திருமண வாழ்க்கை காமம் மட்டுமே நிறைந்ததல்ல! my story #155

Posted By:
Subscribe to Boldsky

ஒரு கேள்வி நம்ம வாழ்க்கையே புரட்டி போட்டுடும்னு சொன்னா உங்களால நம்ப முடியுதா என் கதைய சொல்றேன் அப்போ நீங்க கண்டிப்பா நம்பீடுவீங்க.

ப்ளஸ் டூ கூட ஒழுங்கா முடிக்காம சுத்திட்டு இருந்தேன். அப்பாவுக்கு என்னைய கண்டாலே பிடிக்காது. என்னைய பாத்தாலே திட்டுவாரு.... நான் உருப்படவே மாட்டேன்னு அவ்ளோ உறுதியா நம்பினாரு. யாரு என்னையப் பத்தி கேட்டாலும் உருப்படாத நாயப்பத்தி என்ன பேச்சு என்று தட்டிகழித்துவிட்டு பேச்சை மாற்றி விடுவார்.

Love life is not full of lust

ஒரு கட்டத்துல எனக்கும் அப்பாவுக்கும் பேச்சுவார்த்தையே இல்லன்னு சொல்லலாம். வீட்டுக்குப் போன தட்டுல சோத்தப் போட்டு வா... வந்து கொட்டிக்கன்னு சொல்ற அளவுக்கு எங்கம்மாவுக்கு என் மேல அக்கறை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தண்டத்துக்கு பெத்து போட்டேன் :

தண்டத்துக்கு பெத்து போட்டேன் :

பெத்த பாவத்துக்கு சோறு போடுறேன் என்று ஒவ்வொரு கவளம் எடுத்து வைக்கும் போதும் சொல்ல..... பாதியிலேயே எழுந்து ஓடிவிடுவேன். பெரும்பாலும் வீட்டிலேயே இருக்க மாட்டேன்.

தம்பி ஒருவன் இருக்கிறான். என்னை விட நான்கு வயது சிறியவன் என்றாலும் கெட்டிக்காரன் எனக்கு நேர் எதிர்.

சகோதரா :

சகோதரா :

வீட்டில் இரண்டு பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவனை விட இன்னொருவன் படிப்பிலும் பிற விஷயங்களிலும் சுட்டித்தனமாக இருந்துவிட்டால் அவ்வளவு தான் முடிந்தது கதை.

பாரு உன் தம்பி தான அவன் எப்டியிருக்கான் பாரு..... அவன் எவ்ளோ மார்க் எடுக்குறான், அவன் எப்டி சிரிக்கிறான், அவன் எப்டி சாப்டுறான் என வகை தொகையில்லாமல் எடுத்ததற்கு எல்லாம் கம்ப்பேரிசன்.

இதைக் கூட விடுங்கள் ஒரு நாள் எங்கப்பா சொன்னாரே..... உன் தம்பிய பாருடா எவ்ளோ அழகா தூங்குறான் நீயும் தான் இருக்கியே குப்புற அடிச்சு தவளக்குஞ்சு மாதிரி படுத்துருக்க.

நரகம் :

நரகம் :

தூங்குறதுல என்னடா அழகு வேண்டி கிடக்கு. அடிக்கடி தம்பிக்கும் எனக்கும் சண்டை நடக்கும். சப்போர்ட் எல்லாம் தம்பிக்குத் தான் இருக்கும் என்றாலும் டேய்..... அடுச்சுக்காதீங்கடா நீ பெரியவன் தான விட்டுக் கொடுத்துட்டு போ என்று அட்வைஸ் செய்வாள் என்னை பெத்த ஆத்தா.

இரவு தூங்குவதற்கு மட்டும் தான் வீடு மற்ற படி பெரும்பாலும் வீட்டில் இருப்பதையே தவிர்த்து விடுவேன். நான் விரும்ப மாட்டேன் என்பதை விட அவர்கள் விரும்பவில்லை.

அத்தை மகள் :

அத்தை மகள் :

இங்கே எனக்கு ஆறுதலாக இருந்தது இரண்டே இரண்டு விஷயங்கள் தான். ஒன்று என் நண்பர்கள் இன்னொன்று என் அத்தை மகள் செண்பா. செண்பக வள்ளி. செல்லமாக செண்பா என்று கூப்பிடுவேன் அவளை கோபமூட்ட வேண்டும் என்றால் வள்ளியம்மா......

எப்போதும் அவளுக்கு என் மீது தனி கரிசனம் இருக்கும். அப்படித்தான் இவ்வளவு காலங்கள் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

காதலிக்கவா :

காதலிக்கவா :

என்னை பெரிய அத்தான் என்று கூப்பிட்டு அவ்வப்போது சாப்பிட எதாவது கொடுப்பாள். சில சமயங்களில் செலவுக்கு பணமும் கொடுத்திருக்கிறாள்.

சில இரவுகளில் குடித்து விட்டு வர, அப்பா வீட்டில் சேர்க்கமாட்டேன் என்று சொல்லும் போதெல்லாம் அவர்கள் வீட்டுத் திண்ணையில் தான் எனக்கு இரவு கழியும்.

சும்மா பெரிய அத்தான திட்டாதீங்க மாமா என்றும் எனக்கு சப்போர்ட் செய்து டயலாக் பேசுவாள். அடடடே எனக்காகவும் ஒரு குரலா என்று ஆச்சரியமாக இருக்கும். என்னடி அத்தான கரெக்ட் பண்ணலாம்னு பாக்குறியா என்று கேட்பேன் சிரித்துக் கொண்டே உள்ளே ஓடிவிடுவாள்.

நண்பர்கள் :

நண்பர்கள் :

வேலை என்றோ படிப்பு என்றோ எதுவும் கிடையாது. நண்பர்களோடு வெட்டியாக பொழுதை போக்கிக் கொண்டிருந்தேன். நண்பர்களுடனான என் நாட்கள் அவ்வளவு கஷ்டமானதாக இருக்கவில்லை. அவ்வப்போது பணத்திற்காக சின்ன சின்ன வேலைகள் செய்வேன். டிசைனிங், பெயிண்டிங் என்று கம்ப்யூட்டரில் செய்து கொடுக்க அதற்கு கமிஷன் கிடைக்கும். சுவற்றில் எழுத, சுவற்றில் ஓவியம் வரைய அதற்கெல்லாம் சென்று வருவேன்.

செண்பா என்ற தேவதை :

செண்பா என்ற தேவதை :

அவ்வப்போது அத்தான் அத்தான்னு கூப்ட்டா மட்டும் போதாது கட்டிக்கிவியா டீ என்று கேட்டேன்

பெரிய அத்தான் தான் உன் புருஷன்னு அம்மா ஐஞ்சு வயசுலயே சொல்லிடுச்சு என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.

அட..... இப்படியொரு உறவு, இப்படியொரு வாழ்க்கை இருக்கிறதா என்று எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அத்தை மகள் தான் என்பதால் மறைந்து மறைந்து காதலிக்க எல்லாம் அவசியம் ஏற்படவில்லை.

உறவுகள் :

உறவுகள் :

அத்தை வீட்டிற்கே வந்தார். அப்பாவிடமும் அம்மாவிடமும் சில மணி நேரங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது பேச்சு வாக்கில் செண்பாவின் திருமணப் பேச்சும் அடிப்பட்டது.

கல்யாண வயசாகிடுச்சு..... உன் பையனுக்கு பேசி முடிக்கலாம்னு பெரியவனுக்கு தென்னந்தோப்பும் லாரி ஆபீசும் பாத்துக்க சொல்லிரலாம். கால காலத்துல கல்யாணம் பண்ணனும்ல என்ன அண்ணி சொல்றீங்க என்று கேட்டார்.

பெரியவன் வேண்டாம் :

பெரியவன் வேண்டாம் :

ஆவலுடன் நின்று கொண்டிருந்த என்னை அப்பா ஏற இறங்க பார்த்தார். இப்போ இவனுக்கு என்ன அவசரம். தண்டச்சோறு ஒரு ரூவா சம்மதிச்சு குடுக்க துப்பில்ல இப்போ இந்த மைனருக்கு கல்யாணம் மட்டும் தான் குறச்சலா?

சின்னவனுக்கு செண்பாவ கட்டி வைக்கலாம். பையன் படிச்சிருக்கான் நல்லா சம்பாதிக்கிறான். பொண்ணும் டீச்சர் ட்ரெயினிங் வரைக்கும் படிச்சிருக்கு என்ன சொல்ற என்று அத்தையிடம் கேட்டார்.

பெரியவன வச்சிட்டு..... என்று இழுக்க பின் அவரே உன் வீட்டுக்கு என் பொண்ணு மருமகளா போனா போதும் பெரியவனோ சின்னவனோ என்று சொல்லிவிட்டார்.

பேசு செண்பா :

பேசு செண்பா :

வாழ்க்கையில் எல்லா இடத்திலும் உதாசீனம், கேவலமான பேச்சுக்களையே கேட்டு வந்த எனக்கு இந்த சம்பவம் பெரும் அவமானத்தை கொடுத்தது.

இதுவரை கேட்டு வந்த வார்த்தைகள் என்றாலும் செண்பா முன்னிலையில் நேரடியாக அவமானப்பட்டது இது தான் முதல் முறை.

பேசு செண்பா.... என்னைய தான் கல்யாணம் கட்டிப்பேன்னு சொல்லு என்று சைகை காண்பித்தேன்.

அதிர்ச்சி :

அதிர்ச்சி :

என்ன அத்தான் பேச சொல்ற? என்று சத்தமாக கேட்டாள். எல்லாரும் எங்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தார்கள்.

என் புருஷன் படிக்கல, வேல வெட்டிக்குப் போகல மாசா மாசம் யாராவது பணம் கொடுத்தா என்னைய நல்லா வச்சு பாத்துப்பாருன்னு சொல்லவா?

கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்பறமும் என் மாத்துத்துணி வாங்குறதுல இருந்து தலைக்கு எண்ணெ வாங்குறது வரைக்கும் உங்ககிட்டதான் ப்பா வந்து நிப்பேன்னு சொல்லவா?

ஒரு வருஷம் :

ஒரு வருஷம் :

எனக்கு உன்னைய புடிக்கும் அத்தான். ரொம்ப புடிக்கும் அதுக்காக வாழ்க்கை பூரா கஷ்டப்படறதுக்கு நான் தயாரா இல்ல..... எந்த அம்மாவும் தான் புள்ளைய நல்ல இடத்துல கட்டிக் கொடுக்கணும்னு தான் நினைப்பா.

கல்யாணம்ன்றது நம்ம ரெண்டு பேரு கொஞ்சிக்கிறது மட்டும் வாழ்க்கை கிடையாது இப்பக்கூட ஒண்ணும் கெட்டுப் போகல ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ உனக்கு எவ்ளோ நாள் டைம் வேணும்னாலும் எடுத்துக் கோ உன்னைய நீ வளர்த்துக்கோ.... சொந்தக்கால்ல நில்லு இப்போ இவ்ளோ பேச்சு பேசுறவங்க உன்ன கேவலமா பேசினவங்க முன்னாடி நீ ஜெயிச்சு காமி.

அப்பறம் வந்து என்னைய பொண்ணு கேளு கல்யாணம் பண்ணு..... சந்தோஷமா எங்க வீட்லயிருந்து என்னைய அனுப்பி வைப்பாங்க என்றாள்.

வீட்டை விட்டு வெளியேறு :

வீட்டை விட்டு வெளியேறு :

இவ்வளவு காலங்கள் ஆசை ஆசையாக காதலித்த செண்பாவும் என்னை இப்படிச் சொல்லிவிட்டாள் என்று சொல்லி கூனிக் குறுகி நின்றேன். மேற்கொண்டு அவளிடம் அத்தனைப் பேர் முன்னால் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறினேன். வாசலைத் தாண்டும் போது அவனெல்லாம் திருந்த மாட்டான்ம்மா என்று அப்பா சொன்னார். செண்பாவின் முகத்தைக்கூட பார்க்க பிடிக்காமல் அவளை ஏறிட்டும் பார்க்காமல் அப்படியே வெளியே வந்துவிட்டேன்.

பணமிருந்தா தான் :

பணமிருந்தா தான் :

அன்று இரவு உட்சபட்ச போதையில் இருந்தேன். காதலிக்கும் போதெல்லாம் நான் சம்பாதிக்கல படிக்கலன்னு தெரியாதாடா..... என் அப்பன் முன்னாடி கூட்டிட்டு போய் அவமானப்படுத்திட்டா. இந்த பொண்ணுங்க மனசப்பாத்து லவ் பண்ணல எல்லாம் பணம். பணமிருந்தா ஓடி வருவாளுக

தற்கொலை :

தற்கொலை :

செண்பா எனக்கு கிடைக்கப்போகிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவளும் எனக்கு அல்ல..... இதுவரை அப்பா மட்டுமே என்னை தண்டச்சோறு, வீணாப்போனவன் என்று திட்டிக் கொண்டிருந்தார். இப்போது என் செண்பாவும் சொல்லிவிட்டாள்.

உண்மையில் நான் வீணாப்போனவன் தான். அப்பறம் எதுக்கு நான் உயிரோட இருக்கணும் நான் சாவுறேன் என்று தற்கொலைக்கெல்லாம் முயன்றேன்.

நண்பர்கள் :

நண்பர்கள் :

நண்பர்கள் காப்பாற்றினார்கள். அதன் பிறகு ஒரு வாரம் வீட்டிற்கே செல்லவில்லை. அந்த ஊரில் இருக்கவேபிடிக்கவில்லை எங்காவது தொலைந்து விடலாம் என்று பஸ் ஏறி கால் போன போக்கில் சென்றேன்.

என்னை யாரும் தேடியிருக்க மாட்டார்கள். தொலைந்தானா அப்பாடா என்று என் குடும்பம் மகிழ்ந்திருக்கும் . செண்பா என் தம்பியை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருப்பாள் என்று நினைத்துக் கொண்டேன்.

கையில் சுத்தமாக காசில்லை :

கையில் சுத்தமாக காசில்லை :

ஊரை விட்டு வந்து ஒரு வாரமாகிவிட்டது. கையில் ஒரு ரூபாய் கூட இல்லை. எந்த வேலையும் இன்னும் கிடைத்தபாடில்லை பசி வயிற்றைக்கிள்ளியது. எங்கே யாரிடம் சென்று உதவி கேட்பது என்று எதுவும் தெரியவில்லை ஒரு கட்டத்தில் சரி, மீண்டும் ஊருக்கே சென்று விடலாம் என்று கூட தோன்றியது.

என்ன தான் அவமானப்பட்டாலும் அங்க சோத்துக்கு கஷ்டம் வந்ததில்லயே என்று நினைத்துக் கொண்டேன். பசி மயக்கத்தில் பஸ் ஸ்டாப் நிழலில் படுத்திருந்தேன்.

செண்பா :

செண்பா :

திடீரென்று செண்பா சொன்ன வார்த்தைகள் மின்னி மறைந்தது. ஆமால்ல செண்பா சொன்னது சரி தான். கல்யாணம் முடிஞ்சு சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவோம். அவ சரியாத்தான சொல்லியிருக்கா என்று தோன்றியது.

பல கேள்விகள் கேட்டுக் கொண்டேன். ஆம், செண்பா சொன்னது போல என்னை உதாசீனப்படுத்தியவர்கள் முன்னால் வாழ்ந்து காட்டிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டேன்.

புதிய நான் :

புதிய நான் :

மீண்டும் ஊருக்குச் சென்றேன். நண்பர்கள் வீட்டில் தங்கிக் கொண்டு சிறிய அளவிலான பணத்தை கடன் வாங்கிக் கொண்டு மீண்டும் ஊரை விட்டு வெளியேறினேன். ஹோட்டலில் டேபிள் துடைக்கிற வேலை, பின்னர் கார்மெண்ட்ஸ் வேலை, இரவுகளில் போஸ்டர் ஒட்டுவது, வரைவது, ஸ்க்ரீன் பிரிண்டிங்,என்று கிடைத்த வேலைகளை எல்லாம் செய்தேன்.

சில மாதங்கள் செக்யூரிட்டியாகவும் வேலைக்குச் சென்றேன். அப்படியே தொலைநிலைக்கல்வி மூலமாக பட்டப்படிப்பு படிக்க ஆரம்பித்திருந்தேன்.

செண்பா நான் வந்துட்டேன் :

செண்பா நான் வந்துட்டேன் :

ஐந்து வருடங்கள் ஓடியதே தெரியவில்லை. இப்போது மாதம் முப்பதாயிரம் சம்பாதிக்கிறேன். அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணி. கூடுதலாக ஓவிய வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

நல்ல நிலைக்கு வந்து விட்டேன் என்று நான் நம்பத்துவங்கியதும் மீண்டும் ஊருக்குச் சென்றேன். செண்பாவுக்கு கல்யாணமாகியிருக்கும். குழந்தை கூட பிறந்திருக்கும் என்னைய பாத்ததும் அப்பா ஏற இறங்க பாத்துட்டு உள்ள போய்டுவாறு அம்மா வாடா.... திங்கிறியான்னு கேக்கும் என்று நினைத்துக் கொண்டே வீட்டிற்குச் சென்றேன்.

திடீர் மாற்றம் :

திடீர் மாற்றம் :

வீட்டில் எல்லாரும் இருந்தார்கள். அப்பா என்னை பார்த்துக் கொண்டேயிருந்தார். முகத்தை திருப்பிக் கொள்ளவில்லை உடலே சற்று தளர்ந்திருந்தது. ஓடிப்போற நாயி சொல்லிட்டு போ மாட்டியா என்று திட்டினார்.

இப்போதான் உன் பெரிய புள்ள கண்ணுக்கு தெரியுறானாப்பா என்று கேட்க நினைத்து அமைதியானேன். அம்மா வந்தாள் அணைத்துக் கொண்டாள். எங்கடா போனா பசங்கட்ட கூட பேசலையாம் என்று அழுதாள்.

தம்பிக் குழந்தை :

தம்பிக் குழந்தை :

யாரோ ஒரு பெண் கைக்குழந்தையுடன் உள்ளிருந்து வெளியே வந்தாள். புரியாமல் விழிக்க உன் தம்பி பொண்டாட்டிடா என்றார்கள். உள்ள வாங்க என்று அழைத்தாள். குழந்தையை என் கையில் திணித்தார்கள்.

ஏனோ தெரியவில்லை கண்ணீர் கொட்டியது.

அனைவரும் வாழ்த்துங்கள் :

அனைவரும் வாழ்த்துங்கள் :

அவர்களின் வரவேற்பில் இதுவரை கேட்டு வந்த வசைச் சொற்கள் கேட்காமல் மிரட்சியுடன் நின்றிருந்தேன். அதுவரை ஒரு வார்த்தைக் கூட பேசமா இருந்த நான் முதன் முதலாக வாயைத் திறந்தேன்,

செண்பா....

பெரிய அத்தான் தான் வேணும்னு இன்னமும் காத்துட்டு இருக்கு

செண்பா..... செண்பா நீ சொன்ன அந்த வார்த்தைகள் தான் என்னை இப்படி மாற்றியிருக்கிறது, என் வாழ்க்கையை ஜெயிக்க வச்சிருக்கு என்று நன்றி சொல்ல வேண்டும். அவள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தோன்றியது.

அடுத்த மாதம் எங்களுக்குத் திருமணம். அனைவரும் வாழ்த்துங்கள் புதிய வாழ்க்கையை உங்களின் அன்போடு துவங்குகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Love life is not full of lust

Love life is not full of lust
Story first published: Thursday, January 25, 2018, 11:40 [IST]
Subscribe Newsletter