For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மின்சாரம் பாய்ச்சி பெண்ணை கொலை செய்த குடும்பம்! My Story #179

வரதட்சனை குறைவாக கொண்டுவந்திருக்கிறாய் என்று சொல்லி மனைவியையே கணவன் குடும்பத்தார் கொன்ற கொடூரம்.

|

உன் மூஞ்சிய பாத்தாலே எரிச்சலா இருக்கு திரும்பி வரும் போது இங்க இருந்திராத எங்கயாவது தொலஞ்சு போ.... ஹாலில் இருந்து கத்தி விட்டு வாசல் கதவை டம்மென்று அதிர வெளியேறினான் சதீஷ்.

ஒரு கணம் அதிர்ந்து நெஞ்சில் கைவைத்துக் கொண்டாள். படபடவென்று வேகமாய் மூச்சு வாங்கியது. கண்களை துடைத்துக் கொண்டாள். ஹாலில் இருக்கும் ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தாள் எப்போதும் உள்ளே கத்தும் போது காதை தீட்டிக் கொண்டு வீட்டு வாசலை பார்க்கும் எதிர்வீட்டு அங்கிள் இன்றைக்கு ஆளைக் காணோம்.

இது ஒன்றும் புதிதல்ல, திருமணம் முடிந்து மூன்றாம் மாதத்திலிருந்து இந்த கொடுமை ஆரம்பித்துவிட்டிருக்கிறது. இப்போது எங்களுக்கு முழுதாக இரண்டு வருடங்கள் முடிந்திருந்தது. நானோ அல்லது என் வீட்டில் இருப்பவர்களோ என்னுடைய திருமண வாழ்க்கை இப்படியொரு சுழலில் சிக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெற்றோர் :

பெற்றோர் :

கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது வீட்டில் வரன் தேட ஆரம்பித்தனர். அப்போது ப்ரோக்கர் மூலமாக அறிமுகமாகி எல்லாம் பேசி முடிக்கப்பட்டது. ஐம்பது பவுன் மற்றும் ரொக்கம் ஐந்து லட்சம் என்று எனக்கு விலை பேசினார்கள்.

ஆனால் அப்பாவோ எனக்கு இவளுக்கு அடுத்து இன்னொரு பொண்ணு இருக்கா... இவளுக்கு ஐம்பது பவுன் போட்டா அதேயளவு ரெண்டாவது பொண்ணுக்கும் போடணும். அந்த அளவுக்கு நம்மகிட்ட வசதியில்ல. வேற இடம் பாத்துக்கங்க என்று சொல்லிவிட்டார்.

மகளே மருமகள் :

மகளே மருமகள் :

எங்களுக்கு இதுல எல்லாம் அபிப்ராயம் இல்ல.... ஆனா மருமக எவ்ளோ போட்டு வந்திருக்கான்னு சொந்தக்காரங்க எல்லாம் கேப்பாங்கள்ல அதான்.... உங்களால எவ்ளோ போட முடியும் என்று இறங்கி வந்தார்கள்.

அப்பா இருபது சொல்ல பேசி முப்பதுக்கு கொண்டு வந்து திருமணத்தை நிச்சயம் செய்தார்கள்.

திருமணத்திற்கு முன்பு :

திருமணத்திற்கு முன்பு :

நிச்சயம் முடிந்து திருமணத்திற்கு ஆறு மாதங்கள் இடைவேளியிருந்தது. அப்போதெல்லாம் சதீஷ் அடிக்கடி போனில் பேசுவதுண்டு. சரியாக திருமணத்திற்கு ஒரு மாதம் இருக்கும் போது மாமியார் அம்மாவிற்கு போன் செய்தார்.

என் அத்த தான் வீட்டுக்கு பெரியவங்க அவங்க கிட்ட சொன்னோம். இவ்ளோ வசதி குறைவான இடத்துல ஏன் பொண்ணு எடுக்குற நம்ம பையனுக்கு என்ன குறை? நல்லா படிச்சு கை நிறைய சம்பாதிக்கிறான் என்று பீடிகை போட்டார்.

என் பொண்ணும் தான் படிச்சிருக்கு.... இது அம்மா

நெருக்கடி :

நெருக்கடி :

அவங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமேயில்ல..... பேசி சமாளிச்சு வச்சிருக்கோம். நீங்களும் அப்டியே மெயிண்டெயின் செய்ங்க என்று சொல்லி போனை வைத்துவிட்டார். அடுத்து ஒரு வாரம் கழித்து, ரொக்கம் ஐஞ்சு லட்சம் எப்போ தருவீங்க.... தாலி கட்றப்போ மேடையிலயே கொடுத்துருவீங்களா என்று ஒரு போன்.

ரொக்கமா? நகை மட்டும் தானா...

பணமும் நகையும் என்ன எங்களுக்கா கேக்குறோம். எல்லாம் உங்க பொண்ணுக்கு தான். உங்க பொண்ணு சந்தோஷமா இருப்பா. அத்தைட்ட பேசினேன் அவங்க முப்பது பவுனுக்கு ஒத்துக்கவே மாட்றாங்க பெரியவங்கள பகைச்சுட்டு எப்டி வீட்ல விஷேசம் நடத்துறது... ஒரு பத்து பவுன் சேத்து போட்ருங்க.

வேறு வழியில்லை :

வேறு வழியில்லை :

பத்து பவுனா? இல்லங்க முடியாது. இப்டி கடைசி நேரத்துல வந்து சொன்னா என்ன பண்றது.... இருபது பவுன் போடலாம்னு இருந்த நான் முப்பது பவுனுக்கு ஒத்துக்கிட்டு இப்போ முழிய பிதுங்கிட்டு நிக்கிறேன். இப்போ வந்து ரொக்கம் கூடுதலா பத்து பவுன்னு கேட்டா?

அப்போ சம்மந்தத்த முடிச்சிக்கலாம் என்று எதிர்பாராத பதிலொன்று வந்தது.

என்னங்க கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள் தான் இருக்கு, ஊரெல்லாம் கூப்டாச்சு, பத்திரிக்க, மண்டபம்னு எல்லாம் ரெடியாயிருக்குற இந்த நேரத்துல.... இருவருக்கும் கார சாரமாக விவாதம் நடந்தது இறுதியில் கூடுதலாக ஐந்து பவுனுக்கு சம்மதிக்க வைத்திருந்தனர் சதீஷ் குடும்பத்தினர்.

உத்தமர் :

உத்தமர் :

கூடுதல் ஐந்து பவுனுக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்டிருந்தார். திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து டானென்று.... என்ன உன் வீட்டுக்கு போலயா? என்று திடீரென்று கேட்டார் அத்தை

வீட்டுக்கா? இல்லையே ஏன் அத்த அம்மா ஏதும் கூப்டாங்களா...

ம்ம்ம் உங்கம்மா எப்டி கூப்டுவா? கல்யாணத்தப்போ போடுறேன்னு சொன்ன பவுன் ரெண்டு மாசம் கழிச்சு போடுறேன்னு சொன்னாரே உத்தமரு மறந்துட்டாரா?

கொடுமை ஆரம்பம் :

கொடுமை ஆரம்பம் :

அப்பாவால் பணத்தை தேற்ற முடியவில்லை.சதீஷ் வெறுப்பை காட்ட ஆரம்பித்தான் அதை விட அவனது குடும்பத்தினர். ஒரு நாள் சண்டையில் என்னுடைய போனை பிடுங்கி அடித்து நொறுக்கினான்.

வசதி குறைவான இடத்தில் பெண்ணெடுத்து விட்டோம், எங்களை நன்றாக ஏமாற்றிவிட்டார்கள், மோசம் போய்விட்டோம் என்று ஊரெங்கும் வதந்தி பரப்பி வந்தார்கள்

Image Courtesy

அடி உதை :

அடி உதை :

ஒரு வருடமாகியும் இன்னும் கருத்தரிக்கவில்லை என்று சொல்லியும் எனக்கு வசவுகள் விழுந்தது. மாமியாரின் டார்ச்சர் அதிகமானது, கணவர் என்ற ஒரு கேரக்டர் வீட்டில் இருக்கிறதா என்றே தெரியாதளவுக்கு நிலைமை தலைகீழானது.

மனரீதியாக மிகக் கொடுமையான டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தார்கள். இந்த வீட்டை விட்டு எப்படியாவது என்னை துரத்தி விட வேண்டும் என்று சொல்லி என்னென்னவோ ப்ளான் செய்தார்கள். நானாக செல்ல வேண்டும் என்றே அவர்கள் நினைத்தார்கள் தப்பித்தவறியும் தங்கள் மேல் பழி விழுந்து விடக்கூடாது, அவர்கள் தான் அனுப்பினார்கள் என்று சொல்லிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.

Image Courtesy

உறுதி :

உறுதி :

ஆனால் பிறந்த வீட்டின் சூழ்நிலை என்ன, இப்படி நான் சென்றால் அடுத்து என்ன நடக்கும், இப்படி சென்று விட்டாள் அடுத்து மீண்டும் இந்த திருமண வாழ்க்கையில் இணைய முடியுமா? அதற்குள் எத்தனை அக்கப்போர்கள் நடக்கும் என எல்லாவற்றையும் சந்தித்து இந்த வீட்டை விட்டு மட்டும் போகக்கூடாது என்று உறுதியாக இருந்தேன்.

என்ன செய்தாலும் வீட்டை விட்டு போகாமல் இருக்கிறேன் என்பது அவர்களை இன்னும் கோபமூட்டியது ஆத்திரமுரச் செய்தது. தினமும் அடி உதை விழுந்தது, சரிவர உணவும் எனக்கு கொடுக்கப்படாமல் பட்டினி போட்டார்கள்.

Image Courtesy

என்ன நம்பிக்கை? :

என்ன நம்பிக்கை? :

ஒரு முறை சண்டையில் வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்லி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி கதவை சாத்தினார்கள். வாசலிலேயே அழுது கொண்டே இரவு முழுவதும் படுத்திருந்தேன். அதன் பிறகு பல நாட்கள் செருப்பு வைக்கும் இடத்தை தாண்டி உள்ளே நுழைய அனுமதியின்றி கிடந்தேன்.

எதற்காக அங்கே இருந்தேன், என்ன நம்பிக்கையில் அவன் தான் என் வாழ்க்கை.... அவன் தான் என் கதி என்று எல்லா கொடுமைகளையும் அனுபவித்தேன் என்று தெரியவில்லை, சிறு வயதிலிருந்து எனக்கு கற்பிக்கப்பட்ட திருமணம் தொடர்பான கற்பிதங்கள் இதில் முக்கிய பங்காற்றியது என்பது மட்டும் உண்மை.

Image Courtesy

திட்டம் :

திட்டம் :

நடுவில் கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க பேச்சு நடப்பதாக கேள்விப்பட்டு அவரிடம் நேரடியாக கேட்டேன். முதலில் மறுத்தவர், பின் ஒப்புக்கொண்டார். பிச்சக்கார நாயி ஒண்ணுமில்லாத வீட்ல இருந்து வந்துட்டு எங்க உசுர எடுக்குது சனியன் போய்த் தொலையவும் மாட்டேங்குது.... எங்கையாவது போய் செத்துத் தொலையேன் வாய்க்கூசாமல் என் கணவரான சதீஷே திட்டினான்.

இதுவரையில் அம்மாவை எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் சதீஷ் இருக்கிறான் என்ற என்னுடைய எண்ணம் சுக்குநூறாய் உடைந்தது. சதீஷும் எனக்கு ஆதரவாய் இல்லை என்பது உறுதியானது.

விவாகரத்து :

விவாகரத்து :

இரண்டாம் திருமணம் விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதானது, அவர்களும் தீவிரம் காட்டத்துவங்கினார்கள். முதல் மனைவி இருக்கும் போது இரண்டாம் திருமணம் செல்லாது என்று தெரிந்து கொண்டிருப்பார்கள் போல விவாகரத்து கேட்டார்கள்.

நான் வீட்டை விட்டு செல்ல வேண்டும், விவாகரத்து கேட்க வேண்டும் என்று சொல்லி, தெருவில் எல்லார் முன்னிலையிலும் அடித்து கொடுமை படுத்தினார்கள்.கடைக்கு சாமான் எடுத்துட்டு வரனும் கூட வா என்று அழைத்துச் சென்று வெகு தொலைவிற்கு அழைத்துச் சென்று எங்கோ ஹோட்டலில் டீ சாப்பிட சொல்லி உட்கார வைத்து போன் பேச வெளியில் வருவது போல வந்து அப்படியே கிளம்பிச் சென்று விட்டார் கணவர்.

இந்த எந்த இடம் :

இந்த எந்த இடம் :

ஒரு மணி கடக்கும் போது தான் பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. நம்மை இங்கே திட்டமிட்டு அழைத்து வந்திருக்கிறார் என்பது அப்போது தான் உறைய ஆரம்பித்தது. கையில் போன் இல்லை, காசில்லை, இந்த எந்த இடம்,எந்த ஊர் எதுவும் தெரியவில்லை. யாரிடம் கேட்க, கல்லாவில் உட்கார்ந்திருந்தவரிடம் விவரத்தை சொன்னேன்.

விவரிக்கும் போதே, தாரை தாரையாய் கண்ணீர் ஊற்ற இரும்மா பக்கதுல எங்காயவது போயிருப்பாரு போன் நம்பர் தெரியுமா என்று கேட்டு தன்னுடைய செல்போனைக் கொடுத்தார். கணவரின் எண்ணை நினைவுபடுத்தி செல்லில் டைப் செய்தேன்.

ராங் நம்பர் :

ராங் நம்பர் :

கால் செய்து காதில் வைக்க இரண்டாவது ரிங்கிலேயே எடுத்து ஹலோ என்றார். ஏங்க..... எப்போ என்று முடிப்பதற்குள் போன் கட் செய்யப்பட்டிருந்தது. மீண்டும் முயற்சிக்க போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.

போன் கட்டாயிடுச்சு என்று கடைக்காரரிடம் கொடுக்க, அவரும் பல முறை முயற்சித்தார். அங்கேயே மாலை வரை காத்திருந்தேன். இதற்கு மேலும் வரமாட்டார் இங்கிருந்து எப்படிச் செல்ல என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அட்ரஸ் தெரியுமாம்மா?ம்ம்ம்ம் தெரியும் என்று சொல்லி என் மாமியார் வீட்டு முகவரியைச் சொல்ல, ம்மா இதுக்கு எல்லாம் கோச்சுட்டு ஊர விட்டு போவியா? அங்க என்ன அவசர வேலையோ.... வீட்டு அட்ரஸ சொல்லும்மா

ண்ணா அது என் வீட்டு அட்ரஸ் தான். அங்க தான் இருக்கேன் என்று சொன்னதும் ஒரு கணம் என்னை அதிர்ச்சியுடன் பார்த்தார்.

பத்ரமா போம்மா :

பத்ரமா போம்மா :

பின் ஆட்டோவை அழைத்து ஐநூறு ரூபாயைக் கொடுத்து வீட்டு அட்ரஸை சொல்லி அனுப்பி வைத்தார். கணவர் வீட்டில் அழையா விருந்தாளியாக இருக்கிறேன் தினம் தினம் அடி உதை வாங்குகிறேன் என்று யூகித்திருப்பார் போல ஆட்டோவில் ஏறி உட்கார்ந்ததும் பாத்து பத்ரம்மா என்று சொல்லி விடைகொடுத்தார்.

சரியாக ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு எனக்கு தெரிந்த ஏரியாவுக்குள் ஆட்டோ நுழைந்தது, அதன் பிறகு நானே வழி சொல்லி வீடு வந்தடைந்தேன்.

கோபம் :

கோபம் :

நான் வருவதைப் பார்த்த அவர்கள் யாருடைய முகத்திலும் ஈயாடவில்லை, காரணமேயில்லாமல் சதீஷ் என்னை அடிக்க ஆரம்பித்தான். உன்னைய கொல்லாம விடமாட்டேன் என்று சொல்லி அணிந்திருந்த ஷாலை இழுத்து கழுத்தைச் சுற்றி நெருக்கி கொல்ல முயன்றான்.

வீட்டிலிருந்துவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அறைக்குள் சென்று ஒதுங்கிக் கொண்டார்களே தவிர யாரும் என்னைக் காப்பாற்ற முன்வரவில்லை,எப்படி அதிலிருந்து தப்பித்தேன். அதன் பிறகு என் மீதான வெறுப்பு இன்னும் அதிகமானது.

இவ தான் என் பொண்டாட்டி :

இவ தான் என் பொண்டாட்டி :

இப்போது என்னை முழுதாக வீட்டை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டார்கள். முன்னறை,கிச்சன் மற்றும் பின்னால் இருக்கும் ஓப்பனில் தான் நான் இருக்க வேண்டும். பெட்ரூமுக்கு செல்லக்கூடாது.

ஒரு நாள் மாலையில் குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்றார்கள். வரச்சொல்லியும் சொல்லவில்லை, வருகிறாயா என்றும் கேட்கவில்லை, எல்லாரும் கிளம்பிச் சென்றார்கள். வரும் போது ஒரு பெண்ணுடன் வந்தவர் இவ தான் என் பொண்டாட்டி என்று அறிமுகப்படுத்தினார். சதீஷூக்கு ஏற்கனவே திருமணமாகியிருப்பது குறித்து அவளுக்கு தெரிந்திருக்கிறது ஆனாலும் அவள் எதுவும் அலட்டிக் கொண்டது போல தெரியவில்லை.

அம்மா இங்க என்னென்னமோ நடக்குதும்மா :

அம்மா இங்க என்னென்னமோ நடக்குதும்மா :

அதுவரையில் எந்த பெண்ணும் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்ள மாட்டாள், முதல் திருமணத்தை மறைத்து தான் இரண்டாம் திருமணம் பேசியிருப்பார்கள், நான் உயிருடன் இருக்கும் வரையில் விவாகரத்து கொடுக்கமாட்டேன். இவங்க கல்யாணம் நடக்காது என்று நம்பிக் கொண்டிருந்த என் நம்பிக்கை எல்லாமே அவளைப் பார்த்ததும் தூள் தூளானது.

ஏனோ அப்போது திடீரென்று அம்மா நியாபகம் வர வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டு லேண்ட் லைனிலிருந்து அம்மாவுக்கு தொடர்பு கொண்டேன். குரலைக் கேட்டதுமே அழுதுவிட்டார் அம்மா.....

அம்மா இங்க என்னென்னமோ நடக்குதும்மா ரொம்ப பயமாயிருக்கு, எவ்ளவோ போராடிப் பாத்துட்டேன் என்று நானும் அழுதேன். யாருக்கும் கேட்டுவிடக்கூடாது என்று சொல்லி மெதுவாகவும், பயந்து கொண்டு பேசியதும் அம்மா உணர்ந்திருப்பார் போல நாளைக்கே நானும் அப்பாவும் வரோ. நீ கவலப்படாத என்றார்.

வாழைப்பழம் :

வாழைப்பழம் :

ஓ.... இந்த கூத்தெல்லாம் எப்போயிருந்து அத்தையின் குரல் கேட்டு டக்கென போனை வைத்துவிட்டேன். இரு அவன் வரட்டும் எவ்ளோ நெஞ்சழுத்தம் இருந்தா உன் வீட்டுக்கு போன் பேசுவ?

வழக்கம் போல இரவு எல்லா வேலைகளை முடித்து விட்டு சாப்பிட எதாவது இருக்கிறதா என்று பார்த்தேன். எல்லாவற்றையும் துடைத்து தீர்த்து வைத்திருந்தார்கள். பிரிட்ஜில் இருந்த பாலைக்கூட நாய்க்கு ஊற்றியிருந்தார்கள். டேபிளில் ஒரேயொரு வாழைப்பழம் இருந்தது. மதியம் கீழே கொட்டுவதற்காக வைத்திருந்த புளித்துப் போன மாவில் தோசை சுட்டு அதனை யும் சாப்பிட முடியாமல் பாதி தோசை சாப்பிட்டதுடன் சரி, இரவாவது சாப்பிடலாம் என்றால் அதுவும் வழியில்லை..... நாளைக்கு அம்மா வந்ததும் இங்க நடக்குறது எல்லாத்தையும் சொல்லணும் என்று நினைத்துக் கொண்டு சொம்பு நிறைய தண்ணீரைக் குடித்தேன்.

சதித்திட்டம் :

சதித்திட்டம் :

வெராண்டாவில் பாயை விரித்து படுக்கும் வரையில் சதீஷ் வந்திருக்கவில்லை. எப்போதும் ஒன்பது மணிக்கெல்லாம் வந்துவிடுவாரே மணி பதினொன்றரை ஆகிவிட்டிருந்தது.

வா உள்ள வந்து படு.... என்று அழைத்தார் அத்தை....

என்ன இது திடீர் கரிசனம், போன் பேசியதைக் கேட்டதால் நிகழ்ந்த மாற்றமா.... என்று நினைத்துக் கொண்டே இல்லத்த பரவால்ல இங்கயே படுத்துக்குறேன் என்றேன். சொல்றேன்ல உள்ள போய் படு, என்று அதட்டினார். எழுந்து ஹாலில் பாயை விரித்தேன். உள்ள ரூம்ல போய் போடு. என்றைக்கும் இல்லாத வகையில் இன்று ஏன் பெட்ரூமில் போய் படுக்கச் சொல்கிறார் என்று புரியாமல் பார்க்க வலுக்கட்டாயமாக உள்ளே தள்ளிவிட்டார்.

உன் இடம் :

உன் இடம் :

பயம் தொற்றிக் கொண்டது. இவர்கள் என்னை எதோ செய்யப் போகிறார்கள்..... அறையைவிட்டு வெளியே செல்ல முயற்சிக்க வலுக்கட்டாயமாக என்னை உள்ளே இழுத்து தள்ளினார்.

அங்க கழுவி கோலம் போடணும்,ஹால்ல இருக்குற சாமி செல்ஃப் வந்து மாத்துறேன்னு சதீஷ் சொன்னான் அதான் இங்க படுக்க சொன்னேன், ஒரு நாள் தான் நாளைலயிருந்து நீ உன் இடத்துலயே படுத்துக்கம்மா..... சும்மா முறைக்காத என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

படபடப்பு சற்று குறைந்தது.

 கொலை :

கொலை :

எப்போதும் வேலை செய்த களைப்பில் படுத்ததுமே தூக்கம் வந்துவிடும் இன்று ஏனோ தூக்கமே வரவில்லை, வெகு நேரம் கழித்து லேசாக கண்ணயர்ந்தேன். சதீஷின் பைக் சத்தம், தூக்கத்திலும் எழுந்து கீழே படுத்துக் கொள்ளலாமா என்று நினைத்தேன். வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அறையின் கதவு திறக்கப்பட்டது ஆனால் உள்ளே வரவில்லை வெளியிலிருந்து பார்த்துவிட்டு கதவை மூடிவிட்டான் போல.

சரி, எதுவும் சொல்லவில்லை அவன் வெளியே ஹாலில் படுத்துக் கொள்வான் போல என்று நினைத்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தேன்.

இரவு இரண்டு மணி :

இரவு இரண்டு மணி :

நடுராத்திரி இரண்டு மணிக்கு என் அறையில் மஞ்சள் விளக்கை போட்டு கணவர் மாமியார் மாமனார் எதையோ நோண்டிக் கொண்டிருந்தார்கள். தூக்கத்தில் என்னால் சுதாரிக்க முடியவில்லை அவர்களுக்குள் குசுகுசுவென்று எதையோ பேசிக் கொண்டார்கள்.

நிற்பது தெரிந்தது ஆனால் முழுதாக என்னால் கவனித்து சுதாரிக்க முடியவில்லை. நான் முழிப்பது தெரிந்ததுமே கணவர் பிடித்திருந்த ஒன்றை கட்டிலில் போட்டார். மின்னல் போல எதோ நீண்டது. அடுத்த கணம் ஷாக் அடித்து வெட்டி வெட்டி துடிக்க ஆரம்பித்தேன். அம்ம்.... அ அ அ..... ஒரு வார்த்தையும் முழுதாக வரவில்லை முழுதாக இரண்டு நிமிடம் கடந்து துடித்துக் கொண்டிருந்தேன்.

கரண்ட் கட் :

கரண்ட் கட் :

அவ்வளவு தான் நான் இறந்தே விட்டேன் என்றே நினைத்துக் கொண்டிருக்க திடிரென்று ஷாக் அடிப்பது நின்றது, நான் மயக்கமானேன். நான் இறந்து விட்டேன் என்று நினைத்து அவரவர் இடத்தை காலி செய்தார்கள்.

மறுநாள் அம்மா வந்த போது தூங்கிக் கொண்டிருப்பதாக அறையை காட்டினார்கள். அம்மாவும் உறக்கத்தில் எழுப்ப வேண்டாம் என்று வெகு நேரம் காத்திருந்து மதியம் நெருங்கும் வேலையில் இவ்ளோ நேரம் எல்லாம் அவ தூங்கவே மாட்டாளே என்று அறைக்குள் நுழைந்தார். மூவரும் பதற்றத்துடன் வாசலில் நின்றிருந்தார்கள்.

ஏம்ம்மா.... உடம்புக்கு என்னாச்சு ஏன் என்று சொல்லிக் கொண்டே கையைத் தொட, அலறி கத்தினார் அம்மா. அப்பா வந்து என் முகத்தைப் பார்த்து நெஞ்சிலும் தலையிலும் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்.

அறை வாசலில் நின்றிருந்த மூவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: my story
English summary

Husband Electrocuted His Wife

Husband Electrocuted His Wife
Story first published: Saturday, February 17, 2018, 17:29 [IST]
Desktop Bottom Promotion