ஆண்களே! உங்கள் மனைவி உங்களை வெறுக்கும் போது தவறாமல் செய்ய வேண்டிய விஷயங்கள்!!!

Posted By: Ashok CR
Subscribe to Boldsky

திருமணம் என்றாலே ஆணுக்கும் பெண்ணுக்கும் புதிதாக பூக்கவுள்ள பந்தத்தின் அஸ்திவாரமாகும். வாழ்க்கை என்னும் வண்டியை ஒன்றாக பூட்டிய இரண்டு மாடுகளாக கணவனும் மனைவியும் இழுத்து செல்வார்கள். அதில் ஒன்று மக்கர் செய்தாலும் சரி வண்டி நின்று விடும். ஆகவே, கணவன் மனைவியின் தாம்பத்ய வாழ்க்கை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஓட வேண்டுமானால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.

உங்கள் திருமண வாழ்க்கையில் உங்கள் மனைவி உங்களை வெறுத்தால், உங்கள் வாழ்க்கையே துன்பம் நிறைந்ததாக மாறிவிடும். தன் மனைவி தன்னிடம் ஒழுங்காக நடந்து கொள்ளாத சூழ்நிலைகளை ஒவ்வொரு கணவனும் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் சந்திக்கவே செய்வார்கள். உங்கள் மனைவி உங்களை வெறுப்பது உங்களுக்கு எப்படி தெரியும்? உங்களிடம் அவர் காதல் உணர்வோடு இல்லையா? அது போதாதா, அவர் உங்கள் மீது சந்தோஷத்துடன் இல்லை என்பதை தெரிந்து கொள்ள? ஆனாலும் நீங்கள் அதை அப்படியே விட்டு விட முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

நீங்கள் அவரை அளவுக்கு அதிகமாக நேசித்து வந்தால், அவரின் வெறுப்பை போக்க கண்டிப்பாக நீங்கள் ஏதேனும் செய்ய முன் வருவீர்கள். அன்பார்ந்த ஒரு கணவனாக, உங்கள் மனைவியின் இதயத்தை நீங்கள் வெல்ல வேண்டுமானால், அதற்கு பல வழிகள் உள்ளது. அப்படி உங்கள் மனைவி உங்களை வெறுக்கும் போது நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் சில உள்ளது. அந்த வெறுப்பை அப்படியே விட்டு விடாமால், அதனை போக்க நீங்கள் சில முயற்சிகளையும் நேரத்தையும் ஒதுக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவரிடம் மனம் விட்டு பேசுங்கள்

அவரிடம் மனம் விட்டு பேசுங்கள்

உங்கள் மனைவி உங்களை வெறுக்கும் போது என்ன செய்ய வேண்டும்? முதலில் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அனைத்து விதமான வெறுப்புகளுக்கு பின்னும் ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா? அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதனைக் கண்டுபிடிக்க தவறினால், அவரிடம் நேரடியாகவாவது கேட்டு விடுங்கள். அவரருகில் அமர்ந்து, அவரின் வெறுப்பிற்கான காரணத்தை அன்புடன் கேளுங்கள். நீங்கள் உங்கள் மனைவியை நேசிக்கும் கணவன் என்றால், அவரின் கருத்துக்களை முன்வைக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும். அப்போது தான் உங்கள் உறவுகளில் நீங்கள் இழைக்கும் தவறுகள் உங்களுக்கு தெரிய வரும்.

உறவை சுவாரஸ்யம் மிக்கதாக மாற்றுங்கள்

உறவை சுவாரஸ்யம் மிக்கதாக மாற்றுங்கள்

உங்கள் மனைவி உங்களை வெறுத்தால் என்னவாகும்? திருமணம் என்னும் அழகிய பந்தம் சீர்குலைய தொடங்கும். அதனால் உங்கள் மனைவியின் இதயத்தை வெல்ல வாழ்க்கையில் சுவாரசியத்தை கொண்டு வாருங்கள். ஒரு பெண்ணை காதலித்தால் அவள் காதலை வெல்ல என்னவெல்லாம் செய்வீர்கள்? உங்கள் வாழ்க்கையே அந்த காதலை பொறுத்து தான் உள்ளதென்றால் என்ன செய்வீர்கள்? அதை அனைத்தையும் உங்கள் மனைவிக்கு செய்து உங்கள் திருமண வாழ்க்கையை சுவைமிக்கதாக மாற்றுங்கள். சுவாரசியம் இல்லாமல் வாழ்க்கையின் மீது சீக்கிரமே அலுப்பு தட்டி விடும்.

அவருக்கு பரிசளியுங்கள்

அவருக்கு பரிசளியுங்கள்

ஆச்சரியமளிக்கும் வகையில் உங்கள் அன்பு மனைவிக்கு ஒரு பரிசளியுங்கள். அது உங்கள் திருமண வாழ்க்கையை கண்டிப்பாக மாற்றும். உங்கள் மனைவிக்கு எதன் மீதாவது நீண்ட நாள் ஆசை இருந்திருக்கும். அது விலை உயர்ந்ததாக இருந்தாலும் கூட அந்த பரிசை அவருக்கு வாங்கிக் கொடுங்கள். திருமணமான சில வருடங்களில் மனைவியின் ஆசைகளை ஆண்கள் கவனிப்பதில்லை. உங்கள் வேலையில் நீங்கள் பிசியாக இருந்தாலும் சரி, அவரின் ஆசைகளை நிராகரிக்காதீர்கள். உங்கள் மனைவிக்காக உங்கள் பணம் மொத்தத்தையும் செலவு செய்தாலும் தப்பில்லை. கடைசி வரை உங்க கூட வரப்போவது அவங்க தானே!

நீங்கள் அவர்களுக்கு தேவைப்படும் வேளைகளில் அவருடன் இருங்கள்

நீங்கள் அவர்களுக்கு தேவைப்படும் வேளைகளில் அவருடன் இருங்கள்

மனைவியின் சந்தோஷத்திற்காக ஆண்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்; ஆனால் அதெல்லாம் திருமணமான ஆரம்ப காலத்தில். வருடங்கள் செல்ல செல்ல, இந்த குணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடும். உங்கள் மனைவியின் மீது உண்மையாகவே அன்பு இருந்தால், உங்களின் தேவை அவருக்கும் தேவைப்படும் போது அவருக்கு ஒரு தூணாக நீங்கள் அவர் அருகில் ஆதரவாக இருக்க வேண்டும். இதுவும் பலவற்றை மாற்றும்.

நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் உங்கள் காதலை பிரதிபலிக்குமாறு உறுதி செய்யுங்கள்

நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் உங்கள் காதலை பிரதிபலிக்குமாறு உறுதி செய்யுங்கள்

நீங்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட அவர் மீது நீங்கள் கொண்டுள்ள காதலை பிரதிபலிக்குமாறு இருக்க வேண்டும். கண்டிப்பாக உங்கள் மீது அவருக்கு இருக்கும் வெறுப்பு மறைந்து மீண்டும் உங்கள் மீது அன்பு செலுத்த தொடங்கி விடுவார். உங்கள் மனைவி உங்களை வெறுத்தால் என்ன செய்ய வேண்டும் என இப்போது புரிந்து கொண்டீர்களா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What To Do When Your Wife Hates You?

When your wife hates you, your life would get miserable. Every man may experience a stage when his wife doesn’t reciprocate well.
Story first published: Tuesday, December 30, 2014, 13:02 [IST]