பெரும்பாலும் இல்வாழ்க்கையை பாதிக்கும் அந்த மூன்று தவறுகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

இல்லறம் நல்லறமாக அமைய வேண்டும், அதில் உல்லாசமாக பயணிக்க வேண்டும் என்று தான் பெரும்பாலும் அனைத்து தம்பதிகளும் விரும்புகிறார்கள். ஆனால், ஏற்றமும், குறைவும் இன்றி இதயமே துடிக்க முடியாது எனும் போது வாழ்க்கை எம்மாத்திரம். ஆனால், அதலபாதாளத்தில் விழாமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் உறவிலும் இந்த 12 முதல் முறை தருணங்களை அனுபவித்துள்ளீர்களா???

சிலரது வாழ்க்கையில் எப்போதுமே சண்டையும், சச்சரவுகளும் தான் நிறைந்திருக்கும். இவர்களால், அக்கம்பக்கத்து வீட்டார் எல்லாம் தூக்கம் இழக்க நேரிடும். நமது நாட்டில் அரசியல் கட்சிகள் குறைக் கூறிக் கொள்வதை போல முட்டி மோதிக்கொள்ளும் தம்பதிகளும் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் பொதுவான ஒருசில காரணங்கள் தான் இருக்கின்றன....

10 பொருத்தம் என்றால் என்ன? ஏன் அவசியம் பார்க்க வேண்டும்? - தெரிந்துக் கொள்ளுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒருதலை பட்சமாக செயல்படுதல்

ஒருதலை பட்சமாக செயல்படுதல்

நியாயம் யார் பக்கம் இருந்தாலும் ஒருதலைப்பட்சமாக பேசுவது. இது தான் பெரும்பாலும் இல்வாழ்க்கையை சிதைக்கும் செயலாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஆண் எனும் அகங்காரம் என்று கூட சொல்லலாம். தவறை ஒப்புக்கொள்ள வேண்டும், இதில் ஆண், பெண், கணவன், மனைவி என்ற பேதம் இருக்க கூடாது.

வெளியிடங்களில்

வெளியிடங்களில்

அதிலும் முக்கியமாக வெளியிடங்களில் ஆண்கள் செய்த தவறை மனைவி மீது சொல்லி தப்பித்துக் கொள்வது தான் இல்வாழ்க்கையை பாதிக்கும் முதல் செயல். எனவே, முதலில் இதை தவிர்க்க பழகுங்கள்.

சொல்லாத விதிமுறைகள்

சொல்லாத விதிமுறைகள்

தங்களுக்கு இது பிடிக்காது, பிடிக்கும் என எதையும் கூறாமல், செய்த பிறகு திட்டுவது. பெரும்பாலும் சாப்பிடும் போதும், வெளியிடங்களுக்கு செல்லும் போதும் தான் இந்த பிரச்சனையே வெடிக்கும். சிலருக்கு சில சமயங்களில் தான் சிலது பிடிக்காது. இதற்கு வீட்டில் இருக்கும் பெண்கள் எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது.

பெண்களும் கூட

பெண்களும் கூட

கணவன் எதையாவது ஆசையுடன் வாங்கி வந்தால் 100ல், 99 பெண்கள் இன்முகத்துடன் வாங்கிக் கொள்வது இல்லை. அது நொட்டை, இது சரியில்லை. இந்த கலர் எனக்கு பிடிக்காது என புலம்பி தீர்த்து விடுவார்கள். அந்த ஆணுக்கு ஏன்டா இவளுக்கு இத வாங்கிட்டு வந்தோம் என்று ஆகிவிடும்.

பொடிவைத்து பேசுவது

பொடிவைத்து பேசுவது

பெரும்பாலும் வீட்டு சண்டை ஏற்படும் போதும், ஏதேனும் விஷேசங்களுக்கு சென்று வரும் போது தான் இந்த பொடிவைத்து பேசும் நிகழ்வுகள் அதிகமாக நடைபெறும்.

மாமனார் வீடு சின்னாபின்னமாகிவிடும்

மாமனார் வீடு சின்னாபின்னமாகிவிடும்

மனைவி, கணவன் வீட்டார் பற்றி பேசுவது, கணவன் மனைவி வீட்டார் பற்றி பேசுவது என இருவீட்டார் நிலையும் தெருவுக்கு வந்துவிடும். திருமணத்திற்கு முன்னர் நடந்ததில் இருந்து, முந்தாநாள் இரவு நடந்தது வரை அனைத்தைப் பற்றியும் கொட்டித் தீர்த்து விடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Three Common Thinking Errors That Ruin Relationships

These are the most three common thinking errors that ruin relationships, Read here in tamil.
Subscribe Newsletter