For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  சமூகத்துக்காகதான் இந்த கல்யாணம், மத்தபடி..... # my story 157

  |

  மச்சி இன்னக்கி நைட்டு வீட்ல சாப்ட்ரலாம்.... அம்மா பிரியாணி வைக்கிதாம் என்று போன் செய்தான் நண்பன்.

  ஐந்தாம் வகுப்பு வரை பக்கத்து வீட்டு நண்பன், அதன் பின் பள்ளிக்காலத் தோழனாகி.... அந்த நட்பு ஒரே கல்லூரியில் சேரவைத்து நெருங்கிய நண்பனாகிவிட்டது. அப்போதிருந்தே.... கிட்டதட்ட பதினைந்து வருடப் பழக்கம் அவர்கள் வீட்டின் பிள்ளையாகவே நான் வளர்ந்தேன் என்று சொன்னால் அது மிகையாகாது.

  செலவுக்கு காசு கொடுப்பது, புதுச்சட்டை வாங்கிக் கொடுப்பது, வாசலில் பைக் நிறுத்தியிருந்தால் என்னைத் திட்டிக் கொண்டே துடைப்பது, நண்பன் குருவின் இன்னொரு ஜெராக்ஸாகவே என்னைப் பார்த்தார்கள் அவர்கள் வீட்டில்

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  தங்கச்சி :

  தங்கச்சி :

  குருவுக்கு ஒரு தங்கையிருந்தாள். உடல் ஊனமுற்றவள். நீண்ட நாட்களாக நடக்க முடியாமல் இருந்து தற்போது செயற்கை கால் மற்றும் ஸ்டிக் உதவியுடன் தாங்கி தாங்கி நடக்கிறாள்.

  சிறுவயதில் அவளுக்கு பேச்சும் வராது தொடர்ந்து பல வருடங்கள் ஸ்பீச் தெரபி கொடுக்க இப்போது சில வார்த்தைகள் பேசுகிறாள். ஆனால் நாங்கள் எல்லாம் கூடவேயிருந்து பழகிவிட்டதால் அவளது சின்ன சின்ன அசைவுகள் கூட, அவள் என்ன சொல்ல வருகிறள் என்பதை உணர்த்திவிடும்.

  தர்பூசணி :

  தர்பூசணி :

  க்ளீன் ஷேவ் செய்து கொண்டு போனால் விழுந்து விழுந்து சிரிப்பாள். பார்க்க, தர்பூசணி பழம் போல இருப்பதாக செய்கையிலேயே செய்து காண்பித்து கண்ணடிப்பாள் , மச்சி உன் தங்கச்சி ரொம்ப கிண்டல் பண்றா சொல்லிவைடா.... என்று அவனைக் கடிந்து கொண்டு....

  ஹலோ நான் மட்டுமில்ல யாரு க்ளீன் ஷேவ் பண்ணாலும் இப்டித்தான் இருக்கும் உங்க அண்ணன் கூட இப்டித்தான் இருப்பான்... ஏன் என்னையவிட மொக்கையா இருப்பான் என்றால் உடனே அவளுக்கு கோபம் வந்து விடும்.

  வெளிய போடா :

  வெளிய போடா :

  முறைப்பாள்.... பின் வாயை சுழற்றி கொன்று விடுவேன் என சைகை செய்வாள்... எணும...(எரும) என்று முணுமுணுத்துக் கொண்டே என்னை தன் அறையிலிருந்து வெளியே போகச் சொல்லிடுவாள்.

  ஆரம்பத்தில் என்னை திட்டுவதை சங்கடமாக நினைத்து,அண்ணன் அப்டி எல்லாம் சொல்லக்கூடாது என்று அவளை தேற்றுவார்கள். அதன் பின் நான் அதை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்பதால் வீட்டினரும் சாதரணமாக விட்டுவிட்டார்கள்.

  குடும்பமே கொண்டாட்டம் :

  குடும்பமே கொண்டாட்டம் :

  வீட்டின் ஒரே மகனான எனக்கு என் வீட்டிலும் பயங்கர சுதந்திரம், செல்லம் எல்லாம் கிடைத்தது தான் ஆனால் அதையும் தாண்டி இங்கே ஒர் அன்பு இருந்ததை என்னால் உணர முடிந்து.

  குருவின் தங்கை மீனுவை மொத்தக் குடும்பமே தாங்கும். அவள் சிரிக்கும் போது சிரித்து, அழும் போது சமாதானம் செய்து அவளுக்கு நிழலாக அவர்கள் மூன்று பேர் இருந்தார்கள்.

  மீனு :

  மீனு :

  காலையில் பாத்ரூம் போவதில் துவங்கி, குளிப்பது, சாப்பிடுவது, என அவள் மேற்கொள்கிற சின்ன விஷயங்களில் கூட அவர்களது பங்களிப்பு இருக்கும்.இருபது வயது பெண் தான் என்றாலும் அவர்களுக்கு மீனு ஒரு ஐந்து வயது குழந்தை தான்.

  வரைவதில் ஆர்வமிருக்கிறது என்பதற்காக உட்கார்ந்த படி பெயிண்டிங் செய்ய போர்டு செய்ய வைத்தனர், இவளை மாலையில் வாக்கிங் அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்பதற்காக அவளின் அப்பா வாலண்ட்டரி ரிட்டையர்மெண்ட் வாங்கினார்.

  அம்மா அழைத்துச் செல்ல தயார் என்றாலும் என்னைப் போல குழந்தைய பாத்துக்க முடியுமா? என்கிற எண்ணம் தான்.

  மாதவிடாய் :

  மாதவிடாய் :

  பெண்களுக்கான மாதவிடாய் குறித்து அவ்வளவாக பரிச்சயமில்லை, அம்மா இதை பற்றி என் முன்னால் பேசியது கூட இல்லை அதைத்தாண்டி மாசாமாசம் பொண்ணுங்களுக்கு வருமாம் என்பதோடு என் புரிதல் நின்று விட்டது.

  மீனுவை அந்த கோலத்தில் பார்த்த பிறகு தான் மாதவிடாய் பற்றிய என் எண்ணம் மாறியது என்றே சொல்லலாம். ஒரு நாள் வழக்கம் போல அலுவலகம் செல்வதற்கு முன்னால் அவர்கள் வீட்டிற்குச் சென்றேன்.

  வாடா வெளிய போலாம் :

  வாடா வெளிய போலாம் :

  குருவும் அப்பாவும் ஹாலில் உட்கார்ந்திருந்தார்கள். என்னை பார்த்ததும் அதிர்ச்சியுடன் ஒரு பார்வை, உள் அறையில் மீனுவின் அலறல் அம்மா சமாதனப்படுத்திக் கொண்டிருக்கிறார். இங்கேயிருந்தே அப்பா.... முடிஞ்சதாம்மா வரவா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். குரு தலையை தொங்கப்போட்டுக் கொண்டு அமைதியாக இருந்தான்.

  கேட்பதா வேண்டாமா என்று தயக்கம் வேறு... அம்மா வெளியே வந்தார் கேக்கவேமாட்றாங்க அதான் கட்டிப் போட்டேன்...

  அடம் :

  அடம் :

  கட்டிப்போட்டீங்களா? என்னம்மா சொல்றீங்க என்று அதிர்ச்சியுடன் நான் கேட்க... விட்றா மச்சி வா கிளம்பலாம் என்று என்னை இழுத்துக் கொண்டு வெளியேறினான். டேய்! மீனுவ ஏண்டா கட்டி போட்றீங்க இப்டியெல்லாம் பண்ணமாட்டீங்கள்ல என்னாச்சு அவளுக்கு.... வாடா பாவம் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போலாம். அப்பா நீங்களாவது சொல்லுங்கப்பா என்று கேட்க அமைதியாக அப்பா சொன்னார் .

  மீனுவுக்கு பீரியட்ஸ் பேட் வைக்க மாட்டேன்னு அடம்.

  மீனுவ நான் பாத்துக்கணும் :

  மீனுவ நான் பாத்துக்கணும் :

  பரிதாபத்தினாலா அல்லது அவளை புரிந்து கொண்டதாலா அல்லது அவளின் குடும்பம் அவளுக்காக படுகிற சிரமங்களை உடனிருந்து பார்த்ததாலா எல்லாம் எனக்கு தெரியவில்லை மீனுவுக்காக நான் வாழ வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்தது.

  அண்ணன் என்ற உறவுமுறையை சொல்லிக் கொண்டு எத்தனை வருடங்கள் உடனிருக்க முடியும். அண்ணன் என்ற முகமுடியுடன் ஒரு எல்லைக் கோடு வரை தான் நான் நிற்க முடியும். பெற்று வளர்த்த அப்பா.... உடன் பிறந்த சகோதரன் என்று இருவருமே அன்றைக்கு வெளியில் தானே உட்கார்ந்திருந்தார்கள்.

  அப்போ நானெல்லாம் எம்மாத்திரம்? அண்ணன்னு வாய் நிறைய சொன்னாலும் அண்ணனோட ஃபிரண்டு தான நான்.

  கல்யாணம் பண்ணிக்கிறேன் :

  கல்யாணம் பண்ணிக்கிறேன் :

  இது ஏதோ அவசரத்தில் எடுத்த முடிவோ அல்லது, அவள் மீதான இரக்கத்தினால் உண்டான காதலோ அல்ல, வாழ்க்கை முழுவதும் உடன் வைத்திருக்க விரும்பும் ஒர் அன்பு இது. உடலளவிலும் மன அளவிலும் அவள் திருமணத்திற்கு தயாரா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் அவளை முழு மனதுடன் கவனித்துக் கொள்ளும் மனப்பக்குவம் எனக்கு உண்டு என புரிந்து கொண்டேன்.

  திருமணம் செய்து இரண்டு குழந்தைகளை பெற்று, காரு வீடு என்று செட்டிலாகிடும் ரெகுலர் வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை அப்படியானதொரு சுழலில் சிக்கிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

  குருவிடம் சொல்லலாம் :

  குருவிடம் சொல்லலாம் :

  கிட்டத்தட்ட ஒரு வருடம் இதைப் பற்றி நான் யோசித்தேன்.... ஒரு வேளை ஏதோ ஒரு ஆர்வத்தில் சொல்லி மீனுவை என்னுடன் அழைத்து வந்து விட்டு நடுவில் நமக்கு அலுப்பு தட்டினால், அவளின் குடும்பத்தைப் போல என்னால் முழு நேரமும் பார்த்துக் கொள்ள முடியுமா?

  என்னுடைய வாழ்க்கைச் சூழல், அதற்கு ஒத்துழைக்குமா? என் மனம் நடுவில் மாறிவிடாதே என்று தொடர்ந்து ஒரு வருடம் யோசித்தேன். முடிவில் மீனுவை நான் திருமணம் செய்து கொள்வது தான் இறுதியானது. சரி, இதனை முதலில் குருவிடம் சொல்லலாம் என்று முடிவெடுத்தேன்.

  லவ் பண்றேன் :

  லவ் பண்றேன் :

  எடுத்தவுடனே உன் தங்கச்சிய லவ் பண்றேன் என்று சொல்ல எனக்கு தயக்கமாக இருந்தது. பிற கதைகளைப் போல அல்ல மீனுவின் கதை, வெளிய பாத்தோம் பிடிச்சது அதனால லவ் என்று சொல்ல முடியாது.

  அப்படியானதொரு காதலும் இது இல்லை நான் மீனுவை முழுவதும் புரிந்து கொண்டிருக்கிறேன். அவளை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளப் போகிறேன். நீங்கள் நினைப்பது போல,பார்ப்பது போல எங்கள் காதல் இருக்காது, என்பது எனக்குத் தெரியும் இந்த திருமணம் என்பது இந்த சமூகத்திற்காகத் தான் மற்றபடி மீனு என்னுடைய குழந்தை என்ற புரிதல் எனக்கு இருந்தது.

  அவ்வப்போது, குருவிடம் காதலைப் பற்றி மேம்போக்காக பேசி வந்தேன். ஒருகட்டத்தில் அவனே கடுப்பாகி என்னடா ஓவரா லவ்வ பத்தி பேசுற என்ன கமிட் ஆகிட்டியா என்றான்.

  ஆமா மச்சி....

  ஒகே சொல்லிருச்சா? :

  ஒகே சொல்லிருச்சா? :

  அன்று தான் பிரியாணி என்று சொல்லி அவன் அழைக்க, நான் சென்றேன் . இரவு அவன் வீட்டிற்குள் நுழைந்ததும் , வாடா புது மாப்பிள்ளை.... எங்க வராம போய்டுவியோன்னு நினச்சேன் என்றான்.

  அவன் ஏண்டா வராம இருக்கப்போறான்...

  ம்ம்மா சார் கமிட் ஆகிட்டாரு தெரியும்ல, அப்பறம் கல்யாணமாகி செட்டில் ஆகிடுவாரு இங்க எல்லாம் வரமாட்டாரு என்றான்.டேய் சும்மா இருடா என்று அவனை தடுத்தேன்.

  பாத்தியா சொல்லவேயில்ல எங்கடா பாத்தா? பொண்ணு யாரு.... ஒகே சொல்லிருச்சா? என்று வரிசையாக அவனின் அம்மாவும் அப்பாவும் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். இல்லப்பா.... இன்னும் என் லவ் சொல்லவேயில்ல அவகிட்ட சொல்றதுக்கு முன்னாடி அவ பேரண்ட்ஸ அப்ரோச் பண்ணலாம்னு ஐடியா என்று இழுத்தேன்.

  கேர்ள் பிரண்ட் :

  கேர்ள் பிரண்ட் :

  பார்ரா.... வேற லெவல் ஐடியா தான் போ.... பொண்ணு வீட்ல பேசணும்னா சொல்றா நானும் அம்மாவும் வர்றோம்.... தங்கமான பையன் ஒரு கெட்டபழக்கமும் இல்ல ஏன் ஒரு கேர்ள் ஃபிரண்ட் கூட இல்லன்னு பொய் சொல்லியாவது ஒகே வாங்கிடுறேன் என்று சிரித்தார்.

  அப்பா.... நிஜமாலுமே எனக்கு கேர்ள் ஃபிரண்ட் எல்லாம் இல்லப்பா.

  மீனு மாதிரி இருப்பாளாடா ? :

  மீனு மாதிரி இருப்பாளாடா ? :

  சரி பொண்ணு என்ன பண்றா... ஒரே ஆபிஸ்ல வேல பாக்குறீங்களா? என்று கேட்டார் அம்மா... கூடவே மீனு அருகில் உட்கார்ந்து எனக்கு திருமணம் என்று விவரித்தார்.

  அவள் சிரித்துக் கொண்டே புது டிரஸ்..... வாங்கித்தா. அம்மா மாதிரி பட்டுச் சேலை கட்டணும் அப்பறம் நெத்திச்சுட்டி என்றெல்லாம் லிஸ்ட் போட ஆரம்பித்தாள். அங்க பொண்ணு ரெடியான்னே தெர்ல அதுக்குள்ள லிஸ்ட் போடுறதப் பாரு என்று எல்லாரும் சிரித்தார்கள்.

  பொண்ணு போட்டோ காமி என்று குரு சொல்ல.....

  டேய்... பொண்ணு மீனுக்குட்டி மாதிரி இருப்பாளாடா என்று கேட்டுக் கொண்டே நான் காண்பிக்கும் போட்டோவை பார்க்க அம்மாவும் அப்பாவும் அருகில் வந்தார்கள்.

  தயக்கத்துடன்.... மாதிரி என்னப்பா மீனுவே தான் பொண்ணு என்றேன்.

  முழித்தார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

  நான் லவ் பண்ற பொண்ணு வேற யாருமில்ல "மீனு" தான்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  love proposal of guy in a unique way

  love proposal of guy in a unique way
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more