ஒவ்வொரு கணவனும் தங்கள் மனைவியிடம் எதிர்ப்பார்க்கும் விஷயங்கள் என்னென்ன என்று தெரியுமா!

Posted By:
Subscribe to Boldsky

திருமண வாழ்க்கை குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எதிர்ப்பார்புகள் இருக்கும். காதல் வாழ்க்கைக்கு நடுவே இருவருக்குள்ளும் சில விஷயங்களை புரிந்து கொண்டு செய்வது மிகவும் அவசியமானது.

இங்கே ஒவ்வொரு கணவனும் தன் மனைவியிடம் எதிர்ப்பார்க்கிற சில விஷயங்கள் பற்றி பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆச்சரியம் :

ஆச்சரியம் :

ஆச்சரியங்கள் என்பது பிறந்தநாளன்று மட்டும் இரவு 12 மணிக்கு கொடுப்பதல்ல. அடிக்கடி கொடுங்கள்.

மிகவும் ஆடம்பரமாக அதீத செலவில் இருக்க வேண்டும் என்றில்லை உங்கள் இருவருக்கும் இடையில் காதலை அதிகரிக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் அன்றைய பொழுதினை அழகாக்கும் விஷயமாக கூட அது இருக்கலாம்.

நேர்மை :

நேர்மை :

இது ஆண்கள் கொஞ்சம் அதிகமாகவே எதிர்ப்பார்ப்பார்கள். தன்னுடைய மனைவி தனக்கு நூறு சதவீதம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

உங்களுடைய வாழ்க்கைத் துணையிடம் நீங்கள் நேர்மையுடன் இருந்தால் மட்டுமே அவரும் உங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்க முடியும்.

பேச்சு :

பேச்சு :

பேச்சு உறவை பலப்படுத்தும். பேசுவது என்பது கேட்பதையும் சேர்த்தே அடங்கியிருக்கிறது.

அலுவலகத்தில் இருந்து வந்தவுடனேயே, காலையிலிருந்து நடந்த விஷயங்கள் டேப் ரெக்கார்டர் போல சொல்ல ஆரம்பிக்காமல் முதலில் ஆசுவாசப்படுத்துங்கள்.

இன்றைக்கு வேலை எப்படி? என்று விசாரியுங்கள் பின்னர் ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பியுங்கள். மிக முக்கியமாக அவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுங்கள். அதே போல புகார் பட்டியலை வாசிக்காதீர்கள்.

டேக் கேர் :

டேக் கேர் :

அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் அவர்கள் ரிலாக்ஸ் ஆகும் விதமாக டீ கொடுப்பது, அவர்களுக்கு பிடித்த ஸ்நாக்ஸ் கொடுப்பது, அமைதியான சூழலை உருவாக்குவது என்று இருங்கள்.

அதை விடுத்து. முன்னறையில் டிவி அதிர, கிட்சனில் நீங்கள் கத்திக் கொண்டிருக்க குழந்தைகள் வீட்டையே இரண்டாக்கி விளையாடிக்கொண்டிருப்பதை தவிர்த்திடுங்கள். இது அவர்களுக்கு டென்சனை அதிகப்படுத்தும்.

தன்னம்பிக்கை :

தன்னம்பிக்கை :

இது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் கணவருக்கும் மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

வீட்டிற்கு தேவையான சின்ன சின்ன விஷயங்களை நீங்களே செய்து பழகுங்கள் சில நேரங்களில் உங்கள் கணவருக்கு எனர்ஜி பூஸ்டராகவும் நீங்கள் செயல்பட வேண்டியிருக்கும்.

உங்கள் தன்னம்பிக்கையினால் அவர் மீண்டு வரவும் வாய்ப்புண்டு.

மகிழ்ச்சி :

மகிழ்ச்சி :

மகிழ்ச்சியாக இருங்கள். அலுவலகத்தில் இருக்கும் டென்ஷனை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறார் என்றால் அவருக்கு ஆறுதல் அளித்து அதனை சமாளிக்கும்படி சொல்லுங்கள்.

அதே போல நீங்கள் கொடுத்த இந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது என்று புரிய வைத்திடுங்கள். என்னால் என் மனைவி, குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்ற எண்ணமே அவர்களை உற்சாகம் கொள்ளச் செய்திடும்.

நம்பிக்கை :

நம்பிக்கை :

இது கணவன் மனைவி மட்டுமல்ல நட்பு,காதல் என எந்த உறவாக இருந்தாலும் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். அவரவர் தனிப்பட்ட விருப்பங்களுக்கான இடத்தை கொடுங்கள் அதே சமயம் எல்லா நேரத்திலும் எங்கே தன்னை ஏமாற்றி விடுவாரோ என்ற பயம் கொண்டு நச்சரிப்பது வேண்டாம்.

பாராட்டு :

பாராட்டு :

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாராட்டுக்காக ஏங்குகிறார்கள். அவர்களிடத்தில் நீங்கள் சொல்கிற சின்ன சின்ன பாராட்டுக்கள் கூட அந்த நாளை அழகாக்கும்.

உங்களது பாசிட்டிவான வார்த்தைகள் மட்டுமே அவர்களை மேலும் மேலும் வளரச் செய்திடும்.

விருப்பங்கள் :

விருப்பங்கள் :

கணவரது விருப்பங்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். எல்லா விஷயத்திலும் கணவர் தனக்கு விருப்பமான விஷயங்களையே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். இதனால் இருவருக்குமே மனக்கஷ்டம் ஏற்படும்.

தத்தமது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களையும் உருவாக்கித் தாருங்கள்.

செக்ஸ் :

செக்ஸ் :

கணவன் மனைவி உறவு முழுமை பெறுவதில் செக்ஸும் முக்கிய பங்கு வகிக்கிறது. இருவரும் தங்கள் இணையின் விருப்பமறிந்து செயல்படுவது அவசியம்.

சின்ன சின்ன தொடுதல்கள், அணைப்புகள் கூட உங்களின் பொழுதை முழுமையாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

what does a Husband expect from his wife

what does a Husband expect from his wife
Story first published: Tuesday, October 10, 2017, 12:30 [IST]