ஒரு நாளாவது உங்களது இந்த செயலால் மனைவி எவ்வளவு வருந்துகிறார் என நினைத்ததுண்டா?

Posted By:
Subscribe to Boldsky

- உண்மை கதை...

ஒரு குடும்பத்தில் வளரும் போது, நான் மற்றவர் நினைக்கும் அளவிற்கு நல்லவளாக இல்லையோ என்ற எண்ணம் எனக்குள் இருந்துக் கொண்டே இருக்கும். என் குடும்பத்தின் ஆண்களின் பார்வையில், நான் எப்போதும் ஒரு படி கீழே தான் இருந்தேன்.

அது என் சகோதரன், அப்பா, வருங்கால கணவன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டுமே, இது தான் அவரவர் வீட்டின் பெண்கள் மீதான ஆண்களின் பொதுவான பார்வை.

நவீன, வளர்ச்சி அடைந்த சமூகத்தில் வாழ்கிறோம் என்பதெல்லாம் பொய். அன்று வேஷ்டி, சட்டை, சேலை அணிந்திருந்த சமூகத்தில் வாழ்ந்து வந்தோம், இன்று ஜீன்ஸ், டீ-ஷர்ட், கவுன் அணியும் சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். அவ்வளவு தான் நாம் கண்ட பெரும் சமூக மாற்றம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நாங்க பிரண்ட்லி ஃபேமிலி!

நாங்க பிரண்ட்லி ஃபேமிலி!

பெரும்பாலும் எங்கேனும் வெளியே சந்தித்து கொள்ளும் போது, நாங்க ரொம்ப பிரண்ட்லி. எங்க குழந்தைகள நாங்க ஃப்ரீடம் கொடுத்து வளர்கிறோம்... என யாராவது தம்பட்டம் அடித்துக் கொண்டால், அந்த வீட்டு குழந்தைகள் மிகவும் பாவம் என்பதை நீங்கள் அந்த நொடியிலேயே அறிந்துக் கொள்ளலாம். ஏனெனில், காலி குடத்தில் தான் சப்தம் வரும்.

தவறாக நினைக்க வேண்டாம்..

தவறாக நினைக்க வேண்டாம்..

ஒரு பெண் இப்படி கூறினால் சிலருக்கு கோபம் வரலாம். ஆனால், இது தான் உண்மை. சிறையில் அடைப்பதற்கு பெயர் பாதுகாப்பு, தற்காப்பு அல்ல. நான் ஒரு கூட்டு குடும்பத்தில் வளர்ந்தவள். சமீபத்தில் தான் எனக்கும், எனது அக்காவிற்கும் நிச்சயம் நடந்தது.

பெரிதாக இடைவெளி எதுவும் இல்லை. அடுத்ததடுத்த வாரத்தில் இருவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டது. இதே போல தான் திருமணம். எப்படியும் அந்த நாளில் நாங்கள் இருவரும் எங்கள் வீட்டை விட்டு வெலியெரிவிடுவோம். இது தானே நமது சமூகத்தின் எழுதப்படாத சட்டம்.

நான் வளர்ந்த விதம்...

நான் வளர்ந்த விதம்...

சராசரி இந்திய கூட்டுக்குடும்பம்... பொதுவாக இரண்டு பெற்றோர்கள் இருப்பார்கள் எனில், எங்கள் வீட்டில் நான்கு பெற்றோர். என், மகள், உன் மகள் என பிரிவனை பாராத இரண்டு அப்பா, அம்மாக்கள்.

என் பெற்றோர் என்னை ஒரு மகன் போல தான் வளர்த்தார்கள், என் குடும்பத்தின் மீதான கடமையும், பொறுப்பும் நான் பெற்றிருந்தேன். என் குடும்பத்திற்காக என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்ய கூடாது என்பது முழுவதும் நான் அறிவேன்.

திடீரென ஒரு நாள்...

திடீரென ஒரு நாள்...

என் குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்க இத்தனை நாள் சிந்தித்து, உழைத்து வந்த நான். திடீரென ஒரு நாள் திருமணம் செய்துக் கொண்டு வேறு வீட்டிற்கு சென்று. மறுநாளில் இருந்த அந்த வீட்டின் பெண்ணாக மட்டுமே இருக்க வேண்டும். எனது வீட்டை மறந்துவிட வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்.

ஏன்?

ஏன்?

திருமணம் என்ற ஒற்றை நிகழ்வு, எனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் ஒரே நாளில் புரட்டி போட்டு விடும் என்பது ஏற்புடையதல்ல. இது வெறும் வீடு மாறி செல்லும் செயலல்ல. எனது குணாதிசயங்கள், வாழ்வியல் முறை, உடை உடுத்துவதில் இருந்து, உணவு உண்பது வரை. எழுந்ததில் இருந்து உறங்குவது வரை பெரும் மாற்றத்தை உருவாக்குகிறது.

இதில் என்னை விமர்சிக்க நால்வர் என்னை சுற்றி எப்போதும் கண்காணிப்பு கேமராக்கள் போல உலாவி கொண்டிருப்பார்கள்.

எதற்கு இந்த விதி?

எதற்கு இந்த விதி?

நான் அறிவாளியாகவே இருந்தாலும் கூட, என் கணவன் சொல்வதை தான் செய்ய வேண்டும். நான் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் எனில், ஓர் இடத்திற்கு செல்ல வேண்டும் எனில் அவரது பதிலுக்காக காத்திருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படி இருக்க மாட்டார்.

அவர் என் மீது அன்பாக, அக்கறையாக, எனது வாழ்க்கை, கனவுகள் மீது சிரத்தை காட்டுபவராக இருந்தால் மட்டும் போதுமா?

என் குடும்பம்...

என் குடும்பம்...

திருமணத்திற்கு முந்தைய தினம் வரை, அவர் குடும்பத்தின் மீது அவர் மட்டுமே அக்கறை எடுத்துக் கொண்டு வந்தார். இப்போது, அவருடன் சேர்ந்து நானும் என இருவர் அக்கறை எடுத்துக் கொள்கிறோம். ஆனால், என் குடும்பத்தில்? இருந்த ஒருத்தியும் வெளியே வந்துவிடுவேன். பிறகு யார் தான் எனது பெற்றோரையும், குடும்பத்தையும் பார்த்துக் கொள்வார்கள்?

சரிக்கு, சரி!

சரிக்கு, சரி!

திருமணம் செய்து வைத்த ஒரே செயலுக்காக அவர்கள் வாழ்நாள் முழுக்க தனியாக இருக்க வேண்டுமா?

நான் என்னுடன் என் வீட்டுக்கோ, அல்லது தனி குடித்தனமோ அழைக்க விரும்பவில்லை. ஆனால், எனது வருங்கால கணவர்., நான் எப்படி அவரது குடும்பத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்கிறேனோ... அதே போல, அவரும் என் குடும்பத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Real Story: Dear Husband Try To Love My Family Also!

Real Story: Dear Husband Try To Love My Family Also!
Story first published: Wednesday, November 1, 2017, 14:08 [IST]
Subscribe Newsletter