பணத்திற்காக அனுதினமும் என் உணர்ச்சிகளை கொல்லும் கணவன் - My Story #095!

Subscribe to Boldsky

நான் பள்ளியில் பயிலும் போது அனைவராலும் மெச்சப்படும் மாணவியாக இருந்தேன். எனது மொத்த கவனமும் கல்வியில் மட்டுமே இருந்தது. ஆகையால், காதல் அல்லது ஆண்கள் மீது எனது கவனம் சிதறியது இல்லை. நான் பெரும்பாலும் என் பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன் கூட அதிகம் பேசியது இல்லை.

நான் ஒரு மிடில்-கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவள் என்பதாலும், எனது பெற்றோர் என்னை எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள் என்பதை அனுதினம் கண்டதாலும் காதல், கீதல் என எண்ணைத்தை அலைபாயவிட்டதில்லை. எனக்கு கல்வியும், வேலையும் தான் முக்கியமாகப்பட்டது.

படித்து முடித்து செட்டிலான பிறகு காதல் செய்துக் கொள்ளலாம் என இருந்தேன். ஆனால், படித்து முடித்த பிறகு என் வாழ்வே முடிந்து போகும் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படிப்பு!

படிப்பு!

நான் பள்ளி காலங்களிலும் சரி, கல்லூரி காலங்களிலும் சரி ஒரு நல்ல மாணவி என்ற பெயரை தான் எடுத்துள்ளேன். இடைவேளை, மாலை என எப்போது நேரம் கிடைத்தாலும் படிப்பதை மட்டுமே கருத்தாக கொண்டிருந்தேன். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்தேன்.

ப்ரபோஸ்கள்!

ப்ரபோஸ்கள்!

இதே சமயத்தில் எனக்கு நிறைய ஆண்களிடம் இருந்து ப்ரபோஸ்களும் வந்தன. ஆனால், அதை ஏற்கும் மனதை நான் கொண்டிருக்கவில்லை. என்னைப் பொறுத்த வரை ஓர் ஆண் வாழ்வில் ஒரு பெண் தான் இருக்க வேண்டும். ஒரு பெண் வாழ்க்கையில் ஒரு ஆண் தான் இருக்க வேண்டும். இது தான் திருமண வாழ்க்கை குறித்த எனது கொள்கை.

ஆனால், இந்த கொள்கை எனது வாழ்வில் அப்ளை ஆகவில்லை.

வேலை!

வேலை!

போஸ்ட்-கிராஜுவேஷன் முடித்த கையோடு எனக்கு என் நகரிலேயே ஒரு நல்ல வேலை கிடைத்தது. என்னுடன் படித்த தோழிகள் பலருக்கு ஒவ்வொருவருக்கும் திருமணம் நடக்க ஆரம்பித்தது. ஆனால், எனக்கு திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இல்லை. முதலில் நான் வாழ்வில் செட்டில் ஆகவேண்டும். அதன் பிறகு திருமணம் செய்துக் கொள்ளலாம் என இருந்தேன். இது தான் சரி என என் உள் மனதில் ஒரு அசரீரி சொல்லிக் கொண்டே இருக்கும்.

என்னுடன் பயின்ற மாணவிகள் திருமணத்திற்கு பிறகு என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை அறிந்ததும், இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்ற முடிவை எடுக்க ஒரு காரணமாக இருந்தது.

அவன்!

அவன்!

இந்த காலக்கட்டத்தில் தான் நான் அவனை சந்தித்தேன். சந்தித்த சிறுது காலத்திலேயே அவன் மீது ஆழமான காதலில் விழுந்தேன். அவன் எனது உறவுக்காரன் என்பதால் எங்களுக்குள் புரிதல் மிக சீக்கிரமாக உண்டானது. நாங்கள் இருவரும் ஒரே ஊரில் இருக்க திட்டமிட்டோம்.

இடம் பெயர்ந்தேன்!

இடம் பெயர்ந்தேன்!

அவன் வேலை செய்யும் நகருக்கு வேலை தேடிக் கொண்டு சென்றேன். நாங்கள் இருவரும் ஒரே நகரில் வாழ துவங்கினோம். அது ஒரு கனவு போல இருந்தது. பிடித்த நபரை நினைக்கும் போதெல்லாம் காணும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்காது. ஆனால், எனது கனவு மெல்ல, மெல்ல, கெட்டக் கனவாக மாற துவங்கியது.

ஏ.டி.எம் கார்டு!

ஏ.டி.எம் கார்டு!

ஒரு நாள் தனது ஏ.டி.எம் கார்டு தொலைந்துவிட்டது என வந்து நின்றான். அப்ளை செய்தால் வர ஓரிரு வாரம் ஆகும் போல... அதுநாள் வரை என்ன செய்வது என புலம்பினான். நான் ஒரு முட்டாள், வங்கிக்கு சென்று பணம் எடுக்கலாம் என்பதை கூட யோசிக்காமல். எனது ஏ.டி.எம் கார்டினை கொடுத்து அனுப்பினேன்.

ஆனால், இதைவிட நான் பெரிய முட்டாள் என அவன் அறிந்திருந்தான். ஆம்! அவன் என்னிடம் கூறியது முற்றிலுமான பொய். என்னிடம் இருந்து பணம் பெறவே, அப்படி கூறியிருந்தான்.

ஊதியம்!

ஊதியம்!

என்னுடைய சம்பளம், அவன் வாங்கும் சம்பளத்தை விட இரு மடங்கு அதிகம். ஒரு நாள் என்னிடம் வந்து ஒரு ஜாயிண்ட் அக்கவுன்ட் ஒன்று ஆரம்பிக்கலாம். அதில், நமது சம்பளத்தின் பாதி அளவை சேமிப்பில் போடலாம். அது பின்னாளில் நமக்கு உதவும் என கூறினான்.

எனது பாதி சம்பளம், அவனது முழு சம்பளம். இதில் சமநிலை எங்கே இருக்கிறது? இப்படியாக எனது பணத்தை ஏமாற்ற துவங்கினான்.

வீட்டு வேலை!

வீட்டு வேலை!

வீட்டு வேலை என்றும் ஏதும் செய்யமாட்டான். நான் தான் அவனது வீட்டு வேலைகளையும் சேர்த்து செய்து தர வேண்டும். அவனது துணிகளை நான் தான் எப்போதும் துவைத்து தருவேன். இதெல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதில் என்ன இருக்கிறது காதலன் என்று தான் இருந்தேன். ஆனால், இதைவிட மோசமாக எங்கள் உறவு மாறியது.

திட்டினான்!

திட்டினான்!

எந்த காரணமும் இன்றி, எல்லார் முன்னிலையிலும் என்னை திட்ட ஆரம்பித்தான். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதே அவனது குறியாக இருந்தது. எனக்கு இவன் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறான் என்பதை ஆரம்பத்தில் அறிந்துக் கொள்ள முடியவில்லை.

பிறகு தான் அறிந்தேன், அவனை விட நான் அதிகம் சம்பாதிப்பதே இதற்கெல்லாம் காரணம் என.

ப்ரேக்-அப்!

ப்ரேக்-அப்!

என்ன செய்வது பணம், மதிப்பு என இழந்தது வரை போதும் என ப்ரேக்-அப் செய்துக் கொண்டோம். நான் மீண்டும் வேறு நகருக்கு பணியிட மாற்றம் பெற்று சென்றேன். ஆரம்பத்தில் கொஞ்ச நாள் சரியாக வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. தட்டுத்தடுமாறி என் மனதை சமநிலைப்படுத்திக் கொண்டேன்.

மீண்டும் ஒருவன்...

மீண்டும் ஒருவன்...

என்னுடன் பணிபுரியும் ஒருவன் என்னிடம் மிகவும் நெருக்கமாக பழக துவங்கினான். என்னை பற்றி ஏதேனும் கேட்டுக் கொண்டே இருப்பான். ஏன் இப்படி இருக்கிறாய்? உனக்கு என்ன பிரச்சனை என நச்சரித்துக் கொண்டே இருந்தான். ஒரு நாளில் எரிமலையாய் வெடித்து, எனது கடந்த கால வாழ்க்கை குறித்து கொட்டித் தீர்த்துவிட்டேன்.

லவ் யூ!

லவ் யூ!

என்னை பற்றியும், எனது கடந்த கால உறவில் நடந்த அத்தனை விஷயங்கள் குறித்தும் கூறிய பிறகு... என்னிடம் பிரபோஸ் செய்தான். ஆனால், அதை ஏற்கும் மனநிலையில் நான் இல்லை. அவனும் என்னை விடுவதாய் இல்லை. மீண்டும், மீண்டும் என்னை காதலிப்பதாக கூறிக் கொண்டே இருந்தான். எனது கடந்த கால வாழ்க்கை பற்றி அறிந்தும் அவன் என்னை ஏற்க முயல்வது, என்னில் கொஞ்சம், கொஞ்சமாக காதல் ஊற்றெடுக்க காரணமாக இருந்தது.

நேர்மை!

நேர்மை!

அவன் என்னை நேர்மையாக அணுகியது எனக்கு பிடித்தது. ஓர் நாள் அவனது காதலுக்கு சரி என்றேன். சரி என கூறிய சிறு காலத்திலேயே எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. எப்படியோ, எனது வாழ்க்கையில் சுபம் கார்டு போடப்பட்டுவிட்டது என்ற நிம்மதி பெருமூச்சு விடுமுன். மீண்டும் அதலபாதாளத்தில் விழுந்தது என் வாழ்க்கை.

எல்லாம் உன்னால தான்...

எல்லாம் உன்னால தான்...

திருமணமான ஓரிரு மாதத்தில் அவன் தனது வேலையை விட்டான். அதற்கான காரணம் என அவன் எதுவும் என்னிடம் கூறவில்லை. நான் தான் அவனது வாழ்வில் வந்த Bad Luck என்றான். என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனாக என்னை விரும்பினான். அவனை ஏற்று திருமணம் செய்துக் கொண்டேன். இப்போது உன்னால் தான் என் வேலை போனது என புலம்ப துவங்கிவிட்டான்.

கடன்!

கடன்!

அவன் முன்பு வாங்கிய கடன்களை அடைக்க எனது நகைகளை விற்றேன். வங்கி சேமிப்பில் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்துக் கொடுத்தேன். எனக்கும் அவனுக்கும் திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. தினமும் ஏதோ ஒன்று கூறி உணர்வு ரீதியாக டார்ச்சர் செய்கிறான்.

இதற்கெல்லாம் என்ன செய்வதென்ற பதில் என்னிடம் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    My Story: Money Makes Life Beautiful, Not Love!

    My Story: Money Makes Life Beautiful, Not Love!
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more