வாழ்க்கையில் இன்பம் பெருக, நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள்!!!

Posted By: John
Subscribe to Boldsky

இன்பமும், துன்பமும் தானாக வந்து போகும் விருந்தாளிகள் அல்ல. உங்களுக்கே தெரியாமல் நீங்களே வெற்றிலைப் பாக்கு வைத்து அழைக்கும் விருந்தாளி தான் இவை. உங்களது தினசரி நடவடிக்கைகளும், பழக்கங்களும், அணுகுமுறையும் தான் உங்கள் இன்பமான வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கிறது.

அந்த அடித்தளத்தை நீங்கள் சரியாக அமைக்காவிடில் அல்லது ஏதேனும் தவறு செய்யும் போது இன்பமான வாழ்வில் சில சரிவுகளும், இடிப்பாடுகளும் ஏற்பட தான் செய்யும். இவ்வாறான சரிவுகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் எனில் சிலவற்றை நீங்கள் பின்பற்ற வேண்டியது அவசியம்......

இனி, இன்பமாக வாழும் தம்பதிகள் அவர்களது வாழ்வில் கடைப்பிடிக்கும் பழக்கங்களை பற்றிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எதிர்காலத்தை பற்றிய சிந்தனை

எதிர்காலத்தை பற்றிய சிந்தனை

முன்னோக்கு பார்வை மிகவும் அவசியம். நாளை நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை திட்டமிடுதல், உங்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.

சவால்களை எதிர்க் கொள்ளுதல்

சவால்களை எதிர்க் கொள்ளுதல்

வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனை அல்லது சவால்கள் ஏற்பட்டால் பயப்படாமல் எதிர்க்கொள்ளும் துணிச்சல் வேண்டும். ஒருவருக்கு ஒருவர் ஊக்குவிக்கும் பண்புடையவராக இருந்தாலே வாழ்க்கையில் இன்பம் குலையாமல் இருக்கலாம்.

பலம், பலவீனம்

பலம், பலவீனம்

உங்களது பலம் என்ன பலவீனம் என்ன என்று தெரிந்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். பலம், பலவீனம் தெரியாமல் அகலக்கால் வைப்பதால் தான் பெரும்பாலும் வாழ்வில் பிரச்சனைகள் எழுந்து, இன்பத்தை சீர்குலைத்து விடுகிறது. எனவே, கணவன் மனைவி இருவரும் அவரவர்களது பலம், பலவீனம் அறிந்துக்கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டியது அவசியம்

நல்ல உறக்கம்

நல்ல உறக்கம்

எல்லாரும் அறிந்துக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம், நல்ல உறக்கத்தின் பயன். உங்களது உறக்கத்தில் குறைபாடு ஏற்படுவதால், சோர்வு மட்டுமல்லாது மன அழுத்தமும் அதிகரிக்கும். இதனால், நிறைய மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கணவன், மனைவி இருவரும் நன்கு உறங்க வேண்டியது அவசியம்.

காழ்ப்புணர்ச்சி

காழ்ப்புணர்ச்சி

தன் விரலால் தன் கண்ணையே குத்திக்கொள்வதற்கு சமம் காழ்ப்புணர்ச்சி. நீங்கள் மற்றவர் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வதால் உங்கள் வாழ்வில் இருக்கும் இன்பம் தான் சீர்குலையுமே தவிரே அது அவர்களை எள்ளளவும் பாதிக்காது. எனவே, காழ்ப்புணர்ச்சியை கைவிடுங்கள்.

அன்பாக இருத்தல்

அன்பாக இருத்தல்

கோபம் உங்களை மட்டுமில்லாமல் உங்களது உறவுகளையும் கொன்றுவிடும் என்பார்கள். அன்பாக இருத்தல் மிகவும் அவசியம். கோபம் வரும் வேளையில் பொறுமையாக இருக்கும் குணம் வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த பழகினாலே உங்கள் வாழ்வில் இன்பம் சீர்குலையாமல் இருக்கும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் உடலை வலுமையாக வைத்துக்கொள்ளவும். மனதை திடமாகவும், தைரியமாகவும் மாற்றவும் உதவும். தைரியம் இருந்தாலே உங்கள் வாழ்க்கை சந்தோசமாக அமையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Daily habits of happy people

Do you know about he habits of happy people? read here.
Story first published: Saturday, July 4, 2015, 14:57 [IST]