கணவனால் தான் யாரென்றே மறந்தப் பெண்! உலுக்கும் உண்மைச் சம்பவம்!!!

Subscribe to Boldsky

வெளியுலகத்தில் பெண்கள் எப்படி வளர்ந்துவிட்டரகள். பெண்களின் வளர்ச்சி அபரிதமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கம் பெண்கள் அடிமையாக இருப்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

Inspiration story of a girl who abused by her husband

குறிப்பாக திருமணம் என்ற பெயரில் பெண்களை அடிமைபடுத்துவது என்பது இன்றளவும் அப்டேட்டட் வெர்சனாக நடந்து கொண்டிருக்கிறது. கணவன் மூலமாக பல்வேறு சித்ரவதைகளை கொடுமைகளை அனுபவித்து அதிலிருந்து மீண்டு வந்தவரைப் பற்றிய கதை தான் இது. இவரது வார்த்தைகள் நம்மில் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை அளிக்க கூடியதாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லிசாவே உரையாற்றுகிறார்.....

லிசாவே உரையாற்றுகிறார்.....

நான் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் ஒரு பெண். அங்கே ஆப்ரிக்க அமெரிக்க மக்கள் வசிக்கும் ஹார்லெம் க்ரிப் என்னுமிடத்தில் இருக்கிறேன். பள்ளியிலிருந்து வீடு வந்து சேர்வதற்குள் குறைந்தது மூன்று வன்முறைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டேன். படிப்பு எனக்கு சுத்தமாக ஏறாது என்று முத்திரை குத்தப்பட்டது.

Image Courtesy

நிர்பந்தம் :

நிர்பந்தம் :

நான் வேண்டாம் என்று சொல்ல நினைத்த ஒவ்வொரு நொடியும் ஆம், சரி,சம்மதம் என்றே சொல்ல வைக்கப்பட்டேன், அதாவது சொல்ல நிர்பந்திக்கப்பட்டேன். அவன் என் கணவன் என்னை அடித்து துன்புறுத்தினான். இதற்கு முன்னால் அப்படியொரு சித்திரவதையை அனுபவித்ததில்லை .

என்னை மன ரீதியாக,உடல் ரீதியாக,வார்த்தைகளால், எமோஷனலாக என்று எப்படியெல்லாம் தொந்தரவு செய்ய முடியுமோ அத்தனையும் செய்தான். நான் உயிருடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே அதிலிருந்து வெளியேற வேண்டும், அந்த உறவு வேண்டாம் என்று நினைத்தேன்.

பல கேள்விகள் :

பல கேள்விகள் :

எனக்கு மிகவும் கோபமாக வந்தது, ஒரு பக்கம் குற்றவுணர்ச்சியாகவும் இருந்தது. எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு இன்னும் ஏன் இங்கே இருக்க வேண்டும் என்ற கேள்வி என்னுள் எழுந்தது.

அப்போது என்னுள் எழுந்த மிகப்பெரிய கேள்வி, இங்கிருந்து எப்படி வெளியேறுவது? இந்த உறவை எப்படி முடித்துக் கொள்வது? குழந்தை? என்னுடைய அடுத்த கட்ட நகர்வு என்ன? என்று பல கேள்விகள் என் முன்னால் வந்து நின்றது.

மருத்துவமனையில் :

மருத்துவமனையில் :

அந்த நாள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. நான் ஒரு மருத்துவமனையில் இருந்தேன். அந்த மருத்துவர் என்னிடம் வந்து நின்று, லிசா யூ ஆர் க்ளினிக்கலி டிப்ரசடு என்றார்.

என்ன பதில் சொல்வது? எதுவும் தோன்றவில்லை எனக்கு பல சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தது

உங்கள் சிந்தனைகளை சிதைக்கும்:

உங்கள் சிந்தனைகளை சிதைக்கும்:

அப்போது நான் எந்த அளவுக்கு சோகமாக இருந்தேன் என்று அளவிட எல்லாம் முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் சொல்வேன்.

சோகமோ அல்லது உங்களை உற்சாகம் இழக்கச் செய்திடும் விஷயம் உங்களுக்குள்ளே நுழைவதை நீங்கள் பார்க்க முடியாது, அல்லது நுழைவதை தடுக்க முடியாது.

அது உங்களுக்குள் நிறைந்து உங்களையும் உங்களது சிந்தனைகளையும் சிதைக்கும் போது தான் நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று உங்களுக்கு தோன்றும்.

மனதளவில் பாதிக்க காரணம் :

மனதளவில் பாதிக்க காரணம் :

ஒரே நாளிலும் இந்த அத்தனை சோகமும் வெறுப்பும் என்னுள் குடிக் கொள்ளவில்லை. சின்ன சின்ன வேதனைகள், வலிகள், நீங்கள் அவமானப்படும் போது,

விருப்பமில்லாத ஒரு விஷயத்தை செய்ய சம்மதிக்கும் போது, வேண்டாம்,பிடிக்கவில்லை என்று சொல்ல நினைத்து அதை சொல்ல முடியாமல் தவித்த போது, கண்ணீரை மறைக்க நினைத்த பொழுது,

இப்படி ஒவ்வொரு கட்டங்களாக தேக்கி வைத்தவை தான் என்னை முழுதாக மனதளவில் பாதித்திருக்கிறது.

லிசா யார்? :

லிசா யார்? :

அப்போது அந்த மருத்துவரிடம் கேட்டேன். உங்கள் மருந்துகளை பின்ப்பற்றுவதற்கு முன்னால், நான் என்னை தேற்ற, என்னுடைய இந்த சூழலை மாற்ற ஏதாவது செய்யலாமா என்று கேட்டேன்.

லிசா என்ற நான் யார் என்ற கேள்வி எழுந்தது? நான் யார்?

ஜெலானியின் தாய். அவனின் மனைவி . அவன் கொடுமைப்படுத்திய மனைவி நான்.கணவன் செய்த கொடுமைகளை தந்தைக்கு தெரிந்து விடக்கூடாது என்று என் சோகத்தை என்னுள்ளே மறைத்துக் கொண்ட மகள் , நான் சோகமாக இருக்கிறேன், என் திருமண வாழ்க்கை மிகவும் வேதனையளிக்ககூஉடியதாக இருக்கிறது என்று எல்லாரிடமும் மறைக்கும் பெண்களில் ஒருத்தி நான்.

Image Courtesy

இது மட்டும் தான் நானா? :

இது மட்டும் தான் நானா? :

இது தான் நானா? இவ்வளவு தான் லிசாவா? இல்லையே நான் யாரென்றே மறந்து விட்டிருக்கிறேன்.

முப்பது நாட்கள் எனக்கு நேரம் கொடுங்கள். என்னை மீட்டெடுக்க இந்த 30 நாட்கள் எனக்கு தேவை அதற்கு பிறகு நீங்கள் சொல்லும் மருத்துவ முறைகளை நான் பின்ப்பற்றுகிறேன் என்றேன் அந்த மருத்துவரிடம். முழு மனதுடன் அந்த மருத்துவர் சம்மதித்தார். மனதில் எழுந்த எல்லா கேள்விகளையும் ஒதுக்கி விட்டு இதில் எல்லாவற்றிலுமிருந்து என்னை மீட்டெடுக்க வேண்டும் நான் யாரென்று கண்டடைய வேண்டும் என்ற ஒரே முடிவுடன் அங்கிருந்து வெளியேறினேன்.

மூன்று விஷயங்கள் :

மூன்று விஷயங்கள் :

வீட்டிற்கு வந்ததும் நான் மூன்று விஷயங்களை செய்தேன். என் அறைச் சுவற்றில் முழுவதும் உறுதி மொழிகளை ஒட்டினேன். நான் யாரென்று எனக்கு காட்டிடம் வாசகங்கள் அதில் இடம்பெற்றது.

நீ ஒரு அதிசயம், நீ அழகானவள், நீ அன்பு நிறைந்தவள்,இப்படி பல வாசகங்கள் என் அறையை ஆக்கிரமித்து இருந்தது. ஒவ்வொன்றிலும் நான் யார்? என் குணம் என்ற சிந்தனை தான் வெளிப்பட்டது. நிறைய புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். இன்னொரு உலகம் இப்படியும் ஓர் வாழ்க்கை இருக்கிறது என்று எனக்கு அப்போது தான் புரிந்தது.

கண்ணாடியில் :

கண்ணாடியில் :

தினமும் கண்ணாடியில் என் முகத்தைப்பார்த்து சொல்வேன்.

லிசா, உன்னால் நான் பெருமை கொள்கிறேன் உன்னை கொண்டாடுவதற்கு என்னிடம் காரணங்கள் இருக்கிறது.

இரண்டாவதாக லிசா,உன்னை மன்னிக்கிறேன் .

என் மனசாட்சியிடம் நானே சொல்லிக் கொள்கிறேன். பின்னர் என் மனதில் எழுந்த கேள்விகள், கோபம், தாழ்வு மனப்பான்மை எல்லாவற்றையும் விட்டெறியும் வகையில் நீ இதெல்லாம் செய்ய வேண்டும்.

உன்னையும் உன் மனதையும் வேறு சிந்தனைகள் நெருங்க விடமால் உன்னை எப்போதும் பிஸியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டேன்.

முப்பது நாட்கள் :

முப்பது நாட்கள் :

அந்த முப்பது நாட்களும் இப்படியே தான் நடந்தது. என்னாலேயே அந்த மாற்றத்தை நன்றாக உணர முடிந்தது. முப்பது நாட்கள் முடிவில் மீண்டும் அதே மருத்துவரை சென்று சந்தித்தேன்.

என்னை மகிழ்ச்சியுடன் வரவேற்ற அந்த மருத்துவர் நான் எப்படியிருக்கிறேன், முப்பது நாட்களில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது என்பதை பல கேள்விகள் மூலமாக தெரிந்து கொண்டார், எல்லா கேள்வியும் கேட்டு முடித்த பிறகு அவர், லிசாம் உன்னிடம் இன்னும் இரண்டு கேள்விகள் கேட்க வேண்டும்.

முப்பது நாட்கள் நீ என்ன செய்தாய்? அதை நான் மற்ற நோயாளிகளுக்கும் பயன்படுத்தலாமா? என்று கேட்டார். அதிலிருந்தே நான் தெரிந்து கொண்டேன் நான் முழுதாக மீண்டு விட்டேன். ஆம் நான் என் பழைய நிகழ்வுகளிலிருந்து மீண்டு விட்டேன்.

தந்தையுடன் :

தந்தையுடன் :

எனக்கு 12 வயதாகும் போது என் தந்தையுடன் முதன் முதலாக ஹோட்டலுக்குச் சென்றேன். என் இறங்குவதற்கு ஏதுவாக காரின் கதவை திறந்து விடுவதில் ஆரம்பித்து எனக்கான உணவு, குளிர்பானம் என எனக்கு வேண்டியவற்றை ஆர்டர் செய்தார்.

பன்னிரெண்டு வயதில் எனக்கு அது பெரிய விஷேசமாக ஏதுவும் தெரியவில்லை. எல்லாம் முடித்து விட்டு மாலையில் வீடு திரும்பிவிட்டோம். வீட்டிற்கு நுழைந்ததும் எனக்கு முன்னால் இருந்த கதவினை அப்பா இருக்கமாக பிடித்துக் கொண்டார்.

அந்த கதவை திறக்காமல் மூடினார். அதனால் என்னால் உள்ளே செல்ல முடியவில்லை , எனக்கு ஒன்றுமே புரியவில்லை ஏன் அப்படி இப்படி கதவை மூடுகிறார்? புரியாமல் அப்பா, என்னாச்சு என்றேன்.

வாழ்க்கைப் பாடம் :

வாழ்க்கைப் பாடம் :

அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் இன்றளவும் எனக்கு மனதில் பதிந்திருக்கிறது, நான் மீண்டு வர அதுவும் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.

லிசா, உனக்கு சில விஷயங்களை சொல்ல வேண்டும். இன்றைக்கு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றேன் இல்லையா? அப்போது நீ எப்படி நடத்தப்பட்டாய்... என்று பார்த்தாய் தானே. அதே இப்போது நீ எப்படி நடத்தப்பட வேண்டும் என்று நீயே தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள் .

அது உன் கையில் தான் இருக்கிறது. என் வாழ்க்கையில் மிகப்பெரிய பாடமாக அதைப் பார்க்கிறேன்.

என் தவறு :

என் தவறு :

இதில் என்னுடைய தவறு மிகவும் சிறியது தான். அமைதியாக இருந்தது. அவன் தவறு செய்யும் போது, என்னை அவமானப்படுத்தும் போது, அடித்து துன்புறுத்தும் போது எல்லாம் அமைதியாக இருந்தது.

அவன் செய்யும் தவறுகளை பொறுத்துக் கொண்டது. இவை தான் என் திருமண வாழ்க்கையில் நான் செய்த தவறுகள்.

காதலிக்கும் நடைமுறை :

காதலிக்கும் நடைமுறை :

இங்கே யாரும் வந்து எப்படி காதலிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்க மாட்டார்கள். தங்களை காதலிக்கவே சொல்லிக் கொடுக்காத போது பிறரை எப்படி காதலிக்க வேண்டும் மதிக்க வேண்டும் என்றெல்லாமா சொல்லிக் கொடுப்பார்கள்.

 வார்த்தைகள் :

வார்த்தைகள் :

வார்த்தைகள் தான் எல்லா மாயங்களையும் செய்கிறது நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் தான் அத்தனைக்கும் காரணமாய் இருக்கிறது. உங்களைப் பற்றிய அபிப்ராயத்தை நீங்கள் உதிர்க்கும் வார்த்தைகள் தான் காரணம்.

உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் உங்களுடைய வார்த்தைகளை,பேசும் தொனியை மாற்றிப்பாருங்கள்.

இந்த மாற்றத்திற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டியது. சொல்பவரின் கருத்துக்களை மட்டும் கவனித்தால் போதும். சொல்லவரையும் அவரது தோற்றத்தையும்,அவரது பின்புலன்களையும் ஆராய்ந்து அதற்கான பதிலாக இருக்க வேண்டாம்.

உங்களை தாழ்த்திக் கொள்ள வேண்டாம் :

உங்களை தாழ்த்திக் கொள்ள வேண்டாம் :

இந்த காரணங்களுக்காக நான் பொறுத்துக் கொண்டேன் என்று தவறு செய்பவர்களுக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுக்காதீர்கள். உங்கள் மனதை நெருடும் எந்த விஷயமாக இருந்தாலும் உங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்திடுங்கள்.

திருமண வாழ்க்கை ஒரு விளையாட்டைப் போன்றது. உங்களை நேசித்தால் மட்டுமே உங்களுடைய குடும்பத்தையும் நேசிக்க முடியும். என் குடும்பத்தை நான் அளவுக்கு அதிகமாக நேசிக்கிறேன்.

இதை விட்டால் எனக்கு வேறு கதியில்லை என்று உங்களை நீங்களே சுருக்கி கொள்ளாதீர்கள்.

வடுக்கள் :

வடுக்கள் :

எனக்கு நடந்த வேதனைகளையும் வலிகளையும் என் உடலில் சுமந்து கொண்டிருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் என் அடையாளமாக மாறிவிட்டிருக்கிறது. அதனால் தான் நான் இன்றைக்கு ஒரு வெற்றியாளராக இருக்கிறேன்.

இப்போது நான் யார் தெரியுமா?

நான் செக்‌ஷுவல் அப்யூசில் இருந்து மீண்டு வந்தவள்.

அதிக புத்தகங்கள் விற்கும் எழுத்தாளர்கள் ஏழு பேரில் நானும் ஒருத்தி.

மல்டி மில்லியன் டாலர் பிஸினஸ் செய்து கொண்டிருக்கிறேன்.

30 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு பயன்படுகிறது என்னுடைய சர்வதேச பிராண்ட்.

நான் ஒரு பெண் :

நான் ஒரு பெண் :

உங்கள் சோகங்களை உங்களையுடைய அடையாளமாக மாற்றாதீர்கள். அவை உங்க்ளின் அடையாளமாக மாறிப்போகவும் அனுமதிக்காதீர்கள்.

அவற்றையும் தாண்டி உங்களுக்கான அடையாளம் ஒன்று இருக்கிறது. ஆம் இப்படித் தான் என்னை கண்டடைந்தேன்.

நான் சம்பாதித்திருக்கும் பேரும் புகழும், நண்பர்களும் உறவினர்கள் என எல்லாவற்றிற்கும் முன்னால்

நான் ஒரு பெண்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Inspiration story of a girl who abused by her husband

    Inspiration story of a girl who abused by her husband
    Story first published: Tuesday, October 24, 2017, 13:28 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more