பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு பின் ஏற்படும் காதல் வலுவானது -காரணங்கள்!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் பெற்றோர்களுக்கு தெரிந்த அல்லது உங்களது நெருங்கிய உறவினர்களுக்கு தெரிந்த ஒரு பெண் / ஆணை தேர்ந்தெடுக்கின்றனர். இவர் தான் நீ திருமணம் செய்து கொள்ள போகிறாவர் என்று பெற்றோர்கள் அறிமுகப்படுத்திய பின்னர் தான் இந்த உறவில் காதல் என்பது மலருகிறது.

Arrange Marriage Made Strong Relationship why

இன்றைய நவீன உலகத்தில் நிச்சயத்திற்கு பின்னர் மணமக்கள் பேசிக்கொள்ள பெற்றோர்கள் அனுமதி கொடுத்துவிட்டனர். இதனால் நிச்சயத்திற்கு பின்னர் கூட காதலிக்கலாம் என்ற நிலை உருவாகிவிட்டது.

தினசரி உடலுறவு வைத்துக்கொள்வதால் உண்டாகும் ஆச்சரியமூட்டும் நன்மைகள்!

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் மிகவும் வலிவானவை. அதற்கான காரணங்களை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

நிச்சயதார்த்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கை கட்டாயம் இப்படி மாறும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. உங்களுக்கு ஏற்ற துணை:

1. உங்களுக்கு ஏற்ற துணை:

பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம் என்பது படிப்பு, பொருளாதாரம், காலாச்சாரம் என அனைத்திலும் உங்களுக்கு பொருத்தமான துணையை தேர்ந்தெடுக்கிறது. அவர்கள் நீங்கள் காதலிக்கும் ஒருவரை தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் வருங்காலத்தில் நீங்கள் காதலிக்க ஏற்ற துணையை தேர்ந்தெடுக்கின்றனர்.

2. திருமணதிற்கு பின் காதல்:

2. திருமணதிற்கு பின் காதல்:

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் நான் கடைசி வரை உன்னுடன் இருப்பேன் என்று ஒருவருக்கொருவர் சத்தியம் செய்து கொண்டு வாழ தொடங்கிய பின் அவர்களுக்குள் காதல் மலருகின்றது. இந்த காதல் மெதுவாக துணையின் அரவணைப்பு, கவனிப்பு ஆகியவற்றை கண்டு வருகிறது.

இது உண்மையான காதலாக மட்டுமே இருக்க முடியும். வெறும் ஈர்ப்பாக இருக்க வாய்ப்புகள் இல்லை. இந்த காதலில் உண்மையான அக்கறை மற்றும் மரியாதை ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கிறது.

3. விவாகரத்துகள் குறைவு:

3. விவாகரத்துகள் குறைவு:

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமானது இரு உள்ளங்களின் இணைப்பாக மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் இணைப்பாக இருக்கிறது. இவ்வாறு இரண்டு குடும்பங்கள் இணைவதால் உறவுகள் இன்னும் பலமாகின்றது.

இதனால் கணவன் மனைவி இருவருக்கும் சமூகத்தில் அவர்களது முக்கியத்துவம் என்னவென்று தெரியும் இதனால் பெரும்பாலும் அவர்கள் விவாகரத்து செய்ய முன்வருவதில்லை.

4. பெற்றோர்களின் கவனம்:

4. பெற்றோர்களின் கவனம்:

பெற்றோர்களினால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதால் அவர்களது கணிப்பு தவறாகிவிட கூடாது என்பதற்காகவும், பிள்ளைகள் ஒருவரை விட்டு ஒருவர் விலகிவிட கூடாது என்பதனாலும், இரு வீட்டு பெற்றோர்களின் கண்களும் உங்கள் மீதே தான் இருக்கும். இது சில சமயங்களில் உங்களுக்கு சளிப்பை உண்டாக்கினால் உறவை காப்பாற்ற இது உதவுகிறது.

5. விலகி செல்வது கடினம்:

5. விலகி செல்வது கடினம்:

நீங்கள் ஒருவேளை ஒரு சின்ன சண்டை போட்டுக்கொண்டால் கூட உங்களது துணையின் வீட்டினருக்கு அதற்கான காரணத்தை சொல்ல வேண்டியிருக்கும். இதுவே விலகுவதென்றால் நீங்கள் அனைவருக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறீர்கள். இதனால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் விலகிச்செல்வது கடினம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Arrange Marriage Made Strong Relationship why

Arrange Marriage Made Strong Relationship why
Story first published: Wednesday, July 5, 2017, 14:00 [IST]
Subscribe Newsletter