For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமணத்திற்கு முன்பு நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமானவை!!

|

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்தான். ஆனால், அதை அறுவடை செய்யும் வரை பத்திரமாக பாதுகாத்து வளர்க்க வேண்டும். புயல், மழை, வெயில் என நிறைய தடங்கல்கள் ஏற்படலாம். அதை எல்லாம் மீறி நீங்கள் வெற்றிகரமாக அறுவடை செய்து வாழ்க்கையை நடத்த வேண்டும்.

அறுவடை செய்தால் மட்டும் போதுமா, நெல்மணிகளை எங்கு சேமிப்பது, அதை எப்படி வியாபாரம் செய்வது? போன்று பல கேள்விகள் இருக்கின்றன. வாழ்க்கையும் அப்படி தான. திருமணம் என்பது முடிவல்ல, தொடக்கம். இந்த புதிய தொடக்கத்தில் நீங்கள் தடையின்றி பயணம் செய்ய சிலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோபம் அடக்குதல்

கோபம் அடக்குதல்

நீங்கள் உங்கள் வீட்டில் பெரிய "கோவக்கார பயல்.." என்ற பெயர் எடுத்திருக்கலாம். ஆனால், அது திருமணத்திற்கு பிறகும் நீடிக்க கூடாது. இது இல்லற வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும் எனவே, கோபத்தை அடக்க கற்றுக் கொள்ளுங்கள்.

வாழ்வியல் முறை

வாழ்வியல் முறை

பேச்சுலர் வாழ்க்கையில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எத்தனை மணிக்கு வேண்டுமானலும் எழுந்திருக்கும் பழக்கம் இருந்திருக்கலாம். ஆனால், திருமணத்திற்கு பிறகு காலை விடியலில் இருந்து மாலை பொழுது சாயும் வரை நீங்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். அந்தந்த வேலையை அந்தந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும்.

சுத்தம்

சுத்தம்

சுத்தம் சோறு போடும் என்பார்கள், இதை நீங்கள் திருமணத்திற்கு பிறகு நன்றாக உணர முடியும். நீங்கள் சுத்தமாக இருந்தால் மட்டுமே மனைவி சோறு போடுவாள்.

குடும்ப பொறுப்பு

குடும்ப பொறுப்பு

குடும்பத்தில் நடக்கும் எந்த ஒரு நல்ல காரியம், மற்றும் கெட்ட காரியம் என அனைத்திலும் நீங்கள் பங்கெடுக்க வேண்டும். அந்த சூழ்நிலைகளை எப்படி கையாள வேண்டும் என்று நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

அக்கறை

அக்கறை

அம்மா, அப்பா, மனைவி என அனைவரின் மீதும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தனை நாள் பெற்றோர்கள் உங்கள் மீது அக்கறையாக இருந்திருப்பார்கள். ஆனால், இனிமேல் நீங்கள் தான் குடும்பத்தின் மீதும், குடும்ப உறுப்பினரின் உடல்நலன் மீதும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இது, உங்களை ஓர் நல்ல குடும்பத் தலைவனாக எடுத்துக் காட்டும்.

தாம்பத்தியம்

தாம்பத்தியம்

தாம்பத்தியம், இந்த தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற ஏதுமில்லை. சமூக வலைத்தளங்கள், இணையங்கள் என அவர்களே இதைப்பற்றி மட்டும் நிறைய கற்றுக் கொள்கிறார்கள்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

பெண்கள் இதில் மிகவும் கருத்தாக இருப்பர்கள். ஆனால், ஆண்கள் தான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதாரம் குடும்பத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. எதிர்காலத்தை மனதில் வைத்து சேமிக்க திட்டமிட வேண்டும். திருமணத்திற்கு முன்பு கற்றுக்கொள்ள வேண்டியதில் இது மிகவும் முக்கியமானது.

சமூக பொறுப்பு

சமூக பொறுப்பு

திருமணத்திற்கு பிறகு நீங்கள் உங்கள் வீடு மட்டுமின்றி, சமூகத்தின் மீதும் பொறுப்பாக இருக்க வேண்டும். இதற்காக நீங்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் என்றில்லை. ஆனால், உங்கள் பகுதியில் ஏதேனும் பிரச்சனை என்றால் அதில் உங்களால் முடிந்த அளவு உதவி செய்யுங்கள். அப்போது தான் உங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டும் என்றால், மற்றவர்கள் உதவி செய்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things To Learn Before Marriage

Do you know about things to learn before marriage? read here.
Story first published: Wednesday, September 23, 2015, 13:35 [IST]
Desktop Bottom Promotion