For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செக்ஸ் இல்லாமல் தம்பதிகளால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா?... என்ன சொல்றாங்கன்னு பாருங்க...

சந்தோஷமான உறவு என்பது ஒரு ஆசீர்வாதம், எனவே நீங்கள் அதை கவனித்து, நேரம் ஒதுக்கி, அக்கறையுடன் பேண வேண்டும்.

|

சந்தோஷமான உறவு என்பது ஒரு ஆசீர்வாதம், எனவே நீங்கள் அதை கவனித்து, நேரம் ஒதுக்கி, அக்கறையுடன் பேண வேண்டும். மகிழ்ச்சியான தம்பதிகள் தங்கள் உறவை பராமரிக்கவும் வளர்த்துக் கொள்வதன் மூலம் சந்தோச மலர்களை பெறலாம்.

relationship

அவ்விருவரின் இணைப்பு தினமும் கவனித்துக் கொள்ளப்பட வேண்டும் மற்றும் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது மோசமான பழக்கங்களை நீக்குவது முக்கியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உறவுகள்

உறவுகள்

பின்வரும் பழக்கங்கள் காலப்போக்கில் அடிக்கடி தோன்றும் மற்றும் அவர்களது உறவை மிகவும் சேதமடையச் செய்யலாம்.

• சோர்வு

• அவநம்பிக்கை

• இடைவெளி

• ஆர்வமிழத்தல்

• ஆதரவில்லாமை

தவிர்க்க வேண்டிய 8 பழக்கங்கள்:

தவிர்க்க வேண்டிய 8 பழக்கங்கள்:

நீங்கள் உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், கீழ்கண்ட பழக்கங்களை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வது என்பது முக்கியம், அதன் மூலமே அவற்றைத் தவிர்க்கலாம்.

துணையின் குணாதிசயங்களை மாற்ற முயலுதல்

துணையின் குணாதிசயங்களை மாற்ற முயலுதல்

ஒரு தம்பதிகள் தங்களுக்குள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. உண்மையில், கருத்து வேறுபாடுகள் என்பது மிகச் சாதாரணமானது.

ஒரு உணர்வுப்பூர்வாமான உறவின் வெற்றி என்பது, அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வதிலும், மதிப்பதிலும், இருவருக்குமிடையே சில விருப்பு வெறுப்பு வேறுபாடுகள் இருக்குமென புரிந்து கொள்வதிலும் அடங்கியுள்ளது.

ஒரு நபர் அவர்களது துணையின் வழியை ஏற்க மறுத்தால், அவர்களை மாற்றிக்கொள்ள தொடர்ந்து முயற்சி செய்கையில், அவர்கள் அதை விரும்புவதில்லை அல்லது இருவரிடையே சரியான புரிதல் இல்லை என்று அர்த்தம்.

இருவரும் ஒன்றாக நேரத்தை செலவு செய்யாதிருத்தல்

இருவரும் ஒன்றாக நேரத்தை செலவு செய்யாதிருத்தல்

தினசரி நடவடிக்கைகள், பொறுப்புகள் மற்றும் மன அழுத்தம் இருந்தபோதிலும், பொதுவான இடத்தைப் பெறவது நல்லது. சந்தோஷமான தம்பதிகள் இந்த இடைவெளியைக் கவனித்துக்கொள்கிறார்கள், அதனால் அவர்களது நெருங்கிய கணங்களை சேர்ந்து அனுபவிக்கிறார்கள்.

நேரம் அல்லது இணைப்பு இல்லாததால் விஷயங்களை கடினமாக்குவதுடன், அவர்களுக்கு இடையில் தூரத்தை உருவாக்கவும் முடியும்.

குற்றம் காண்கிற மனப்பான்மை கொண்டிருத்தல்

குற்றம் காண்கிற மனப்பான்மை கொண்டிருத்தல்

எப்பொழுதும் தற்காப்புடன் இருப்பது, எப்போதும் உங்கள் மூளையில் உதிக்கும் முதல் விஷயத்தை கூறுதல், விமர்சனம் செய்வது அல்லது எப்பொழுதும் உங்கள் அபிப்பிராயத்தை தெரிவிப்பது, போன்ற விஷயங்கள் மற்றவரை மிகவும் எரிச்சல் படுத்தலாம்.

அனைவருக்கும் குறைபாடுகள் உள்ளன மற்றும் அதன் மீதான நிலையான விமர்சனம் சுய மரியாதையை குறைக்கிறது. இதுபோன்ற செயல் ஒருவரையொருவர் தூரமாக்கவோ அல்லது உறவை விட்டு வெளியேராவோ வழி செய்யக்கூடும்.

வழக்கமான நடைமுறை

வழக்கமான நடைமுறை

வழக்கமான நடைமுறை பழக்கத்தை விலக்குவது என்பது ஒரு கடினமான பழக்கமாகும். இருந்தபோதிலும், வாழ்க்கை ஒரு தொடர்ச்சியான சாகசமில்லை. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அது தவிர்க்க முடியாதது. எனினும், தம்பதிகள் அவர்களின் வழக்கமான உறவு சலிப்பை ஏற்படுத்துவதை அனுமதிக்க கூடாது.

பொய்களும் ஏமாற்றங்களும்

பொய்களும் ஏமாற்றங்களும்

உலகில் உள்ள மக்கள் பொய் கூறுவதால், உறவை நச்சாக்கவும் முடியும் இதையொட்டி மக்களுக்கிடையேயான நம்பிக்கை அழிக்கிறது.

நம்பிக்கையை அழித்தல் மற்றும் காட்டிக் கொடுத்தல் என்பது இரண்டு பேருக்கு இடையேயான அன்பை முழுமையாக அழிக்க முடியும். இந்த வகையான அனுபவங்களின் காரணமாக ஒருவர் மற்றொருவர் அதன் பின்னும் நம்புவது மிகவும் கடினம்.

ஆணவ மனப்பான்மை

ஆணவ மனப்பான்மை

சந்தோஷமான தம்பதிகள் தங்கள் அன்றாட வாழ்வையும், எதிர்காலத்தையும் பாதிக்கும் முடிவுகளை பகிர்ந்துகொள்கிறார்கள்.

மற்ற நபரின் இலக்குகள் அல்லது கனவுகள் பற்றி நினைத்துப் பார்க்காமல் சுயாதீனமாக இது போன்ற தீர்மானங்களை எடுக்கிறார்கள் என்றால் அங்கே ஆணவம் தலைக்கத்துவங்கும் மற்றும் உறவு நீடிக்குமா என்பது சந்தேகமே.

பிரச்சனைகளுக்கு தீர்வு காணாதிருத்தல்

பிரச்சனைகளுக்கு தீர்வு காணாதிருத்தல்

எல்லா உறவுகளும் வேறு. எதுவும் சரியானது அல்ல. எப்போதும் கருத்து வேறுபாடுகள், ஏமாற்றங்கள் அல்லது சோகமான நேரங்கள் இருக்கின்றன. இருப்பினும், மிகவும் அழிவுகரமான விஷயம் என்பது, உங்கள் பிரச்சினைகளை புறக்கணித்து, அமைதியாக இருப்பது, ஒன்றும் செய்யாமல், சிக்கலைத் தீர்க்காமல் தவறிவிடுவதேயாகும்.

ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாதிருந்தால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. உண்மையில், அது இன்னும் பிரச்சனையை மோசமானதாகிவிடும், மேலும் தவறான புரிந்துணர்வுகளால் ஒரு முட்டுக்கட்டை உருவாக்கும்.

ஒரு நிலையான மற்றும் முதிர்ச்சியுள்ள தம்பதிகள் நேர்மையான தகவல் தொடர்புகளைத் தக்க வைத்துக்கொள்வதோடு, எந்தவொரு பிரச்சினையையும் தீர்ப்பதற்கு அனைத்தையும் முயற்சி செய்கிறார்கள்.

செக்ஸ் இல்லாமல் இருத்தல்

செக்ஸ் இல்லாமல் இருத்தல்

ஒரு ஜோடி நீண்டகாலத்திற்கு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதில் செக்ஸ் உறவு முக்கியம். இதன் மூலம், அவர்களின் பாலியல் உறவு திருப்திகரமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். செக்ஸ், உறவை வலுப்படுத்த உதவுகிறது, ஆனால் அன்றாட வாழ்க்கை அவர்களுக்கு சோர்வை ஏற்படுத்துவதால் பெரும்பாலும் ஜோடிகளே அதை விலக்குகின்றனர். பல வருடங்களாக, பாலியல் உறவுகள் உருமாறி வந்துள்ளது, ஆனால் அந்த உறவை உயிருடன் வைத்திருப்பதுடன், அந்த அத்தியாவசிய தருணங்களை பகிர்ந்து கொள்வதும் அடிப்படையானது.

இறுதியாக, உறவு எப்போதுமே சிக்கலானது மற்றும் அதற்கு நிலையான கவனம் தேவை.எனினும், நீங்கள் இந்த பழக்கங்களை தவிர்ப்பதினால், நீங்கள் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான இணைப்புகளை பராமரிப்பதை உறுதிசெய்து, துன்பங்களையும் தவறான எண்ணங்களையும் தடுக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Habits that Happy Couples Should Avoid at All Costs

Happy couples should maintain and nurture their relationship so that it can flower.
Story first published: Thursday, May 24, 2018, 16:22 [IST]
Desktop Bottom Promotion