கர்வா சௌத் என்றால் என்ன? புராண கதையும், கொண்டாடுவதன் காரணமும்!!!

Posted By:
Subscribe to Boldsky

நமது பாரம்பரியத்திலும், கலாச்சாரத்திலும் கணவனுக்காக பெண்கள் விரதமிருப்பது நாம் அனைவரும் அறிவோம். கணவனின் ஆயுளுக்காக, மாங்கல்யம் நிலைக்கவும் பெண்கள் விரதம் இருப்பார்கள். இந்த வகையில் கணவனின் ஆயுள் நிலைக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று பெண்கள் இருக்கும் விரதம் தான் "கர்வா சௌத்"

தென்னிந்தியாவில் இது அவ்வளவாக பிரசித்தி பெற்றது இல்லை. வட இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இந்த விரதம் மிகவும் பிரபலமானது. இந்து மற்றும் சீக்கிய பெண்கள் இந்த விரதத்தை விடாமல் கடைபிடிக்கின்றனர். இந்த விரதம் இருப்பதால் கணவன் ஆரோக்கியமாக இருப்பான் என்பது காலம், காலமாக நம்பப்படும் ஐதீகம் ஆகும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூரியனில் தொடங்கி சந்திரனில் முடியும் விரதம்

சூரியனில் தொடங்கி சந்திரனில் முடியும் விரதம்

இந்த விரதம் இருக்கும் பெண்கள் காலையில் சூரியம் உதயமாகும் முன்னர் இருந்து மாலை சந்திரன் உதயமாகும் வரை உண்ணாமல் நோம்பு இருந்து விரதம் இருக்கிறார்கள்.

இந்திய மாநிலங்கள்

இந்திய மாநிலங்கள்

உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், இமாச்சல் பிரதேசம், ஜம்மு காஸ்மீர், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற இந்திய மாநிலங்களில் இந்த விரதம் மிகவும் புகழ் பெற்றது ஆகும்.

விரதம் இருக்கும் நாள்

விரதம் இருக்கும் நாள்

நமது நாள் கணக்கில் ஐப்பசி மாத பௌர்ணமி முடிந்த நான்காவது நாளில் இந்த விரதம் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி திருநாள்

தீபாவளி திருநாள்

வட இந்தியாவில் சரியாக தீபாவளி வருவதற்கு பத்து நாட்களுக்கு முந்தைய நாள் தான் கர்வா சௌத் விரதம் இருப்பதற்கான நாள் என்று கூறப்படுகிறது.

புராண செய்திகள்

புராண செய்திகள்

ராணி வீரவதி என்ற பழங்கால இந்தியப் பெண் தனது கணவருக்காக விரதம் இருந்து எமனிடம் இருந்து அவரை மீட்டு வந்ததாகப் புராண செய்திகள் கூறுகின்றன.

கண்ணாடி பார்ப்பது

கண்ணாடி பார்ப்பது

ராணி வீரவதிக்கு ஏழு அண்ணன்கள் இருந்தார்களாம். கணவனுக்காக ஓர் நாள் முழுதும் சந்திரனை பார்க்கும் வரை நோன்பு இருந்தார். அதுவரை தங்கை பசியில் வாடுவாளோ என்று ஒரு மரத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை அமைத்து அதில் ஒளியை பாய்ச்சி நிலவின் தோற்றத்தை வர வைத்தனர். இதைப் பார்த்து வீரவதி நோம்பு முடித்த நேரம் வேற்று நாட்டில் இருந்த கணவன் இறந்துவிட்டதாக செய்தி வந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சியுற்றாள் வீரவதி.

அன்னை பராசக்தி

அன்னை பராசக்தி

அன்னை பராசக்தி வீரவதி முன் தோன்றி, "உன் அண்ணன்கள் முகக் கண்ணாடியில் நிலவைக் காட்டி விரதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததால் இப்படி நேர்ந்துவிட்டது' என்று கூறினாள். இதைக் கேட்டு ராணி வீரவதி, மீண்டும் தொடர் உண்ணா நோன்பிருந்து எமனிடம் இருந்து கணவரை மீட்டு வருவேன் என சபதம் ஏற்றார்.

எமனிடம் இருந்து மீட்டல்

எமனிடம் இருந்து மீட்டல்

அதே போல தொடர் உண்ணா நோம்பு இருந்து எமனிடம் இருந்து தனது கணவனை ராணி வீரவதி மீட்டு வந்தால் என்று புராண செய்திகள் கூறுகின்றன.

சினிமாவின் மோகம்

சினிமாவின் மோகம்

இந்த கர்வா சௌத் எனும் விரதம், திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் ஆயுளுக்காக இருப்பது ஆகும். ஆனால், சமீபக் கால இந்தி திரைப்படத்தில் இது சார்ந்த காட்சிகள் இடம்பெற்றதால். இளம் பெண்கள் தங்கள் காதலர்கள் மற்றும் வருங்கால கணவனின் ஆயுளுக்காக விரதம் இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Is Karva Chauth

Do you know what is Karva Chauth? read here in tamil.