For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நான் மட்டும் அவளை விரும்பவில்லை என்றால் அவளுக்கு இந்த கதி நேர்ந்திருக்காது My story#48

கிராமத்தில் இருக்கும் ஒரு பெண் காதலித்த காரணத்தினால் ஒரு கிராமமே சுடுகாடாகிப் போனதன் வரலாறு தெரியுமா

|

ஏய்... அங்க உட்கார்ந்துட்டு என்ன பண்ண போற கிளம்பி வாடி என்று எங்கள் பள்ளி பக்கத்து தெருவில் நின்று கொண்டு அழைத்துக் கொண்டிருந்தான்.

போகவா வேண்டாமா என்றெல்லாம் சிந்திக்க நேரமில்லை.யோசிக்க கூட அவகாசமின்றி என் பள்ளியறையின் ஜன்னல் கம்பிகளுக்கு நடுவே அவனின் முகம் தெரிந்ததுமே எழுந்து விட்டேன்.

Girl murdered because of her love

டீச்சர்... பாத்ரூம்

ஒரு முறைப்பு. போ... போய்த்தொல இப்பதான சாப்பாட்டு பீரியட் முடிஞ்சது.அப்ப எல்லாம் என்ன பண்ணிட்டு இருந்த?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எங்கள் ஊரு :

எங்கள் ஊரு :

வேளா வேளைக்கு சோறு கிடைக்கிற மாதிரி தான் எங்கள் ஊரில் பஸ் வரும். அப்படியான ஒரு குக்கிராம். ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே பஸ் உள்ளே ஆற்றுப்பாலம் வரை வரும். அதைப் பிடித்தால் வீட்டிற்கு பத்து நிமிடங்கள் மட்டும் தான் நடக்க வேண்டும்.

அதை விட்டால் பக்கத்து ஊரில் இருக்கும் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட அங்கிருந்து ஷேர் ஆட்டோ பிடித்து எங்கள் ஊர் எல்லையில் இறங்கி பதிமூன்று கிலோமீட்டர் தூரம் வரை நடக்க வேண்டும்.

சொந்தங்கள் :

சொந்தங்கள் :

அப்படியே பச்சை போர்வை போர்த்தியது போல் இருக்கும். ஊரின் எல்லையில் ஒரே ஒரு டீக்கடை அங்கு எப்போதுமே உட்கார்ந்திருக்கும் பெர்மணண்ட் கஸ்டமர்கள்.

ஒவ்வொரு தெருவிலும் அத்த,மாமா,சித்தப்பா, பெரியப்பா, அப்பத்தா,அக்கா,சித்தி,ஆச்சி,தாத்தா என ஏதோ ஒரு சொந்தம் இருக்கும்.

பள்ளி முடிந்து வரும் வழியில் ஏட்டி... இப்பத்தான் விட்டானுகளா? பத்ரமா போய் சேரு...நேரத்துலயே வரக்கூடாதா என்று வரிசையாக ஆளாலுக்கு சொல்லிக் கொண்டே வருவார்கள்.

மழை :

மழை :

அப்படி ஒரு நாள் மாலையில் வீடு திரும்பும் போது தான் மழை தூர ஆரம்பித்தது. மழை வேகமெடுப்பதற்குள் சென்று விட வேண்டும் என்று நினைத்தால் அது எல்லாரையும் முந்திக் கொண்டு கொட்ட ஆரம்பித்தது.

வேறு வழியின்றி நானும் என்னுடன் வந்த மூன்று பேரும் ஒரு மரத்திற்கு கீழே ஒதுங்கி நின்றோம்.

ஏய்...என் புள்ளைகளா மழைல மரத்துக்கு கீழ நிக்கிறீக... வாங்க அந்த குடவுன்ல நில்லுங்க நம்ம பய கடை தான் நான் சொல்றேன் என்று எங்களை வம்படியாக அழைத்தார்.

முதல் அறிமுகம் :

முதல் அறிமுகம் :

ஏய் வேணாம்டீ நம்ம தனியா இருக்கோம். அப்றம் நம்மள கொன்னு போட்ருவாய்ங்க என்று பயந்து கொண்டு நிற்கு இடி இடித்து பயமூட்டியது. தெருவில் ஒரு ஈ,காக்கா கூட இல்லை இங்கே சொட்ட சொட்ட நனைந்து கொண்டு நிற்பதற்கு உள்ளேயே செல்லலாம் என்று நினைத்து எங்கள் விவாதத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு அவர் பின்னால் சென்றோம்.

முறைமாமன் :

முறைமாமன் :

வெளியே காட்டாறு போல அவ்வளவு மழை கொட்டுவதைக்கூட பொருட்படுத்தாமல் தூங்கிக் கொண்டிருந்தான் ஒருவன்.

ஏலேய்... நல்ல சொகுசா இருக்கப்போல எந்திர்றா என்று காலைத் தட்ட முழித்துக் கொண்டான். நம்ம ஊர் புள்ளைக, பட்டணத்துல படிக்குதுக பாவம் மழைல நின்னுச்சு அதான் இங்க கூட்டி வந்திருக்கேன்.மழ விட்டதும் போயிருவாங்க என்று சொல்லிக்கொண்டிருக்க அவன் தூக்க கலக்கத்தில் மண்டையாட்டிக் கொண்டிருந்தான்.

கேள்விகள் :

கேள்விகள் :

சிறிது நேரத்தில் வந்தவர் சென்று விட. ஆள் ஆரவமற்ற அந்த பகுதியில் நாங்களும் அவனும் மட்டுமே தான் இருந்தோம். படிச்சு என்னத்த கிழிக்க போறீக.. காலாகாலத்துல கல்யாணம் பண்ண வேண்டியது தான,பேரென்ன, என்ன படிக்கிற, அப்பா பேரு என்று எங்களை நச்சரித்துக் கொண்டேயிருந்தான்.

நாங்களும் வேண்டா வெறுப்பாக அவனுக்கு பதில் உதிர்த்துக் கொண்டிருந்தோம்.

உன் பேரு என்னடி...

மரியாதையா பேசுங்க..

அடேயப்பா மகாரணியம்மா உங்க பேரு என்னங்கம்மா

தேன்மொழி.

இதெல்லாம் ஒரு பேரு இதுக்கு இவ்ளோ பில்டப்பா உங்கப்பன் என்னடி பண்றான்.

ம்ம்.... அருவா செய்ற பட்டர வச்சிருக்காரு.

ஏது.. ஆட்டுக்கறி வெட்டுற அருவாளா? என்னடி உங்கப்பன் கசாப்பு கடக்காறனா

அது மனுஷனையும் வெட்டும்.

கிளியும் ஒணானும் :

கிளியும் ஒணானும் :

அடேயப்பா ரொம்ப உஷாரா தான் இருக்க என்று சொல்லிவிட்டு எழுந்தான் , நாங்கள் பயந்து பின் வாங்க பேசிக்கொண்டேயிருந்தான்.

ஏய் நான் உனக்கு முறப்பையன் டீ ...

நீ என் அத்தப்பொண்ணு. நீ என்னைய தான் கட்டிக்கணும். எங்கம்மா சொல்லிட்டேயிருக்கும் உன் மாமனுக்கு கிளி மாதிரி ஒரு பொண்ணு இருக்கும்னு

ஆனா ஒணான் மாதிரி இருக்கு...பரவாயில்ல சமாளிச்சிக்கிறேன்.

 திண்பண்டம் :

திண்பண்டம் :

எங்கள் இருவருக்கும் வாய்த்தகராறு முற்றியது...மூஞ்சப் பாரு குரங்கு மூஞ்சி சுடு தண்ணி ஊத்தின மாதிரி

மழை நிற்க என்னை வலுக்கட்டாயாமாக இழுத்து வந்தார்கள் தோழிகள். அடியே கருவாச்சி இங்கனப்பக்கம் தனியா வந்திராத குரங்கு என்னவேணா பண்ணும் ஜாக்கிரத என்றான்.

அதன் பின்னர் அவ்வழியாக தோழிகளுடன் செல்லும் போதெல்லாம் ஏய் தேனு தேனு... என்று அழைத்து கையில் ஏதோ ஒரு திண் பண்டத்தை கொடுத்தனுப்புவான் வேண்டாம், வாங்க மாட்டேன் என்று எவ்வளவோ முறை சொல்லியும் கேட்காமல் வம்படியாக திணிப்பான்.

அப்பாட்ட சொல்லிடுவேன் :

அப்பாட்ட சொல்லிடுவேன் :

அன்று எங்கள் பள்ளி வாசலலிலேயே காத்திருந்தான்.

தேனு... ஒரே ஒரு நிமிஷம் நில்லேன்... என்னைய ஒரே ஒரு வாட்டி மாமான்னு கூப்டேன் என்று வழி நெடுக சொல்லிக் கொண்டே வந்தான். உடன் வருபவர்கள் குனிந்து சிரித்துக் கொண்டேயிருக்க அவமானக போய்விட்டது.

அப்பாட்ட சொல்லிடுவேன் இங்கயிருந்து போங்க...

மாமான்னு கூப்டு :

மாமான்னு கூப்டு :

உங்கப்பன போய் ஏண்டி மாமான்னு சொல்ற ஏண்ட்ட சொல்றீ... நான் என்ன ரோட்ல போற ஒருத்தனா? உன் முறைப்பையன் தான். என்னைய சொல்லாம வேற யார சொல்லப்போற என்று கேட்டுக் கொண்டே என் கையிலிருந்த சாப்பாட்டுக்கூடையை பறித்துக் கொண்டான்.

பயந்து அழ ஆரம்பிக்க...

ஒரே ஒரு வாட்டி கொடு மாமான்னு சொல்லு கொடுத்திடுவேன்..

கொடுங்க...

சரி மரியாதையாதான் கூப்டுவியா, எப்டியோ மாமான்னு சொல்லு... எங்க சொல்லு கொடுங்க மாமா என்று உச்சரித்து காண்பிக்க

நான் அழுது கொண்டே நின்றிருந்தேன்.

ஒரு வாட்டி சொல்லேன் என்று கெஞ்ச

நீண்ட இழுப்பறிக்குப் பின் கொடுத்துரு மாமா என்றேன் சிணுங்கி கொண்டே... மறுப்பேச்சு இல்லை

தவணிக்கு மாற்றம் :

தவணிக்கு மாற்றம் :

பேச ஆரம்பித்தோம் பழக ஆரம்பித்தோம்.

நேத்து ஏண்டி போன் பண்ல உன்ட்ட பேசணும்னு எவ்ளோ நேரம் கடையிலயே இருந்தேன் தெரியுமா?

அச்சோ மன்னிச்சிக்கோ மாமா... ஆச்சியும் நானும் தான் வீட்ல இருந்தோமா அதான் பேச முடியல எல்லாரும் துணியெடுக்க டவுனுக்கு போயிட்டாங்க.

சரி உனக்கு ஒரு கிஃப்ட் வாங்கியிருகேன் தெரியுமா?

எனக்கா? என்னது மாமா??

நீ மொதோ கண்ணமூடு என்று சொல்லி என் கையில் ஒரு பையை திணித்தான்.திறந்துப் பார்த்தால் தாவணி.

ஹை.. தாவணி என்று கத்த

பிடிக்குமாடி...

ம்ம்ம்.... இத விட இத வாங்கிக் கொடுத்த மாமாவதான் ரொம்ப பிடிக்கும்.

மாமாவுக்காக அங்கேயே பள்ளிச்சீருடையில் இருந்து தாவணிக்கு மாறினேன்.

கல்யாணம் :

கல்யாணம் :

எப்படீ கல்யணாம்?

நீ எப்ப சொல்றியோ அப்பதான் மாமா...

இந்த வாய்க்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல.. நாளைக்கே உங்க வீட்டுக்கு பொண்ணு கேட்டு வரவா என்று கேட்க எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.

என்னடி ஊமக்கொட்டான் அமைதியா இருக்க....

விலகல் :

விலகல் :

இல்ல அன்னக்கி நானும் ஆச்சியும் மட்டும் இருந்தோம்னு சொன்னேன்ல அப்போ ஆச்சிட்ட உன்னைய பத்தி சொன்னேனா... அவங்க உன்கிட்ட எல்லாம் பேசக்கூடாதுன்னு திட்டிச்சு அப்பறம் கேட்டப்போ

நீ பத்தாவது கூட படிக்கல... போலீஸ் எல்லாம் பிடிச்சுட்டுப் போச்சு.. ரவுடிப்பயன்னு என்னென்னமோ சொல்லுச்சு. நான் நம்பவேயில்ல அப்பறம் உங்கப்பாக்கும் ஊர் தலைவருக்கும் ஏதோ சண்டையாமே அதனால் ஊருக்குள்ளேயே வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களாமே என்று ஒவ்வொன்றாக சொல்ல என் கையை இருக்கப்பிடித்திருந்தவன் சற்று விலகினான்.

நம்பலையா :

நம்பலையா :

ஊர்ல இல்லாம காட்டுலயா இருக்கோம். பேச வந்துட்டா பெருசா எந்திரிச்சு போடி போயி அந்த கிழவி சொல்றவனையோ கட்டிக்கோ... நல்லா வக்கணையா நாலு புள்ளைங்கள பெத்துப் போடு..

ஏன் கோவப்படற அதான் நான் நம்பலன்னு சொல்லிட்டேன்ல... ம்ம்ம் கிழிச்ச நம்பாதனால தான் இப்போ இவ்ளோ விளக்கமா கேக்குறியாக்கும்.

தேர்வு முடிவுகள் :

தேர்வு முடிவுகள் :

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிந்தது. என்னடி பன்னிரெண்டாங்கிளாஸ் முடிச்சுட்டு அடுத்து கல்யாணம் தான....

அடுத்து நிறைய படிக்கணும் மாமா...

படிச்சு என்ன செய்யப் போற என் மாமாவுக்கு கஞ்சி ஊத்துவேன்..

வெட்கச்சிரிப்பு சிரித்தான்.

பாஸ் ஆகிடுவியா..

மாமா.... நான் தான் ஸ்கூல் ஃப்ர்ஸ்ட் வருவேன்னு டீச்சருங்க எல்லாம் பேசிக்கிறாங்க தெரியுமா...

அடேயப்பா கெட்டிக்காரியாத்தான் பாத்து புடிச்சிருக்கேன் போலயே.

கனவு :

கனவு :

டவுன்ல போய் படிச்சிட்டு நல்ல வேல பாத்து நல்லா சம்பாதிக்கணும் அப்பறம் நம்ம கல்யாணம் சரியா மாமா... கல்யாணம் எங்கே நடத்த வேண்டும் யாரையெல்லாம் அழைக்க வேண்டும் என்று எதிர்கால திட்டங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

திடிரென அவளின் முகம் மாறியது. என் தோளில் சாய்ந்திருந்த தலையை நிமிர்த்தினாள் கை விலகியது. எழுந்து கொண்டாள். என்னடி ஆச்சு.... என்னாச்சு என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே என் தலையில் இரும்பு கோடாரியால் ஒரு அடி..

முதல் அடி :

முதல் அடி :

சுதாரித்து எழுவதற்குள் அவள் கத்தும் சத்தம் கேட்டது. ஏய்..யார்ரா நீங்க என்று எழுந்தால் எங்களைச் சுற்றி ஆறேழு பேர் நின்று கொண்டிருந்தார்கள்.

ஊர்க்காரன் எல்லாம் சொல்லும் போது என் பொண்ணு அப்டியில்ல கண்டிப்பா இருக்காதுன்னு சொன்னனேடீ பாவி... மானத்த வாங்கிட்டேயே அப்படியே கொன்னு போட்டுத்தான் மறுவேல என்று புடனியைப் பிடித்து அடித்து டாட்டா சுமோ காரில் இழுத்துச் செல்லப்பட்டாள்.

மருத்துவமனையில் :

மருத்துவமனையில் :

மாமா... என்று என்னை கை காட்ட கையில் ஒரு வெட்டு அவளுக்கு. வந்தவர்கள் சரமாரியாக என்னை தாக்கிவிட்டு குற்றுயிரும் குலையியுருமாய் விட்டுச் சென்றார்கள். கண் விழித்த போது மருத்துவமனையில் இருந்தேன்.

தேனு....

அம்மா அழுது கொண்டிருந்தாள். தங்கையும் அவளின் கணவரும் நின்றிருந்தார்கள்.

அவுக சவுகாசமே வேண்டாம்னு சொன்னேன் கேட்டியா... பாரு இப்ப என் புள்ளைக்கு வந்த கதிய பாரு... உன்ன இப்டி பாக்கவாடா நான் இருக்கேன்.... விட்டுருடா

தற்கொலை :

தற்கொலை :

தேனுக்கு என்னம்மா ஆச்சு...

தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.

அண்ணே வேணாம்னே அம்மா சொல்ற பேச்சக்கேளுண்ணே..

ஏய் எங்கடீ அந்தப்புள்ள

யாருமே பதில் சொல்லாமல் அழுது கொண்டேயிருந்தார்கள். எழுந்து உட்கார முயற்சித்தேன். முடியவில்லை

என் தேனுக்கு என்னாச்சு.. எங்கயிருக்கா? நான் அவளப்பாக்கணும் என்று கத்த

ஐயோ.... என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டாள் அம்மா. அண்ணே அந்த புள்ள கிணத்துல விழுந்து செத்துப் போச்சுண்ணே. அடக்கம் பண்ணி மூணு நாள் ஆவுது.

சுடுகாடாக மாறும் :

சுடுகாடாக மாறும் :

உலகமே இடிந்து விழுவது போல் இருந்தது.அதிர்ச்சியில் காதடைத்துக் கொண்டது. படிச்சு என்னடி செய்யப்போற.. மாமாவ கட்டிப்பேன் என்று அவள் சொன்ன அந்த வார்த்தைகள் தான் திரும்ப திரும்ப கேட்டது. சுற்றிலும் எங்குமே அவளின் முகம், அவள் பேசிய பேச்சுக்கள் தான் ஒலித்துக்கொண்டிருந்தது.

செத்துட்டாளா? நிஜமாவா? நீ போய் பாத்தியா என்று ஒவ்வொரு கேள்விக்கும் அழுகை அதிகமானதே தவிர எனக்கான பதில் கிடைக்கவில்லை.

என்னைய ஊரவிட்டே ஒதுக்கி வச்சாங்க... என் புள்ளைய இப்டி நடபொணமாக்கி வேடிக்க பாக்குதே... மாரிலும் தலையிலும் அடித்துக் கொண்டு அழுதாள். இந்த ஊரு சுடுகாடா போவணும்... தண்ணி கொடுக்க நாதியில்லாம சாவணும் என் வயிரெறிஞ்சு சொல்றேன் என்று சாபமிட்டாள்.

மறுபடியும் வருவாள் :

மறுபடியும் வருவாள் :

மாமா... எப்பயும் இறுக்கமா இப்டியே உன் கூடவே இருக்கணும். நமக்கு வயாசாகி கிழவன் கிழவி ஆனாக்கூட... இருக்குற வரைக்கும் உன்ன காதலிச்சுட்டேயிருக்கணும் என்றெல்லாம் சொன்னவள் இறந்து விட்டாளா?

அவளைக் கொண்டு வர ஏதேனும் வழியிருக்கிறதா??... ம்ம்ம்... அவ திரும்ப வருவாள்ள என்றேன் சந்தேகமாக

எதுக்கு கிணத்துல விழுந்தா?

பைத்தியம் :

பைத்தியம் :

பன்னிரெண்டாம் வகுப்பு பரிட்சைல மார்க்கு கம்மியா வரும்னு விழுந்திருச்சு...

கண்களை இறுக்க மூடிக் கொண்டேன்.கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது.

நான் மட்டும் அவளை காதலிப்பதாக சொல்லவில்லை என்றால் அவளுக்கு இந்த கதி நேர்ந்திருக்காது தானே... நான் கொன்றுவிட்டேன். அவளின் சாவுக்கு நானே காரணமாகிட்டேன். என் தேனை நானே கொன்றுவிட்டேன்.. நான் கொலை காரன். நான் கொலைகாரன்....

ஒருத்தியை பிணமாக்கி ஒருத்தனை பைத்தியமாக்கி வேடிக்கை பார்த்த அந்த ஊர் விரைவில் சுடுகாடாய் மாறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Girl murdered because of her love

Girl murdered because of her love
Story first published: Wednesday, November 8, 2017, 10:58 [IST]
Desktop Bottom Promotion