முன் கூட்டியே வெளிப்படும் விந்து பிரச்சனைக்கு தீர்வு தரும் மருந்துகள்!

Posted By:
Subscribe to Boldsky

தாம்பத்தியத்தில் முன் கூட்டியே விந்து வெளிபடுதல் என்பது அனைவரும் ஏதோ குறைபாடு போல காண்பதுண்டு. உண்மையில் இது கட்டுப்பாடு சார்ந்த விஷயம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கென மருந்துகள் எடுத்துக் கொள்வது அவசியமற்றது என சமீபத்திய ஆய்வில் கூட தெரியவந்துள்ளது.

முன் கூட்டியே விந்து வெளிபடுதல் உணர்ச்சி சார்ந்து ஏற்படும் ஒன்று என்றும், மன அழுத்தம் காரணமாக விந்த தள்ளல் ஆண்கள் மத்தியில் ஏற்படும் இயல்பான ஒன்று தான். இதை உணர்ச்சி கட்டுப்படுதல் மூலமாக தீர்வு காணலாம் என கூறுகின்றனர்.

மன அழுத்தம் காரணமாக விந்து தள்ளல் ஏற்படுவதால் சில மன அழுத்த மாத்திரைகள் மூலம் இதை கட்டுப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. கீழ் கூறப்பட்டுள்ள மருந்துகள் / மருத்துவ முறைகள் வெறுமென மன அழுத்தத்தை சரிசெய்ய மட்டும் பயன்படுதப்படுவதல்ல. இதை சிறப்பு மருத்துவர்கள் அறிவுரை இன்றி உட்கொள்ள கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எஸ்.எஸ்.ஆர்.ஐ

எஸ்.எஸ்.ஆர்.ஐ

எஸ்.எஸ்.ஆர்.ஐ என்பது (SSRI - Selective serotonin reuptake inhibitor) மன அழுத்தம் மற்றும் மன அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகள் ஆகும். இந்த மருத்துவ முறை பின்பற்றி பலனை காண இரண்டில் இருந்து மூன்று வாரங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.

(குறிப்பு: எந்த ஒரு மருந்தாக இருப்பினும் அது உங்கள் உடல் நலன், உடல் நிலை சார்ந்தே பலனளிக்கும் என்பதால். மருத்துவர் ஆலோசனை இன்றி எந்த ஒரு மருந்துகளையும் எடுத்துக் கொள்வது தவறு.)

டபாக்ஸிடைன் (Dapoxetine)

டபாக்ஸிடைன் (Dapoxetine)

டபாக்ஸிடைன் உடலுறவில் ஈடுபடும் மூன்று மணி நேரத்திற்கு எடுத்துக் கொள்ளவதால் நல்ல தீர்வு பெற முடியும்.

நடத்தை மற்றும் உளவியல் ரீதியான சிகிச்சைகள்!

நடத்தை மற்றும் உளவியல் ரீதியான சிகிச்சைகள்!

நடத்தை மற்றும் உளவியல் ரீதியான சிகிச்சைகள் (Behavioral and Psychological Therapies) தான் இதற்கு சிறந்த தீர்வு தரும் சிகிச்சை முறையாகும். இதனால் ஒருவரின் தன்னம்பிக்கை மற்றும் உறவில் தொடர்பு கொள்வது, முக்கியமாக விந்து வெளிப்படும் செயலாற்ற நிலை போன்றவற்றில் முன்னேற்றம் காண முடியும்.

மருந்துகள்!

மருந்துகள்!

மருந்துகளுடன் நடத்தை மற்றும் உளவியல் ரீதியான சிகிச்சைகள் அளிப்பது தான் உடலுறவில் முன்கூட்டியே விந்து தள்ளல் உண்டாவதை தடுக்க சரியான முறை என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

தனிப்பட்ட சிகிச்சை!

தனிப்பட்ட சிகிச்சை!

விந்து தள்ளல் என்பது உடல்நல குறைபாடு இல்லை என்பதால், இதை ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் இல்வாழ்க்கை மற்றும் அவரது உடலுறவு வாழ்க்கை சார்ந்து பரிசோதித்து சிகிச்சை எடுத்துக் கொள்வது தான் சிறந்தது.

உணர்ச்சிகளை கட்டுப்படுதல்!

உணர்ச்சிகளை கட்டுப்படுதல்!

விந்து தள்ளலை தடுக்க, உணர்சிகளை கட்டுப்படுத்த பயில வேண்டியது அவசியமாக கருதப்படுகிறது. மேலும், ஆண்கள் முதலில் இதை ஒரு கோளாறாகவோ அல்லது குறைபாடாகவே கருத கூடாது. இதனால் அதிகரிக்கும் மன அழுத்தம் தான் விந்து தள்ளல் அதிகம் ஏற்பட காரணியாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Medicines Work for Premature Ejaculation

What Medicines Work for Premature Ejaculators?
Please Wait while comments are loading...
Subscribe Newsletter