ஏன் கணவர்கள் மனைவியிடம் இந்த 10 விஷயங்களை மறைக்க கூடாது?

Posted By:
Subscribe to Boldsky

கணவன் - மனைவி உறவில் இருக்க கூடாத ஒன்று ஒளிவுமறைவு. ஒளிவுமறைவு இருந்தால் கணவன் - மனைவி உறவில் இன்பம் குறைந்து, சந்தேகங்கள் அதிகரித்து மெல்ல, மெல்ல கரையான் போல நல்லுறவை அரிக்க துவங்கிவிடும்.

மனைவியின் மனது பிக் பாஸ் வீட்டு கேமரா போல, அதிலிருந்து ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது. ஆண்களும் ஓட்டை வாய் தான் பொய் கூற தெரியாமல் மாட்டிக் கொள்வதும் உண்டு. அதே சமயத்தில், மனைவியும் கணவன் உண்மை விளம்பியாக இருந்தாலும், சந்தேக குணத்துடனே உலாவி வருவார்கள்.

இந்த பத்து விஷயங்களை கணவன் மனைவிடம் இருந்து மறைப்பதை நிறுத்திவிட்டால், இல்லறம் நல்லறமாக மாற வாய்ப்புகள் உண்டு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆபீஸ் க்ரஷ்!

ஆபீஸ் க்ரஷ்!

ஆண்களிடம் இருக்கும் பெரிய குறைபாடு அல்லது திறமையின்மை என்பது, பொய்களை மறைக்க தெரியாது. ஒரு சூழலில் தப்பித்துவிட்டாலும், வேறொரு சூழலில் உளறிக்கொட்டி மாட்டிக் கொள்வார்கள்.

அதில், முக்கியமானது ஆபீஸ் க்ரஷ். க்ரஷ்! தவறல்ல, இங்கே ஆசைகள் இல்லாத மனிதர்களே இல்லை. எனவே, இப்படி ஒரு கேரக்டர் என் ஆபீஸில் இருக்கிறது என்றவரையாவது மனைவியிடம் கூறிவிடுவது நல்லது.

இல்லையேல், திடீரென ஒரு நாள் அந்த நபர் பற்றி தெரியாமல் பேசி (வர்ணித்து) வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம்.

நண்பர்களுடனான நேரம்...

நண்பர்களுடனான நேரம்...

உங்களுக்கு உங்கள் நண்பர்களை எந்த அளவு பிடிக்கும், அவர்களுடன் எந்த அளவு நேரம் செலவு செய்கிறீர்கள் என்பதை மனைவியிடம் கூறிவிடுங்கள். அதன் பிறகு, அவர்களே நண்பர்களுடன் நேரம் செலவழிப்பதை பெரிய குற்றமாக காண மாட்டார்கள். அதை விடுத்து, பொய் கூறி நண்பர்களை காண சென்று, மீண்டும் முதல் பாயின்ட் போல பொய் மறைக்க தெரியாமல் கொட்டக் கொட்ட முழித்து மாட்டிக் கொண்டு நிற்க வேண்டாம்!

அலுவல் பளு!

அலுவல் பளு!

சில ஆண்கள் தங்கள் அலுவல் பளு பற்றி ஏன் வீட்டில் சொல்ல வேண்டும். நிம்மதி கெடும் என நினைத்து சொல்லவே மாட்டார்கள். ஆனால், மனைவியோ கணவன் அதிக நேரம் வெளியே செலவு செய்கிறானோ, அலுவல் காதல் ஏதேனும் இருக்குமோ என வேறு டிராக்கில் யோசனை செய்து சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

எனவே, நல்லதோ, கெட்டதோ, அலுவலகத்தில் நான் வேலை தான் செய்கிறேன், என்ன வேலை செய்கிறேன், அது எவ்வளவு கடினமானது என்பதை எல்லாம் மனைவிக்கு புரிகிறதோ, இல்லையோ சொல்லிவிடுங்கள்!

உடல் அமைப்பு!

உடல் அமைப்பு!

சிலருக்கு மனம் பிடிக்கும், சிலருக்கு முகம் பிடிக்கும், சிலருக்கு குணம் பிடிக்கும், சிலருக்கு உடலும் பிடிக்கும். இது இயற்கையானது. ஆனால், அது மிகையாகிவிடக்கூடாது.

ஒருவேளை உங்கள் மனைவியின் உடல் தோற்றம் மீதான உங்கள் விமர்சனம் இருந்தால், அதை கூறிவிடுங்கள். ஒரு வயதுக்கு மேல் இந்த எண்ணம் நீடித்தால், உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளுங்கள்.

அலுப்பு!

அலுப்பு!

உங்கள் மனைவி பேசும் சில விஷயங்கள் உங்களுக்கு எரிச்சல் ஏற்படுத்துகிறது என்றால், அதை மனதை திறந்து, இனிமேல் இப்படி பேசாதே, இது எனக்கு பிடிக்கவில்லை என கூறிவிடுங்கள். அதைவிடுத்து, அவர் பேசும் போதெல்லாம், அவர் மீது காண்டாவது, அலுப்பான உணர்வை வெளிப்படுத்துவது வேண்டாம்.

முன்பு போல இல்லை...

முன்பு போல இல்லை...

நீங்கள் முன்பு உங்கள் மனைவியிடம் விரும்பியவை, எவை எல்லாம் அவரிடம் இப்போது மிஸ் செய்கிறீர்கள் என்பதை வெளிப்படையாக கூறி, அவரை பழையபடி இருக்க கூறுங்கள். இது உங்கள் உறவு புத்துயிர் பெறவும், புத்துணர்ச்சி அடையவும் உதவும்.

குடும்பத்தை பற்றி

குடும்பத்தை பற்றி

அதே போல, அவர் வீட்டு உறவுகள் மீதான உங்கள் பார்வை என்ன என்பதையும் கூறுங்கள். ஒருவேளை, அவர்கள் பற்றி முழுமையாக அறியாமல் நீங்கள் கோபம் கொண்டிருக்கலாம். இல்லையேல், நீங்கள் அவர்கள் பற்றி கூறும் விமர்சனத்தை மனைவி எடுத்துக்கூறி, இனிமேல், அவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டாம் என பேசி, உறவு பாலத்தை வலிமைப்படுத்தலாம்.

ஓகே - வேணாம்...

ஓகே - வேணாம்...

விட்டுக் கொடுத்து போவது, அட்ஜஸ்ட் செய்துக் கொள்வது எல்லாம் இருக்க தான் வேண்டும். எப்போதாவது, எப்போதுமே அல்ல. ஒருவேளை உங்கள் மனைவி செய்யும் விஷயங்கள் பிடிக்காமல் இருந்தால், அதை வெளிப்படையாக கூறிவிடுங்கள். ஓகே, பரவாயில்லை என கூறிவிட்டு, பின்னாட்களில் புலம்ப வேண்டாம்.

பிரிவு!

பிரிவு!

உங்கள் இருவருக்குள் பிரிவு ஏற்படுவது போன்ற சூழல் உண்டாகிறது எனில், அதை உடனே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். முற்றி போனதற்கு பிறகு அதை எண்ணி வருந்த வேண்டாம். புற்றுநோயாகவே இருந்தாலும், ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை செய்துவிட்டால் பிழைத்துக் கொள்ள வழியுண்டு!

ஏதும் இல்லை!

ஏதும் இல்லை!

சில சமயங்களில் நீங்கள் எதுவுமே மறைக்காமல் உத்தம புத்திரனாக இருந்தாலும் கூட, மனைவிக்கு நீங்கள் ஏதோ மறைப்பது போன்ற சந்தேகங்கள் எழும். அதை நீங்கள் அறிந்தால், உடனே, செல்லக்குட்டி நான் அப்படி எதுமே மறைக்கல, உனக்கு இருக்கிறது "Hallucination" என்று சொல்லி புரியவைத்துவிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Husband Should Not Hide These Things From Wife?

Why Husband Should Not Hide These Things From Wife?