காதல் திருமணம் செய்தவர்களுக்கு இப்படியும் தண்டனை கிடைக்கும்... உஷார்! My story # 96

Subscribe to Boldsky

அம்முக்குட்டி சம்மத்தா சாப்டுவியாம் அம்மா அப்போதான் கத சொல்வேன்... சரியா என்று மகளை சமாதனப்படுத்தி ஒரு தோசையை முழுங்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிறதே... என்று அலுத்துக் கொண்டாள்.

நீ கத சொல்லு என்று சிணுங்க...

தாத்தாட்ட சொல்லவா? தாத்தா மொட்டமாடில வச்சு பூட்டிருவாரு... என்று மிரட்ட கண்களை உருட்டியபடி கன்னத்தில் அடைத்து வைத்திருக்கும் உணவை முழுங்க ஆரம்பித்தாள்.

அவளுக்கு கதை சொல்ல வேண்டுமே எப்படிச் சொல்ல, எதிலிருந்து ஆரம்பிக்க காட்டில் உலாவரும் சிங்கத்தைப் பற்றி சொல்லவா, அல்லது கடலிலும் நிலத்திலும் மாறி மாறி வாழும் அதிசிய மீனைப்பற்றியா? அல்லது ஏழு கடல் ஏழு மலைகளைத் தாண்டி அற்புத விளக்கை தேடிக் கண்டுபிடிக்கும் இளவரசனைப்பற்றியா?

எதைச்சொல்ல.... அவளுக்கு எதுவும் தோன்றவில்லை. கதை ஆரம்பித்து விட்டால் முடிக்க வேண்டுமே... அதை விட அவள் நடுநடுவே கேட்கும் வில்லங்கமான கேள்விகளுக்கு பதில் தெரிந்து வைத்திருக்க வேண்டுமே.

யோசித்தால்.... என்னைப் பற்றி ஆம், என்னைப்பற்றியே சொல்கிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அலுவலகத்தில் இருந்து :

அலுவலகத்தில் இருந்து :

சாப்பிட்டு முடித்து கிச்சன் வேலைகளில் மூழ்கியிருக்க ஹாலில் இருந்து அப்பா அழைத்தார்... ம்மா... ஆபிஸ்ல இருந்து போன் வந்துச்சு உன் பொண்ணு பேசிட்டு இருக்காப்பாரு என்று சொல்ல ஐயையோ பாஸ் கூப்ட்ருக்க போறாரு என்று பதறிக் கொண்டு ஓடினாள்..

ம்ம்... தோச பூவா என்று மழலை மொழியில் ஒப்பித்துக் கொண்டிருந்தாள்.

கொண்டா என்று அவள் கையிலிருந்த போனைப் புடுங்கி இவள் காதில் வைத்தால்.

‘ஹலோ... சொல்லுங்க சார்.'

‘நாளைக்கு முடிச்சிரலாம் சார்... இன்னக்கி க்ளைண்ட் கிட்ட பேசிட்டேன்.'

....

‘கண்டிப்பா... கண்டிப்பா'

இரவுக்கதை ஆரம்பம் :

இரவுக்கதை ஆரம்பம் :

போனை வைத்தவுடன் என்னம்மா ஆபிஸ்ல நிறைய வேலையா?

ஆமாப்பா.... க்ளைண்ட் ஒன் வீக் டைம் கேக்குறான் இவரு என்னடான்னா நாளைக்கே எல்லா ப்ரோசிஜர்ஸும் முடிக்க சொல்றாரு என்ன பண்ண முடியும் ரெண்டு பேருக்கும் நடுவுல நின்னு நான் மாட்டிகிட்டு முழிக்கிறேன் என்று புலம்பினாள்.

சரி சரி... அவ வெளிய வெளிய ஓடிட்டு இருக்கா பாரு மொதோ போய் தூங்க வை.

அம்மா.... தூங்கிட்டாங்களா?

அவ எப்பயோ தூங்க போய்ட்டா.

வெராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்த மகளை பிடித்து இழுத்து வந்து அறையில் பூட்டினாள். அவள் விளையாடச் செல்ல வேண்டும் என்று அழுது சிணுங்க.. அம்மா இப்போ கத சொல்லப்போறேன் பாப்பாக்கு கத வேணுமா வேணாமா?

வேணும் என்று சொல்லி அருகில் படுத்துக் கொண்டாள்.

டியூசன் :

டியூசன் :

என் கதையை எங்கிருந்து ஆரம்பிக்க..... சரி காதல் அத்தியாயத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். பன்னிரெண்டாம் வகுப்பு பிசிக்ஸ் டியூசன் படிக்க விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந்து ஆறு மணிக்கு டியூசன் கிளம்புவேன்.

அங்கே மாடியில் டியூசன் சில நேரங்களில் நான் முன்னாடியே சென்று விட்டாள் கீழே காத்திருப்பேன். அங்கே கீழ் வீட்டில் இருக்கிறவர்கள் அவ்வப்போது எங்களுக்கு உள்ளே வந்து உட்காரச் சொல்வார்கள். என் துணைக்கு யாராவது ஆள் இருந்தால் வீட்டிற்கு உள்ளே சென்று காத்திருப்பேன்.

ஒரு டீ கூட போடமாட்டியா?:

ஒரு டீ கூட போடமாட்டியா?:

ஒரு நாள் கொட்டும் மழையில் அப்பா வந்து டியூசனுக்கு விட குளிரில் நடுங்கிக் கொண்டே கீழ் வீட்டில் காத்திருந்தேன். மழையை கூட பொருட்படுத்தாமல் நான் வந்து சேர்ந்த நேரமோ என்னவோ நீண்ட நேரம் யாருமே வரவில்லை.

அப்பா அம்மா இரண்டு மகன்கள் என்ற அளவான குடும்பம். இருவருமே கல்லூரிச் சென்று கொண்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன்.

அவ்வப்போது இரண்டும் அறைக்குள்ளிருந்து கத்துவார்கள்... காலைல இருந்து கத்துறேனே ஒரு டீ கொடுக்கணும்னு தோணுச்சா? இதே அவன் கேட்டிருந்தா போட்டுக் கொடுத்திருப்பல்ல....

அடடா... எல்லார் வீடுகளிலும் இதே சண்டை தானா என்று சிரித்துக் கொண்டேன்.

 கடுங்கோபம் :

கடுங்கோபம் :

சும்மா கத்தாதடா... பத்து மணிக்கு தான காலேஜ் பொறுமையா குடிச்சிக்கலாம்.

மீண்டும் ஏதோ சிணுங்களுடன் வசவு வார்த்தைகள் வந்து விழுந்தன.....

உன் டீயதாண்டா இந்த புள்ளைக்கு கொடுத்தேன். இரு நான் குடிச்சிட்டு போட்டுக் கொடுக்கிறேன் சும்மா கத்தாத...

எந்த புள்ளைக்கு கொடுத்த? உன் புள்ளைக்கு கொடுக்காத எல்லா புள்ளைக்கும் தேடித் தேடிப் போய் கொடு எரிச்சலில் அந்த புள்ளைய எல்லாம் யாரு வீட்டு வர சொன்னது. பொழுதன்னைக்கும் இங்கேயே உக்காந்துட்டு என்று வார்த்தை வந்து விழ எனக்கு என்னவோ போல் இருந்தது. மேற்கொண்டு அங்கே உட்கார்ந்திருக்க மனம் வரவில்லை.

மன்னித்து விடு :

மன்னித்து விடு :

கையில் வைத்திருந்த டீ கிளாஸை அப்படியே வைத்து விட்டு எழுந்து கொண்டேன்.

அந்த அம்மா.... பதறிக்கொண்டு... ம்மா என்ன எந்திரிச்சுட்ட உக்காரு அவன் சும்மா லூசு மாதிரி ஒளருவான்.... அதையெல்லாம் பெருசா எடுத்துக்காத என்று பதறினார்.

இல்ல ஆண்ட்டி.... நான் வெளியவே வெயிட் பண்றேன் என்று சொல்லும் போதே எனக்கு குரல் கொஞ்சம் தடுமாறியது. அதற்குள் உள்ளிருந்து தந்தை வெளிப்பட்டார்.

சாரிம்மா.... என் பையனுக்காக நான் சாரி கேட்டுக்குறேன் தப்பா எடுத்துக்காத ரொம்ப சாரிம்மா என்று சொல்லி மன்னிப்பு கேட்டார். இல்ல அங்கிள் பரவாயில்ல நோ இஸ்ஸூஸ் என்று இவர்களிடத்தில் பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து அவன் வந்தான்.

அறிவேயில்லையா ? :

அறிவேயில்லையா ? :

நான் பிடிவாதமாக அங்கிருந்து வெளியேறினேன். வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது. சொட்டச் சொட்ட நனைந்த படி அப்படியே நடந்து வெளியேறி வீட்டிற்கு நடந்தேன்.

வீட்டு வாசல் வரையில் அவர்கள் வந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.

அவனுக்கு நன்றாக திட்டு விழுந்திருக்கும். மறு நாள் வேண்டுமென்றே டியூசனுக்கு தாமதமாக சென்று நேராக டியூசனுக்குச் சென்றேன். கிளம்பும் போது ஏன்மா இன்னக்கி லேட்டா வந்தியா சாரிம்மா... நேத்து நடந்தத என்று ஆரம்பிக்கும் போதே

ஐயோ பரவாயில்ல அங்கிள் நான் ஒண்ணும் நினைக்கல... விடுங்க இன்னக்கி காலைல எழ நேரமாகிடுச்சு என்றேன்.

டேய்... சாரி கேளுடா கேளு என்று சொல்லி அவனை அழைத்தார்கள்.

வந்தான் என்னையே சில நிமிடங்கள் உற்றுப் பார்த்து விட்டு சட்டென வெளியேறினான்.

பஸ் ஸ்டாண்டில் :

பஸ் ஸ்டாண்டில் :

மறுபடியும் என்னை சமாதனப்படுத்த ஆயுத்தமாக அடடா... ஆளை விடுங்க என்று சொல்லி அவர்களை சமாதானப்படுத்திவிட்டு வெளியேறினேன்.

நடந்து பஸ் ஸ்டாப்புக்கு வர அங்கே காத்திருந்தான்.

அங்க பேக்கரிக்கு போலாமா என்று தயங்கியபடி வந்து நின்றான் எனக்கு அவனைப் பார்த்து சிரிப்பு தான் வந்தது சரி என்று தலையசைத்து பஸ் ஸ்டாப்புக்கு பின் புறமாக இருக்கும் பேக்கரிக்குச் சென்று டீ ஆர்டர் செய்தோம்.

வேற எதாவது வேணுமா? :

வேற எதாவது வேணுமா? :

சாரி... எனக்கு நீங்கன்னு தெரில ரொம்ப ஹர்ட் ஆகிட்டிங்கன்னு அம்மா சொன்னாங்க ரெண்டு நாளா வீட்ல எனக்கு செம்ம டோஸ் என்று அவன் கொட்ட ஆரம்பித்தான்.

காலைல எழுந்ததும் டீ குடிச்சு பழக்கமாகிடுச்சு. அன்னக்கி வேற தலவலி அதான் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன் என்றான்.

நான் சிரித்துக் கொண்டே சரி... சரியென்று தலையைத்துக் கொண்டிருந்தேன்.

நல்ல நண்பன் :

நல்ல நண்பன் :

அதன் பிறகு நல்ல நண்பனாக என்னுடன் சில காலங்கள் பயணித்தான். இனி டெய்லி காலைல எங்க வீட்ல ஐஞ்சு டீ போடுவோம் நீங்க கண்டிப்பா வரணும் என்று சொல்லி தினமும் காலையில் அவர்கள் வீட்டில் தான் எனக்கு டீ...

குடும்பத்தினருடன் ஐக்கியமாகிவிட்டேன் என்றே சொல்லலாம். எல்லாரும் என்னுடன் சகஜமாக பேசச் செய்தார்கள்.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிந்த பிறகு அவ்வப்போது அவர்கள் வீட்டிற்கு செல்வது வழக்கம். கல்லூரியில் இடம் கிடைத்து வேறு ஊருக்கு கிளம்பினோம்.

பிரிவு :

பிரிவு :

கல்லூரி முதல் ஆண்டு. அவன் கல்லூரி முடித்து வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தான். அதுவரையில் எங்களுக்குள் இருந்தது நட்பு தான் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அந்த பிரிவு எங்களை எதோ உணர்த்தியது.

அடிக்கடி போன் செய்து இருப்பை பகிரச் சொன்னது. எனக்கு மட்டும் தானா இப்படி என்று யோசித்து அவனிடம் கேட்க அவனும் இதே பதிலைச் சொன்னான்.

கல்யாணம் பண்ணிக்கலாமா? :

கல்யாணம் பண்ணிக்கலாமா? :

திடீரென்று ஒரு நாள் போன் செய்தான்.

ஹாஸ்டல் வந்துட்டியா?

ம்ம்.. இப்போ தா இண்டர்வியூ என்னாச்சு?

மெயில் பண்றோம்னு சொல்லியிருக்காங்க .... என்று சில சம்பிரதாயங்களை பேசி முடித்தோம்.

சரி நான் வைக்கவா... ஈவ்னிங் டீ சாப்ட போறேன் நைட் கூப்டுறேன் என்று போனை வைக்க முயன்றபோது.

ஏய்.... இரு என்னைய கல்யாணம் பண்ணிக்கிறீயா ? என்று ஒரு கேள்வியை போட்டான்.

சம்மதம் :

சம்மதம் :

ஒரு கணம் எதுவும் புரியவில்லை இரண்டு மூன்று முறை கேட்டு அவன் கேட்டதை உறுதி செய்து கொண்டேன்.

எனக்கு டீ போடத்தெரியாது....

சிரித்தான். உனக்கு சேத்து டீ போடத்தான் நான் இருக்கேன்ல என்று சொன்னான்.

லவ் யூ டீ.... என்று சிரிக்க நானும் இங்கே வெட்கிச் சிரித்தேன்.

இரண்டாமாண்டு :

இரண்டாமாண்டு :

இரண்டு ஆண்டுகள் மிகவும் சந்தோஷமாக நாட்கள் நகர்ந்தது. அவ்வப்போது என்னை பார்க்க வருவது தொடர்ந்தது. செமஸ்டர் விடுமுறையில் நான் ஊருக்குச் சென்ற போது அவனும் நானும் சேர்ந்து ஊர் சுற்ற ஆரம்பித்திருந்தோம்.

எப்படியோ வீட்டிற்கு விஷயம் கசிய பிரச்சனை ஆரம்பமானது.

வீட்டில் யாருமில்லை :

வீட்டில் யாருமில்லை :

என்னையும் அவனையும் பிரித்து விடுவார்கள், எனக்கு அடி விழப்போகிறது, உயிரே போனாலும் சொல்வதற்கில்லை என்று என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன்.

வீடே களேபரமாக இருக்கும் என்று எதிர்ப்பார்த்துச் சென்றவளுக்கு அதிர்ச்சி மிகவும் சாதரணமாக இருந்தது. தங்கை மட்டும் ஹால் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பாவையும் அம்மாவையும் காணவில்லை.

எங்கடீ என்று அவளிடம் கேட்க...

தெர்ல... ஸ்கூல் முடிச்சுட்டு வர்றப்போயிருந்தே இல்ல மேல் வீட்ல சாவி கொடுத்திருந்தாங்க.

பதட்டம் :

பதட்டம் :

எனக்கு பதட்டம் அதிகமானது.

அரை மணி நேரத்தில் ஆட்டோ சத்தம் கேட்க வெளியில் எட்டிப்பார்த்தேன் அம்மாவும் அப்பாவும் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

எவ்ளோ.... கூட்டம் எங்கயிருந்து தான் வருவாங்களோ என்று சொல்லி உள்ளே நுழைந்தாள் என்னிடம் யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லை. அவர்களாக கேட்பார்கள் என்று காத்திருந்து காத்திருந்து நான் ஏமாந்து போனது தான் மிச்சம் .

அவர்கள் முகத்தில் எந்த பதட்டமும் தெரியவில்லை என்னிடம் அவ்வளவாக பேசவும் இல்லை.

உன் இஷ்டம் :

உன் இஷ்டம் :

இரவு உணவின் போது நானாக ஆரம்பித்தேன். அப்பா..... நான் லவ் என்று துவங்கும் போதே

என்னம்மா அந்த பையன உயிருக்கு உயிரா காதலிக்கிற... அவன தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசப்படற அதான...

ஆமாப்பா

தாரளமா பண்ணிக்கோ...

ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும் இந்த பதிலை நான் எப்படி எடுத்துக் கொள்ள என்ற சந்தேகம் இருந்தது. நான் மவுனமாய் இருப்பதைப் பார்த்து, உன் லைஃப் நீ டிசைட் பண்ற உன் இஷ்டம். அப்பறம் அம்மா, அப்பான்னு இங்க நீ வரக்கூடாது.

என் பொண்ண வேற சமூகத்துல கட்டிக் கொடுக்க எனக்கு விருப்பமில்ல அதுக்காக உன்னைய அடிச்சு கொடுமை படுத்தி இவனுக்கு தான் நீ கழுத்த நீட்டணும்னு சொல்லமாட்டேன்... தாரளமா பண்ணிக்கோ அதுக்கப்பறம் எங்க உறவுன்னு சொல்லிட்டு வந்துராதா... உனக்கு சொத்து பிரிச்சு கொடுக்குற அளவுக்கு உங்கப்பனுக்கு சாமர்த்தியம் போதலம்மா...

 விலகி நடந்தார் :

விலகி நடந்தார் :

என் திருமணத்தில் விருப்பமில்லை ஆனாலும் என் விருப்பத்தில் கைவைக்கவும் இல்லை, பண பலத்தை சேர்க்கவில்லை என்று தன் கையாலாகத தனத்தை விவரிக்கும் போது எனக்கு என்னவோ போல் இருந்தது மன்னிப்பு கேட்டு காலில் விழு எழுந்தேன்.

இல்ல இல்ல... வேணாம் என் பொண்ணு யார் கால்லயும் விழுந்து கெஞ்சுற நிலமைக்கு நான் கொண்டு வர்ல நல்லாயிரு போ என்று சொல்லி விலகி நடந்தார்.

அம்மா.... என்று அவளிடம் செல்ல

மானத்த வாங்கிட்டு வந்து இப்போ அம்மான்னு கதையா விட்ற எங்கள உயிரோ சாகடிச்சுட்டியேடீ என்று என்னை அடிக்க வர அப்பா தடுத்து விட்டார்.

அவ லைஃப் அவ பாத்துப்பா.....

மூன்றாம் ஆண்டு :

மூன்றாம் ஆண்டு :

மூன்றாம் ஆண்டு படிக்கும் போது இருவரும் திருமணம் செய்து கொண்டோம். பல முறை அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தும், அம்மா அப்பாவிடம் பேசக்கூட முடியவில்லை அதற்கான சந்தர்ப்பங்களை அவர்கள் உருவாக்க வில்லை

தங்கையிடம் மட்டும் அவ்வப்போது பேசுவது உண்டு . அவன் வீட்டில் சம்மதம் ஆனால் உறவுகளுக்கும் சுற்றத்தாருக்கும் பயந்து எங்களை ஒதுக்கியே வைத்திருந்தார்கள்.

அவனுக்கு வேலை கிடைத்தாலும் என் கல்லூரி செலவுக்கே எல்லாம் சரியாகப் போனது. நானும் பகுதி நேரமாக வேலைக்குச் செல்கிறேன் என்று சொல்லி கல்லூரி முடித்து மாலை நேரத்தில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன்.

திக்கித் திணறி :

திக்கித் திணறி :

எப்படியோ கஷ்டப்பட்டு கடன் வாங்கி டிகிரிசை முடித்தேன். இனி வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். நல்ல நிலையான வேலை, சம்பளம் என்றானவுடன் குழந்தையைப் பற்றி யோசிக்கலாம் என்று நினைத்தோம்.

அன்றைக்கு காலையில் எனக்கு வேலைக்கான நேர்காணல் இருந்தது. வழக்கம் போல தாமதமாக எழுந்து பயங்கர டென்ஷனாக்கி சண்டையிட்டுக் கொண்டே கிளம்பினோம்.

பத்து மணிக்கு அங்க இருக்கணும்னு சொன்னாங்க மணி இங்கயே 10.15 ஆகிடுச்சு ட்ராஃபிக்ல போறதுக்குல்ல மணி 11 ஆகிடும்.

சும்மா புலம்பாதடீ என்ன வேணும்னா பண்றாங்க ஏறு... என்று எரிச்சலுடன் வண்டியை கிளப்பினான். எழுந்ததில் இருந்து தலைச் சுற்றல் இருந்தது. இரவு சரியாக தூக்கமில்லை நேர்காணல் முடித்துக் கொண்டு வந்து நிம்மதியாக தூங்க வேண்டும் என்று சொன்னேன்.

விபத்து :

விபத்து :

சாய்ந்தரம் நான் ஆபிஸ் முடிச்சு வந்ததும் ஹாஸ்பிட்டல் போகலாம் என்று சொல்லிக் கொண்டே ஓட்டினான். குறுக்குச் சந்தில் இருந்து மெயின் ரோட்டுக்குத் திரும்பும் போது எங்கள் டூ வீலர் ஆட்டோ மோதி கீழே விழுந்தோம்.

அவன் பதட்டத்தில் வண்டியை அதிக ரேஸ் கொடுக்க சிறிது தூரம் வரை அடித்துச் செல்லப்பட்டான். கத்தியபடி அவனுருகில் செல்ல ஆட்கள் கூடி விட்டார்கள் அவன் மெல்ல எழுந்து உட்கார்ந்திருந்தான்.

ஏய் என்னாச்சு அடி எதுவும் பலமா இல்லல.... என்று அருகில் சென்றேன் கைகளில் சிராய்ப்பு... வா ஹாஸ்பிட்டல் போகலாம்

அருகில் இருந்தவர்கள் தண்ணீர் கொடுக்க அதை வாங்கி குடித்தான். அவனாகவே மெல்ல எழுந்து ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டான். ஆட்டோ டிரைவர் வண்டியை ஒரமாக நிறுத்தி சாவியைக் கொடுத்தார் நான் தான் மிகவும் பதட்டமாக இருந்தேன்.

பயப்படாதீங்க :

பயப்படாதீங்க :

அடியெதும் இல்லல.... காலைல நான் டென்ஷன் ஆனது தான் இவ்ளோத்துக்கும் காரணம் நான் கொஞ்சம் சீக்கிரம் எந்திருச்சிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா என்று புலம்ப....

ஏய் ஏண்டி புலம்பிட்டே வர்ற... எனக்கு அடியெதுவும் இல்ல லேசா ஸ்க்ராட்சஸ் தான்...ஹாஸ்பிட்டல் போனதும் டிரஸ்ஸிங் பண்ணிட்டு அனுப்பிடுவாங்க என்ன உன் இண்டர்வியூ தான்....

சரி விடு இந்த கம்பெனி இல்லன்னா வேற ஊர்ல வேற கம்பெனியே இல்லையா என்று அவன் எனக்குச் சமாதானம் சொல்லிக் கொண்டு வந்தான்.

எங்களின் உரையாடலை கேட்ட ஆட்டோ டிரைவர். மேடம்... பயப்படாதீங்க பெரிய அடி எதுவும் இல்லல்ல நானெல்லாம் டெயில் ஒரு ஆக்ஸிட்னட் பாப்பேன் இதெல்லாம் சாதரணம் என்று சமாதனம் சொன்னான்.

மருத்துவமனையில் :

மருத்துவமனையில் :

மருத்துவமனைக்குச் சென்றோம். வரிசையில் நின்று டோக்கன் வாங்கி ரிஜிஸ்ட்ரேஷன் ஃபீஸ் கட்டி உள்ளே மருத்துவரைப் பார்க்க காத்திருந்தோம். அவனுக்கு டிரஸ்ஸிங் கொடுக்க அழைத்துச் சென்றார்கள்.

நான் வெளியில் காத்திருந்தேன். அப்போது மீண்டும் தலைச்சுற்றல் அதிகமாக அங்கிருந்த ஒரு நர்ஸிடம் தலை அதிகமாக சுற்றுகிறது என்று சொன்னேன். அவர் பிரஷர் செக் செய்தார்.

உள்ளிருந்து வெளியே வந்து வாட்ச் பர்ஸ் எல்லாவற்றையும் என்னிடம் கொடுத்து விட்டு மீண்டும் அறைக்குள் சென்றான். நான் அதை உள்ளே வைத்துக் கொண்டிருக்கும் போதே அறை வாசலில் பொத்தென்று.... மயங்கி விழுந்திருந்தான்.

உங்களை பார்த்துக் கொள்ளுங்கள் :

உங்களை பார்த்துக் கொள்ளுங்கள் :

யார்ரா அது இப்டி என்று நிமிர.... அதிர்ந்து என் பையை போட்டு விட்டு அவனருகில் சென்று உசுப்பினேன்... ஏய் என்னட்டா ஆச்சு கண்ணத்தொற கண்ணத்தொற என்று தட்டியெழுப்பினேன். காதிலிருந்து ரத்தம் வழிந்தது..

அங்கிருந்தவர்கள் அவசர அவசரமாக அவனைத்தூக்கி ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்தார்கள்.

மேடம் நீங்க தான தல சுத்துத்துன்னு சொன்னீங்க.... வாங்க டாக்டர் இப்போ ஃப்ரீயா இருக்காங்க என்று என்னை அழைத்தார். அவனைப் பார்க்கவா அல்லது மருத்துவரை பார்க்கவா என்று முழிக்க...

எப்டி உங்கள உள்ள விடமாட்டாங்க நீங்க போய் ட்ரீட்மெண்ட் முடிச்சுட்டு வாங்க என்று அங்கிருந்தவர்கள் சொல்ல அந்த நர்ஸ் பின்னால் நடந்தேன்.

 ஹீ இஸ் நோ மோர் :

ஹீ இஸ் நோ மோர் :

யூரின் டெஸ் எடுக்கப்பட்டது. அரை மணி நேரத்தில் ரிசல்ட் வரும் என்று சொல்லி காத்திருக்கச் சொன்னார்கள். அதற்குள் அவனை பார்க்கச் செல்லலாம் என்று அங்கே செல்ல அறைக்கதவு திறக்கப்பட வில்லை

சில நிமிடங்கள் காத்திருந்த பின்னர் உள்ளிருந்த மருத்துவர் வெளியே வந்து என்னிடம் அவர் உங்களுக்கு என்ன வேணும் என்று கேட்டார்

ஹஸ்பண்ட் என்று சொன்னதும் சாரி.... ஹீ இஸ் நோ மோர் ஆக்ஸிடண்ட்ல பின் தலை அடிப்பட்ருக்கு அத கவனிக்காம.... என்று நிறுத்தினார்.

ஒரு கணம் மூர்ச்சையாகி உள்ளே எட்டிப் பார்த்தேன். தூக்கத்தில் இருப்பது போலத்தான் தெரிந்தது.

தாத்தா பாட்டி :

தாத்தா பாட்டி :

மேடம் என்ன ரிப்போட் வாங்காம வந்துட்டீங்க.... இந்தாங்க கங்கிராட்ஸ் நீங்க ப்ரெக்னெண்டா இருக்கிங்க என்று சொல்லி ரிப்போர்ட்டை கொடுத்தார். டாக்டரா வந்து பார்த்திடுங்க... இப்போ ரவுண்ட்ஸ் கிளம்பிடுவாங்க ஒரு மணி நேரம் கழிச்சு வாங்க என்றார்.

என்ன இது.... ஒரு பக்கம் கணவன் இல்லை இன்னொரு பக்கம் நான் கர்ப்பமாக இருக்கிறேன்.

வாழ்க்கையே நிர்மூலமானமாதிரியான ஓர் உணர்வு.

விஷயம் தெரிந்த போதுகூட என் பெற்றோர் வரவில்லை.. அவனின் பெற்றோர் வந்தார்கள். நான் மன ரீதியாகவும் உடைந்திருப்பதை உணர்ந்தவர்கள் என்னை அவர்களோடு அழைத்துச் சென்றார்கள். எங்களை விட்டால் அவளுக்கு வேறு கதியில்லை என்பதை புரிந்து கொண்டார்கள் போல

காதல் திருமணம் செய்த ஒரே காரணத்திற்காக.... என்னை பார்கக்கூட வராத பெற்றோர்களைப் பற்றி நான் என்ன சொல்ல?

அத்தனை வெறுப்பா? இருக்கட்டும் அப்படியே வீராப்புடன் இருக்கட்டும் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Emotional story of a girl about her husband

    Emotional story of a girl about her husband
    Story first published: Wednesday, December 6, 2017, 14:00 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more