For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  முதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்...

  |

  முதலிரவு இந்த வார்த்தைக்கே ஒரு தனி கிக் இருக்கிறது. வயசு பையங்க முதல் கிழம் கட்டை வரை இந்த வார்த்தையை கேட்டவுடன் கிளுகிளுப்பாகி விடுவாங்க.

  relationship

  அதுவும் புதிதாக திருமணமாகி இருக்கும் ஜோடி என்றால் இன்னும் சொல்லவே வேண்டாம். அவர்கள் ஒருவித பயத்துடன் ஆனால் ஆர்வத்துடன், அந்த அரங்கேற்றத்திற்காக காத்திருந்த தருணம் அது. இந்த முதல் இரவை இன்னும் சிறப்பாக மறக்க முடியாத ஒரு அனுபவமாக மாற்ற மேலே படிங்க.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  முதலிரவு

  முதலிரவு

  முதலிரவு என்பது எல்லோருடைய வாழ்க்கையிலுமே ஒரு மறக்க முடியாத விஷயம் தான். ஏனென்றால் அதுதான், ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்துக்கான துவக்கமாக இருக்கிறது. அப்படிப்பட்ட முதலிரவு மகிழ்ச்சியாகவும் கொண்டாட்டங்கள் நிறைந்ததாகவும், தான் தன்னுடைய வாழ்நாளில் எப்போது அதைப்பற்றி நினைத்தாலும் மனதுக்குள் குதூகலம் பொங்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஆசையாகவும் இருக்கும். அப்படி ஒவ்வொருவரின் முதலிரவும் மறக்க முடியாத இனிமையான இரவாக மாற வேண்டும் என்றால் அதற்கென சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அப்படி தான் செய்யும் விஷயங்கள் தன்னுடைய வாழ்க்கைத் துணையை இன்பத்தில் ஆழ்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் குதூகலமும் இருந்தால் நிச்சயம் உங்களுடைய முதலிரவு மறக்க முடியாததாக தான் இருக்கும்.

  பரஸ்பரம் பேசி கொள்வது

  பரஸ்பரம் பேசி கொள்வது

  ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நன்றாக தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். இருவரும் மனம் விட்டு ,கொஞ்ச நேரம் பேசிக் கொள்ளுங்கள். கருத்துகளை பராமரி கொள்ளுங்கள். அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி. இது ஒரு அன்பார்ந்த பந்தத்தை ஏற்படுத்தும். ஒருவருக்கு ஒருவர் நன்றி பாராட்டுங்கள்.

  பொக்கிஷத்தை தேடு

  பொக்கிஷத்தை தேடு

  இது மிகவும் சுவரசியமான விளையாட்டு. உங்கள் முதலிரவு அறையில் , சில சாக்லேட்கள், சில சிடிக்கள், சில கிளுகிளுப்பான பொருட்களை மறைத்து வைத்து விடுங்கள். அவற்றை உங்கள் துணை தேடி கண்டுபிடிக்க சொல்லுங்கள். க்ளு கொடுங்கள். ஞாபகம் இருக்கட்டும், தேடி பிடிக்க வேண்டிய பொருட்களில், நீங்களும் ஒன்றாகி விட ஒரே அதகளம் தான்.

  காதல் பாடல்

  காதல் பாடல்

  மெதுவா.. மெதுவா... ஒரு காதல் பாட்டு .....ஆமாம், அவசரம் அவசரமாக ஆரம்பிக்கக்கூடாது. மெதுவா..அப்படியே ரொமாண்டிகா கட்டி புடிச்சிகிறது, அப்புறம் முத்தம் கொடுக்கறதுனு.. ஆனா முத்தம் மட்டும் சும்மா நச் நச்னு இருக்கணும்.. அப்புறம் ஒருவருக்கு ஒருவர் சாக்லெட் அல்லது எதாவது ஸ்விட் ஊட்டுவிடுவது. ஏனென்றால் வாழ் நாள் முழுக்க நீங்க எப்படி அன்பா இருப்பிங்கன்னு முதல் முதலா காட்டுகிற தருணம் இல்லையா!!!

  குளியல் டப்

  குளியல் டப்

  அந்த மிகச்சிறப்பான ராத்திரிக்கு இது செம ஐடியா... இரண்டு பேரும் சேர்ந்து ஒரே பாத் டப்பில் குளிக்கிறது..அந்த பாத் டப் நீரில் அப்படியே ரோஜா இதழ்களை தூவுவது, மசாஜ் பண்ணி விட ஆயில், அப்புறம் இவை அனைத்தும் மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் என்றால் மூடுக்கு சொல்லவா வேண்டும். அந்த குளியலை வாழ்க்கையில் மறக்க முடியுமா!!!

  ரூமின் சூழல்

  ரூமின் சூழல்

  இது மிக முக்கியம். அப்படியே பெர்ஃயும் வாசனை நிரம்பி இருக்க, சத்தம் கம்மியா ஒரு ரொமாண்டிக் பாட்டு ஒலிக்க, கவர்ச்சிஉடையை அணிந்து இடையில் சாக்லெட் சாப்பிட்டுகிட்டே... அடடடடா.. அந்த நினைவை அப்படியே வாழ் நாள் முழுக்க எப்போ நினைச்சாலும் அந்த மூடுக்கு கொண்டு செல்லும்படி இருக்கனும்...!!!

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Five exciting ideas to make first night memorable

  First night is the most awaited time of every newly wed couple. They have many fantasies as well as fear too for this special night.
  Story first published: Tuesday, June 12, 2018, 13:50 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more