உடன் பணிபுரிபவருடன் இருந்த தொடர்பால், என் முதல் குழந்தையை கருக்கலைத்தேன் - My Story #187

Posted By: Staff
Subscribe to Boldsky

நான் நகர் புறத்தில் பிறந்து, வளர்ந்த பெண் அல்ல. கிராமமும் அல்லாது, டவுனும் அல்லாத பகுதியில் பிறந்து, வளர்ந்தவள் நான். எங்கள் ஊர்களில் சில சமயம் புதிய படங்களே ஒரு வாரம் கழித்து தான் வெளியாகும். மாடர்ன், ஃபேன்ஸி போன்றவை நான் பார்த்தது எல்லாம் சினிமாக்களில் மட்டும் தான்.

நான் முதல் முறையாக எங்கள் ஊரை தான் வெளியே சென்றதே கல்லூரி பயிலும் போதுதான். காரணம் எங்கள் ஊரில் கல்லூரி இல்லை. ஊரில் இருந்து 20 கிலோமீட்டர் தள்ளி இருந்த நகரில் தான் கல்லூரி வசதி இருந்தது. கல்லூரி சேர்ந்த பிறகு தான் என்னுடன் பயலும் பெண்கள் பலரை கண்டு, அவர்கள் உடுத்தும் உடைகள் கண்டு என் மனம் அலைபாய துவங்கியது.

முதலாம் ஆண்டில் படிப்பில் மட்டுமே இருந்த நாட்டம் இரண்டாம் ஆண்டில் இருந்து கொஞ்சம் திசை மாறியது. உடன் இருந்த தோழிகள் பலர் காதலித்துக் கொண்டிருந்தனர். எனக்கும் காதலிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால், அதற்கான வாய்ப்போ, அல்லது நான் எதிர்பார்த்த மாதிரியான ஆணையோ நான் சந்திக்க வில்லை.

எப்படியும் என் திருமணம் காதல் திருமணமாக தான் இருக்க வேண்டும் என்று கருதினேன். ஆனால், அதற்கும் வந்து விழுந்தது ஒரு முட்டுக்கட்டை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்யாணம்!

கல்யாணம்!

நான் இரண்டாம் ஆண்டு கல்லூரி படித்துக் கொண்டிருந்த போது வீட்டில் எனக்கு மாப்பிளை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். மாப்பிள்ளை சென்னை, கைநிறைய சம்பாதிக்கிறார் என்று கல்யாணத்தை முடிவு செய்ய அவர்களிடம் பல காரணங்கள் இருந்தன. ஆனால் எதை சொல்லி கல்யாணத்தை நிறுத்துவது என்று எனக்கு தெரியவில்லை.

ஏனெனில், எங்கள் ஊரில் பெண்கள் கல்லூரி படிக்கும் போதே திருமணம் செய்துக் கொள்வது சாதாரணம். சிலர் கல்லூரி படிக்கும் போதே திருமணம் செய்து குழந்தை பெற்றதும் உண்டு. ஆகையால், திருமணத்தை தட்டிக்கழிக்க என்னிடம் காரணங்கள் இல்லாமல் போனது.

நல்ல மனசு!

நல்ல மனசு!

என் பெற்றோர் பாதியிலேயே கல்லூரி மாற்றி சென்னைக்கு அனுப்பிவிடலாம் என்று எண்ணினார்கள். ஆனால், என் கணவர் தான், இல்லை படிப்பு கெட வேண்டாம். அவள் (நான்) இதே கல்லூரியில் படிக்கட்டும். இன்னும் ஒரு வருடம் தானே பாக்கி இருக்கிறது என்று கூறி சென்னைக்கு சென்றார். ஒவ்வொரு வார இறுதியிலும் என்னை வந்து பார்த்து செல்வார். சில சமயம் நாங்கள் குடும்பத்துடன் சென்னை சென்று வருவோம்.

தாம்பத்தியம்!

தாம்பத்தியம்!

படிப்பு கேட்டு விடுமோ என்று அவர் என்னை தாம்பத்திய உறவுக்கு கூட கட்டாயப்படுத்தியது இல்லை. மொத்தமாகவே அந்த ஒரு வருட திருமணம் வாழ்வில் இரண்டு, மூன்று முறை தான் நாங்கள் கலந்திருப்போம் என்று கருதுகிறேன். அவர் மிகவும் நல்லவர் தான். கல்லூரி முடித்த பிறகு, அவரே சென்னையில் வேலை தேடி தருவதாக கூறினார். அதே போல எனக்கு சென்னையில் வேலையும் கிடைத்தது. ஆனால், அங்கே தான் பெரும் திருப்புமுனயும் காத்திருந்தது.

காதல்!

காதல்!

நான் எதிர்பார்த்தது எல்லாம் ஒரு காதல் திருமணம். ஆனால், அது என் வாழ்வில் நடக்கவில்லை. என் கணவர் என் மீது அதிக அக்கறையுடன் இருப்பாதாக கருது ஒரு கார்டியன் போல தான் நடந்துக் கொண்டார். அவரிடம் இருந்து நான் சினிமாக்களில் கண்ட அந்த காதல், ரொமான்ஸ் பெரிதாக கிடைக்கவில்லை. ஆகயால், என் மனம் காதல் தாகம் எடுத்து அலைபாய துவங்கியது.

உடன் வேலை செய்பவர்...

உடன் வேலை செய்பவர்...

எனக்கு அலுவலகத்தில் சேர்ந்த புதியதில் ஜானை தெரியாது. ஏனெனில் அவர் என் டிபார்ட்மெண்ட் கிடையாது. வேறு ஏதோ ஒரு தளத்தில் வேறு டிபார்ட்மெண்ட்டில் வேலை செய்து வந்தார். நான் வேலைக்கு சேர்ந்த புதியதில் அவர் பெங்களூர் கிளையில் ஏதோ பிராஜக்ட் விஷயமாக சென்றதால் ஓரிரு மாதங்கள் கழித்து தான், என் டிபார்ட்மெண்ட்டில் பணிபுரியும் நண்பர் மூலமாக ஜான் பழக்கமானார்.

அவ்வளவு அழகெல்லாம் இல்லை...

அவ்வளவு அழகெல்லாம் இல்லை...

என் கணவருடன் ஒப்பிடுகையில் ஜான் அவ்வளவு அழகெல்லாம் இல்லை. ஆனால், நன்கு பேசுவான். சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான். குழந்தை போல ஏதாவது ஒரு சந்தேகம் எழுப்பிக் கொண்டே இருப்பான். சில சமயங்களில் பெண்களிடம் இதுக்குறித்து பேசக் கூடாது என்றெல்லாம் இன்றி எல்லா சந்தேகங்களும் கேட்பான். கொஞ்சம் வெகுளி, கொஞ்சம் குறும்புக் காரன் ஜான்.

பிடித்தது!

பிடித்தது!

ஆரம்பத்தில் வெறும் நட்பாக ஆரம்பித்த இந்த உறவு, மெல்ல, மெல்ல திசை மாற துவங்கியது. ஒரு கட்டத்தில் பாதி வழியில் ஜான் என்னை பிக்கப் செய்து அலுவலகம் அழைத்து செல்வதும், டிராப் செய்வதுமாக இருந்தான். சில நேரங்களில் அந்த குருகிய பைக் டிரைவ் முடிவில்லாமல் நீண்டு போகாதா என்று நான் ஏங்கியதும் உண்டு.

என்னுள் இருக்கும் அதே உணர்வு அவனுள்ளும் இருக்கிறதா என்ற சந்தேகங்கள் எழுந்தன. அதை எப்படி அவனிடம் நேரடியாக கேட்பது என்ற தயக்கம் மனதை சூழ்ந்திருந்தது.

வழி ஏற்படுத்திக் கொடுத்த நண்பன்...

வழி ஏற்படுத்திக் கொடுத்த நண்பன்...

தினமும் ஒன்றாக வந்து, ஒன்றாக செல்வது... சில சமயம் யார் ஒருவருக்கு வேலை நேரதாமதம் ஆனாலும், மற்றொருவர் அலுவலகத்தில் காத்திருந்து உடன் செல்வது போன்ற நிகழ்வுகளை எல்லாம் கண்டு. ஒரு நாள் எங்கள் நண்பன் ஒருவன்... உன் ஹஸ்பன்ட் கூட உனக்காக இவ்வளோ நேரம் வெயிட் பண்ண மாட்டார் போல.. ஆனா, இவன் இப்படி வெயிட் பண்றான் என்று கேலி செய்து சென்றான்.

திருப்பம்!

திருப்பம்!

அன்று இரவு வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்த போது தான் ஜான் நேரடியாக என்னிடம் ஒரு கேள்வி கேட்டான்.

"ஒருவேள உனக்கு கல்யாணம் ஆகாம இருந்திருந்தா? என்ன லவ் இல்ல கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?"

ஒரே சமயத்தில் என் மனதில் அதிர்ச்சியும் சந்தோசமும் மாறி, மாறி தோன்றியது. அந்த பேரின்பத்தில் வாயடைத்து போனேன். அதன் பிறகு நாங்கள் பேசிக் கொள்ளவே இல்லை. சில தூரம் சென்ற பிறகு...

"இன்னும் நீ பதில் சொல்லவே இல்ல...?" என்று மீண்டும் கேள்வி கேட்டான்.

"ஹ்ம்ம்..." என்று எனது பதிலை பதிவு செய்தேன்.

லவ் சாட்டிங்!

லவ் சாட்டிங்!

அன்றில் இருந்து நானும், ஜானும் அதிகமாக குறுஞ்செய்தியிலும் பேசிக் கொண்டோம். உண்மையில், நால்வர் மத்தியில் நாங்கள் பேச முடியாத அனைத்தையும் வாட்ஸ்-அப்பில் பேசிக் கொண்டோம். ஆனால், என் வாழ்வில் இந்த சந்தோசமும் நிலைக்கவில்லை.

ஒருபக்கம் முதல் முறையாக மனதில் காதல் ஊற்றெடுத்த அதே சமயத்தில், மறுபக்கம் நான் கருவுற்றிருந்தேன்.

சஞ்சலம்!

சஞ்சலம்!

என் கணவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. திருமணமாகி ஒன்றரை வருடமான காலம் அது. அவர் இந்த தருணத்திற்காக நிறையவே காத்திருந்தார். ஆனால், அந்த சமயத்தில் ஜானுடன் எனக்கு ஏற்பட்ட காதல் காரணமாக நான் தாயாக போகும் சந்தோசம் என்னுள் முழுவதுமாக இல்லை. கணவரா? ஜானா? என்ற கேள்வி மனதில் சக்கரம் போல சுழன்றுக் கொண்டே இருந்தது.

விவாகரத்து!

விவாகரத்து!

பேசாமல் இவருடன் விவாகரத்து பெற்று, ஜானுடன் திருமணம் செய்து எனக்கு பிடித்த மாதிரியான வாழ்க்கை வாழலாம் என்ற எண்ணம். ஆனால், எனக்காக ஒன்றரை வருடம் என்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் முழு சுதந்திரம் கொடுத்து, புதிய வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுத்தவரை எப்படி பிரிய முடியும் என்ற எண்ணம் வேறு.

இந்த இரண்டு எண்ணங்களும் என்னுள் மன அழுத்தம் அதிகரிக்க செய்தன.

குழப்பம்!

குழப்பம்!

அன்றைக்கு எந்த தைரியத்தில் நான் என் கருவை கலைக்க முடிவு செய்தேன் என்பது இன்று வரை என்னுள் பெரிய கேள்வியை எழுப்புகிறது. ஒருவேளை இந்த குழந்தை தான் எனது காதலுக்கு இடையூறாக இருக்க போகிறதோ, ஒருவேளை கருத்தரிக்காமல் இருந்திருந்தால்... நான் தைரியமாக ஜானுடன் வாழ முடிவு எடுத்திருப்பேனோ என்ற எண்ண அலைகள் என்னை சுற்றிக் கொண்டிருந்தன.

கடைசியில், மனதில் தைரியம் வரவழைத்துக் கொண்டு, கருக்கலைத்தேன். என் கணவரிடம், குளியறையில் கால் தவறி கீழே விழுந்து கரு கலைந்தது என்று பொய் கூறினேன்.

வெறும் ஈர்ப்பு!

வெறும் ஈர்ப்பு!

ஆனால், கொஞ்ச நாட்கள் கழிந்த பிறகு... ஜான் என்னுடன் வேறு விதமாக பழக ஆரம்பித்தான். என்னுடன் எப்படியாவது கலந்துறவாட என்ற எண்ணம் மட்டுமே அவனுடன் இருந்தது. குறுஞ்செய்திகளில் அவன் பேசிய, அனுப்பிய படங்கள் என பெரும்பாலானவை அப்படியானதாக இருந்தன. ஏன் இந்த திடீர் மாற்றம் என்று கேட்டேன். இதில் என்ன தவறு, நாம் தான் காதலிக்கிறோம் தானே என்று கேட்டேன்.

நம்முள் இருப்பது காதல் தான்.., அதற்கென திருமணம் ஆகாமல் இதெல்லாம் எப்படி என்று கேட்டேன்.

பகீர் பதில்!

பகீர் பதில்!

உனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லாததா என்ன? என்று வேறு விதாமாக அவன் பேச்சு போனது. எங்களுக்குள் கருத்து பகிர்வுகள் சண்டையாக மாறியது. அப்போது தான் ஜான் என்னை அடைய வேண்டும் என்று மட்டும் தான் விரும்புகிறான் என் காதலை அல்ல என்று என் மரமண்டைக்கு புரிந்தது.

உடனே, குட்பை சொல்லி பிரிந்தேன்.

சாபமா?

சாபமா?

இதெல்லாம் நடந்து 3 ஆண்டுகள் ஆகிறது. என்னுள் ஒரு காதல் வந்ததும், நான் ஏமாற இருந்ததும், கருக்கலைப்பு செய்ததும் என என் கணவருக்கு எதுவும் தெரியாது. அதன் பிறகு எவ்வளவோ முயற்சித்தும் நான் மீண்டும் கருத்தரிக்கவில்லை.

ஒருவேளை, ஒரு பாவமும் அறியாத என் கணவருக்கு துரோகம் செய்ய துணிந்த எனக்கு இது கடவுள் கொடுத்த சாபமா? என்று எண்ணி வருந்துகிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

I Aborted My Only Child, Because I Have An Affair with Colleague!

I Aborted My Only Child, Because I Have An Affair with Colleague!
Story first published: Thursday, March 1, 2018, 15:58 [IST]