நான் 30+லயும் கல்யாணம் பண்ணாம இருக்க, முக்கியமான காரணம் இருக்கு - My Story #080

Posted By:
Subscribe to Boldsky
My Story: The right person will eventually come and when he does, age will not matter!

முப்பது வயதை கடந்தும் ஒரு நபர் திருமணம் செய்துக் கொள்ளாதிருந்தால். அவர்களை கேள்விக் கேட்டு இந்த சமூகம் எந்தளவிற்கு துளைத்தெடுக்கும் என்பது. 30+ சிங்கிள்களுக்கு மட்டுமே தெரியும். பரவாயில்லை., இவர்களது கூவல்களுக்கு எல்லாம் தலை அசைத்து திருமணத்தை வேகப்படுத்த வேண்டாம். நமக்கான நபர் ஏற்கனவே பிறந்து, நமக்காக காத்திருப்பார்.

காதலுக்கோ, இல்வாழ்க்கைக்கோ வயதொரு தடையில்லை. இந்த கருத்துடன் உங்களை அடைய ஒருவன் வராமலா போய்விடுவான். நான் 30+ன் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறேன். சொந்தக்காரன் என்ற பெயரில் எங்கள் வீட்டுக்கு வருவோர் எல்லாம் என் முகத்தை கண்டதும் கேட்கும் முதல் கேள்வி, "எப்போ நீ கல்யாணம் பண்ணிக்க போற, அப்படி ஒரு ஐடியா இருக்கா, இல்லையா..?"

நான் ஒன்றும் திருமணத்திற்கு எதிரானவள் இல்லை. ஆனால், திருமணம் என்பது மற்றவரின் அவசரத்திற்கு செய்துக் கொள்ள வேண்டிய சம்பிரதாயமும் இல்லை என்பதை நன்கு உணர்ந்தவள் நான். முப்பதை கடந்துவிட்டேன் என்பதற்காக எல்லாம் திருமணம் செய்துக் கொள்ள முடியுமா என்ன?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பர்பெக்ட் மணாளன்!

பர்பெக்ட் மணாளன்!

ஒருவேளை, எனக்கான அந்த ஸ்பெஷல் ஆணுக்காக காத்திருக்கிறேனா? என நீங்கள் கேட்கலாம். ஹ்ம்ம்... அப்படியும் வைத்துக் கொள்ளலாம். "பர்பெக்ட் மணாளனைக் கண்டுக் கொள்வது எப்படி?" என ஒரு புத்தகம் எழுதும் அளவிற்கு எனக்கு அனுபவம் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஒரு விஷயம்...

ஒரு விஷயம்...

திருமணத்திற்கு மணமகனை தேடும் போது நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில், பர்பெக்டாக ஒருவன் வேண்டும் என்ற ஆசையை விட்டுக் கொடுப்பது தான். ஆம்! இந்த உலகில் அப்படி ஒரு ஜீவனே இல்லை.

இப்படியும் யோசித்து பாருங்களேன், நாம் தேடுவதை போலவே அவரும் பர்பெக்ட் துணை தேடினால் நமது கதி என்னவாகும். நான் முன்ன கூறியதே தான். இந்த பர்பெக்ட் என்ற சொல்லுக்கு ஆண், பெண் என்ற பேதமில்லை. இப்படி ஒரு நபர் இன்றைய உலகில் இல்லவே இல்லை என்பது தான் என்னுடைய கருத்து.

சோப்பு விளம்பரம்!

சோப்பு விளம்பரம்!

பர்பெக்ட் துணை எப்படி இருக்க வேண்டும். இந்திய சோப்பு விளம்பரங்களில் வரும்படியாக மிக சுத்தமாக, முகத்தில் எந்த மாசு இல்லாமல்... ஃபிட்டான உடற்கட்டுடன்... அப்படியா? நாம் எப்படி தேடினாலும் நமக்கு ஏற்ற பர்பெக்ட் ஜோடியை நம்மால் அடையவே முடியாது.

காரணம், நாம் கோடிட்டு வைத்திருக்கும் அந்த பர்பெக்ட் எல்லையானது நிரந்திரமானது அல்ல. நாம் அதை அவ்வப்போது முன்னும், பின்னும் இழுத்துக் கொண்டே இருப்போம். இதனால் தான் கூறினேன் பர்பெக்ட் ஜோடி கிடைக்க வாய்ப்பே இல்லை என்று.

விட்டுக்கொடுங்க!

விட்டுக்கொடுங்க!

வாழ்க்கை வாழ்வதற்கு. கொஞ்சம் விட்டுக் கொடுத்து போக வேண்டும். நான் கொஞ்சம் அதிகமாகவே சுதந்திரத்தை எதிர்காணும் பெண். கடந்த ஒரு தசாப்தமாக நான் வேலை செய்து வருகிறேன். நாம் பல நகரங்களுக்கு வேலை விஷயமாகவும், பர்சனல் ட்ரிப்பாகவும் சென்று வந்துள்ளேன். தனியாக இருக்கவோ, பயணிக்கவோ எனக்கு அச்சம் கிடையாது.

தனியாக சாப்பிட செல்வேன், தனியாக படத்திற்கு செல்வேன். தனியாக பார்க் சென்று கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு வருவது எனக்கு பிடித்த விஷயம். இதனாலோ என்னவோ எனக்கொரு துணை வேண்டும் என்ற ஆசை பெரிதாக இல்லை.

பாயிண்டுக்கு வருவோம்!

பாயிண்டுக்கு வருவோம்!

ஓகே! திரும்ப பாயிண்டுக்கு வருவோம். திருமணம் எதற்காக செய்துக் கொள்கிறோம். குழந்தை பெற்று வம்சத்தை பெருக்கவா? ஆண், பெண் இருவர் கொஞ்சி குலாவி, கலவி மகிழவா திருமணம்? அல்லது இதுனால் வரை அம்மா - அப்பாவிற்கு சம்பாதித்து பணத்தை கொடுத்தது போதும், இன்னொருவனுக்கு கொடுத்து உதவலாம் என்பதா திருமணம்? திருமணம் என்பது அளந்து வைத்தபடி இருக்க டெயிலர் கடை அல்ல.

எது திருமணம்?

எது திருமணம்?

நீங்கள் நீங்களாகவே மீத நாட்களும் இருக்க உதவுவது தான் திருமணம்.அவரவர் சுதந்திரத்தை பறிக்காமல் ஒருவரை ஒருவர் அரவணைத்து வாழ்வது தான் திருமணம். ஒருவர் மற்றொருவரை உயர உதவி உறுதுணையாய் இருப்பது தான் திருமணம். நாம் அழும் போது கண்ணீரை துடைத்துவிடவும், சிரிக்கும் போது கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்வதும் தானே திருமணம்.

இணைப்பு!

இணைப்பு!

உடல் இணைப்பை தவிர்த்து, மன ரீதியாக ஒரு இணைப்பு உண்டாக்கும் பாலமாக இருக்க வேண்டும் திருமணம். மற்ற பெண்களுக்கு எப்படி என தெரியவில்லை. என்னை பொறுத்த வரை திருமணம் என்பது இணக்கமாக இருக்க வேண்டும். அது ஒரு பயணம். இருவரும் பிடித்து இனைய வேண்டும். இல்லையேல் அந்த பயணம் முழுக்க... "எதுக்குடா, இந்த ட்ரிப்புக்கு வந்தோம்... பேசமா வீட்லயே இருந்திருக்கலாம்னு" ஒரு எண்ணம் வந்துவிடும்.

சச்சின் - கோலி!

சச்சின் - கோலி!

இன்னும் நன்கு விளங்கும்படி கூறவேண்டுமெனில், திருமணம் என்பது சச்சின், கோலி ஒன்றாக கிரீஸில் நின்று விளையாடும் போட்டியை போன்றது. சச்சினை கண்டு விராட் மகிழ்ச்சி அடையலாம். பெருமிதம் கொள்ளலாம். அவருடன் சேர்ந்து விளையாடுவதை ரசிக்கலாம்.

அதைவிடுத்து. சச்சின் இவ்வளவு சாதனை செய்துள்ளாரா? அதை நான் முறியடிக்க வேண்டும். என்னைவிட அவர் சிறந்தவரா என்ன? என்று அகம்பாவம் கொண்டால் வாழ்க்கையில் வெற்றிப்பெற முடியாது.

அயம் வெயிட்டிங்!

அயம் வெயிட்டிங்!

நான் இன்றும் காத்திருக்கிறேன். பெண்களின் சுதந்திர கருத்தை ஏற்று, அவரை ஒரு பெண்ணாக மட்டும் காணலாம். நல்ல துணையாக, மனுஷியாக கண்டு, சுய கருத்தை ஏற்று திருமணம் செய்துக் கொள்ளும் ஆண்கள் வரும் காலத்தில் அதிகமாக இருப்பார்கள். பாராட்டுவதும், தட்டிக் கொடுப்பதும் தான் காதல் / திருமணம். குறைகூறுவதும், எட்டி மிதிப்பதும் அல்ல.

ஸ்பீடு வேண்டாம் பாஸ்!

ஸ்பீடு வேண்டாம் பாஸ்!

எனவே, திருமணத்தில் வேகம் காட்ட வேண்டாம். பொறுமையாக இருங்கள். உங்களுக்கான நபர் கண்டிப்பாக உங்களை வந்து அடைவார். நீங்கள் பிறக்கும் போதே திருமணம் எனும் டிக்கெட் வாங்கி வந்துவிட்டீர்கள். எனவே, உங்களுக்கான பேருந்து வரும் வரை காத்திருங்கள். உங்கள் இருக்கையில் வேறு யாரும் அமர்ந்துவிட முடியாது.

உங்களுக்கான துணையை வரும் முன்னர் நீங்கள் தேர்வு செய்யும் நபர்கள் கண்டிப்பாக, ஜாதி, மதம், சம்பளம், உடல் வடிவம், கவர்ச்சி அனைத்தையும் எதிர்பார்ப்பான். வாழ்க்கை வாழ்வதற்கு, சாவதற்கு அல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

My Story: The right person will eventually come and when he does, age will not matter!

My Story: The right person will eventually come and when he does, age will not matter!