப் பிடித்தேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Marriage Stops At last Moment

Marriage Stops At last Moment
Story first published: Thursday, June 21, 2018, 12:18 [IST]
Desktop Bottom Promotion