எல்லா வயதிலும் செக்ஸ் முக்கியம் - நடிகரின் மனைவி பரபர பேச்சு!

Posted By:
Subscribe to Boldsky

இந்தியா டுடே பெண்கள் உச்சி மாநாடு 2017-ல் பல துறையை சேர்ந்த பெண்கள், சாதனையாளர்கள், தடைகளை தகர்த்து எதிர்த்து முன் வந்தவர்கள் பேசினார்கள். இதில் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கன்னாவும் ஒருவர்.

Sex is always important at Every Stage: Twinkle Khanna!

பெண்ணியவாதியாக, நகைச்சுவை உணர்வு உள்ளவராக, விழிப்புணர்வு கொண்டவராக, மனைவியாக, தாயாக, எழுத்தாளராக என ஒரு பெண்ணாக தனது பரிமாணங்களை இந்த மேடையில் பகிர்ந்து கொண்டார் ட்விங்கிள் கன்னா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண்ணியம்!

பெண்ணியம்!

நீங்கள் யாரை வேண்டுமானாலும் வெறுக்கலாம். பூனை, ஆண்கள், உறவினர் என யாரை வேண்டுமானாலும். எப்போது வரை நீங்கள் அனைவரையும் சமம் என கருதுகிறேர்களோ அப்போது வரை நீங்கள் பெண்ணியவாதி தான்.

நாப்கின் விழிப்புணர்வு!

நாப்கின் விழிப்புணர்வு!

பத்மன் எனும் படத்தை நாங்கள் எடுப்பதற்கான தேவை இருந்தது. அருணாச்சலம் முருகானந்தம் நாப்கின் குறைந்த விலையில் கொண்டுவந்தது, அதற்கான அவரது முயற்சி பாராட்டதக்கது. இன்றுவரை நாப்கின் ஏதோ தகாத பொருளாக தான் பார்க்கப்படுகிறது.

அதை மறைத்து பேப்பரில் சுற்றி தான், யாருக்கும் தெரியாமல் தான் வீசுகிறோம். நாப்கின் பற்றி, மாதவிடாய் பற்றி அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும்.

நகைச்சுவை!

நகைச்சுவை!

நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் நகைச்சுவை ரசனை அதிகமாக இருந்த குடும்பத்தில் தான. நாங்கள் எல்லாவற்றையும் எளிமையாக எடுத்துக் கொள்வோம், சீரியஸாக எதையும் பார்க்கவில்லை. அது அரசியலில் இருந்து, வீடு வரை அனைத்திலும் தொடர்ந்தது.

ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!

கட்டுபாடுகள் அனைத்தையும் தளர்த்திக் கொண்டால் அனைத்தும் மகிழ்ச்சியாக, நகைச்சுவையாக மாறிவிடும். உண்மையின் வேர்களில் நகைச்சுவை இருக்கிறது.

ஒருவரை நீங்கள் மகிழ்விக்க முடியும் என்றால், நீங்கள் அவரது பார்வையை மாற்ற முடியும். சிரிப்பு என்பது தும்மல், உச்ச உணர்ச்சி போல வெளிப்பட வேண்டியது தான். அதை தடுக்க கூடாது.

திருமணம்!

திருமணம்!

இல்லறத்தை பொறுத்த வரை நாங்கள் ஒரு சிறந்த அணி. நாங்கள் ஒன்றாக டேபிள் டென்னிஸ் விளையாடுவோம். அதே போல, செக்ஸ் என்பது திருமணத்தில் மிகவும் முக்கியமான ஒன்று.

எல்லா கட்டத்திலும் செக்ஸ் இல்லற வாழ்வில் அவசியம் தான். ஆனால், இது மட்டும் அல்ல. நீங்கள் எவ்வளவு வலுவாக இருக்கிறீர்கள் என்பது தான் அவசியம்.

கணவன் அழகானவர்கள், கைப்பையும் கூட, இவை இரண்டும் இல்லாமல் வாழ முடியும். ஆனால், இவை இரண்டும் உங்கள் வாழ்க்கையை சௌகரியமாக உணர வைக்கும்.

தாய்மை!

தாய்மை!

தாய்மை என்பது பெண்களை பொறுத்தவரை வாழ்க்கையை மாற்றக் கூடிய அனுபவம் தரக்கூடியது. தாய்மை ஒரு சிறந்த ஒன்று. பெண்கள் வலிமையாக இருக்க வேண்டிய பகுதி தாய்மை.

எழுத்து!

எழுத்து!

எனது நடுவயதில் நல்ல துணையாக இருப்பது எழுத்து. முகத்தில் இருக்கும் வரிகளை விட, நான் எழுதும், எழுத போகும் வரிகள் பற்றி தான் அதிகம் சிந்திக்கிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sex is always important at Every Stage: Twinkle Khanna!

Sex is always important at Every Stage: Twinkle Khanna!
Story first published: Saturday, March 25, 2017, 13:38 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter