முதல் குழந்தை பிறந்த பிறகு, உங்கள் மனைவியிடம் இந்த 5 மாற்றங்களை கண்டுள்ளீர்களா?

Posted By:
Subscribe to Boldsky

அம்மா! இந்த சொல் தான் ஒரு பெண்ணை, அவள் வாழ்க்கையை முழுமை அடைய செய்கிறது. வாழ்க்கை மட்டுமல்ல, ஒரு மனிதியாக பெண் முழுவதும் கற்றுக் கொள்ளவும், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருப்பதற்கும் அம்மா என்ற ஸ்தானம் தான் காரணம்.

Relationship Changes Occurs in Women After First Delivery

தாய்மை அடைந்த பெண்கள், முக்கியமாக, முதல் குழந்தை பெற்றவுடன், இல்லறம் சார்ந்த விஷயங்களில் அவர்களிடம் பல மாற்றங்கள் காண முடியும். அவை என்னென்ன, எதனால் அவர்களிடம் இந்த மாற்றங்கள் தென்படுகின்றன என இனி காண்போம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாற்றம் #1

மாற்றம் #1

குழந்தை வளர்ப்பு, ஊடச்சத்து மிகுந்த உணவுகள், எப்படி தாலாட்ட வேண்டும், என்னெவெல்லாம் செய்ய வேண்டும் என அதிக பொறுப்புகளுடன் காணப்படுவார்கள்.

மாற்றம் #2

மாற்றம் #2

யாராவது சிறிய தவறு செய்தாலும் பெரியளவில் கோபம் வரும். முக்கியமாக குழந்தை சார்ந்த விஷயத்தில். தவறாக தூக்கிவிட்டால் கூட, யார் எவர் என பார்க்காமல் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.

மாற்றம் #3

மாற்றம் #3

குழந்தையை தூங்க வைக்க வேண்டும், அழும் போது தாலாட்ட வேண்டும், சரியாக உணவூட்ட வேண்டும். இதற்கெல்லாம் மேல், வீட்டு வேலைகளும் செய்ய வேண்டும். வீட்டு வேலைகள் அதிகமாக இருப்பதாலேயே அதிக கோபம் அடிக்கடி வரும். கணவன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

மாற்றம் #4

மாற்றம் #4

குளித்துவிட்டு தான் குழந்தையை தூக்க வேண்டும், இறைச்சி உண்டால், பல் துலக்கிவிட்டு தான் குழந்தையை தொட வேண்டும், முத்தமிட வேண்டும், வண்டி ஓட்டிவிட்டு வந்தால் கூட கை கழுவிய பிறகு தான் குழந்தை அருகே செல்ல வேண்டும் என பல கண்டிப்புகள் இருக்கும்.

மாற்றம் #5

மாற்றம் #5

கணவன் அதிகமாக குழந்தை மீது மட்டுமே பாசமாக, அக்கறையாக இருந்தாலும், அவர் ஏன் தன் மீது அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை என சங்கட படுவார்கள்.

கருத்து!

கருத்து!

இதற்கெல்லாம் காரணம் குழந்தை மீது அவர் வைத்திருக்கும் அன்பும், அக்கறையும் தான். இதன் வெளிப்பாடாக தான் இந்த சின்ன, சின்ன மாற்றங்கள் அதிகளவில் பெண்களிடம் முதல் குழந்தை பிறந்த பிறகு வெளிப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Relationship Changes Occurs in Women After First Delivery

Relationship Changes Occurs in Women After First Delivery
Subscribe Newsletter