மாமியாரிடம் மருமகள்கள் கூறும் வேடிக்கையான 6 பொய்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

பொய் என்பது ஒரு பெரிய கலை. அந்த கலையில் அனைவராலும் அவ்வளவு சுலபத்தில் தேர்ச்சி பெற முடியாது. இருப்பினும் விருப்பத்துடனோ அல்லது விருப்பம் இல்லாமலோ நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பல பொய்களைக் கூறி தான் வருகிறோம். யாரையும் பாதிக்காத வகையில் கூறப்படும் பொய்களில் எந்த ஒரு தவறும் இல்லை. திருமணமான பெண்கள் என வரும் போது யாரிடம் அவர்கள் அதிகமாக பொய் பேசுவார்கள் என நம் பெண் வாசகர்கள் மற்றும் சில திருமணமான நண்பர்களிடம் கேட்டோம். அதற்கு நமக்கு கிடைத்த பதில்கள் பலவும் சுவாரசியமாக இருந்தது.

பலரும் தாங்கள் தன் மாமியாரிடம் தான் அடிக்கடி பொய் சொல்வதாக கூறினார்கள். அதற்கான காரணங்கள் சிறுபிள்ளைத்தனமாக, வேடிக்கையாக மற்றும் சுயநலமாக இருந்தாலும், அதனை மறைக்காமல் ஒத்துக்கொண்ட பெண்களுக்கு முதலில் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். பொதுவாக பெண்களுக்கு ஒத்துப்போகாதவர்கள் என பார்த்தால் கண்டிப்பாக அவர்களின் மாமியார் அந்த பட்டியலில் இருப்பார்கள். அதனால் அவர்களிடம் பெண்கள் பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட தான் செய்யும். நாம் ஏற்கனவே சொன்னதைப் போல், யாரையும் பாதிக்காத வகையில் கூறப்படும் பொய்களில் ஒன்றும் தவறில்லை.

சரி, பெண்கள் தங்கள் மாமியாரிடம் அப்படி என்ன தான் பொய் சொல்கிறார்கள்? தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

"உங்கள் மகன் என்னிடம் இப்படி சொன்னார்..."

மாமியார்களிடம் பொய் சொல்லும் போது, பெண்கள் பகடை காயாய் பயன்படுத்துவது தங்கள் கணவன்மார்களை தான். சொல்லப்போனால், தங்கள் மாமியாரிடம் இருந்து அனுமதிகளைப் பெறுவதற்கு தங்கள் கணவனை பயன்படுத்திக் கொள்வதை சில பெண்கள் ஒத்துக் கொண்டுள்ளனர். நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நம் வாசகர் நம்மிடம் கூறியதாவது, "நான் டின்னருக்கு வெளியே செல்ல வேண்டுமானால், நான் என் கணவனை தான் ஆயுதமாக பயன்படுத்திக் கொள்வேன். என் கணவர் பார்ட்டிக்கு செல்ல விரும்புகிறார் என்றும் என்னையும் உடன் அழைக்கிறார் என்றும் என் மாமியாரிடம் கூறுவேன். மகனிடம் இருந்து ஏற்கனவே அனுமதி வந்து விட்டதால், என் மாமியார் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே மாட்டார்."

"எனக்கு நேரமில்லை"

மிகவும் புகழ் பெற்ற பொய்களில் இதுவும் ஒன்று; குறிப்பாக மாமியாருடன் சேர்ந்து வாழாத மருமகள்கள் கூறுவது. அனைத்திலும் மூக்கை நுழைக்கும் மாமியாரை சந்திக்காமல் தவிர்க்க வேண்டுமானால், "எனக்கு வேலையுள்ளது", "எனக்கு உடம்பு சரியில்லை", "எனக்கு நேரமில்லை" என்ற பொய்களை பொதுவாக பெண்கள் கூறி விடுவார்கள். சில நேரங்களில் அது உண்மையாக இருந்தாலும் கூட, இதனை ஒரு சாக்காக தான் பயன்படுத்துகிறோம் என் பல பெண்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

"உங்கள் பரிசுகள் என்றால் எனக்கு கொள்ளை பிரியம்"

தங்கள் மருமகளுக்கு பரிசு பொருட்களை அள்ளி கொடுப்பது சில மாமியார்களின் பழக்கமாக இருக்கும். ஆனால் பல நேரங்களில் அவர்கள் வாங்கி தரும் பரிசு பொருட்கள் மருமகள்களுக்கு பிடிப்பதில்லை. அந்த பரிசுகள் எப்படி இருக்கிறது என் அவர்களிடம் கேட்கும் போது, "இது மிக அழகிய ஆடை. ஆனால் இதை அணிவதற்கான சிறந்த நிகழ்வுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.", "இந்த கப் மிக அழகாக உள்ளது, இதனை தினமும் பயன்படுத்தி இதன் அழகையோ கெடுக்க நான் விரும்பவில்லை" போன்ற பொய்களை கூறுவது இயல்பான ஒன்று தான். ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மை என்ன தெரியுமா? இந்த பரிசுகள் உங்களுக்கு சுத்தமாக பிடிக்காது; அதனை வருங்காலத்தில் யாருக்காவது அப்படியே நீங்கள் பரிசாக கொடுத்து விடுவீர்கள்.

"இன்று வேலை நாள்"

தங்கள் பெண் தோழிகளுடன் நேரத்தை செலவழிக்க மருமகள்கள் தங்கள் மாமியார்களிடம் கூறும் பொதுவான பொய்களில் இதுவும் ஒன்றாகும். நம்முடைய மற்றொரு வாசகருமான, புதிதாக திருமணமான பெண்ணுமான நேஹா கூறுகையில், "வார இறுதியில் நான் என் நண்பர்களை சந்திக்க வேண்டியிருந்தது. அப்படிப்பட்ட நேரத்தில் அலுவலகத்தில் அவசர வேலை இருக்கிறது என என் மாமியாரிடம் கூறி விடுவேன்" விடுமுறை தினத்தில் திடீரென வேலை வருவது நடக்க கூடிய ஒன்று தான். ஆனால் அதையே ஒரு சாக்காக வைத்து உங்கள் நண்பர்களை சந்திக்க நீங்கள் செல்லலாம் தானே!

"நான் இதில் கெட்டிக்காரி என எல்லோரும் கூறுவார்கள்"

தங்கள் மாமியாரிடம் தன்னை நிரூபிக்க தன்னை எல்லோரும் இப்படி அப்படி என் புகழ்வார்கள் என பல மருமகள்கள் பொய் கூறுவார்கள். ஆம், தங்களின் திறமையை கண்டு அனைவரும் புகழ்ந்துள்ளனர் என்று தாங்கள் பொய் கூறுவதாக சில பெண்கள் ஒத்துக்கொண்டுள்ளனர். இன்னும் என்ன? திருமணமான பெண்கள் மட்டுமல்லாது திருமணமாக போகும் பெண்களும் கூட தங்கள் மாமியாரிடம் நல்ல பெயரை வாங்க இப்படி பொய் கூறுவார்கள். இந்த வருடம் தன் காதலனை மணக்க போகும் சாக்ஷி நம்மிடம் இப்படி கூறினார், "என் சமையலை என் குடும்பத்தார் எப்படி விரும்புவார்கள் என்பதையும் சற்று மிகுதியான சிலவற்றையும் எனக்கு மாமியராக வரவுள்ளவரிடம் கூறினேன். அவருக்கு என்னை பிடிக்க வேண்டும் என்பதற்காக என் மாமியாரிடம் நான் கூறிய சிறிய பொய்கள் இவைகள்".

"குழந்தைகளை உங்களால் தான் நல்லபடியாக வளர்க்க முடியும்"

குழந்தைகள் பிறந்து விட்டால், உங்களுக்கு அரக்கர்களாக தெரிந்த மாமியார் நல்ல விதமாக தோன்றுவார்கள். குழந்தைகளை மிக அருமையாக பராமரிப்பதாக மாமியாரிடம் பெண்கள் கூறுவார்கள். பல நேரங்களில், குழந்தைகளை மாமியார்கள் பார்த்துக் கொள்வதற்காக பெண்கள் கூறும் பொய்கள். மாமியாருக்கும், தன் கணவனுக்கும் உள்ள நெருக்கத்தை ஒரு பெண் விரும்பாவிட்டாலும் கூட, தன் குழந்தையை பார்த்துக் கொள்ள உதவி வேண்டும் என்பதால், மாமியாரோடு அனுசரித்து செல்வார்கள் பெண்கள்.

பொய் சொல்வது நல்லதா கெட்டதா என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் மேற்கூறிய சில பொய்கள் கண்டிப்பாக சில நேரங்களில் சுவாரசியமாக தான் இருக்கும். உங்களிடமும் அவ்வகையான வேடிக்கையான ரகசியங்கள் உள்ளதா? எங்களுக்கு அதை கேட்க ஆவலாக உள்ளது. பகிர்ந்து கொள்ளுங்களேன்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

6 Funny & Harmless Lies Most Women Tell Their Mothers-In-Law

Most of them agreed that they lie to their mothers-in-law quite often. While the reasons might be sheepish, funny or seemingly selfish, yet kudos to the women, who at least accepted that they do lie to their mothers-in-law at home. Let us reveal a few of their good and harmless lies to you as well.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter