அந்த நிகழ்விற்கு பிறகு, மாமனார் வீட்டின் மீது மொத்த மதிப்பும் இழந்தேன்...

Posted By:
Subscribe to Boldsky

நான் ஒரு கட்டுப்பாடான இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து, வளர்ந்த பெண். உயர்படிப்பு பயிலவே, வேலைக்கு செல்லவோ எனது குடும்பத்தில் பிறந்த எந்த பெண்ணுக்கும் இதற்கு அனுமதி கிடைக்காது. ஆனால், நான் எனது தந்தைக்கு பெரும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், எனது தந்தை என்னை சுதந்திரமாக வேலைக்கு செல்ல அனுமதித்தார்.

நான் மிகவும் வலிமையான, தன்னம்பிக்கை கொண்ட பெண். எனக்கு தவறென பட்டால், அதை எதிர்த்து நிற்கும் தைரியம் எனக்கு அதிகமாகவே இருந்தது. நான் 23 வயதை எட்டிய போது, என் வீட்டில் எனக்கான துணையை தேட ஆரம்பித்துவிட்டனர்.

நான் எனது வீட்டாருக்கு இட்ட ஒரே கண்டிஷன், திருமணத்திற்கு பிறகும் நான் வேலைக்கு செல்ல அனுமதி வேண்டும்... அவ்வளவு தான்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படித்த குடும்பம்!

படித்த குடும்பம்!

எனவே, எனது பெற்றோர் நல்ல படித்த குடும்பத்தில் இருந்து மணமகன் பார்க்க துவங்கினார்கள். திருமணத்தை பற்றிய ஒரு கடினமான உண்மையை நான் எனது புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகு தான் கண்டுணர்ந்தேன்.

சொந்த ஊரில்...

சொந்த ஊரில்...

எனது கணவரின் பெற்றோர், அவர்களது சொந்த ஊரில் வாழ்ந்து வந்தனர். நான் எனது கணவர் மற்றும் அவரது சகோதர, சகோதரியுடன் நகரத்தில் வாழ்ந்து வந்தேன். திருமணமான முதல் மாதத்திலேயே நான் உணர்ந்தது, நான் எனது கணவருக்கு மனைவி அல்ல. அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு சமைத்து போட வேண்டிய மெஷின் என.

நாத்தனார்...

நாத்தனார்...

எனது கணவரின் தங்கை ஒருபோதும் எனக்கு வீட்டு வேலையில் உதவியது இல்லை. உதவவில்லை எனில் பரவாயில்லை, உபத்திரவம் செயாமலாவது இருக்கலாம். எனது நாத்தனார் என்னை ஆட்டிப்படைக்க வேண்டும் என்ற பேராசை கொண்டிருந்தார் போல, அவரது உத்தரவிற்கு இணங்கி நான் நடக்க வேண்டும் என்பது போலவே நடந்துக் கொண்டார்.

காலை நான்கு மணிக்கு எழுந்து சமைத்து அனைவருக்குமான வேலைகள் செய்து முடித்து நான் வேலைக்கு செல்ல வேண்டும். வேலை முடிந்து வீடு திரும்பிய பிறகு மேலும், அதே வேலைகளில் ஈடுபட வேண்டும்.

கர்ப்பம்!

கர்ப்பம்!

எனது கணவர் வீட்டை சார்ந்த உறவினர்கள் வரும் போதெல்லாம் நான் மிகவும் செல்லமாக நடந்துக் கொள்ள வேண்டும். நான் அப்போது தான் கர்ப்பமானேன். இதன் பிறகு என் வாழ்வில் ஒரு மாற்றம் வந்தது. ஆம்! பகுதி நேர வீட்டு வேலைகள் செய்து வந்த நான், முழு நேர பதவி உயர்வு பெற்று, நாள் முழுக்க வீட்டு வேலைகள் செய்ய துவங்கினேன்.

சம்பளம் மட்டும் வேண்டும்...

சம்பளம் மட்டும் வேண்டும்...

எப்போதெல்லாம் அவர் வீட்டு செலவு கைமீறி போகிறதோ, எனது கணவர், அவரது வீட்டு செலவுகளை சமாளிக்க எனது ஊதியத்தையும் எதிர்பார்த்தார். நான் மன அழுத்தம் கொள்ள ஆரம்பித்தேன். ஆயினும், கணவரின் வீட்டு சொந்தத்தை நான் ஒரு போதும் அவமதித்ததோ, வெறுத்ததோ இல்லை.

சடங்கு!

சடங்கு!

எனது கணவர் வீட்டார் மத்தியில் ஒரு சடங்கு இருந்தது. அதாவது, முதலில் பிறக்கும் குழந்தையின் பிரசவ செலவை பெண் வீட்டார் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் போதுமான அளவு சம்பாதித்து வந்த காரணத்தால், எனது குடும்பத்தின் மீது அந்த சுமையை இறக்க விரும்பவில்லை. அதனால், நானே ஒரு நல்ல மருத்துவமனையில் செலவுகளை பதிவு செய்துக் கொண்டேன்.

பெண் குழந்தை!

பெண் குழந்தை!

சிசேரியன் முறையில் எனக்கு மகள் பிறந்தால். மருத்துவமனையில் பில் எகிறியது. எனது கணவர் வீட்டார் மருத்துவமனையிலேயே இவ்வளவு பெரிய செலவை நாங்கள் ஏற்க முடியாது என எனது தாயிடம் சண்டையிட்டனர். என்னை அவமானப்படுத்தினர். எனது தந்தையை கணவரிடம் பணம் கொடுக்க கூறினார். ஆனால், நான் ஏற்கனவே முழு தொகையை கட்டிவிட்டேன்.

பாசம்!

பாசம்!

எனது கணவருக்கு அவர் குடும்பத்தின் மீது அளவு கடந்த பாசம். அவர்களை எதிர்த்து எதுவும் செய்யமாட்டார். மற்றபடி அவர் மிகவும் நல்லவர். இன்று வரையும் என்னை உணர்வு ரீதியாக எனது கணவர் வீட்டார் அணுவணுவாக துன்புறுத்தி வருகிறார்கள். நான் அனைத்திற்கும் அடங்கி போவது, எனது பெற்றோருக்காக.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

That One Incident Made Me To Lose All Respect That I Had For My In-Law Family!

That One Incident Made Me To Lose All Respect That I Had For My In-Law Family!
Story first published: Wednesday, October 25, 2017, 11:25 [IST]
Subscribe Newsletter