For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உன் முகத்த பாத்துட்டேயிருக்கணும்... மரணப்படுக்கையில் காதலி... காதலனின் நெகிழ வைக்கும் செயல்

உண்மைக்காதல் ஜென்மங்கள் தாண்டியும் தொடரும் என்பதனை உணர்த்தும் காதல் கதை.

|

எப்பயும்... இப்டியே இருக்கணும்.. சரியா

சரிடித் தங்கம்.தோல்ப்பட்டையில் சாய்ந்திருந்த என் முகத்தை தட்டிக் கொடுத்தான்.

ஆட்டோவிற்குள் உட்கார்ந்து கொண்டு தோல் சாய்ந்து அவனின் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டு நாங்கள் பயணிக்கும் ஒவ்வொரு நிமிடமுமே எங்கள் காதலின் மூலதனம் என்றே சொல்லலாம். எங்களின் சண்டையும் சமாதானமும் அரேங்கேறும் இடம் அது. நாங்கள் வந்து நின்றாலே எங்க சார்... மேடம விட்டுட்டு உங்கள ட்ராப் பண்ணனுமா என்று அவர்களாகவே ஆட்டோவை திருப்பிக்கொண்டு முன்னாடி வந்துவிடுவார்கள்.

Emotional love story which proves true love never ends

அதுவும் என் காதலனுக்கு எதிலும் கஞ்சத்தனம் கிடையாது என்னைக் கொஞ்சுவதிலும் சரி, ஆட்டோவிற்கு செலவழிப்பதிலும் சரி.

வண்டில வரலாம்ல என்று கேட்கும் போதெல்லாம். என் செல்லத்த கொஞ்ச முடியாதே என்று கண்ணடிப்பான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லூரி :

கல்லூரி :

கல்லூரி முடிந்து வெளியே ஜெராக்ஸ் கடைக்கு அருகில் நின்று ஏ4 சீட் வாங்கிக் கொண்டிருந்தேன். எதிரில் ஆட்டோவில் இவன். நான் பார்த்ததுமே கையுயர்த்தி டாட்டா காட்டினான்.

எங்க வந்த?

காலேஜ்க்கு

அதான் ஏன் வந்த.. யாராவது பாத்தா என்னாகுறது என்று ஜெராக்ஸ் கடையின் முன்னால் அடைத்தது போல உயர்ந்து நிற்கும் மரத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டு கேட்க... அடேயப்பா யம்மா நாங்களும் இதே காலேஜ் தான். உனக்கெல்லாம் சீனியர் தெரியும்ல.. நான் ஒண்ணும் உன்னைய பாக்க வர்ல என் காலேஜ பாக்க வந்தேன்.

ஒஹோ... அப்பறம் எதுக்கு என்னைய பாத்து டாட்டா காட்னியாம்.

அது... அது வந்து பதில் வரவில்லை அவனுக்கு

மொபைல் டார்ச் :

மொபைல் டார்ச் :

லேப் முடிந்து கல்லூரியிலிருந்து கிளம்புவதற்குள் ஏழு மணியாகிவிட்டது. கிளம்பும் போது லேசாக தூர ஆரம்பித்த மழை பஸ் ஸ்டாப் செல்வதற்குள் வெலுத்து வாங்கியது. பஸ் ஸ்டாப் உள்ளே நனையாதவாறு ஒடுங்கி நின்றிருந்தேன். மழை கொஞ்சம் விட்டதுமே என்னோடு இருந்த நான்கைந்து பேரும் கிளம்பி விட்டார்கள் . மழைக்காக ஒதுங்கியிருப்பார்கள்.

மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. திருமங்கலத்திற்கு செல்லும் ஒரு பஸ்ஸும் இன்னும் வரவில்லை. இந்நேரம் 8.30க்கு 14ஏ வரும் இன்னும் வரக்காணோமே என்று காத்திருக்க மணி ஒன்பதரை ஆகிவிட்டது ஆனால் அந்த 8.30 பஸ் இன்னும் வந்தபாடில்லை.

என்னைக்கி பஸ் வந்து எப்போ நான் போக என்று எரிச்சலுடன் கொஞ்சம் தூரம் நடந்து அடுத்த ஜங்க்ஸன் ஸ்டாப்ல போய் நிக்கலாமா அங்க பஸ்ஸ்டாண்ட்ல இருந்து வர்ற பஸ் கூட வரும்ல என்று நினைத்து இருட்டில் நடக்க ஆரம்பித்தேன். துணைக்கு மொபைல் டார்ச் மட்டும் இருந்தது.

Image Courtesy

மழை :

மழை :

ஆங்காங்கே மழை நீர் தேங்கியிருந்து.. லேசாக தூரலும் விழுந்து கொண்டேயிருந்ததால் குளிருக்கு என் புத்தகப்பையை அணைத்துக் கொண்டு மெல்ல நடந்தேன். தூரமாக பைக்கின் உறுமல் சத்தம் கேட்டது.

அதோடு ஹாரனும் அடித்துக் கொண்டேயிருந்தது. ஃபுல்லா தண்ணீ எங்க ஒதுங்க இங்கியிருந்து அப்டி எட்டி ஒரு கால வச்சு அப்டியே தாவிரலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது உறுமிய பைக் என்னைக் கடந்து பறந்து, வந்த வேகத்தில் தேங்கியிருந்த தண்ணீர் முழுவதும் என் மேல் தான்.

டிரஸ் முழுவதும் தொப்பலாக நனைந்ததுவிட்டது எனக்கு

ஏய்... அறிவிக்கெட்ட முண்டம் கண்ணு தெர்ல என்று கத்த வேகமாக சென்று கொண்டிருந்த பைக் க்ரீச் ஒளியுடன் பிரேக் போட்டு நின்றது.

ஐயயோ நாமே வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டோமோ என்று பயந்து விட்டேன்.

பஸ் ஸ்ட்ரைக் :

பஸ் ஸ்ட்ரைக் :

நல்ல மழை இருட்டா வேற இருக்கு தனியா வேற மாட்டிக்கிட்டோமே பக்கத்துல வந்தா எத எடுத்து எடுக்கிறது? எங்கிட்டு ஓட்றது என்று சுற்றி முற்றி பார்க்க அந்த பைக் திரும்பி என்னருகில் வந்துவிட்டது.

ஏறு ட்ராப் பண்றேன்...

ஹலோ யாரு நீங்க? என்ன வம்பு பண்றீங்களா.... எங்க அப்பா யாரு தெரியுமா

உங்கப்பன் பெரிய கொம்பனா இருந்தா பின்னாடியே கொட பிடிச்சுட்டு ஓடி வரவேண்டியது தான. இந்த இருட்டுல எங்க போற

அடுத்த ஸ்டாப்புக்கு...

அங்க தான் வீடா?

இல்ல... திருமங்கலம் போயி.... ஹலோ அதெல்லாம் நீங்க ஏன் கேக்குறீங்க

யம்மா உலக அழகி இன்னும் ரெண்டு நாளைக்கு பஸ்ஸு எதுவும் ஓடாது. ஸ்ட்ரைக்கு. இத்தாண்டி புக்க படிச்சாமட்டும் போதாது கொஞ்சமாவது நியூஸ் தெரிஞ்சுக்கணும்.

சரி ஏறு என்றான் எங்கே நாம் திட்டிய கோபத்தில் என்னை எதாவது செய்து விடுவானோ என்று பயந்து இல்ல வேணாம் என்று சொல்லி நடக்க ஆரம்பித்தேன்.

அவனும் எதுவும் சொல்லாமல் பைக்கை எடுத்துக் கொண்டு பறந்துவிட்டான்.

ஏற முடியுமா முடியதா? :

ஏற முடியுமா முடியதா? :

மழையினால் எல்லாக் கடைகளும் சீக்கிரமே முடியிருந்தது. ஜங்க்ஸன் ஸ்டாப் வருவதற்குள் மூச்சு முட்டி நின்றது அதுவும் உடை முழுவதும்தொப்பலாய் நனைந்திருந்தால் முழுவதும் நடுங்கிக் கொண்டேயிருந்தேன் .

மெயின் ரோடு வருவதற்கே இன்னும் 500 மீட்டர் வரை நடக்க வேண்டும் அதன் பிறகு ஸ்டாப்...யப்பா நினைக்கும் போதே அதிர்ச்சியாய் இருந்தது.

மீண்டும் அதே பைக். பைக்கின் ஒளி என் மீது படவே சற்று ஒதுங்கி நின்றேன்.

எப்டி இப்டியே நடந்து ரெண்டு நாள்ல திருமங்கலம் போய் சேர்ந்திருவீங்களா?

எதுவுமே சொல்லாமல் நடந்து கொண்டிருந்தேன். அவன் பைக்கை உருட்டிக் கொண்டு வந்தான்.

ஒண்ணும் கடிச்சு திண்ற மாட்டேன் ஏறு..

ஸ்ட்ரைக், இருட்டு.... குளிர் என எல்லாம் யோசிக்க வைத்துக் கொண்டிருந்தது. நான் வேறு வழியே இல்லையா என்று அங்குமிங்கும் திரும்பிப்பார்த்தபடி அமைதியாக நின்றிந்தேன்.

நான் பதிலேதும் சொல்லாமல் யோசித்துக் கொண்டிருப்பதை பார்த்து , இங்கயே கிடந்து சாவு என்று பைக் வேகத்தை கூட்டினான்.

ஐயோ... நில்லுங்க

இருபதடி தூரத்தில் பிரேக்

நான் வந்திடறேன் என்று சொல்லிக்கொண்டே பைக்கிற்கு ஓடிச் சென்றேன்.

இது தான் எங்களின் முதல் சந்திப்பு. ஒரு மழை எங்களை சேர்த்தது.

திருமணம் :

திருமணம் :

பெரிய எதிர்பெல்லாம் இல்லை கொஞ்சம் முரண்டு பிடித்தார்கள் அடித்துப் பிடித்து திருமணம் செய்து கொண்டோம். அதன் பிறகு குழந்தைகள் என நிம்மதியான வாழ்க்கை வழக்கமாக எல்லா வீடுகளில் நடப்பது போன்றே எங்கள் வீட்டிலும் சில சண்டைகள், சச்சரவுகள் இருந்து கொண்டேயிருந்தது.

குழந்தைகள் இருவரையும் வெளியூர்களில் திருமணம் செய்து கொடுத்து விட்டு எங்களின் ஓய்வுக்காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறோம்.

புற்றுநோய் :

புற்றுநோய் :

பத்து நாட்களாக பயங்கர காய்ச்சல், தலைவலி வேறு நேற்று வாந்தியெடுக்கும் போது ரத்தம் வந்ததால் அவசர அவசரமாக என்னை மருத்துவமனையில் அனுமதித்தான்.

இரண்டு நாட்கள் மருத்துவமனையே கதியென்று கிடந்தோம். எதேதோ டெஸ்ட்டுகள், மாத்திரைகள் என நாளுக்கு நாள் என் நிலைமை மோசமாகிக் கொண்டேயிருந்தது.

வீட்டிற்கு திரும்புவதும் இரண்டு வாரங்களில் மீண்டும் மருத்துவமனைக்குச் செல்வதும் வாடிக்கையானது.

எனக்கான பத்திய உணவு சமைத்து ஊட்டிவிடுவதில் ஆரம்பித்து எனக்கான தேவைகள் எல்லாவற்றையுமே பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தான்.

மூன்று மாதங்கள் கழித்து, மருத்துவர் அவனிடம் சொன்னது

மனைவிக்கு மூளையில் புற்றுநோய்க்கட்டி முற்றிய நிலையில் இருக்கிறது. அறுவை சிகிச்சை செய்தாலும் பலனில்லை இன்னும் நாலு மாசமோ ஐஞ்சு மாசமோ....

மீண்டும் ஆட்டோ :

மீண்டும் ஆட்டோ :

ஒரு குழந்தையைப் போல அவன் என் கைகளைப் பிடித்து என்ன விட்டு போய்ருவியா? அவ்ளோதானா என்று கேட்டு குலுங்கி குலுங்கி அழுத என்னை அணைத்துக் கொண்டான்.

அன்னக்கி இருட்டுல மழத்தண்ணி சொட்ட சொட்ட உன்ன பாத்ததுல இருந்து இப்போ எழுவது வயசுக் கிழவனா உன் முன்னாடி நிக்கிறவரைக்கும் நீயில்லாத ஒரு நாள் கூட நினச்சுக்கூட பாக்கலயேடீ என்று புலம்பி புலம்பி அழுதான். கவலைப்படாதே என்று எப்படிச் சொல்ல.... நானும் அழுதேன்.

இருவரும் அழுது அழுது அமைதியானோம்.

ஆட்டோல போலாமா?

எங்கையாவது...

இருவரும் ஆட்டோ பிடித்து மலைக்கோவிலுக்குச் சென்றோம். வழியில் இருவரும் ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளவில்லை. அவன் கைகளை இறுக்கப்பற்றி எங்களின் இருபதுகளில் நாங்கள் பயணித்த அதே ஆட்டோ பயணத்தை அனுபவதித்தோம்.

ஈறல் :

ஈறல் :

இரண்டு மாதத்தில் உடல் முழுவதும் தளர்ந்திருந்தது. அவனும் கொஞ்சம் தளர்ந்திருந்தான், உடலளவில் இல்லையென்றால் மனதளவில் அவன் ரொம்பவே தளர்ந்துவிட்டான். மூச்சு விடுவதில் சிரமமாய் இருக்கிறது என்று சொல்லி மாத்திரைகள் அவ்வப்போது விழுங்குவான்.

ஒவ்வொரு இருமலுக்கும் என் அறையை எட்டிப் பார்க்கும் அவன் முன்னரையில் உட்கார்ந்தேயிருந்தான். காலையிலிருந்து இருமிக் கொண்டிருக்கிறேன்.... எங்கே காணோம்

உணவுக் கொடுக்க மதியம் என் அறைக்கு வந்தான். ஒரு வாரமாய் சவரம் செய்யாமல் தலைமுடி வாராமல் அழுது அழுது வீங்கிய கண்களுடன் வருகிறான்.

எழுந்துக்கிறியா கொஞ்சமா சாப்ட்டு மாத்திர போட்றலாம். உனக்கு பிடிச்ச ஈரல் வறுத்திருக்கேன் என்று என் தோல்பட்டையை பிடித்து எழுப்பி உட்கார வைத்தான். ஊட்டிவிட்டு மாத்திரைகளை கொடுத்து மீண்டும் அப்படியே படுக்க வைத்தான்.

முகத்த பாத்துட்டேயிருக்கணும் :

முகத்த பாத்துட்டேயிருக்கணும் :

சாப்பிட்ட தட்டினை எடுத்து வைப்பதற்காக எழ அவன் கைகளை பிடித்துக் கொண்டேன். எங்கயும் போகாத இங்கயே இரு... உன்ன பாத்துட்டேயிருக்கணும் இப்டியே என்று சொல்ல என் வாயை அடைத்துவிட்டான்.

உன் கூட தான் இருப்பேன். எப்பயும் என்று சொல்லி கட்டிலில் என் அருகில் படுத்துக் கொண்டான்.

இருவரும் :

இருவரும் :

கையப் பிடிச்சுக்கோ என்று நீட்ட எடுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டான்.

இருவரும் ஒரு மணி நேரமாக பார்த்துக் கொண்டேயிருந்தோம். இருவரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இருவருக்குமே கண்ணீர் வலிந்து கொண்டேயிருந்தது. லேசாக நெஞ்சு அடைப்பது போல இருந்தது.

மனசு முழுக்க அவனையும்.... அவனின் முகம் என் கண்களில் நிறைந்திருக்க மெல்ல கண்ணை மூடினேன். கண்ணை மூடும் கணத்தில் அவன் நெஞ்சில் இருந்த கையில் லேசாக அழுத்தம் அவனும் கண்ணை மூடிக்கொண்டான்.

இருவருமே இப்பிறவியை முடித்துக் கொண்டு இயற்கையோடு கலந்து விட்டோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Emotional love story which proves true love never ends

Emotional love story which proves true love never ends
Story first published: Saturday, October 28, 2017, 15:15 [IST]
Desktop Bottom Promotion