திருமணத்தின் போது சமந்தாவின் அழுகைக்கு இது தான் காரணமா?

Posted By:
Subscribe to Boldsky

திருமணம். எல்லாருக்கும் புதுமையான அனுபவங்களை அள்ளித் தரும். திருமணமாகப்போகும் பெண்ணோ ஆணோ தனக்குரிய வாழ்க்கைத் துணையைப் பற்றிய எண்ணற்ற எதிர்ப்பார்ப்புகளை கொண்டிருப்பர்.

why girls are so emotional on their wedding

எக்கச்சக்கமான முன்னேற்பாடுகளுடன் தன்னுடைய கனவு நாயகனை கரம் பிடிக்கும் அந்நாளில் எமோசனலான சில காட்சிகளை நம்மால் பார்க்க முடியும். மணமகளோ அல்லது அவளது பெற்றோரோ கண்ணீர் சிந்துவதை பார்த்திருப்போம். அப்படி என்ன தான் நினைப்பார்கள்? ஏன் திருமண நாளன்று அவர்கள் எமோஷனல் ஆகிறார்கள் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சம்பிரதாயம் :

சம்பிரதாயம் :

இந்தியக் கலாச்சாரத்தில் திருமணம் என்பது பல்வேறு சடங்குமுறைகளால் ஆனது. ஒவ்வொரு சடங்கு முறைக்கும் ஒவ்வொரு மாதிரியான விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது.

ஒரு பெண் பிறந்து வளர்ந்த வீட்டை வீட்டு தன்னுடைய கணவன் வீட்டிற்குச் செல்வதே அந்த சம்பிரதாயங்களின் நோக்கமாக இருக்கிறது.

 செல்வம் :

செல்வம் :

இந்தியக் குடும்பங்களில் பெண் என்பவள் தன்னுடைய வீட்டின் செல்வமாகத் தான் பார்க்கப்படுகிறது. இத்தனை வருடங்களாக இருந்த தன்னுடைய செல்வம் இன்று வேறொருவனுக்குச் சொந்தமாகப்போகிறாள் என்கிற வருத்தமாக இருக்கலாம்.

அல்லது இங்கே தன்னுடைய மேற்பார்வையில் செல்லம் கொஞ்சி வாழ்ந்த மகள் புகுந்த வீட்டில் என்ன செய்யப்போகிறாள் மேற்கொண்டு வரும் நாட்களை எப்படி சமாளிக்கப்போகிறாள் என்கிற வருத்தமாக இருக்கலாம்.

சிரிப்பா? அழுகையா? :

சிரிப்பா? அழுகையா? :

சோகத்தில் அழுவதற்கும் உட்சபட்ச மகிழ்ச்சியில் அழுவதற்கும் ஏகப்பட்ட வித்யாசங்கள் இருக்கும். அவர்கள் சிரிக்கிறார்களா? அல்லது அழுகிறார்களா என்றே தெரியாது.

திடீரென்று தான் எதிர்ப்பார்த்த ஒன்று இன்று நடந்து விட்டதா? என்ற எதிர்ப்பார்பு அவர்களை திக்குமுக்காடச் செய்யும் போது இப்படியான ஆனந்த கண்ணீர் வரும்.

கனவு :

கனவு :

தன்னுடைய திருமணம் குறித்த எதிர்ப்பார்புகள் பல எழுந்திருக்கும். தன்னுடைய வாழ்க்கை துணையைப் பற்றிய கனவுகளோ அவளைத் தேடி, கண்டடைந்து வருகின்ற சிக்கல்கள், பொருளாதரத் தடைகள், ஜாதக இடையூறுகள், அந்தஸ்த்து என பலவற்றையும் சமாளித்து கடந்து என்னவனை கரம் பிடித்து விட்டேன் என்ற வெற்றித் திலகமாக இருக்கலாம்.

வாழ்க்கை :

வாழ்க்கை :

ஒருவருக்கு தன்னுடைய திருமணம் என்பது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை துவங்கும் பகுதியாக இருக்கிறது. ஒரு புதிய முயற்சியை எடுத்து வைக்கிறேன் இனி வாழ்க்கை முழுவதும் இவனே என்னுடைய வாழ்க்கைத் துணைவனாக நினைத்து இத்திருமணம் நடந்திருக்கிறது.

இந்த சந்தோஷம் அப்படியே நிலைக்க வேண்டும். என்கிற வேண்டுதல் கண்ணீரை வரவழைத்திருக்கும்.

மகிழ்ச்சி :

மகிழ்ச்சி :

திருமணத்தில் மணப்பெண் தான் எல்லாருக்கும் சென்டர் ஆஃப் அட்ராக்‌ஷனாக இருப்பாள். தான் காதலித்த ஒருவனை எல்லார் முன்னிலையிலும் என்னுடைய வாழ்க்கைத் துணையாக கரம் பிடித்திருக்கிறேன்.

இத்தனைக்காலம் கனவாக இருந்தது இன்று நிஜமாகியிருக்கிறது அவனுக்கானவள் நான் தான் என்கிற எண்ணம் அவர்களை நிச்சயம் எமோஷனல் ஆக்கியிருக்கும்.

புது உறவுகள் :

புது உறவுகள் :

திருமணத்திற்கு பிறகு பிறந்த இடம்,ஊர்,உறவுகள் எல்லாவற்றையும் விட்டு வர வேண்டுமே என்ற எண்ணம் அவர்களை அழ வைத்திடும்.

அந்த தனிமையை எப்படி சமாளிக்கப் போகிறோம் புது உறவுகளை எப்படி அணுகப்போகிறோம் என்ற விடை தெரியா பல கேள்விகள் அவர்கள் முன் வந்து நிற்கும்.

பொறுப்பு :

பொறுப்பு :

திருமணமாகிவிட்டாலே பொறுப்பு அதிகரித்து விடும். இனி அந்த பொறுப்புகளை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற தவிப்பே அவர்களுக்கு அழுகையை வரவழைத்திடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

why girls are so emotional on their wedding

why girls are so emotional on their wedding
Story first published: Monday, October 9, 2017, 11:00 [IST]