மகனைப் பற்றிய மருமகளின் கேள்வியால் அதிர்ந்த மாமியார்!

Posted By:
Subscribe to Boldsky

'சொல்லுங்க அத்த....' என்று அவள் கேட்ட தொணியிலேயே அவளுக்கு எல்லாம் தெரிந்து விட்டது. அவள் தெரிந்து கொண்டே தான் நானே சொல்ல வேண்டும், இவ்வளவு காலம் ஏன் ஏமாற்றினீர்கள் என்று கேட்பது புரிந்து. அவளது கோபம் நியாயமானது தான்.

அடுத்த வார்த்தை என்னால் எடுக்க முடியவில்லை.

அது வந்தும்மா.... என்று எடுத்தாலும் தொடர்ந்து என்ன சொல்ல, எப்படி சமாளிக்க என்று எதுவும் எனக்குத் தெரியவில்லை அதற்குள்ளாக அவளாகவே போதும் அத்த. இனி யாரையும் நம்ப நான் தயாராயில்ல என்று சொல்லிவிட்டு சட்டென மேலே இருக்கும் அவள் அறைக்குச் சென்றுவிட்டாள்.

பின்னாலே சென்று சமாதனப்படுத்த தோன்றினாலும் ஏதோ ஒன்று தடுக்க அப்படியே உட்கார்ந்து விட்டேன்.

A letter from our reader about daughter in law

காதல் அவள் கேட்ட அந்த மிரட்டலான 'சொல்லுங்க அத்த' என்ற ஒற்றை கேள்வி மட்டும் விடாது ஒளித்துக் கொண்டேயிருந்தது..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகனுடனான உறவு :

மகனுடனான உறவு :

மெடிக்கல் ஏஜன்ட்டாக இருக்கிறார் கணவர். நான் சில காலங்கள் தனியார் பள்ளியில் ஆசிரியர். பிறகு விட்டிலேயே டியூஷன் என்று எடுத்துக் கொண்டிருந்தேன். எங்களுக்கு ஒரே மகன்.

பெற்றோர் பார்த்து வைக்கப்பட்ட திருமணம் தான். எல்லா வீடுகளையும் போல ஒற்றைக் குழந்தையை வைத்துக் கொண்டு அவனை எப்படியாவது படித்து பெரியாளாக்கிட வேண்டும் என்று எண்ணத்திலேயே மிச்சம் பிடித்து இருக்கிற சொத்தை விற்று உழைப்பைக் கொட்டி படிக்க வைத்தோம்.

அவனுக்காக எல்லாம் அவனுக்காக :

அவனுக்காக எல்லாம் அவனுக்காக :

பள்ளிப்படிப்பை முடித்திருந்தான். அடுத்ததாக என்ன படிக்க வைக்க என்று எங்களுக்குத் தெரிந்தவர்கள் எல்லாரிடமும் விசாரித்தோம். கண்ணை மூடிக் கொண்டு இன்ஜினியரிங் சேர்த்து விடு என்றார்கள். அதுவும் கோவை அல்லது சென்னையில் படித்தால் மட்டுமே உடனடியாக வேலை கிடைக்கும் என்றும் சொன்னார்கள். நாங்கள் வசிப்பதோ திருச்சியில் அடித்துப் பிடித்துக் கொண்டு கவுன்சிலிங் சென்றால் மகனுக்கு சென்னையில் உள்ள புகழ்ப்பெற்ற பொறியியல் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது.

நல்லா யோசிச்சு சொல்லு அவன கண்டிப்பா அங்க படிக்க வைக்கணுமா? நம்ம சக்திக்கு அதெல்லாம் ஒத்து வருமா?

அங்க படிச்சாதாங்க அவனுக்கு உடனே வேலை கிடைக்கும். நல்லா சம்பாதிச்சு உடனே செட்டில் ஆக முடியும்.

தெரியுது ஆனா... காலேஜ் ஃபீஸ் போக தங்க, சாப்டன்னு.... நம்மளால சமாளிக்க முடியுமான்னு தோணல.

இவ்ளோ காலம் கஷ்டப்பட்டோம் இன்னும் நாலே வருஷம் தான் அப்பறம் எல்லாமே நல்லா தான் நடக்கும். இவ்ளோ காலம் பொறுத்தவங்க இந்த நாலு வருஷம் பொறுத்துக்க மாட்டோமா?

 எல்லாத்தையும் விற்றுவிடு :

எல்லாத்தையும் விற்றுவிடு :

ஆரம்பத்தில் பேங்க் லோன்... ஸ்காலர்ஷிப்,கடன் என்று அங்கே இங்கே புரட்டினோம்.முதல் இரண்டு வருடங்கள் சமாளித்தாகிவிட்டது. மூன்றாம் வருடம் எங்கும் பணத்தை புரட்ட முடியவில்லை. என் நகைகளை விற்றேன். இரண்டு வருடங்கள் படிப்பை முடித்தான்.

படிப்பு முடித்த ஒரு வருடத்திற்கு அவனுக்கு எங்குமே வேலை கிடைக்க வில்லை. எதேதோ சொன்னான். ப்ராஜெக்ட் வந்தா தான் எடுப்பாங்க, முன் பணம் கொடுத்தா தான் எடுப்பாங்க எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. படிப்பு முடித்த மறு மாதத்திலிருந்தே கை நிறைய சம்பளத்தை அள்ளிக் கொண்டு வருவான் என்று எதிர்ப்பார்த்திருந்த எங்களுக்கு இது பெரும் ஏமாற்றமாகத்தான் இருந்தது.

நிலைகுலைந்த கணவர் :

நிலைகுலைந்த கணவர் :

என்னிடமும் கேட்கமுடியுமால் அவனிடம் எதுவும் சொல்ல முடியாமல் இனி இந்தக் கடனை எல்லாம் எப்படி அடைக்கப்போகிறோம் என்ற கவலையே அவருக்கு பெரும் மன அழுத்தத்தை கொடுத்தது.

2014 ஆம் ஆண்டு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சீரியசாக மருத்துவமனையில் சேர்த்தோம். ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டது. இனி அவரால் வேலைக்குப் போக முடியாத நிலை. நான் வேலைக்குச் சென்றேன் பிறகு ஒரு கட்டத்தில் பிபிஓவில் மகனுக்கு வேலை கிடைத்து அங்கே பணியாற்றி ஆறு மாதங்களில் ஐ டி நிறுவனத்திற்கு மாறி ப்ராஜெக்ட் கிடைத்து லண்டன் கிளம்பிவிட்டான் மகன்.

இனி தான் எல்லாம்:

இனி தான் எல்லாம்:

பிறகென்ன இரண்டே வருடங்களில் நிலைமை சீராகி விட்டதே என்று நினைக்காதீர்கள் இதன் பிறகு தான் பிரச்சனையே. மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். அவரும் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கி விட்டார். மாதச் செலவுக்கு கூட மகனின் கையை எதிர்ப்பார்க்க வேண்டிய கட்டாயம்.

மகனுக்கு திருமணம் என்றதுமே உறவுகள், தோழிகள் எல்லாரும். உனக்கு என்னென்ன தேவையா எல்லாத்தையும் இப்பவே வாங்கி வச்சிரு. வீடு லோன் வாங்கச்சொல்லி கட்டிடு அந்த வாடகைய வச்சு நீங்க வாழ்ந்துக்கலாம். இல்லன்னா ஒவ்வொரு நல்லது கெட்டதுக்கும் மகன் தரணும்னு அவன் கைய பாத்துட்டு இருக்கணும்.

உனக்கு கொஞ்சம் கூட அறிவேயில்ல இப்டி மகன படிக்க வைக்கிறேன்னு இருக்குற சொத்த எல்லாம் அழிப்ப.... இப்ப பாரு உனக்கு சோத்துக்கும் கூட வழியில்லாம இருக்கு.

வரபோறவ எப்டின்னு நம்மளால சொல்ல முடியாது. இந்த காலத்து புள்ளைங்கள நம்ம ஒண்ணும் கேக்கவும் முடியல.....

என் மகன் :

என் மகன் :

என் மகன் அப்டியில்ல... அவனுக்கு நான்னா ரொம்ப உசுரு அவன் யார்ட்டயும் என்ன விட்டுக்கொடுக்க மாட்டான் என்று அவர்களிடத்தில் சரிக்குச் சரி பேசி சமாளித்தாலும் உள்ளுக்குள் லேசாக பயம் இருக்கத் தான் செய்தது.

அவருக்கு என்னிடமோ மகனிடமோ பணம் கேட்க கூச்சம். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு காலம் சம்பாதிச்சு, எல்லா நெருக்கடிகளையும் சந்தித்து முட்டி மோதி போராடி இன்னக்கி இப்டி இருக்குற இடம் தெரியாம கிடக்குறாரு.

என்ன நடந்தாலும் அவரு பாத்துப்பாரு என்ற நம்பிக்கை எனக்கும் குறைய ஆரம்பித்தது. திடீரென்று அவருக்கு எதாவது ஆகிவிட்டால் ஏன் அதை விட மாசம் பொறந்தா வீட்டு வாடகை கொடுக்குறதுல இருந்து கரண்ட் பில், மருத்து மாத்திரை, மளிகை சாமான்னு எல்லாத்துக்குமே அவனதான் எதிர்ப்பார்த்திருக்க வேண்டிய கட்டாயம்.

மனசு கேக்காம அவன்கிட்டயே பல தடவ கேட்ருக்கேன்.

ம்ம்மா... பக்கத்து வீட்டுல சொன்னாங்க, அத்த சொன்னாங்க.... தூரத்து சொந்தம் சொன்னாங்கன்னு நீ தேவையில்லாம பயப்படாத. நான் ஒண்ணும் மத்தவங்க மாதிரி இல்ல நான் கண்டிப்பா அப்டி எல்லாம் இருக்க மாட்டேன். நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டு என்னைய படிக்க வச்சீங்க என்னோட படிப்புக்காக... நீங்க உங்களோட சொத்து நகை எல்லாத்தையும் இழந்தீங்க. உங்கள அப்டியே அம்போன்னு விட்டுட்டு போய்ட மாட்டேன் . தேவையில்லாம பயபப்டாதீங்க.

மகிழ்வான குடும்பம் :

மகிழ்வான குடும்பம் :

மகன் சொன்னது எனக்கு அவ்வளவு ஆறுதலாய் இருந்தது. நல்ல இடத்திலிருந்து பெண் பார்த்து மகனுக்கு திருமணம் செய்து வைத்தோம். இருவரும் சென்னையில் செட்டில் ஆனார்கள். நாங்கள் ஊரில் மாதம் ஒரு பதினைந்து நாட்கள் அங்கே மீதம் இங்கே என்று மாறி மாறி தங்க ஆரம்பித்தோம்.

ஆரம்பத்தில் எல்லாம் நல்லப்படியாகவே நகர்ந்தது. பேத்தி பிறந்தாள். மருமகள் முகம் காட்டத்துவங்கினாள். ஐந்தாண்டுகள் ஒப்பேத்தினோம். பேத்திக்கு பள்ளி செல்லும் வயது. இரண்டாவதாக பேரன்.

மருமகள் இப்போது பத்திரகாளியின் மரு உருவமாய்.. காட்சியளித்தாள்.

மருமகள் :

மருமகள் :

எவ்ளோ நேரம் நானே காலைல சமச்சு இவளக்கிளப்பி, தண்ணி பிடிச்சு வைக்கிறது.டெய்லி காலங்காத்தால எந்திரிச்சு உங்கப்பா வாக்கிங் போறாருல அப்ப அந்த குப்பைய கொண்டு போய் போட்டா என்ன?

காய்கறி வாங்கிட்டு தான் வர்றோம் அத எடுத்து ஃப்ரிட்ஜ்ல கூட வைக்க முடியாதா....

சரி வர லேட்டாகுது நைட்டு சாப்பட நம்மலே ரெடி பண்ணுவோம்னு பண்றாங்களா... குழந்தை கைல அடங்காம அழகுறானே அவ எப்டி சமையலப்பாப்பா நம்ம பண்ணுவோம்னு அவங்களா எடுத்து பண்ண வேணாம்.

ஒரு காபி அவங்களா போட்டு குடிக்க மாட்டாங்களா?

இப்படியாக சின்ன சின்ன பிரச்சனைகளில் சாடைமாடையாக பேச ஆரம்பித்து இப்போதெல்லாம் முகத்திற்கு நேராக அதட்டும் அளவுக்கு வந்துவிட்டாள்.

நான் என்ன செய்தேன் :

நான் என்ன செய்தேன் :

ஆரம்பத்தில் எங்கள் இருவருக்கும் வந்து பஞ்சாயத்து செய்த மகன் இப்போதெல்லாம் கண்டு கொள்வதே கிடையாது.

சரி விடு.... என்று அவளிடமும்

ஏன்மா இப்டி பண்ற என்று என்னிடமும் சொல்வதோடு சரி.

இன்றைக்கு மகனும் எங்களுடன் சரியாக பேசுவதில்லை. ம்மா... நீங்க இங்க இருக்குறது எங்க ரெண்டு பேருக்கும் சண்டை தான் வருது. நீங்க ஊர்ல இருங்க மாசத்துக்கு ரெண்டு தடவ எதுக்கு வந்துட்டு போகுற வேல வயாசனா காலத்துல நாங்க வர்றோம். எப்பவும் எங்களுக்கு வீக்கெண்ட் லீவ் இருக்கும் என்று சொல்லி பெட்டி படுக்கையோ காலி செய்ய வைத்து ஊரில் ஒத்திக்கு வீடு பார்த்து குடியமர்த்தினான்.

முதல் வாரம் குடும்பத்தினருடன் வந்தார்கள். பின்னர் அடுத்த மாதம் அவன் மட்டும் வந்தாம். பின்னர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்று குறைந்தது. அதன் பிறகு தீபாவளி மற்றும் பொங்களுக்கு... இந்த ஆண்டு தீபாவளிக்கு கூட வரவில்லை.

இருப்பத்தி ஐந்து வருடங்கள் பார்த்து பார்த்து வளர்த்த மகன். அவனது எதிர்காலத்திற்காக எங்களது உடைமைகளை சொத்துக்களை எல்லாம் இழந்து இன்றைக்கு அவனையும் இழந்து அனாதையாக நிற்கிறோமே... இந்த வாழ்க்கை வேறு யாருக்கும் வந்து விடக்கூடாது. முன் ஜென்மத்து பாவம் தான்....

முகநூல் :

முகநூல் :

நமது தமிழ் போல்ட் ஸ்கை தமிழ் முகநூல் பக்கத்தில் இப்படியான விரக்தியான பதிவை அனுப்பியிருந்தார் திருச்சியைச் சேர்ந்த ராஜேஸ்வரி . நிச்சயமாக அவருக்கான எதிர்ப்பார்ப்புகள் பொய்க்கும் போது, அதுவும் இனி மகன் தான் எல்லாமே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது திடிரென்று ஏற்பட்டிருக்கும் இந்த பிரிவு கொஞ்சம் சங்கடமானது தான் .

இதிலிருந்து அவர் மீண்டு வர என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள் அதோடு... இங்கே நான் சொல்லியிருக்கும் சில யோசனைகளையும் படித்து விட்டு அதற்கான உங்களுடைய கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ரிப்ளை :

ரிப்ளை :

வலி மிகுந்த கடிதம். உங்களது உணர்வுகளை மதிக்கிறோம் உங்களுக்கான விடையை கண்டடைய முயற்சித்திருக்கிறோம் இதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

எல்லாமே மகன் மீது தவறு, மருமகள் மீது தவறு, அவனுக்காக நான் என்னவெல்லாம் செய்தேன் தெரியுமா? என் சொத்தை எல்லாம் இழந்தேன் என்று அடுக்கிக் கொண்டேயிருக்கிறீர்கள். நிச்சயமாக அது மறுப்பதற்கில்லை. ஆனால் ஏன்? நான் செய்தேன் அவனுக்காக நான் செய்தேன் என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறீர்கள்? மகனிடம் என்ன கொடுக்கல் வாங்கல் பிஸ்னாஸா நடக்கிறது?

இவ்வளவு நாட்கள் வரை எனக்கே எனக்கான பொருள் என்று நீங்கள் நம்பிக்கொண்டிருந்த மகனை சொந்தம் கொண்டாட மனைவி மக்கள் என்று ஒரு கூட்டம் சேர்ந்திருக்கிறது. அதை ஏற்றுக் கொள்கிற மனப்பக்குவத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் பட்ட சிரமங்களை எல்லாம் தூக்கிப்போடும் ஊதாரியில்லை உங்கள் மகன் என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள் பிறகென்ன உங்களுக்கு கவலை?

நான் மாமியார். எங்கே என் இடத்தை விட்டுக் கொடுத்தால் மருமகளுக்கு அடிபணிந்தது போலாகிடும். அவளை கொஞ்சம் பயத்துடனேயே வைத்திருக்க வேண்டும் என்ற உங்களது அடிப்படையை மாற்றுங்கள். அது மருமகளின் வீடல்ல உங்களின் வீடு என்பதை புரிந்து கொள்ளுங்கள். இன்னுமமும் மகன் எனக்குத் தான் என்றும் மருமகள் வேறு யாரோ என்று நீங்கள் நம்பிக்கொண்டிருப்பது தான் இப்போதைய பிரச்சனை. மகனின் சரிபாதி தான் மருமகள் என்பதை முதலில் உணருங்கள். மற்றது தானாக புரிய வரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A letter from our reader about daughter in law

A letter from our reader about daughter in law
Subscribe Newsletter