இறைவி படத்துல இதெல்லா நீங்க கவனிச்சிங்களா?

Posted By:
Subscribe to Boldsky

இறைவி, பெண்ணியம் அல்லது பெண் சுதந்திரம் சார்ந்த பெரிய கருத்து சொல்லும் படமல்ல. நமது அன்றாட வாழ்வில், ஆண்கள் செய்யும் செயல்கள், பெண்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கங்களை உண்டாக்குகின்றன, ஆண்களின் செயல்கள் மற்றும் நடவடிக்கையால் பெண்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கூறும் படம் தான் இறைவி!

"24" படத்துல இதெல்லா நீங்க கவனிச்சிங்களா?

அன்றாடம் ஆண்கள் பெண்களை திட்டுவதில் இருந்து, குடி, மாது, நட்பிற்காக செய்கிறேன் என்று வேண்டாத வேலைகளில் ஈடுபடுதல் என ஆண்கள் தங்கள் செயலால் என்ன பாதிப்பு ஏற்பட்டு விடும் என கருதும் விஷயங்கள் பல, தினம் தினம் பெண்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முன் கோபம்

முன் கோபம்

முன் கோபமானது புகை, குடி,போதை, மாது போன்றவற்றின் மீது கொண்டுள்ள மோகத்தை விட கொடியது. குடி உங்களை கொல்லும் எனில், முன் கோபம் உங்கள் வாழ்க்கையையே கொல்லும்.

மனைவி, குழந்தை

மனைவி, குழந்தை

நட்பிற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், உங்களை நம்பி இருக்கும் மனைவி மற்றும் குழந்தையையும் அது பாதிக்கும் எனில், அதை நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு மறுத்து, ஒதுங்கிவிடுவது நல்லது. உங்களை நம்பி இருக்கும் உயிர் மற்றும் உங்களால் பிறந்த உயிருக்கு முன்னே வேறு எதுவும் பெரியதல்ல.

பட்டும் திருந்தாதவர்கள்

பட்டும் திருந்தாதவர்கள்

ஆண்கள் ஆட்டு மந்தையாக இருந்துவிட கூடாது. ஓர் தவறு செய்து அதற்கான தண்டனையும் பெற்ற பிறகு, மீண்டும் அதே தவறை செய்வது, உங்கள் மீதுள்ள மனிதன் எனும் அடிப்படை மரியாதையையே குறைக்க செய்யும் செயலாகும். இல்லறமாக இருப்பினும் சரி, சமூகமாக இருந்தாலும் சரி, செய்த தவறை மீண்டும், மீண்டும் செய்வது அடிமுட்டாள் தனம்.

பெண் சுதந்திரம்

பெண் சுதந்திரம்

பெண் சுதந்திரம் ஆண்கள் தருவதல்ல, பெண்களின் பிறப்பிலேயே இருப்பது. அதை, மறுக்கவும், தடுக்கவும், கட்டுப்படுத்தவும் யாருக்கும் உரிமையில்லை. ஆண்களை சார்ந்து இல்லாமல், பெண்களே தனித்து வாழும் சூழல் வரவேற்க்கத்தக்கது.

நிச்சய திருமணம்

நிச்சய திருமணம்

நிச்சய திருமணத்தில் பெரும்பாலும் பெற்றோர் செய்யும் தவறு, குடும்பத்தை பற்றி மட்டும் விசாரிப்பது. மணமகன் எந்தளவு நல்லவன், அவனது குணாதிசயங்கள் என்ன, அவனது தனிப்பட்ட செயல்பாடுகள், நட்பு, வேலை குறித்தும் ஆராய்ந்து தெரிந்துக் கொண்ட பிறகு திருமணம் செய்வது தான் சரி.

இரண்டாம் திருமணம்

இரண்டாம் திருமணம்

நமது சமூகத்தில் இரண்டாம் திருமணம் என்பது கூட, ஆண்கள் செய்தால் ஓர் பார்வையிலும், பெண்கள் செய்தால் மாறுபட்ட பார்வையிலும் நோக்கும் சுபாவம் இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், இருவருக்கும் எதிர்பாலின துணை கட்டாயம் தேவை தான்.

இறைவி!

இறைவி!

பொதுவாகவே நமது சமூகத்தில் பெண் குழந்தை பிறந்தால் மகாலக்ஷ்மி பிறந்துவிட்டாள் என்பார்கள். கிராம புரங்களில் பெண் குழந்தைகள் குல தெய்வமாக கருதுவதும் உண்டு. வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்களும் நமது குடும்பத்தை காக்கும் தெய்வங்கள் தான். இதை எல்லா ஆண்களும் புரிந்துக் கொண்டால், இல்லறத்தில் எந்த பிரச்னையும் எழாது.

மழையும் சமூகமும்

மழையும் சமூகமும்

பெண்களை அழ வைப்பவன் ஆணாகவே இருக்க முடியாது. நீங்கள் ஓர் சிறந்த ஆணாக இருந்தால் அந்த பெண் உங்களை நினைத்து அழ வேண்டுமே தவிர, மாறாக உங்களால் அழக கூடாது. ஆண்களின் பலம் பெண்களை காப்பதற்காக இருக்க வேண்டுமே தவிர, நீங்கள் செய்வதை எல்லாம் பொறுத்துக்கொள்வதக்கு அல்ல.

வினை விதைத்தவன்

வினை விதைத்தவன்

பெண்களை அழ வைக்கும் எந்த ஓர் ஆணின் வாழ்க்கையும் சந்தோசமாக இருக்காது. சிலர் அவர்கள் பிரிந்து செல்லும் போது உணர்வார்கள். பலர் அவர்கள் நிரந்திரமாக பிரிந்த பிறகு தான் உணர்கின்றனர்.

குடி பழக்கம்

குடி பழக்கம்

குடி பழக்கம் வீட்டுக்கும், நாட்டுக்கும் மட்டுமல்ல, நல்ல உறவுகளுக்கும் கேடு விளைவுக்கும். பெரும்பாலான வீடுகளில் இன்றளவும் பெண்கள் துன்புற காரணியாக இருப்பது இந்த குடி தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Relationship Tips From The Movie Iraivi

Relationship Tips From The Movie Iraivi, read here in tamil.
Story first published: Wednesday, June 8, 2016, 13:56 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter