தாம்பத்திய உறவை பற்றி மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் கூறும் 5 முக்கிய அறிவுரைகள்!

Posted By:
Subscribe to Boldsky

எல்லாருக்கும் அறிவுரை கூற தான் பிடிக்கும், கேட்க பிடிக்காது. அதே போல, எங்கே சந்தேகங்கள் கேட்டால் தன்னை ஒன்றும் தெரியாதவன் என்பது போல பார்ப்பார்களோ என்ற எண்ணத்திலும் பலர் தங்கள் கெத்து சீர்கெடாமல் பார்த்துக் கொள்ள சில விஷயங்கள் பற்றி முழுமையாக அறிந்துக் கொள்ள மாட்டார்கள்.

அந்த சில விஷயங்களில் முக்கியமான விஷயம் தான் தாம்பத்தியம். தாம்பத்தியத்தில் நீங்கள் தெரியாமல் செய்யும் சிறு தவறுகள் கூட ஆரோக்கிய ரீதியாகவோ, உறவு ரீதியாகவோ பெரியளவிலான தாக்கங்களை உண்டாக்கலாம். எனவே, இந்த விஷயத்தில் தயக்கம் காட்டாமல் அறிவுரைகளை ஏற்றுக் கொள்வது தான் சரி.

இனி, தாம்பத்திய உறவை பற்றி மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் கூறும் 5 முக்கிய அறிவுரைகள் பற்றி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாசிடிவ் எண்ணங்கள்!

பாசிடிவ் எண்ணங்கள்!

தாம்பத்திய உறவில் எல்லா நாட்களிலும் சிறப்பாகவே செயல் பட முடியும் என்ற எண்ணத்தை முதலில் போக்க வேண்டும். உங்கள் உடல்நிலை மற்றும் மனநலம் குன்றியிருக்கும் தருணத்தில் உங்களால் சிறந்து செயல்பட முடியாமல் போகலாம். ஏதோ இரு தருணத்தில் உண்டாகும் இந்த மாற்றம் கண்டபின் மொத்தமாக எதிர்மறை எண்ணங்களில் மூழ்கிவிடுவது தவறு.

இதன் காரணத்தால் கூட நீங்கள் சரியாக ஈடுபட முடியாமல் போகலாம். எனவே, நேர்மறை எண்ணங்கள் வளர்த்து கொள்ளுங்கள். இது தாம்பத்தியம் மட்டுமின்றி, உங்கள் வாழ்க்கை முழுதும் சிறக்க உதவும்.

ஃபோர் ப்ளே!

ஃபோர் ப்ளே!

தாம்பத்திய வாழ்க்கையில் ஆண், பெண் இருவர் மத்தியிலும் பல வேறுபாடுகள் காணப்படும். பெண் முழுமையாக இணையாமல் ஆண் இன்பம் காண்பது அரிது. எனவே, பெண்கள் முழுமையாக தாம்பத்தியத்தில் இணைய ஃபோர் ப்ளே முக்கியமானது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

சூழ்நிலை!

சூழ்நிலை!

வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் வெற்றி தோல்விக்கு சூழ்நிலையும்காரணம். இதற்கும் அப்படி தான், இருவரில் ஒருவருக்கு சூழ்நிலை ஒத்துவரவில்லை எனிலும், கட்டாயப்படுத்த வேண்டாம். இவ்வாறு ஈடுபடுவது மன சங்கடங்களை தான் ஏற்படுத்தும்.

பார்ன் அல்ல!

பார்ன் அல்ல!

பார்ன் படங்களில் பார்த்தது போல துணையுடன் உறவில் ஈடுபட முயல வேண்டாம். அது வெறும் காட்சிப்படுத்தப்பட்ட படம் தான். உண்மையல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். மேலும், இது போன்ற செயல்கள் உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் பெண்களை பெரிதாக பாதிக்கும்.

பேச வேண்டும்!

பேச வேண்டும்!

பேசியே ஆட்சியை பிடித்தவர்கள் இருக்கும் போது. பேசி இதற்கு சம்மதம் வாங்குவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால், ஒருபொழுதும் சம்மதம் இல்லமல் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டாம்.

மனிதத்தன்மை படி யோசித்தால், சம்மதம் இல்லாமல் துணையுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதும் கற்பழிப்புக்கு நிகர் தான். எனவே, இந்த தவறை ஒருபோதும் செய்ய வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Intercourse Experts Share Their Absolute Best Piece of Advice

Five Intercourse Experts Share Their Absolute Best Piece of Advice
Please Wait while comments are loading...
Subscribe Newsletter