For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமணம் செய்து கொள்வதில் உள்ள 10 கடுமையான உண்மைகள்!!!

By Ashok CR
|

நீங்கள் திருமணம் செய்து கொள்ள போகிறீர்களா? சந்தோஷமான விஷயம் தான். பல நாட்களாக நீங்கள் கண்டு வந்த கனவு இன்று நனவாக போகிறது. உங்கள் திருமணத்திற்கு பல பேரிடம் இருந்து வாழ்த்து செய்திகள் குவிந்த வண்ணம் இருக்கும். இந்த வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் பேருக்காக செய்யப்படுவதில்லை. நம்பினால் நம்புங்கள், வாழ்க்கையில் திருமணம் என்னும் புதிய அத்தியாயத்திற்குள் நுழைய போகும் உங்களுக்கு கண்டிப்பாக இது தேவையாகும். திருமணம் ஆகப்போகும் அனைவருக்குமே இது தேவையான ஒன்றே.

சரி, எல்லாம் சரி தான். திருமணத்தின் மறுபக்கத்தையும் பார்க்க தானே வேண்டும். திருமணம் என்பது ஒன்றும் அவ்வளவு பயத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயம் கிடையாது. வாழ்க்கையில் ஏற்படுத்தக் கூடிய ஒரு மாற்றம் மட்டுமே. கண்டிப்பாக தங்கள் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கடந்து வரும் பாதையே இது. உங்கள் திருமணம் காதல் திருமணமோ அல்லது வீட்டில் பெரியவர்களால் பார்த்து செய்யப்படும் திருமணமோ, வரப்போகும் மாற்றங்கள் உறுதியே. திருமணம் செய்து கொண்டு, பழைய முறையிலேயே வாழ்க்கையை வாழ்ந்து விடலாம் என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். திருமணம் பற்றிய கடுமையான உண்மை என்னவென்றால், மூன்று முடிச்சு போட்ட பிறகு உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றமே உண்டாகும்.

உங்கள் வாழ்க்கை எப்படி மாறப் போகிறது என்பது உங்கள் கையில் தான் உள்ளது. அதை நீங்கள் நேர்மறையான முறையில் எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது தவறு இழைத்ததாக நினைத்தாலும் சரி, அது உங்கள் தனிப்பட்ட முடிவாகும். ஒரு வேளை நீங்கள் திருமணம் செய்ய முடிவெடுத்து விட்டால், திருமணம் பற்றிய சில கடுமையான உண்மைகளைப் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இனியும் பேச்சுலர் கிடையாது

இனியும் பேச்சுலர் கிடையாது

உங்கள் அருகில் உங்கள் வாழ்க்கை துணை வந்து விட்டால், இனியும் பேச்சுலர் வாழ்க்கையை வாழ்ந்திட எதிர்ப்பார்க்காதீர்கள். உங்கள் அன்றாட வாழ்க்கையை இதுவரை நீங்கள் கழித்த விதமும் முறையும் மாறிவிடும். உங்களது சில பழைய பழக்கவழக்கங்களை நீங்கள் புதிதாக வந்துள்ள வாழ்க்கை துணைக்காக கைவிடவே வேண்டும். உங்கள் வாழ்க்கையையே யாரோ ஒருவருடன் பங்கு போட முடிவெடுத்துள்ளீர்கள் தானே. அதனால் அந்த விசேஷ நபருக்காக நீங்கள் சில தியாகங்களை செய்தாக வேண்டும் தானே.

பொறுப்புகள்

பொறுப்புகள்

குடும்பம் பெரிதாகும் போது பொறுப்புகளும் அதிகரிக்கும். வீட்டு வேலைகளிலும், வெளி பொறுப்புகளிலும் கண்டிப்பாக நீங்கள் மாற்றத்தைக் காண்பீர்கள். இந்த பொறுப்புகளை நீங்கள் பகிர்ந்து கொள்ளும் நிலை ஏற்படும். அனைத்தையும் உங்கள் வாழ்க்கை துணையே செய்ய நீங்கள் எதிர்ப்பார்க்க முடியாது. நீங்களும் களத்தில் இறங்கி உங்கள் பங்களிப்பையும் அளிக்க வேண்டியிருக்கும்.

அர்பணிப்பு

அர்பணிப்பு

திருமணம் என்றாலே ஒரு அர்பணிப்பு உறவுக்குள் அடியெடுத்து வைப்பது தானே. வாழ்க்கையில் நிலைத்தன்மையை பெற்றிட உங்களது பழைய கேளிக்கை நிறைந்த வாழ்க்கையை கைவிட வேண்டி வரும். இதுப்போக உங்கள் வாழ்க்கை துணையை ஏமாற்றவும் முடியாது. ஆரோக்கியமான மற்றும் சந்தோஷமான வாழ்க்கையையே தான் நீங்கள் எதிர்ப்பார்ப்பீர்கள்.

பகிர்தல்

பகிர்தல்

திருமணம் என்றாலே பகிர்தல் உணர்வையும் கொண்டது தான். அது பொருளாக இருக்கலாம் அல்லது உணர்ச்சியாக இருக்கலாம் அல்லது மனக்கிளர்ச்சியாக இருக்கலாம். சிலவற்றை நீங்கள் பகிர்வீர்கள், சிலவற்றை உங்கள் வாழ்க்கை துணை பகிர்வார். இருவருமே ஒருவருக்கொருவர் வெளிப்படையாக இருக்க வேண்டும். அப்போது தான் உங்கள் திருமணம் வெற்றியடையும்.

பதில் கூறும் கடமை

பதில் கூறும் கடமை

அன்றைய தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் எங்கே இருப்பீர்கள் என உங்கள் வாழ்க்கை துணை உங்களிடம் கேட்டால், உங்கள் விஷயத்தில் அவர் மூக்கை நுழைக்கிறார் அல்லது தலையிடுகிறார் என கருதக்கூடாது. அது உங்கள் மீதுள்ள அக்கறையால் கேட்கப்படும் கேள்வி. உங்கள் மீது யாராவது அக்கறையுடன் இருக்கும் போது அம்மாதிரி கேள்வி கேட்பது இயல்பே.

தகவல் தெரிவிப்பது

தகவல் தெரிவிப்பது

எப்படி உங்கள் வாழ்க்கை துணை உங்களிடம் கேள்வி கேட்பாரோ, அதே போல் நீங்கே எங்கே செல்கிறீர்கள், எப்போது வருவீர்கள் என்ற விவரங்களை வீட்டில் தெரிவிக்க வேண்டியதும் உங்கள் பொறுப்பாகும். ஒரு வேளை நீங்கள் வீட்டிற்கு வர தாமதமானால், அதனை உங்கள் வாழ்க்கை துணையிடம் தெரிவிக்க வேண்டும். வீட்டில் தெரிவிக்காமல் இஷ்டத்திற்கு வருவதோ போவதோ இருக்க கூடாது.

கூட்டு முடிவுகள்

கூட்டு முடிவுகள்

திருமணம் என்றாலே இரு வீட்டை உருவாக்க இருவரை ஒன்று சேர்க்கும் ஒரு நிகழ்வாகும். அதனால் அந்த குடும்பத்தை உருவாக்க போகும் நீங்கள் சில விஷயங்களின் மீது முடிவு எடுக்க வேண்டி வரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் இருவருடைய பரஸ்பர சம்மதத்துடன் தான் எடுக்கப்பட வேண்டும்.

சமாதானம் செய்தல்

சமாதானம் செய்தல்

உங்களுக்கு ஒரு ஐடியா தோன்றலாம்; அதனை செயல்படுத்தவும் விரும்பலாம். ஆனால் உங்கள் வாழ்க்கை துணைக்கோ அதன் மீது நாட்டம் இல்லாமல் இருக்கலாம். தேவையில்லாமல் வாக்குவாதங்களில் ஈடுபடுவதற்கு பதிலாக, அவருடன் அமைதியாக அமர்ந்து, சரியான காரணத்தைக் கூறி அவரை சமாதானப்படுத்தப் பாருங்கள். புரிதல் மற்றும் நியாயப்படுத்துதல் தொனி கண்டிப்பாக நிலைமையை கட்டுப்பாட்டில் வைக்கும்.

விழாக்களுக்கு செல்லுதல்

விழாக்களுக்கு செல்லுதல்

இது கண்டிப்பாக உங்களுக்கு சோர்வை உண்டாக்கும். உங்கள் வாழ்க்கை துணையின் உறவினர் வீட்டில் விழா இருக்கலாம். அதற்கு உங்கள் வருகையும் எதிர்ப்பார்க்கப்பட்டிருக்கலாம். அவ்வகை விழாக்களுக்கு செல்வதே நல்லதாகும். இல்லையேல் உங்கள் வாழ்க்கை துணையின் மனதில் காயம் பட்டு தேவையில்லாத சண்டைகள் எழலாம்.

தியாகம்

தியாகம்

தியாகம் என்ற வாரத்தையை பலவிதமாக எடுத்துக் கொள்ளலாம். அதை நீங்கள் வெளிப்படுத்தும் விதத்தைப் பொறுத்து தான் உள்ளது. வாழ்க்கையில் உங்களுக்கு முதன்மையாக இருக்கும் விஷயங்களைப் பொருத்தும் அது அமையும். திருமணத்திற்கு பிறகு, அந்த முதன்மையான விஷயங்களின் வரிசை மாறலாம். அதனால் எதை முதலில் செய்ய வேண்டும் என்பதெல்லாம் நீங்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்தே உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Brutal Truths About Being Married

In case you are deciding on getting married it would be good for you to know some truths about getting married.
Desktop Bottom Promotion