செக்ஸிற்கான லைசன்ஸா திருமணம்? இந்திய பெண்களின் மனதில் புதைந்திருக்கும் ரணங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இந்தியாவில் காலம், காலமாக தொடர்ந்து வரும் பழக்கம் ஒன்று இருக்கிறது. திருமணத்திற்கு முன் பெண் கற்புடன் இருக்க வேண்டும். காதல் கூட தேச துரோக குற்றமாக காணும் எவ்வளவோ ஊர்கள் இன்னும் இந்தியாவில் சுவாசித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

தன்னை முழுவதும் அறிந்த, புரிந்து நடந்துக் கொள்ளும் காதலிக்கும் நபருடன் திருமணதிற்கு முன்னர் வைத்துக் கொண்டால் செக்ஸ் ஒரு பாவ செயல்.

ஆனால், திருமணமான 24 மணி நேரத்திற்குள் யார், எவன் என தெரியாத ஒருவருடன் வாழ்நாள் முழுக்க பாதுகாத்து வந்த கற்பை கேட்பாரற்று கொடுத்துவிட வேண்டும்.

Why Is Love Making Before Marriage Considered So Immoral and Wrong in India?

செக்ஸிற்கான லைசன்ஸா திருமணம்? திருமணம் செய்துக் கொண்டால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்பதை எந்த பார்வையில், எந்த கோணத்தில் பார்த்தாலும் தவறாக தான் இருக்கிறது. செக்ஸ் என்பது உயிரினங்கள் மத்தியில் இனப்பெருக்கம் செய்ய உதவும் செயலாக இருப்பினும்.

ஆறாவது அறிவு கொண்ட ஒரே காரணத்தினால் மனிதர்கள் மத்தியில் அது காதலின் வெளிபாடு, இரு மனங்கள் இணைப்பின் பிறகு முழு சம்மதத்துடன் நடக்க வேண்டிய ஒரு செயலாகவே காணப்படுகிறது.

இதுக் குறித்து இந்திய பெண்கள் மனதில் இருக்கும் சந்தேகங்கள், கோபங்கள், கேள்விகள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ராமிஸ்!

ப்ராமிஸ்!

"திருமணம் என்பது ப்ராமிஸ் அல்லது அக்ரீமென்ட் போன்றது என எடுத்துக் கொள்ளலாம். அது பலர் முன்னிலையில் பலரது சாட்சியாக வைத்து நடக்கும் வைபவம். அதன் பிறகு ஏற்படும் எந்த விஷயமும், கருத்து வேறுபாடும் பிரிவை ஏற்படுத்தாது.

அப்படி கருத்து வேறுபாடு நிகழ்ந்தாலும், அதை தீர்த்து வைக்க குடும்பத்தார், நண்பர்கள் இருப்பார்கள். இது திருமணத்திற்கு முன்னர் கிடைக்கிறதா, இருக்குமா? என்பது பெரிய கேள்வி. இதனால், தான் ப்ரேக்-அப்புடன் ஒப்பிடுகையில் விவாகரத்து குறைவாக இருப்பதற்கு காரணம்.

இது தான் திருமணத்திற்கு பிறகு செக்ஸ் என்பது சரியான பார்வையாக காணப்படுவதன் பின்னணியாக இருப்பதாக அறிகிறேன்."

- நபர் ஒன்று!

கரு!

கரு!

"நமது சமூகம், கலாச்சாரம், குடும்பம் என அனைத்தும் பெண் என்பவளை கருவாக கொண்டு, அதை சுற்றி வரையப்பட்ட ஒரு தோற்றமாக தான் இருக்கிறது. ஒரு குடும்பத்தில் ஆண் சீர்கெட்டு அழிந்து, மீண்டு வருதல் ஏற்படுத்தும் தாக்கத்தை காட்டிலும், அதே ஒரு பெண் சீர்கெட்டு, மீண்டு வருதல் ஏற்படுத்தும் தாக்கமும் ஒரே மாதிரியாக இருக்கிறதா? என்றால் இல்லை.

நமது சமூகம் ஆண், பெண்ணிற்கு ஒரே மதிப்புப் அளிப்பதில்லை. இன்னும் கூற போனால், நமது கலாச்சாரம் மற்றும் சமூகம் பெண்களை ஒரு பொக்கிஷமாக தான் பார்க்கிறார்கள். அந்த செல்வம் அழிந்துவிட்டால் சமூகத்தில் தங்கள் மதிப்பு குறைந்துவிடும் என்ற நிலைமை இருக்கிறது. ஆதலால் ஏற்படும் விளைவுகள் தான் காலப்போக்கில் பெண்களுக்கான சுதந்திர குறைபாடுகள் உண்டாக காரணமாக உருவாகியுள்ளது."

- நபர் இரண்டு!

முட்டாள்தனம்!

முட்டாள்தனம்!

"நடப்பு நூற்றாண்டில் ஆண், பெண் வேறுபாடு காண்பது முற்றிலும் தவறு. இதை வேருடன் அகற்ற வேண்டும். யார், எவர் என தெரியாத நபருடன் தன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வது மனித்தன்மை அற்ற செயல். அதிலும், ஒரு ஆணுடன் திருமணமான முதல் நாளே, போய் உடலுறவு வைத்துக் கொள் என சுற்றமும், நட்பும் சேர்ந்து ஒரு பெண்ணை அனுப்பி வைப்பது அருவருப்பான செயல்.

செக்ஸ் என்பது தானாக நடக்க வேண்டும். இரு மனங்கள் ஒன்றிணைந்த பிறகும் நடக்கும் ஒரு செயலாக அமைய வேண்டும். நமது கலாச்சாரம் ஆணாதிக்கம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் தான் அனைத்து பழக்க வழக்கங்களும் பெண்களை அழுத்துவது போன்று அமைந்துள்ளது."

- நபர் மூன்று!

குறித்த நேரத்தில் எப்படி வரும்?

குறித்த நேரத்தில் எப்படி வரும்?

"குறித்த நேரத்தில் ரயில் நிலையத்தை தொடர் வண்டியே அடைவதில்லை. பிறகு எப்படி குறித்த நேரத்தில் ஃபீலிங் மட்டும் வரும். திருமணத்திற்கு பிறகு செக்ஸ் என்பது கூட ஓகே. ஆனால், யாரோ ஒரு அய்யர் குறித்த நேரத்தை சுப முகூர்த்தம் என கூறி, அந்த நேரத்தில் இருவரும் கூடி குலவ வேண்டும் என்பது எல்லாம் அபத்தம்.

அதிலும், தொடர்ந்து மூன்று நாட்கள் சரியாக உறக்கம் கூட இல்லாமல், திருமண சடங்குகள் காரணத்தால் ஓய்ந்து போன நேரத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ள செல்வது நியாமற்ற செயல்."

- நபர் நான்கு!

ஆணாதிக்கம்!

ஆணாதிக்கம்!

"திருமணத்திற்கு முன்னரோ, பின்னரோ... செக்ஸ் என்பது ஆண் விரும்பும் போது பெண்கள் இரையாகும் நிகழ்வாக தான் இருந்து வருகிறது. ஆண் தனது செக்ஸ் ஆசைகளை வெளிப்படுத்துவதை இயல்பாக காணும் சமூகம். பெண் வெளிபடுத்தினால் மட்டும் விசித்திரமாக காண்பது எந்த விதத்தில் சரியாக எடுத்துக் கொள்வது.

ஓர் ஆண் சமூகத்தில் செக்ஸ் பற்றி தனது கருத்துகளை எந்த அசௌகரியமும் இன்றி வெளிப்படுத்த முடியும். ஆனால், ஒரு பெண்ணால் செக்ஸ் என்ற வார்த்தையையாவது சமூகத்தில் உரக்க கூற முடியுமா?"

- நபர் ஐந்து!

நம்பிக்கையின்மை!

நம்பிக்கையின்மை!

"திருமணத்திற்கு பிறகு செக்ஸ் ஓகே, அதற்கு முன் தவறு என்பது பெற்றோருக்கு பிள்ளைகள் மீது இல்லாத நம்பிக்கையின்மை என்று கூட சொல்லலாம்.

காதலித்தாலே பிள்ளைகள் தவறு செய்துவிடுவார்கள் என பெற்றோர் எண்ணுகிறார்கள். அவர்கள் வளர்ப்பு மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை.

அதே போல, சிலர் காதலிக்கும் போது செக்ஸ் வைத்துக் கொண்டால், அத்துடன் காதல் முடிந்தது. அதன் பிறகு என்ன இருக்கிறது, ஈர்ப்பு, ஆசை, காதல் அனைத்தும் முடிந்துவிடும். பிரிந்துவிடும் என எண்ணுகிறார்கள்.

காதலின் ஒரு விதமான வெளிப்பாடு தான் செக்ஸ். செக்ஸை காட்டிலும் காதலில் அனுபவிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கின்றன. ஆனால், அதை யாரும் உணர்வதில்லை.

ஒருவேளை, செக்ஸ் வைத்துக் கொண்ட பிறகு அந்த காதல் ஜோடி பிரிந்து போகிறது எனில், அவர்களுக்குள் இருந்தது காதல் இல்லை என்பது மட்டுமே நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது ஆகும்."

- நபர் ஆறு!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Is Love Making Before Marriage Considered So Immoral and Wrong in India?

Why Is Love Making Before Marriage Considered So Immoral and Wrong in India?