வேறொருவர் மனைவியுடன் உறவில் இருக்கும் என் கணவர் - நான் என்ன செய்ய? - My Story #106

Posted By:
Subscribe to Boldsky
My Story: Own Mother and Husband are the Reason for My Drug Addiction!

என் நாட்கள் இப்படி முடியும் என நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என் அம்மா எப்போதும் குடும்பம், குடும்பம் என வாழ்ந்து வரும் நபர். ஆனால், அவரது இந்த எண்ணமே எனது குடும்ப வாழ்க்கையை பாதிக்கும் என்றோ, அவரே என் வாழ்க்கையை சீரழிப்பார் என்ற நான் கனவிலும் எண்ணவில்லை.

நான் ஒரு அப்பர்-மிடில்-கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவள். கௌரவம் தான் முக்கியம் என கருதும் நபர் என் அம்மா. பெண்ணின் வாழ்க்கையை காட்டிலும் கௌரவத்தை கட்டிக் கொண்டே அழுவார் என, அவர் எனக்கு மாப்பிளை பார்க்கும் வரை எனக்கு தெரியாது.

எங்கள் குடும்பத்திற்கு ஏற்ற ஒரு வரனை பார்த்து முடிவு செய்தார். அனைவருக்கும் பிடித்துப் போகவே திருமணம் எந்த தடையும், பிரச்சனையும் இன்றி முடிந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இல்லீகல் லைப்!

இல்லீகல் லைப்!

திருமணம் நடந்த வெகு சில நாட்களிலேயே என் கணவருக்கும், வேறு ஒரு திருமணமான பெண்ணுக்கும் இல்லீகல் உறவு இருப்பதை அறிந்தேன். அதிர்ச்சி ஒருபுறம் இருக்க, தயக்கமின்றி அவர் முன் தைரியமாக அந்த உறவை பற்றிக் கேட்டதற்கு, எந்த ஒரு கூச்சமும் இன்றி... "ஆமா, அவள் தான் எனக்கு முக்கியம். என்னால அவள விட்டு வர முடியாது" என கூறினார்.

பாஸ்வேர்ட் பிரோடக்ட்!

பாஸ்வேர்ட் பிரோடக்ட்!

அவரது கணினி, ஈமெயில், மொபைல் என அனைத்தையும் பாஸ்வேர்ட் பிரோடக்ட் செய்து வைத்திருந்த காரணத்தால். கையும், களவுமாக பிடிக்க எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்காமல் போனது. இந்தியாவில் பிறந்து, வளர்ந்து பெண் என்பதாலோ என்னவோ, எடுத்த எடுப்பில் திருமணம் பந்தத்தை விட்டு வெளியேற மனம் ஒப்புக்கொள்ளவில்லை. எப்படியாவது கணவனை அந்த உறவில் இருந்து வெளியே கொண்டு வந்து விடலாம் என்றே எண்ணினேன்.

ஈமெயில்!

ஈமெயில்!

ஒரு நாள் ஈமயில் சரிபார்த்து கொண்டிருந்த என் கணவன் கணினியை ஆனில் வைப்பதப்படியே வெளியே சென்றுவிட்டார். அது தான் எனக்கு கிடைத்த சரியான சந்தர்பம் என கருதினேன். ஆனால், அதனுள் எனக்கு நிறைய அதிர்ச்சிகள் காத்திருந்தன. ஈமெயிலில் அவ்வளவு அருவருப்பு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை நான்.

நிர்வாண படங்கள்!

நிர்வாண படங்கள்!

என் கணவருடன் இல்லீகல் உறவில் இருந்த பெண், அவருக்கு நிறைய நிர்வாண படங்கள் அனுப்பியிருந்தாள். அளவு என்ற எல்லை இல்லமால் ஈமெயில் முழுக்க அது குவிந்துக் கிடந்தது. ஈமெயில் சாட்டிங், மெசேஜ் சாட்டிங், போன் கால் என என் கண் முன்னேவே அத்தனை அக்கிரமங்களும் நடந்தேறியது.

மிரட்டல்!

மிரட்டல்!

அவள் என் கணவருக்கு அனுப்பிய நிர்வாண படங்களை, அவளது கணவரிடம் காண்பித்து சிக்க வைப்பேன் என மிரட்டினேன். ஆனால், அதற்குள் எனது கணவர், பார்த்து பத்திரமாக இரு என அவளுக்கு செய்தி அனுப்பிவிட்டார். என்ன ஆனாலும் சரி, இருவரும் பிரிந்துவிடக் கூடாது என்பதில் மட்டும் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

தடைகள்!

தடைகள்!

நான் எத்தனையோ முறை அவளது கணவரை தொடர்புக் கொள்ள முயற்சித்தும் அத்தனையும் தோல்வியில் முடிந்தது. எனது ஒவ்வொரு முயற்சிகளையும், அவளுக்கு முன்னேற எங்கள் வீட்டில் இருந்து தெரிவித்துவிடுவார் என் கணவர் என்பது எனக்கு பின்னாளில் தான் தெரிந்தது. இதை பற்றி வெளியே கூறவும் முடியவில்லை. இதற்கு ஒரு முடிவுக் கட்டவும் இயலவில்லை என்பது எனக்குள் நாளுக்கு , நாள் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்தது.

ஒரு நாள்...

ஒரு நாள்...

இவர்கள் இருவரும் ஏமார்ந்த சமயம் பார்த்து, ஒரு நாள் அவளது கணவருக்கு இந்த படங்களை எல்லாம் அனுப்பி வைத்தேன். அவளது வீட்டில் பூகம்பம் வெடித்தது. கடந்த பத்து வருடங்களாக தன்னை ஏமாற்றி வந்ததை அறியாத அவளது கணவர் கடும் கோபம் கொண்டார்.

பிறகு, இவள் கெஞ்சி, மன்றாடி அழுத காரணத்தாலும், அவளது கணவர் மீண்டும் அவளை நம்பும்படி காரியங்கள் எல்லாம் செய்து மீண்டும் இல்லற உறவில் இணைந்துவிட்டாள்.

இங்கே?

இங்கே?

ஆனால், இங்கே அப்படி இல்லை. என் கணவரிடம் கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லை. இப்போதும் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா? அவளை எப்படியாவது மீண்டும் அடைய முடியுமா என்று தான் யோசித்து வருகிறார். என்னுடன் வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு இல்லை.

வெளியேறினேன்!

வெளியேறினேன்!

அவளிடம் இருந்து பிரித்துவிட்டால் என்னுடன் வாழ்வார் என்று கருதி தான் அத்தனை முயற்சிகள் எடுத்தேன். ஆனால், நடந்ததோ வேறு. இன்றும் கூட என் கணவருக்கு அவள் மீது தான் ஆசை எனும் போது, இங்கே நான் எதற்கு வெட்டியாக இருக்க வேண்டும்?

வீட்டைவிட்டு வெளியேறுவது தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.

அம்மா!

அம்மா!

இனிமேல் உங்களுடன் வாழ்ந்து எந்த பயனும் இல்லை. நான் அம்மா வீட்டுக்கே செல்கிறேன் என கூறி கிளம்பிவிட்டேன். என் அம்மாவுக்கும், கணவருக்கும் இடையே இருக்கும் ஒரே ஒற்றுமை... என்ன நடந்தாலும் சரி வெளியுலகில் கௌரவம் கெட்டுவிட கூடாது. இதற்காக இவர்கள் இருவரும் செய்த காரியம் என்ன தெரியுமா?

எப்படி வேணாலும் இருக்கட்டும்...

எப்படி வேணாலும் இருக்கட்டும்...

என் அம்மா: அவர் எப்படி இருந்தாலும் சரி, என்ன தவறு செய்தாலும் சரி... திருமணமான பெண் கணவருடன் இருப்பது தான் சரி. நீ இங்கே வந்துவிட்டால் மட்டும் அவர் திருந்திவிடுவாரா? என கேள்விக் கேட்கிறார்.

என் கணவர்: நீ வேண்டுமானாலும் உனக்கு பிடித்த யார் உடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள், எப்படி வேண்டுமானாலும் உன் இஷ்டத்திற்கு இரு.. நான் உன்னை எதுவும் கேட்க மாட்டேன். ஆனால், என்னுடன் இந்த வீட்டில் இரு என்கிறார்.

கௌரவம்!

கௌரவம்!

அம்மா, கணவர் இருவருக்கும் கௌரவம் தான் முக்கியமாக இருக்கிறது. என் அம்மாவுக்கு என் வாழ்க்கை எப்படி போனாலும் பரவாயில்லை. என் கணவருக்கு நானே எக்கேடுக்கெட்டு போனாலும் பரவாயில்லை. இவர்கள் மத்தியில் வாழ்வதற்கு பதிலாக மடிவதே சிறந்தது என தற்கொலை செய்துக் கொள்ள முற்பட்டேன்.

வலி!

வலி!

ஆனால், சாவும் எனக்கு எளிதாக கிடைக்கவில்லை. நான் ஒவ்வொரு முறை தற்கொலை முயற்சிக்கும் போதும் என் கணவர் என்னை தடுத்துக் காப்பாற்றிவிடுகிறார். என்னை காப்பாற்ற அவர் எடுக்கும் முயற்சியில் ஒரு பங்கு கூட என்னுடன் அவளை மறந்து வாழ எடுக்கவில்லை என்பது தான் என்னில் அதிக வலியை அதிகரிக்கிறது.

போதை!

போதை!

வாழவும் வழியில்லை, சாகவும் வழியில்லை. என் அம்மா மற்றும் கணவரால் இப்போது எனது நிலை போதைக்கு அடிமையானவள் என்றிருக்கிறது. எனக்கு வேறு வழியில்லை. மனம் மரத்து போன என் வாழ்வில், மனதின் வலியை மறைக்க உடலும் மரத்துப் போகட்டும் என தோன்றுகிறது. தினமும் போதை உட்கொள்கிறேன்.

எப்படியும் ஒரு நாள் இந்த போதை என்னை கொன்றுவிடும் என அறிவேன். அப்படியாவது இவர்கள் இருவர் மத்தியில் வாழும் கொடுமையில் இருந்து தப்பித்துவிடலாம் பாருங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

My Story: Own Mother and Husband are the Reason for My Drug Addiction!

My Story: Own Mother and Husband are the Reason for My Drug Addiction!
Story first published: Tuesday, December 12, 2017, 14:00 [IST]