நிஜ வாழ்வில் ஸ்ரீதேவி எதிர்கொண்ட புகுந்த வீடு கொடுமைகள் - இரகசியங்கள் உடைத்த தாய் மாமா!

Posted By: Staff
Subscribe to Boldsky
ஸ்ரீதேவி அனுபவித்த புகுந்த வீட்டு கொடுமைகள்- வீடியோ

ஸ்ரீதேவியின் மரணம் அவரது குடும்பத்தையும், அவரது கோடானகோடி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் பலரால் ஸ்ரீதேவி இறந்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை. 54 வயதில் உறவினர் திருமண விழாவுக்கு துபாய் சென்ற ஸ்ரீதேவி ஹோட்டல் அறை குளியல் தொட்டியில் நீரில் மூழ்கி மரணம் அடைந்தார்.

இவரது மரணம் மர்மமானது என சந்தேகங்கள் எழுந்த நேரத்தில் தான் சுப்ரமணிய சுவாமி ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டுள்ளார் என பேட்டி அளித்தார். இப்படியாக ஸ்ரீதேவி மரணம் குறித்து பல சர்ச்சைகள் கிளம்ப. ஸ்ரீதேவி போனி கபூருடனான இல்லற வாழ்வில் சந்தோஷமாக இருக்கவில்லை என்று அவரது மாமா தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஒரு சராசரி மருமகள் எத்தகைய சிரமங்களை புகுந்த வீட்டில் கடந்து வருவாளோ, பெரும் நடிகையாக இருந்த போதிலும் கூட, அத்தகைய சிரமங்கள் அனைத்தையும் கடந்து வந்திருக்கிறார் ஸ்ரீதேவி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துயரம் மிகுந்த!

துயரம் மிகுந்த!

போனி கபூருடன் இரண்டாம் திருமணம் செய்துக் கொன்ட ஸ்ரீதேவியின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவில்லை. மிகவும் துயரம் நிறைந்ததாகவே அமைந்திருந்தது. போனியின் தயார் ஸ்ரீதேவியை விரும்பவில்லை. மேலும், போனி-ஸ்ரீ திருமணத்தையும் அவர் மகிழ்ச்சியாக ஏற்கவில்லை என்று ஸ்ரீதேவியின் மாமா வேணுகோபால் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

மிடில்-கிளாஸ்!

மிடில்-கிளாஸ்!

சிவகாசியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் ஸ்ரீதேவி. தனது நடிப்பின் திறமையால் இந்தியா முழுவதும் பல மொழி படங்களில் முதன்மை நாயகியாக வளம் வந்துக் கொண்டிருந்தார்.

இந்தி சினிமாவில் பெரும் நட்சத்திரமாக உருவான பிறகு தான் இவர் போனி கபூர் எனும் இந்தி பட தயாரிப்பாளரை திருமணம் செய்துக் கொண்டார்.

பண சிக்கல்!

பண சிக்கல்!

ஸ்ரீதேவியை திருமணம் செய்துக் கொண்ட போது போனி கபூரின் பொருளாதார நிலை அவ்வளவு சிறப்பாக இல்லை. அவர் தயாரித்த சில படங்கள் லாபகரமாக அமையவில்லை. அதன் காரணத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஸ்ரீதேவி உழைத்து வாங்கிய சொத்துக்களை விற்று ஈடு செய்தனர்.

வலி!

வலி!

தான் சிரமப்பட்டு சம்பாதித்த சொத்துக்கள் போனி கபூரின் பொருளாதார சிக்கல்களை சரிசெய்ய விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட ஸ்ரீதேவி அந்த காலத்தில் பலத்த மனச்சுமைக்கு ஆளானார்.

அந்த தருணத்தில் போனி நாள் பொழுதில் வெளிவரவே இல்லை, மிக கடுமையான நெருக்கடியில் தவித்து வந்தார்.

வங்கிக்கடன்கள்!

வங்கிக்கடன்கள்!

நஷ்டம் காரணமாக வங்கி கடன் நிலுவையில் இருந்தன. அதையும் சீர் செய்ய தனது பல சொத்துக்களை விற்றார் ஸ்ரீதேவி. அதன் பிறகே மீண்டும் தான் நடிக்க முன்வந்தார் என்று இவரது மாமா வேணுகோபால் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

கிட்டத்தட்ட அந்த கட்டத்தில் ஸ்ரீதேவி கத்தியின் மேல் நடப்பது போன்ற சூழலில் வாழ்ந்து வந்ததாக அவர் கூறியிருந்தார்.

பிளாஸ்டிக் சர்ஜரி!

பிளாஸ்டிக் சர்ஜரி!

ஸ்ரீதேவி அமெரிக்கா சென்று மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்ள காரணமாக அமைந்ததும் அதுதான். அவர் தான் அந்த சமயத்தில் அழகாக இருக்க வேண்டும் என்று கருதினார். இது, பொதுவாக ஒருமுறை போன் கால் செய்து பேசிய போது அறிய வந்த செய்தி சென்று வேணுகோபால் கூறியிருக்கிறார்.

தவறான சிகிச்சை..

தவறான சிகிச்சை..

ஸ்ரீதேவியின் அம்மாவுக்கு அமெரிக்க மருத்துவர்கள் தவறாக மூளை அறுவை சிகிச்சை செய்தனர். இதன் காரணமாக அவரது வாழ்க்கை முடங்கி போனது. அவர் உணர்வுகள் இழந்து வெறும் ஜடம் போல இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதன் பிறகு அந்த மருத்துவமனையின் மீது வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு பெறப்பட்டது.

பங்கீடு!

பங்கீடு!

இந்த சமயத்தில் தான் ஸ்ரீதேவி மற்றும் அவரது சகோதரி ஸ்ரீலதா இருவர் மத்தியில் பண பங்கீட்டில் வேறுபாடு நிலவியது என்றும், பெரும் தொகையை தனது சகோதரி ஸ்ரீலதாவிற்கு விட்டுக் கொடுத்தார் ஸ்ரீதேவி என்றும் வேணுகோபால் பேட்டியில் கூறியிருந்தார்.

அர்ஜுன் கபூர்!

அர்ஜுன் கபூர்!

ஸ்ரீதேவி தனது உறவினர்கள் சிலரிடம் அர்ஜுன் கபூர் (போனி கபூரின் முதல் மனைவியின் மகன்) மூலம் சில இடைஞ்சல்கள் இருப்பது போலவும், அவர் தன் மீது கோபமாக இருக்கிறார் என்பது போலவும் கூறியிருந்தார் என்று கூறிய வேணுகோபால் அதுகுறித்து எந்தளவு உண்மை என்று தாம் அறியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

எதிர்காலம்!

எதிர்காலம்!

தனது மகள்கள் ஜான்வி மற்றும் குஷி இருவரின் எதிர்காலம் குறித்து ஸ்ரீதேவி பெரும் வருத்தத்தில் இருந்தார். மேலும், போனியின் உடல்நலம் சரியில்லை என்பதும் அவரது மனதில் ரணமாக இருந்த வந்தது. இப்படியான சூழலில் தான் ஸ்ரீதேவியின் திடீர் மரணம் நிகழ்ந்திருக்கிறது.

உண்மையா?

உண்மையா?

வேணுகோபால் அந்த தெலுங்கு சேனலுக்கு கொடுத்த பேட்டியில் கூறிய சம்பவங்கள், நிகழ்வுகள் எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், திருமணத்திற்கு பிறகும், தனது கடைசி நாட்களிலும் ஸ்ரீதேவி மிகுந்த மன வருத்தத்தில் இருந்திருக்கிறார் என்பதை மட்டும் அறிய முடிகிறது.

அண்ணன்!

அண்ணன்!

ஸ்ரீதேவியின் மரணத்திற்கு முன் ஸ்ரீதேவி மற்றும் அவரது மகள்கள் மீது மனஸ்தாபம் கொண்டிருந்த அர்ஜுன் கபூர். இப்போது ஜான்வி மற்றும் குஷியை தனது சொந்த தங்கையை போல கவனித்து கொள்கிறார். முன் இருந்த கோபம் இப்போது நீங்கிவிட்டது என்றும் அவரது சுற்றத்தினர் கூறுகிறார்கள்.

அவர்களுக்கும் வேண்டாம்...

அவர்களுக்கும் வேண்டாம்...

அர்ஜுன் கபூர் தனது அம்மாவின் மரணத்திற்கு பிறகு, தனி ஆளாக இருந்து தனது தங்கையை கவனித்து வந்தார். அப்போது அவருக்கு உதவியாக யாரும் இல்லை. இதே நிலை ஜான்வி மற்றும் குஷிக்கு வந்துவிட கூடாது. அவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற பாசத்தால் தான் அர்ஜுன் இப்போது இணைத்துள்ளார் என்றும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Even Sridevi Came across Like an Ordinary Daughter in Law Situations!

Even Sridevi Came across Like an Ordinary Daughter in Law Situations!