For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனைவி, முன்னாள் காதலி இருவருடனும் உறவில் இருக்கும் ஆணை எப்படி கண்டுபிடிப்பது?

நடத்தையில் மாற்றம் காணப்பட்டாலோ உங்கள் துணை தன்னுடைய முன்னால் காதலில் இருக்க வாய்ப்புள்ளது. இந்த பிரச்சினை பல்வேறு வடிவத்தில் உங்கள் இருவருக்கிடையே ஏற்படலாம்.

|

ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத ஒரு கடந்த காலம் இருக்கும். அதிலும் காதல் உறவில் கண்டிப்பாக அதன் நினைவுகளை நம்மால் மறக்க முடியாது எனலாம். இந்த கடந்த காலத்தை தற்போதைய உறவுக்குள் நீங்கள் கொண்டு வந்தால் கண்டிப்பாக உங்கள் உறவில் நீங்கள் சிக்கல்களை சந்திக்கத் தான் நேரிடும்.

relationship

இன்னமும் உங்கள் துணை உங்களிடம் ஆரோக்கியமான உறவை மேற்கொள்ளவில்லை என்றாலோ, அவர் நடத்தையில் மாற்றம் காணப்பட்டாலோ உங்கள் துணை தன்னுடைய முன்னால் காதலில் இருக்க வாய்ப்புள்ளது. இந்த பிரச்சினை பல்வேறு வடிவத்தில் உங்கள் இருவருக்கிடையே ஏற்படலாம். ஒப்பீடு செய்தல், விமர்சனம், உறவில் கொந்தளிப்பு போன்ற உணர்ச்சிகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள்

அறிகுறிகள்

உங்கள் துணை முன்னாள் காதலில் இருப்பதற்கான அறிகுறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ஆரோக்கியமான உறவில் இருக்கும் தவறான நடத்தைக்கு இன்றே முற்றுப்புள்ளி வையுங்கள். உங்கள் உறவை சரி செய்ய கண்டிப்பாக நீங்கள் உங்கள் துணையுடன் அமர்ந்து பேச வேண்டும். இது தான் சரியான நேரம்.

முரட்டுத்தனமாக நடப்பது

முரட்டுத்தனமாக நடப்பது

இந்த நடத்தை உங்கள் துணை இன்னமும் முன்னாள் காதலில் தொங்கிக் கொண்டு இருப்பதற்கான அறிகுறியாகும். இந்த பிரச்சினை அப்படியே வளர்ந்து முரட்டுதனம், எரிச்சல், விரக்தி மற்றும் மன முடைதல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

உங்களை முன்னாள் காதலருடன் ஒப்பிடுவதற்கான வாய்ப்புகளை தேடி உங்கள் மீது குற்றம் சுமத்துவார்கள். இது கண்டிப்பாக உங்கள் உறவை பாழ் கிணற்றில் தள்ளி விடும். இதை தவிர்க்க உடனடியாக உங்கள் துணையுடன் அமர்ந்து கலந்துரையாடலில் ஈடுபட்டு அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொள்ளுங்கள். இது உங்கள் உறவு கடைசி நிலைக்கு செல்வதை தடுக்கும்.

குற்றம் சுமத்துதல்

குற்றம் சுமத்துதல்

உங்கள் துணை தங்களுடைய முன்னாள் காதல் பற்றி பாராட்டி உங்களிடம் அடிக்கடி பேசுவது உங்களை ஒப்பீடு செய்வதற்கான அர்த்தமாகும். இது அவர்கள் கடந்த காலத்தில் வாழ்ந்து வருவதை வெளிச்சப்படுத்துகிறது. இது உங்கள் உறவை ஒரு மோசமான நிலைக்கு தள்ளி விடும். நீங்கள் அவர்களுடைய முன்னாள் காதலர் /காதலி போல் இருக்க வேண்டும் என்பதை உங்களிடம் நேரடியாக கூற முடியாது என்பதால் அதை மறைமுகமாக கூறத் தொடங்குவார்கள்.

சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்கள்

உங்கள் துணை பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் இன்னமும் தங்கள் முன்னாள் காதலர் /காதலியை நெருக்கமாக பின்பற்றி வந்தால் இன்னமும் அவர்கள் அந்த உறவில் வாழ்கிறார்கள் என்று அர்த்தம். தங்கள் முன்னாள் காதலை ஒரு கவலையாக டேக் செய்வது, தங்கள் நினைவுகளை பகிர்வது போன்ற காரியங்களை சமூக வலைத்தளங்களில் செய்து வருவது அவர்களின் முன்னாள் உணர்வுகளை உணர்த்தும் அறிகுறியாகும்.

ஒரு சிறிய உரையாடல் பிரச்சினைக்குரியது அல்ல. ஆனால் தொடர்ச்சியான உரையாடல் அவர்கள் இன்னமும் முன்னாள் காதலில் இருப்பதை உணர்த்துகிறது. மறுபடியும் இது குறித்து உங்கள் துணையிடம் பேசுங்கள். உங்கள் இருவருக்கிடையே உள்ள சுமூகமான பேச்சு வார்த்தை மட்டுமே இதற்கு தீர்வாக அமையும். உங்கள் உறவில் சில எல்லைகளை அமைப்பதும் அவசியம்.

பேசுவதை தவிர்த்தல்

பேசுவதை தவிர்த்தல்

உங்கள் துணை இன்னமும் தங்கள் முன்னாள் காதலில் இருந்தால் சில விஷயங்களை பற்றி பேச மாட்டார்கள். இது அவர்களின் முன்னாளில் உள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகளையும், தங்களுடைய ஆளுமையின் தாக்கத்தையும் வெளிப்படுத்தும் என்று அதை தவிர்ப்பார்கள். எனவே தங்களுடைய தற்காப்புக்காக சில தலைப்பை பற்றி அவர்கள் பேச மாட்டார்கள். இது உங்கள் உறவில் சில எல்லைகளுக்கு வழி வகுக்கும். ஆனால் இதுவே உங்கள் உறவிற்கு எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடாது.

நேரான ஒப்பீடு

நேரான ஒப்பீடு

உங்கள் துணையுடன் சூடான விவாதங்கள் நடக்கும் போது சில நேரான ஓப்பீடுகளை நீங்கள் காணலாம். "என் முன்னாள் காதலர் /காதலி இந்த மாதிரி செய்ய மாட்டார்" போன்ற வார்த்தைகளை நீங்கள் கேட்க நேரும். இது அவர்கள் இன்னமும் தங்கள் முன்னாள் காதலை விரும்புவதை வெளிப்படுத்தும் அறிகுறியாகும். உங்கள் இருவருக்கிடையே இது குறித்து வாக்கு வாதங்கள் வெடித்தாலும் மறந்து விடாதீர்கள் உங்கள் உறவு கை நழுவி போய்க் கொண்டு இருக்கிறது என்பதை .

காதலர் பெயரைக் கேட்டால்

காதலர் பெயரைக் கேட்டால்

சில சமயம் நீங்கள் அவர்களின் முன்னாள் காதலர் /காதலி பெயரை கூறினாலோ உடனடியாக உரையாடலில் இருந்து கவனம் விலகுவது, சங்கடத்தில் ஆழ்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

விரும்பத்தகாத நினைவுகள் இதை நான் சொல்ல விரும்பவில்லை போன்ற உணர்வுகள் இயற்கையானது தான். ஆனால் இது குறித்து உங்கள் இருவருக்கிடையே ஏற்படும் வாக்கு வாதங்கள் சில சமயங்களில் சங்கடத்தை ஏற்படுத்தி விடும்.

நினைவூட்டுகிறீர்கள்

நினைவூட்டுகிறீர்கள்

உறவில் ஒப்பீடு என்பது அழிவிற்கு இழுத்துச் செல்லும் ஆயுதம். முதலில் அது ரசிக்கும் படி இருந்தாலும் தொடர்ச்சியாக உங்களை அவர்களின் முன்னாள் காதலருடன் ஒப்பிடுவது பிரச்சினைக்கு வழி வகுக்கும். இந்த மாதிரியான ஒப்பீடு மட்டுமே ஏற்பட்டுக் கொண்டு இருந்தால் அவர்கள் புது உறவிற்கு தயாராக இல்லை என்பதை இது உணர்த்துகிறது.

உணர்வுகளை எதிர்நோக்குதல்

உணர்வுகளை எதிர்நோக்குதல்

உங்களின் மோசமான தொடர்பு, ஒடுக்கப்பட்ட உணர்ச்சிகள் இவையனைத்தும் உங்கள் துணையின் முந்தைய உறவை மனதில் வைத்து தான் வெளிப்படுத்துகிறீர்கள் என்று நினைப்பார்கள். உங்களையும் முன்னாள் துணையையும் ஒப்பிட நிறைய காரணங்கள் இருக்கின்றன. மேலும் உங்கள் துணை விடாப்பிடியாக முன்னாள் காதலில் இருப்பது உங்களிடையே எதிர்வினை தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அவர்கள் கடந்த காலத்தோடு விரக்தியடைந்து, கடந்தகால உறவுகளிலிருந்து தீர்க்கப்படாத சிக்கல்களைக் கொண்டுள்ளனர் என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே உங்கள் இருவருக்கிடையே ஒரு ஆரோக்கியமான எல்லையை அமைத்திடுங்கள். இது உங்களுக்கு இடையே உள்ள உறவை எந்த பிரச்சினையும் இல்லாமல் நீடிக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 signs that your partner is still in love with their ex

Sometimes people jump into a new relationship even without realising that they aren’t yet over their ex-partner.
Desktop Bottom Promotion