உங்கள் உறவில் இந்த நாலு அறிகுறிகள் தென்படுகிறதா?

Posted By:
Subscribe to Boldsky

இல்லற வாழ்க்கை என்பது ஒரு மனையை போல. அதற்கும் அன்பெனும் நல்ல அஸ்திவாரம், உறவுகள் எனும் தூண்கள், பெற்றோர், பிள்ளைகள் எனும் மேற்கூரை இருந்தால் தான் அது உணமையான வீடு. இல்லையேல் அது வெறும் பொட்டல் காடு. மேலும், உங்கள் வீட்டை உங்களுக்கு பிடித்த மாதிரி நீங்கள் தான் கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.

அன்பு செலுத்துதல், அக்கறை எடுத்துக் கொள்ளுதல், ஒருவரை ஊக்குவிப்பது, அவரவருக்கான சுதந்திரத்தை பறிக்காமல் இருப்பது போன்றவை தான் உறவை சிறக்க வைக்கும் பண்புகள். உறவு சிறக்க வேண்டுமெனில் பாராட்டுதல் மிக முக்கியம். கணவன், மனைவிக்கு இடையில் நன்றி தான் கூறிக் கொள்ள கூடாதே தவிர பாராட்டிக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பண்புகளை மதித்தல்

பண்புகளை மதித்தல்

ஒரே போன்று குணாதிசயங்கள், பண்புகள் கொண்டுள்ளவர்கள் சிறந்த நண்பர்களாக இருக்கலாம். ஆனால், சிறந்த கணவன், மனைவியாக இருக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான்.

பண்புகளை மதித்தல்

பண்புகளை மதித்தல்

வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டுள்ளவர்கள் மத்தியில் தான் காதல் ஈர்ப்பு ஏற்படும். எ-கா., காந்தங்களை போன்றது தான் தாம்பத்திய, இல்லற உறவு. எனவே, நேர் எதிரான குணாதிசயங்கள் கொண்டிருந்தாலும் அதை மதிக்கவும், பாராட்ட செய்தாலே உங்கள் உறவு என்றும் சிறந்து விளங்கும்.

நம்பகமும், சுதந்திரமும்

நம்பகமும், சுதந்திரமும்

நம்பிக்கை தான் அனைத்து உறவுகளின் வேர். இது சிதைந்துவிட்டால் உறவின் வலிமை சீர்குலைத்துவிடும். எனவே, ஒருவர் மீதான நம்பிக்கையை எக்காரணம் கொண்டும் சந்தேகப்படாமல் இருக்கும் வரை உங்கள் உறவு சிறந்து விளங்கும்.

நம்பகமும், சுதந்திரமும்

நம்பகமும், சுதந்திரமும்

அதே போல சுதந்திரத்தை பறிக்க கூடாது. ஒருவேளை உங்கள் துணை நீண்ட நாள் தோழர்/தோழியை கண்டதால் உங்களிடம் சொல்லாமல் கூட நேர தாமாதமாக வந்திருக்கலாம். வீட்டிற்கு வந்து கூட உங்களிடம் சொல்லலாம் என நினைத்திருக்கலாம். இவற்றை எல்லாம் பெரிதுப் படுத்தாமல் இருக்கும் உறவுகள் என்றும் சிறந்து விளங்கும்.

சமநிலை

சமநிலை

ஆண் பெண், கணவன் மனைவி என்ற பிரிவினை பாராமல். ஏற்ற தாழ்வு இன்றி. குடும்ப பொறுப்புகளில் இருந்து, மரியாதை அளித்தல், சமூகத்தில் பங்கெடுத்துக் கொள்ளதல் என அனைத்திலும் சமநிலை வளரும் உறவு என்றும் சிறந்து விளங்கும்.

மகிழ்விப்பது

மகிழ்விப்பது

உங்கள் துணை தோல்வி அல்லது சோகத்தில் ஆழ்ந்திருக்கும் போது அதைப் போக்க நீங்கள் முயற்சிப்பவராக இருந்தால் உங்கள் உறவில் என்றுமே தொய்வு ஏற்படாது. எந்நாளும் உறவில் இறுக்கமும், பாசமும் அதிகரித்துக் கொண்டு தான் போகும்.

முடிவு

முடிவு

இல்வாழ்க்கை என்பது நாமாக அமைத்துக் கொள்ளும் உறவு. அதை நமக்கு பிடித்த மாதிரி வாழ வேண்டும், எனில், அதற்காக நாம் தான் எதையேனும் முயற்சிக்க வேண்டும். மற்றவர்கள் நமது சந்தோசத்தைகட்டுப்படுத்தி அதிபதியாக இருந்தால் நாம் அடிமையாக இருக்கிறோம் என்று அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Four Signs A New Relationship Has Long-Term Potential

Four Signs A New Relationship Has Long-Term Potential, read here in tamil.