பிறந்த தேதியை வைத்து உங்களுக்கு ஏற்ற துணையை கண்டறிவது எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

ஜாதகம் பார்த்து திருமணம் செய்வது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஓர் குழந்தை பிறக்கும் போதே பிறந்த நேரத்தை வைத்து அதன் ஜாதகத்தை கணிதுவிடுவர். ஒரு சிலர் பிறந்த நேரத்தை குறிக்க தவறுதல் அல்லது ஜாதகம் தொலைந்துப் போவதால் அவர்களது பிறந்த நாளின் பொதுப் பலனை வைத்து பெண் பார்பார்கள்.

10 பொருத்தம் என்றால் என்ன? ஏன் அவசியம் பார்க்க வேண்டும்? - தெரிந்துக் கொள்ளுங்கள்!

இந்த பிறந்த நாள் வைத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் வழக்கம் பொதுவாக இருந்து வருகிறது. எப்படி ஜாதகத்திற்கு என்று தனி பொருத்தம் மற்றும் பலன்கள் இருக்கிறதோ, அவ்வாறே பிறந்த தேதியை வைத்து பார்ப்பதற்கும் பொது பலன்கள் மற்றும் பொருத்தங்கள் இருக்கின்றன.

திருமணங்களில் ஜாதக பொருத்தங்களின் முக்கியத்துவம்!

இந்த தேதியில் பிறந்தவர் எந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் அவரது வாழ்க்கை சந்தோசமாக இருக்கும், இருக்காது என்ற பலன் இருக்கின்றன. அவற்றை பற்றி இனிக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1,10,19,28 ம் தேதியில் பிறந்தவர்கள்

1,10,19,28 ம் தேதியில் பிறந்தவர்கள்

1,10,19,28 ம் தேதியில் பிறந்தவர்கள் 3, 4, 5, 6, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்ளலாம். இவர்கள், 1ம் எண்காரர்களை (பெண்கள்) தவிர்க்க வேண்டும். காரணம் 1ஆம் எண் சூரியன், சூரியன்(பெண்) அதிபதியாக வரும்போது அங்குக் கௌரவப் பிரச்சினைகள், குடும்ப அன்யோன்யம் குறைதல் போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. 1, 10, 19, 28 தேதிகளும், 6, 15, 24 தேதிகளும் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளிலும் திருமணம் செய்தால் வாழ்க்கை செழிக்கும்.

2,11,20,29 ம் தேதியில் பிறந்தவர்கள்

2,11,20,29 ம் தேதியில் பிறந்தவர்கள்

2,11,20,29 ம் தேதியில் பிறந்தவர்களுக்கு 1, 3, 5, 6 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் ஏற்றவர்கள். இருப்பினும் 7ந் தேதி பிறந்த பெண் மிகவும் சிறந்தவள் என்ற கருது நிலவுகிறது. 8 அல்லது 9 எண் உடைய பெண்களை மட்டும் மணக்கவே கூடாது. பிறகு வாழ்வே நரகமாகிவிடும். 1ம் எண் பிறந்த பெண்,இவர்களை அடக்கி ஆளும் திறன் கொண்டிருப்பார்கள். நல்ல வழித் துணையாகவும் அமைவாள். 2,11,20,29 ம் தேதியில் பிறந்தவர்கள் தங்களது திருமணங்களை 1, 10, 19, 28, 6, 15, 24, 7, 16 மற்றும் 25 தேதிகளும், மற்றும் 1, 6, 7 என்ற கூட்டு எண்ணாக வரும் நாட்களிலும் திருமணம் செய்துக் கொள்ளலாம்.

3,12,21,30 ம் தேதியில் பிறந்தவர்கள்

3,12,21,30 ம் தேதியில் பிறந்தவர்கள்

3,12,21,30 ம் தேதியில் பிறந்தவர்கள் 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை இனிமையாக அமையும். 2ஆம் எண்ணில் பிறந்தவர்களையும் திருமணம் செய்துக் கொள்ளலாம், இவர்கள் உங்களை அனுசரித்துப் போவார்கள்.

4,13,22,31 ம் தேதியில் பிறந்தவர்கள்

4,13,22,31 ம் தேதியில் பிறந்தவர்கள்

4,13,22,31 ம் தேதியில் பிறந்தவர்கள் 1, 8 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை திருமணம் கொண்டால் திருமண வாழ்க்கை நல்லப்படியாக அமையும். மற்றும் 5, 6 எண்களில் பிறந்த பெண்களும், இவர்களுக்கு நன்மையே செய்வார்கள். மேலும் 4ம் தேதியில் பிறந்த ஆண்கள், 6ஆம் தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும். இவர்கள் தங்களுடைய திருமணத்தை 1, 6 எண்ணாக வரும் தேதிகளில் செய்துக் கொண்டால் திருமண வாழ்க்கை இன்பமையமாக அமையும்.

5,14,23 ம் தேதியில் பிறந்தவர்கள்

5,14,23 ம் தேதியில் பிறந்தவர்கள்

5,14,23 ம் தேதியில் பிறந்தவர்கக்கு காதல் மீது அதிக மோகம் இருக்கும். தைரியமாக காதலில் ஈடுபடுவார்கள். அதுவும் 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் காதலால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள். இவர்கள் 1, 3, 6 பிறந்தவர்களையும் மணக்கலாம். 9, 18, 27, 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும், கூட்டு எண் 1, 9 வரும் தேதிகளும் திருமணத்திற்கு உகந்தவை. இவர்களுக்கு குழந்தை பாக்கியம் குறைவு எனவே 2, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

6,15,24 ம் தேதியில் பிறந்தவர்கள்

6,15,24 ம் தேதியில் பிறந்தவர்கள்

6,15,24 ம் தேதியில் பிறந்தவர்கள் 6, 9 எண்களில் பிறந்த பெண்களை திருமணம் செய்துக் கொள்வதால் நல்ல வாழ்க்கை அமையும். 1, 3, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தவர்களை தவிர்த்துவிடுவது நல்லது. மற்றும் திருமண நாளை 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய தேதிகள் அல்லது 1, 6, 9 போன்ற கூட்டு எண் வரும் நாட்களில் செய்துக் கொண்டால் நல்ல நன்மை பெறலாம்.

7,16,25 ம் தேதியில் பிறந்தவர்கள்

7,16,25 ம் தேதியில் பிறந்தவர்கள்

7,16,25 ம் தேதியில் பிறந்தவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். குறிப்பாக 2, 1 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும். 8ந்தேதி பிறந்தவர்களை மணந்து கொண்டால், இல்வாழ்க்கையே கசந்துவிடும். திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது. 9ம் எண் நடுத்தரமானதுதான்.

8,17,26 ம் தேதியில் பிறந்தவர்கள்

8,17,26 ம் தேதியில் பிறந்தவர்கள்

8,17,26 ம் தேதியில் பிறந்தவர்கள் 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை திருமணம்செய்துக் கொள்ளலாம். 2, 7 மற்றும் 8ஆம் என்னில் பிறந்த பெண்ணை மட்டும் திருமணம் செய்யக்கூடாது என்று கூறப்படுகிறது. 9ஆம் தேதியில் பிறந்த பெண்கள் இவர்களை அடக்கி ஆள முயல்வார்கள். திருமணம் செய்யும் நாளின் கூட்டு எண் 1, 6 வந்தால் இல்வாழ்க்கை செழிக்கும்.

9,18,27 ம் தேதியில் பிறந்தவர்கள்

9,18,27 ம் தேதியில் பிறந்தவர்கள்

9,18,27 ம் தேதியில் பிறந்தவர்கள் தாம்பத்தியத்தில் மிகுந்த நாட்டமும், முனைப்பும் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொண்டால், இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் பாக்கியம் அதிகம். 2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 ஆக வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது. மீறி செய்தால் திருமண வாழ்க்கை துயரமாக அமைய வாய்ப்புகள் உண்டு. 3, 6, 9, 1 ஆகிய நாட்களில் திருமணம் செய்துக் கொண்டால், இல்லறம் நல்லறமாக அமையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Find Out Your Life Partner By Your Date Of Birth

Do you know how to find out your life partner by your date of birth? read here in tamil.
Story first published: Monday, November 2, 2015, 12:57 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter