For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  திருமணச் சந்தையில் ராஜகுமாரன்களை தேடாதீர்கள்

  By Aashika Natesan
  |

  பள்ளிப்படிப்பு முடித்தும் கல்லூரியில் அட்மிஷன் கிடைக்கிறதோ இல்லையோ வீட்டில் திருமணம் குறித்து பேச்சை ஆரம்பித்திருப்பார்கள். இப்போதிருந்தே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தால் தான் இரண்டு வருடத்தில் திருமணம் நடக்கும் என்று மிகப்பெரிய ஆராய்ச்சி தகவல்களையும் உறவுகள் உதிர்த்திருக்கும். என் மகளுக்கு எந்த நாட்டு ராஜகுமாரன் வருவானோ என்று அப்பா தேடிக் கொண்டிருக்க , அம்மாவோ ராஜகுமாரன் என்னவெல்லாம் சாகசம் செய்வான் என்ற மாயாஜாலக் கதைகளை சொல்லிக் கொண்டிருப்பாள். அந்த மாயாஜாலக் கதைகளை கேட்டு வளரும் நம் இளவரசி அத்தனையும் நம்புவாள் நம்பும் அத்தனையையும் அடைய நினைப்பாள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  திருமணம் என்னும் திருவிழா :

  திருமணம் என்னும் திருவிழா :

  ஒவ்வொருவருக்கும் தன் வீட்டு திருமணம் தான் மிகப்பெரிய திருவிழா. தன்னைப் பற்றி தன் பொருளாதாரத்தைப் பற்றி பறைசாற்றும் ஒரு விழா. அரும்பாடுப்பட்டு, நடத்தப்படும் இவ்விழா ஒரு நாள் கூத்து அல்ல என்பது தான் யாருக்கும் விளாங்காப்புதிராக இருக்கிறது. திருமணம் ஊர் மெச்சும் விழாவாக மட்டுமே வடிவமைக்காமல் அடுத்து வாழப்போகும் வாழ்க்கைக்கும் சேர்த்து கரிசனம் காட்டுங்கள்.

  இது கதையல்ல :

  இது கதையல்ல :

  கேட்பது போல, பார்ப்பது போல, பலரைக் கடந்து வரும் நம் அண்டை வீட்டினரின் கதையைப் போல, கதைகளில் வருவதைப் போல எல்லாம் நம் வாழ்க்கை அமைந்திடுவது அல்ல. அடம்பிடித்து புல்லட்டில் பறக்கும் பெண்களைப் போல, சுவற்றில் ஊரும் பல்லிக்கு பயப்படும் ராஜகுமாரன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். விருப்பங்கள் வேறு இயல்புகள் வேறு என்பதை உணருங்கள். அந்த இயல்புகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்றும் தெளிவு பெறுங்கள்.

  மகாராஜா அவர்களே! :

  மகாராஜா அவர்களே! :

  ஐயா, மகாபிரபு, உன்னை கொத்திச் செல்ல ஏழு மலை,ஏழு கடல் கடந்து ஒரு ராஜகுமாரன் வருவன் அவன், எல்லாவற்றிலும் தலைசிறந்தவனாய் திகழ்வான் என்று பாடம்கற்பிக்காதீர்கள். யாரையும் வீழ்த்தும் வீரமகனாக , சான்றோர் போற்றும் அறிவாளியாக, செல்வத்தை அள்ளித்தரும் கடவுளாக, எத்திசையிலிருந்து பார்த்தாலும் அழகே உருவெடுத்த உருவமாக அவனை வடிவமைக்காதீர்கள். ராஜகுமாரன் பற்றி கதை சொல்லும் நேரத்தில் இளவரசிக்கு பேசும் சந்தர்பங்களை கொடுங்கள், விருப்பங்களை கேளுங்கள், திருமணம் பற்றிய பயத்தை உடைத்தெறிய வழிவகுத்திடுங்கள். உங்கள் இளவரசிக்கு சாதாரண ஒரு மனிதன் போதும். அவன் சாகசம் நிகழ்த்துபவனாய், எச்சூழலிலும் உங்களின் செல்ல இளவரசியை தாங்குபவனாய் இருக்க வேண்டாம். மகளை நேசிப்பவனாய் இருக்கட்டும். மகளின் விருப்பங்களை பிடுங்கித்திண்ணும் குரங்காய் இல்லாமல் எச்சூழலிலும் துணை நிற்பவனாய் இருக்கட்டும்.

  ராஜகுமாரா! :

  ராஜகுமாரா! :

  எல்லாரும் ராஜகுமாரனை வேண்டினால் பாவம் மற்றவர்கள் என்ன செய்வார்கள்! திருமணமெனும் சடங்கை பொருளாதார நிகழ்வாக மாற்றியது போதும். பணத்தை தேடுவது தான் வாழ்க்கை என்று கட்டிய மணல் வீடு தூள் தூளாகட்டும். ராஜகுமாரா, உனக்கான இளவரசி கிடைக்க வாழ்த்துகள்.. எங்கள் பெண்களை விட்டுவிடு.

  மிதக்க வேண்டாம் :

  மிதக்க வேண்டாம் :

  மகாராணியாரே! மகளை தாங்குகிறேன் என்று முடமாக்கிவிடாதீர்கள், ராஜகுமாரன் வருவான் எப்போதும் உன்னை தாங்குவான். சொகுசாக வாழ்வது தான் வெற்றிகரமான வாழ்க்கை என்று பொய்யூற்றில் மிதக்க வைக்காதீர்கள். இன்னொருவனுக்காக காத்திரு என்று அறிவுரை சொல்லும் நேரத்தில் நீயே களத்தில் இறங்கு என்று சொல்லுங்கள். நீ... நீ தான் உனக்கு முதல் என்று சொல்லிக்கொடுங்கள்.

  இளவரசிக்கு :

  இளவரசிக்கு :

  குழந்தைமையை அள்ளிப் பூசி அணிந்திருக்கும் முகமுடியை நீக்கிய பின் தொடர்ந்து வாசி, செல்ல மகள் என்று செல்லம் கொஞ்சாமல், சொகுசு தேடமால் நிதானமாய் புரிந்து கொள்ள முயற்சி செய். திருமணம் ஒரு நிகழ்வல்ல தொடரும் வாழ்க்கையின் அடுத்த பகுதி தான். இன்பமும் துன்பமும் கலந்த ஒரு வாழ்க்கையை வாழப்போகிறாய் காமமும் காதலும் கடந்த ஒரு அன்னியோன்னியத்தை உணரப்போகிறாய். திருமணத்திற்கு பிறகும் சரி அதற்கு முன்னாலும் சரி நீ தான் உன்னுடைய ஓடத்தை இழுக்க வேண்டும். பொறுப்புகள் கூடியதும் விருப்பங்களை எல்லாம் துடைத்தெறிய வேண்டும் என்றில்லை. கணவனுக்கு அடிபணிந்து குழந்தைகளை அரவணைத்து குடும்பத்திற்காக தேயும் அறிவிலியாக இல்லாமல் வாழ்க்கையை அதன் இயல்பிலேயே ரசிக்க கற்றுக் கொள். ஏற்றுக் கொள், பிரச்சனைகளை எதிர்கொள் சமாளிப்பாய், வாழ்வை வென்றெடுப்பாய்.

  சாதராண மனிதன் :

  சாதராண மனிதன் :

  சாதரணமானவன் என்னவெல்லாம் செய்வான் தெரியுமா? ராஜகுமாரன் போல இவனால் தாங்க முடியாது தான். ஆனால், அவனை விட சுவாரஸ்யங்களை அள்ளித்தருவான். களமிறங்கி உங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்துவான். பெருமை காக்கிறேன், உன்னை ஆராதிக்கிறேன் என பெட்டிப்பாம்பைப் போல உள்ளே அடைத்து வைக்காமல் வாழ்க்கையை போராட்டத்துடனே அணுக வைப்பான். எட்ட நின்று பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப்போகிறது? களமிறங்குங்கள்

  ராஜகுமாரன் வேண்டாம் :

  ராஜகுமாரன் வேண்டாம் :

  விருப்பங்கள் எல்லாம் நிறைவேற இது கனவல்ல. தற்பெருமைக்கு பலியாகமல் நிஜ உலகிற்கு வாருங்கள். எங்கும் ராஜகுமாரன் செல்வச்செழிப்பாக சொகுசாக வாழ்வதில்லை தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொள்ள போராடிக்கொண்டிருக்கிறான். எப்போதும் உங்களைத் தாங்கும் ராஜகுமாரனை விட சாதரண மனிதன் போதும். ஆம், சிரிக்கும் போது தட்டிக் கொடுத்து அழும் போது தோல் கொடுக்கும் சாதாரணமானவே போதும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: love and romance
  English summary

  Parents! Here Is Why Your Daughter Needs No Prince Charming

  Parents usually spend all their effort in searching for a Prince Charming for their daughter; however, here are suggestions why you should stick to finding normal guys.
  Story first published: Friday, July 7, 2017, 18:03 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more